நியுயார்க், டோக்கியோ, இலண்டன் இந்த நகரங்களோடு எவ்வித்த்திலும் ஒப்பிடவே முடியாத அளவு மேன்மையான மாபெரும் நகரத்தைக்குறித்துப் பார்க்கப்போகிறோம்.  விண்வெளிக்குள் பயணிக்கும் திறனுடைய இந்த பிரம்மாண்டமான நகரத்தைக்குறித்த ஆச்சரியமான உண்மைகளை அறிந்துகொள்ளும்வரையிலும் சற்று பொறுத்திருங்கள்.  இது அத்தனையும் உண்மையே! கட்டுக்கதை அல்ல! இந்த பாடத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் செய்தி உங்கள் ஆத்துமாவை சிலிர்ப்பித்து எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் கொடுக்கும் ….

  1. இந்த நகரத்தின் கட்டட வடிவமைப்பாளரும் இதைக் கட்டினவரும் யார்?

“ஆகையால் தேவன் அவர்களுடைய தேவனென்னப்பட வெட்கப்படுகிறதில்லை; அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம் பண்ணினாரே” – எபிரெயர் 11:16.

பதில்:  தேவன் தமது மக்களுக்காக மாபெரும் நகரம் ஒன்றைக் கட்டிக்  கொண்டிருக்கிறார் என்று வேதாகமம் அறிவிக்கிறது.  நீங்கள் இதுவரையிலும் அறிந்திருக்கிற மற்ற நகரங்களைப்போலவே இந்த நகரமும் மெய்யான ஒன்று.

[ இந்த பரிசுத்த நகரத்தை வடிவமைத்தவரும் கட்டினவரும் தேவனே.  ஆச்சரியமான தேவனுடைய நகரம் அவர் வசிக்கும் பரலோகத்தில் இருக்கிறது ]

2. தேவன் ஆயத்தம்பண்ணிக் கொண்டிருக்கிற இந்த வியப்பூட்டும் நகரம் எங்கே இருக்கிறது?

 

“யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன்” – வெளி. 21:2; “என் தேவனாகிய கர்த்தாவே,… பரலோகமாகிய உம்முடைய வாசஸ்தலத்திலே அதை நீர் கேட்பீராக” – இராஜாக்கள் 8:28–30.

பதில்:  கட்டப்பட்டுக்கொண்டிருக்கிற இந்த நகரம் தேவன் தங்கியிருக்கும் இடமாகிய விண்வெளியில் வெகுதூரத்திலிருக்கும் பரலோகத்தில் இருக்கிறது.

3. விண்வெளியிலிருக்கிற இந்த ஆச்சரியமான நகரத்தை வேதவாக்கியங்கள் எவ்விதம் விவரிக்கின்றன?

பதில்:

அ.  அளவு:  “அந்த நகரம் சதுரமாயிருந்தது, அதின் அகலமும் நீளமும் சம்மாயிருந்தது.  அவன் அந்தக் கோலினால் நகரத்தை அளந்தான்; அது பன்னீராயிரம் ஸ்தாதி அளவாயிருந்தது” – வெளி. 21:16.  இந்த நகரம் பூரண சதுரமாயிருக்கிறது.  இதன் சுற்றளவு 12,000 ஸ்தாதி (ஃபர்லாங்) அல்லது 1500 மைல். (ஒரு ஸ்தாதி 1/8 மைல்).  அது ஒவ்வொரு பக்கத்திலும் 375 மைல்கள் நீளமானது.

 

ஆ.  பெயர்:  இந்த நகரம் “புதிய எருசலேம்” என்று அழைக்கப்படுகிறது. வெளி. 21:2.

இ.  சுவர்கள்:  “அவன் அதின் மதிலை அளந்தபோது, அது தூதனுடைய அளவாகிய மனுஷ அளவின்படியே நூற்றுநாற்பத்து நான்கு முழமாயிருந்தது.  அதின் மதில் வச்சிரக்கல்லால் கட்டப்பட்டிருந்தது” – வெளி. 21:17,18.  144 முழம் அல்லது 216 அடி உயரமான மதில் (ஒரு முழம் 18 அங்குலம்)  இந்த நகரத்திற்கு இருக்கிறது.  இதன் பளிங்கு சுவர்கள் வர்ணனைக்கப்பாற்பட்ட அழகும் பிரகாசமும் கொண்டாவை.  ஏறக்குறைய 20 மாடிகள் உயரமான, முழுவதும் பளிங்கினால் செய்யப்பட்ட சுவர்களைக்குறித்து சிந்தித்துப் பாருங்கள்.

ஈ.  வாசல்கள்:  “அதற்கு…. கிழக்கே மூன்று வாசல்கள், வடக்கே மூன்று வாசல்கள், தெற்கே மூன்று வாசல்கள், மேற்கே மூன்று வாசல்கள் ஆகப் பன்னிரண்டு வாசல்களும் இருந்தன.”  “பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாயிருந்தன; ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது” – வெளி 21:12,13,21.  இந்த நகரத்திற்கு ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று மூன்றாக பன்னிரண்டு வாசல்கள் இருந்தன.  ஒவ்வொன்றும் ஒரு முத்தினால் செய்யப்பட்ட வாசல்களாம்.

உ.  அஸ்திபாரங்கள்:  “நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களிருந்தன;… நகரத்து மதில்களின் அஸ்திபாரங்கள் சகலவித இரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன; முதலாம் அஸ்திபாரம் வச்சிரக்கல், இரண்டாவது இந்திரநீலம், மூன்றாவது சந்திரகாந்தம், நான்காவது மரகதம், ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம், ஏழாவது சுவர்ணரத்தினம், எட்டாவது படிகப்பச்சை, ஒன்பதாவது புஷ்பராகம், பத்தாவது வைடூரியம், பதினோராவது சுநீரம், பன்னிரண்டாவது சுகந்தி இவைகளே” –வெளி. 21:14-20.  இந்தப் பட்டணத்திற்கு விலையேறப்பெற்ற கற்களாலான பன்னிரண்டு முழுமையான அஸ்திபாரங்கள் உண்டு.  வானவில்லின் ஒவ்வொரு வர்ணமும் அதில் குறிக்கப்பட்டிருப்பதால், தூரத்திலிருந்து பார்க்கும்போது இந்த நகரம் வானவில்லின்மேல் தங்கியிருப்பதுபோலக் காணப்படும்.

ஊ.  வீதிகள்:  “நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச்  சுத்தப்பொன்னாயிருந்தது” – வெளி. 21:21.

எ.  தோற்றம்:  பரிசுத்த நகரம் “தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.”  “அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப் போலவும், பளங்கினொளியுள்ள வச்சிரக்கல்லைப் போலவும் இருந்தது.”  “அதின் நீளமும் அகலமும் உயரமும் சம்மாயிருந்தது” – வெளி. 21:2,11,16.  விலையுயர்ந்த வெள்ளியினாலும் பொன்னினாலும் மின்னிக்கொண்டிருக்கும் இந்த நகரம் தேவனுடைய மகிமையினால் ஒளியூட்டப்படும்.  வசீகரிக்கும் மகத்துவத்திலும் தூய்மையிலும் அது மணவாளனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியோடு ஒப்பிடப்படுகிறது.

 [ 1500 மைல் ]

4. இந்த மகத்தான நகரத்தின் குடிமகன் ஒவ்வொருவருக்கும் நித்தியமான பலத்தையும் வாலிபத்தையும் என்ன சிறப்பான அம்சம் உறுதிப்படுத்துகிறது?

“நகரத்து வீதியின்  மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோரும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்” – வெளி. 22:2; “ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்கு” – ஆதியாகமம் 3:22.

பதில்:  பன்னிரண்டு விதமான கனிகளைக்கொண்ட (நகரத்தின் நடுவிலிருக்கிற – வெளி. 2:7) இந்த ஜீவவிருட்சம், அதைப் புசிக்கிற ஒவ்வொருவருக்கும் ஜீவனையும் வாலிபத்தையும் கொண்டுவருகிறது.  அதன் இலைகள் வாழ்நாளை நீட்டிக்கிற ஆச்சரியமான குணங்களைக் கொண்டிருக்கின்றன.  இந்த மரம் ஒவ்வொரு மாதத்திலும் ஒரு புதுவிதமான கனியைக் கொடுக்கும்.

5. இந்த ஆச்சரியமான நகரம் பூமிக்கு இறங்கி வரும் என்பது உண்மையா?

“யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது” – வெளி. 21:2; “சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்” – மத்தேயு 5:5; “இதோ, நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே” – நீதி. 11:31.

பதில்:  ஆம்.  இந்த மகத்தான நகரம் பூமிக்கு இறங்கிவந்து புதிய பூமியின் தலைநகரமாக இருக்கும்.  பரிசுத்தவான்கள் அனைவருக்கும் இந்தப் பட்டணத்தில் ஒரு வீடு இருக்கும்.

[ இந்தப் பரிசுத்த நகரம் பூமிக்கு இறங்கிவந்து அதன் தலைநகரமாகும் ]

6. பாவத்திற்கும் பாவிகளுக்கும் என்ன சம்பவிக்கும்?

“அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ்செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்” – மல்கியா 4:1; “தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது” – வெளி. 20:9; “பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம்” – 2 பேதுரு 3:10; “துன்மார்க்கரை மிதிப்பார்கள்; நான் இதைச் செய்யும்நாளிலே அவர்கள் உங்கள் உள்ளங்கால்களின்கீழ் சாம்பலாயிருப்பார்கள்” – மல்கியா 4:3; “நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்” – 2 பேதுரு 3:13.

பதில்:  தேவன் அனைத்து பாவத்தையும் பாவிகளையும் அக்கினியினால் அழிப்பார்.  அந்த அக்கினி பூமியை உருக்கி அனைத்தையும் சாம்பலாக்கிப்போடும். தேவன் பின்னர் பூரணமான புதிய பூமியை உண்டாக்குவார்.  இந்த பரிசுத்த நகரம் அதன் தலைநகரமாயிருக்கும்.  இங்கே நீதிமான்கள் மகிழ்ச்சியிலும் சமாதானத்திலும் பரிசுத்தத்திலும் நித்தியத்திற்குமாக வாழ்ந்திருப்பார்கள்.  பாவம் மீண்டும் எழும்பாது என்று தேவன் வாக்குக்கொடுக்கிறார்.  நாகூம் 1:9 ஐ பார்க்கவும்.  (நகரம் குறித்து மேலும் படிக்க வேதபாடம் 11 படிக்கவும்).

[ பாவமும் பாவிகளும் தேவனிடமிருந்து வரும் அக்கினியினால் முற்றிலும் அழிக்கப்படுவார்கள், ]

7. தமது பரிசுத்த இராஜ்யத்திற்குள் பிரவேசிக்கிறவர்களுக்கு என்ன புத்துணர்ச்சி அளிக்கும் வாக்குத்தத்தங்களை தேவன் அளிக்கிறார்?

பதில்:

அ.  ஆண்டவர்தாமே அவர்களோடு வாழ்வார் (வெளி 21:3).

ஆ.  அவர்கள் ஒருபோதும் சலிப்படைய மாட்டார்கள்.  என்றைக்குமான இன்பங்கள் அங்கே இருக்கும் (சங்.16:11).

இ.  அங்கே மரணமில்லை, வலியில்லை, கண்ணீரில்லை, துக்கமில்லை, வியாதியில்லை,  மருத்துவமனைகள் இல்லை, அறுவை சிகிச்சைகள் இல்லை, துயரங்கள் இல்லை, ஏமாற்றங்கள் இல்லை, பிரச்சனைகளில்லை, பசியில்லை, தாகமில்லை (வெளி. 21:4; ஏசாயா 33:24; 65:23; வெளி 7:16).

ஈ.  அவர்கள் சோர்வடையமாட்டார்கள். (ஏசாயா 40:31).

உ.  இரட்சிக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் சரீரப்பிரகாரமாக எல்லாவிதத்திலும் பூரணமாயிருப்பான்.  காது கேளாதிருந்தவன் கேட்பான். காணாதிருந்தவன் காண்பான்; ஊமையாயிருந்தவன் பாடுவான்; முடமாயிருந்தவனால் ஓடமுடியும் (ஏசாயா 35:5,6; பிலிப்பியர் 3:21).

ஊ.  பொறாமை, பயம், வெறுப்பு, பொய், அசுத்தம், திருட்டு, கவலைபோன்ற அனைத்து தீமைகளும் தேவனுடைய இராஜ்யத்திலிருந்து என்றென்றுமாக அகற்றப்படும் (வெளி. 21:8,27; 22:15). மக்கள் தங்களைச் சிதறடிக்கின்ற எந்த பாரத்தையும் கவலையையும் அடையமாட்டார்கள்.  நரம்புகள் செயலிழக்காது.  நித்தியம் அவர்கள்முன் இருக்கும்; பூமியின் அழுத்தங்களும் முடிவுகளும் என்றென்றைக்குமாக கடந்துபோயிருக்கும்.

8. நம்முடைய பூமியைக் காட்டிலும் புதிய பூமி எவ்விதம் வேறுபட்டிருக்கும்?

பதில்:

அ.  இன்றைக்கு நாம் காண்கிறதைப்போன்ற மாபெரும் சமுத்திரங்கள் இருக்காது (வெளி. 21:1).  சமுத்திரங்களும் கடல்களும் இன்றைக்கு நான்கில் மூன்றுபங்கு பூமியின் பரப்பை மூடியிருக்கிறது.  தேவனுடைய புதிய இராஜ்யத்தில் இப்படி இருக்காது.  முழு உலகமும் வரையறுக்கமுடியாத அழகோடு இடையிடையே ஏரிகளும் ஆறுகளும் மலைகளும் இருக்க, ஒரு மாபெரும் தோட்டமாக இருக்கும். (வெளி. 22:1;  அப. 3:20,21).

ஆ.  பாலைவனங்கள் தோட்டங்களாக மாறும் (ஏசாயா 35:1,2).

இ.  மிருகங்கள் அனைத்தும் கட்டுப்பட்டிருக்கும்.  ஒன்று மற்றதைக் கொல்லாது.  ஒரு சிறு குழந்தை அவைகளை நடத்துவான். (ஏசாயா 11:6-9; 65:25).

ஈ.  அங்கே சாபமிருக்காது (வெளி. 22:3).

உ.  எந்தவிதமான கொடுமையும் ஒருபோதும் இருக்காது (ஏசாயா 60:18).   இதில் குற்றங்களும், புயல்களும், வெள்ளங்களும், பூமியதிர்ச்சிகளும், பாதிப்புகளும் அடங்கும்.

ஊ.  தீட்டுப்படுத்தும் எதுவும் புதிய பூமியில் காணப்படாது (வெளி. 21:27). அங்கே சிகரெட்டுகளும், புகையிலையின் சாறும், குடிகாரர்களும், சத்திரங்களும், போதை பானங்களும், விபசாரம் மற்றும் காமவிகாரப் படங்களும், துன்மார்க்கமான அல்லது தூய்மையற்ற எதுவுமே இருக்காது.

9. தேவனுடைய இராஜ்யத்தில் குழந்தைகள் இருப்பார்களா?  இருந்தால் வளருவார்களா?

“நகரத்தின் தெருக்களிலே விளையாடுகிற ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் அதின் வீதிகளில் நிறைந்திருக்கும்” – சகரியா 8:5; “நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்” – மல்கியா 4:2.

பதில்:  ஆமாம்.  பரிசுத்த நகரத்தில் அநேக ஆண்குழந்தைகளும் பெண்குழந்தைகளும் இருப்பார்கள். (ஏசாயா 11:6-9).  இந்த குழந்தைகள் வளருவார்கள். (மல்கியா 4:2).  நாம் நம்முடைய வளர்த்தியிலும் அறிவிலும் உயிர்ச்சத்திலும் ஆதாமிலிருந்து மிகவும் தரந்தாழ்ந்திருக்கிறோம். இவை அனைத்தும் திரும்பவும் நிலைநிறுத்தப்படும் (அப். 3:20,21).

10. பரலோகத்தில் அன்பானவர்களோடு இணைக்கப்படும்போது இரட்சிக்கப்பட்டவர்கள் ஒருவரையொருவர் அறிந்திருப்பார்களா?

“அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்” – 1 கொரிந்தியர் 13:12.

பதில்:  மரித்த அன்பான நீதிமான்கள் உயிரோடிருக்கும் நீதிமான்களோடு தேவனுடைய இராஜ்யத்தில் இணைய எழுப்பப்படுவார்கள் என்று வேதாகமம் தெளிவாகப் போதிக்கிறது. (ஏசாயா 26:19; எரே. 31:15-17; 1 கொரி. 15:51-55; 1 தெச. 4:13-18). தேவனுடைய புதிய இராஜ்யத்தின் மக்கள், இந்த பூமியில் ஒருவரையொருவர் அடையாளம் காண்பதைப்போலவே ஒருவரையொருவர் அறிந்திருப்பார்கள்.

11. பரலோகத்திலிருக்கும் மக்கள் மாம்சமும் எலும்புகளும் கொண்ட மெய்யான மனிதர்களாக இருப்பார்களா?

“இயேசு தாமே அவாகள் நடுவிலே நின்று:  உங்களுக்கு சமாதானம் என்றார்.  அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள்.  அவர் அவர்களை நோக்கி:  நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன?  நான்தான் என்று அறியும்படி, என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறது போல ஒரு ஆவிக்கு இராதே,” “ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில் :  புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார்.  அப்பொழுது பொரித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள்.  அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்து,”  “பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டு போய்,… அவர்களை ஆசிர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்” – லூக்கா 24:36-39; 41-43; 50,51. “உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்” – அப். 1:11; “அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக் கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்” – பிலிப்பியர் 3:20,21.

பதில்:  உயிர்த்தெழுகைக்குப்பின் இயேசு, தம்மைத் தொட்டுப்பார்க்கக் கூறியும், சீடர்களோடு புசித்தும் தமக்கு மாம்சமும் எலும்புகளும் இருக்கிறதை உறுதிப்படுத்தினார்.  மாம்சத்தையும் எலும்புகளையும் கொண்டிருந்த இயேசுதாமே தமது பிதாவினிடத்திற்குப் போயிருக்கிறார்; அதே சரீரத்தோடு மீண்டும் வருவார்.  கிறிஸ்துவினுடைய சரீரத்தைப்போன்ற சரீரங்கள் நீதிமான்களுக்கும் கொடுக்கப்படும்.  அவர்கள் மெய்யான மாம்சமும் எலும்புகளும்கொண்ட மெய்யான மக்களாக நித்தியத்திற்கும் இருப்பார்கள்.  ஒரே வேறுபாடு: பரலோக சரீரம் மரிக்காது, அழுகிப்போகாது, சீரழியாது.  பரலோகத்தில் இரட்சிக்கப்பட்டவர்கள் மேகப்பனிக்கு நடுவே ஆவிகளாக மிதந்து தங்கள் சுரமண்டலங்களை வாசிப்பதைத்தவிர வேறு எதையும் செய்யமாட்டாரகள் என்னும் கருத்திற்கு வேதவாக்கியத்தில் ஆதாரம் இல்லை.  தம் அன்பை ஏற்று  தமது வாழ்க்கைமுறையை பின்பற்றின மக்களுக்கு அப்படிப்பட்ட அற்பமான மதியற்ற எதிர் காலத்தைத் தரும்படி இயேசு சிலுவையில் மரிக்கவில்லை.  அநேகர் இப்படி வெறும் ஆவிகளாக வாழ்வதில் ஆர்வமற்றிருக்கிறார்கள்.  எனவே, தேவனுடைய பரலோக இராஜ்யத்திற்குள் பிரவேசிக்கவும் விருப்பமற்றிருக்கிறார்கள்.  பலவேளைகளில் நரக பயத்தினிமித்தமே அவர்கள் பரலோகத்தை நினைக்கிறார்கள்.  தேவனுடைய பரிசுத்த நகரத்தையும் புதிய பூமியையும் குறித்த சத்தியத்தை எங்குமிருக்கிற மக்கள் அறிந்துகொள்வார்கௌன்றால், இலட்சக்கணக்கானோர் அவருடைய அன்பைப் புரிந்து, தங்கள் முழு இருதயத்தோடும் அவரிடத்தில் திரும்புவார்கள்.  தேவனுடைய இராஜ்யத்தை இழந்துபோகிற ஒரு நபர் வாழ்நாளிலே மிகவும் மோசமான மதியற்ற காரியத்தைச் செய்திருக்கிறார்.

12. பரலோக இராஜ்யத்தில் நீதிமான்கள் எவ்விதம் தங்கள் நேரத்தை செலவு செய்வார்கள்?

“வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திரட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள்.  அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனிபுசிக்கிறதுமாயிருப்பதில்லை;…. நான் தெரிந்து கொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்” – ஏசாயா 65:21,22.

பதில்:  நீதிமான்கள் புதிய பூமியில் தங்கள் சொந்த வீடுகளைக் கட்டுவார்கள்.  கிறிஸ்துதாமே கட்டியிருக்கிற வாசஸ்தலம் ஒன்று அவர்களுக்கு நகரத்திற்குள் இருக்கும். (யோவான் 14:1-3).  அவர்கள் திராட்சத்தோட்டங்களை நட்டு அவைகளின் கனிகளைப் புசிப்பார்கள்.  வேதவாக்கியம் மிகத்தெளிவாக இருக்கிறது. உண்மையான மனிதர்கள் உண்மையான காரியங்களை பரலோகத்தில் செய்வார்கள்.  அவர்கள் முழுமையாக அதில் களிகூருவார்கள்.

13. இன்னும் வேறு என்ன சிலிர்ப்பூட்டுகிற காரியங்களில் மீட்கப்பட்டவர்கள் பங்குகொள்வார்கள்.

பதில்:

அ.  பரலோக இசையை பாடி வாசிப்பார்கள் (ஏசாயா 35:10; 51:11; சங்கிதம் 87:7; வெளி. 14:2,3).

ஆ.  ஒவ்வொரு ஓய்வுநாளிலும் தேவனுடைய சிங்காசனமுன்பு ஆராதிப்பார்கள் (ஏசாயா 66:22,23).

இ.  ஒருபோதும் வாடிப்போகாத மலர்களையும் விருட்சங்களையும் அனுபவிப்பார்கள். (எசேக்கியேல் 47:12; ஏசாயா 35:1,2).

ஈ.  அன்பானவர்களையும் முற்பிதாக்களையும் தீர்க்கதரிசிகளையும் இன்னும் பலரையும் சந்திப்பார்கள் (மத்தேயு 8:11; வெளி. 7:9-17).

உ.  பரலோகத்தின் மிருகங்களைக்குறித்து ஆராயலாம் (ஏசாயா 11:6-9; 65:25).

ஊ.  சோர்வடையாமல் எப்போதும் பயணித்து புதிய காரியங்களைக் கண்டுபிடிக்கலாம் (ஏசாயா 40:31).

எ.  தேவன் பாடுவதைக் கேட்கலாம் (செப்பனியா 3:17).

ஏ.  மிகவும் விருப்பமான இலட்சியங்களை உணரலாம் (சங்கீதம் 37:3,4; ஏசாயா 65:24).

ஐ.  இயேசுவைப்போல இருந்து, அவரோடு பயணித்து, அவரை முகமுகமாகப் பார்க்கும் அனைத்து வாய்ப்புகளின் மாபெரும் மகிழ்ச்சியை உணரலாம் (வெளி. 14:4; 22:4 21:3; 1 யோவான் 3:2).

[ நீங்கள் இயேசுவுக்கு மிக முக்கியமானவர்.  எனவே இயேசு உங்களுக்காக, தனிப்பட்ட உங்களுக்காக பரலோகத்தை ஆயத்தம் செய்கிறார் ]

14. பரலோக இல்லத்தின் மகிமைகளை குறைவுள்ள மனித மொழியால் விவரிக்கமுடியுமா?

“எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை;” – 1 கொரிந்தியர் 2:9.

பதில்:  தேவனுடைய நித்திய இராஜ்யத்தின் அற்புதங்களை மனித மனதின் மிக உயர்ந்த கற்பனைகள்கூட புரிந்துகொள்ள முடியாது.  ஆதாம் இழந்துபோன அனைத்தும் திரும்பவும் ஸ்தாபிக்கப்படும் (அப். 3:20,21).

15. அந்த இராஜ்யம் எனக்காக தனிப்பட்ட முறையில் ஆயத்தப்படுத்தப்படுகிறதா?

“விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக் கடவன்” – வெளி. 22:17; “அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக,… உங்களுக்கு அந்தச் சுதந்திரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது” – 1 பேதுரு 1:4; “ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்” – யோவான் 14:2.

பதில்:  அது தனிப்பட்ட முறையில் உங்களுக்காக ஆயத்தப்படுத்தப்படுகிறது.  ஆண்டவரிடமிருந்து உங்களுக்குத் தனிப்பட்ட அழைப்பு வருகிறது.  நண்பனே அதை இழந்துபோவீர்களானால், உங்களைவிடுத்து வேறு யாருமே அதற்கான காரணமாயிருக்கமுடியாது.

[ உங்கள் இருதயம் ]

16. அந்த மகாபெரிய மகிமையான இராஜ்யத்தில் ஒரு இடத்தைக்குறித்த நிச்சயத்தை நான் எவ்விதம் பெறலாம்?

“இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து,” –வெளி 3:20; “ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்” –வெளி 22:14; “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி:  கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை” – மத்தேயு 7:21;  “அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” – யோவான் 1:12;  “அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்” – 1 யோவான் 1:7.

பதில்:  வேதாகமம் இதை மிகவும் தெளிவாக்குகிறது.  அது எளிமையானது.  பாவத்திலிருந்து கழுவப்படும்படி உங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவிற்குக் கொடுங்கள்.  இதை நீங்கள் செய்யும்போது, அவருடைய சித்தத்தைச் செய்யவும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளவும் அவர் உங்களுக்கு வல்லமை கொடுக்கிறார்.  அதாவது, நீங்கள் கிறிஸ்துவைப்போல வாழ்ந்து, அனைத்து பாவத்தையும் வெற்றிகொள்வீர்கள்.  “ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்” –வெளி. 21:7.  சுருக்கமாகச் சொல்லப்போனால், ஒரு மனிதனுடைய உள்ளத்தில் பரலோகம் இருக்கும்போது அவன் பரலோகத்திற்கு ஆயத்தமாயிருக்கிறான்.

17. இயேசுவோடு நித்தியமாக பரலோக இராஜ்யத்தில் வசிப்பதற்கான அவருடைய ஈவை ஏற்றுக்கொள்ள நீங்கள் தீர்மானிக்கிறிர்களா?

உங்கள் பதில்: ____________________________________________________________________________________________________________

சிந்தனைக்  கேள்விகள்


 

  1. இரட்சிப்பை இழந்துபோன தங்கள் அன்பானவர்களை நினைக்கும்போது இரட்சிக்கப்பட்டவர்களுக்கு பரலோகம் எவ்விதம் இன்பமான இடமாக இருக்கமுடியும்?

   பதில்:  “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்”    (வெளிப்படுத்தல் 21:4) என்று வேதாகமம் சொல்லுகிறது.  புதிய பூமியின் அழகினாலும் மகிழ்ச்சியினாலும் சூழப்பட்டவர்களாக, மீட்கப்பட்டவர்கள் தங்கள் கடந்தகால வேதனைகளையும் வலிகளையும் மறப்பார்கள்.  “முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை” –    ஏசாயா 65:17. 

  1. “மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது” ( 1 கொரிந்தியர் 15:50) என்று வேதாகமம் சொல்லுகிறதே.  மீட்கப்பட்டவர்கள் எவ்விதம் மாம்சத்தையும் எலும்புகளையும் பெற்றிருப்பார்கள்?

பதில்:  வேதாகமத்தில் “மாம்சம்” என்ற வார்த்தை மனம்மாறியிராத நபரையே குறிப்பிடுகிறது.  இதேபோன்ற கருத்தை, “மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்க மாட்டார்கள்.  தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள்” என்று ரோமர் 8:8,9 கூறுகிறது.  “மாமிசத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்” – யோவான் 3:6.  “மாம்சம்” என்னும் வார்த்தை மனம்மாறாத நபரையம், “ஆவி” என்பது “மீண்டும் பிறந்த” நபரையும் குறிப்பிடுகிறது. எனவே 1 கொரி. 15:50 – ன்படி மனமாற்றம் முதலாவது நடந்து, பின்னர் மாம்சம் ஆவியாக மாறாதபோது, எவரும் தேவனுடைய இராஜ்யத்திற்குள் நுழைய முடியாது.  கிறிஸ்து உயிர்த்தெழுந்த தமது  சரீரத்தைக்குறித்து:  “மாம்சமும் எலும்புகளும்” (லூக்கா 24:39) என்றார்.  பிலிப்பியர் 3:21  – ன்படி நாம் அவருடைய சரீரத்தைப்போன்ற சரீரத்தைப் பெறுவோம்.

  1. பரிசுத்த நகரத்தினுடைய வாசலின் பொறுப்பாளராக பேதுரு இருப்பாரா?

பதில்:  இல்லை! – வெளி. 21:12 –ல் தேவனுடைய பரிசுத்த நகரமாகிய புதிய எருசலேமிற்கு 12 வாசல்கள் இருக்கும் என்றும், அந்த வாசல்களில் 12 தூதர்கள் இருக்கிறார்கள் என்றும் வேதாகமம் சொல்லுகிறது.  வாசல்களை அப்போஸ்தலர் பாதுகாப்பார்கள் என்பதற்கான எந்த வேதாகமக் குறிப்பும் இல்லை.

  1. காலங்கள்நெடுகிலும் இரட்சிக்கப்படும் அனைவருக்கும் போதுமான இடம் பரிசுத்த நகரத்தில் இருக்குமா?

பதில்:  அந்த நகரம் நிரம்பியிருந்து, இரட்சிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும் 100 சதுர அடி இடம் கொடுக்கப்படுவாராயின், அதிலே 3900 கோடிபேருக்கு இடம் இருக்கும்.  அது இப்போதைய உலக மக்கள் தொகையைவிட அநேக மடங்கு அதிகம்.  இதுவரையிலும் வாழ்ந்திருந்த அனைத்து மக்களும் இரட்சிக்கப்பட்டிருந்தாலும் கூட, அவர்களுக்கு அந்த நகரத்தில் தாராளமான இடம் இருக்கும் என்று அநேக புள்ளிவிவர ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.  எனினும் சிலரே இரட்சிக்கப்படுவார்கள் (மத்தேயு 7:14) என்று வேதவாக்கியங்கள் தெளிவுபடுத்துகின்றன.  எனவே அங்கு தேவைக்கும் அதிகமான இடம் இருக்கும். 

  1. செய்கிற தியாகத்திற்கு இணையான பலன் கிடைக்குமா என சிலவேளைகளில் நான் அதிசயிக்கிறேன்.  அப்போது சாத்தான் என்னை மேற்கொள்வதைப் போலத் தோன்றுகிறது.  வேதாகமம் எனக்கு ஏதாவது உற்சாகம் கொடுக்கிறதா?

பதில்:  கொடுக்கிறதே! “ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்” (ரோமர் 8:18) என்று பவுலார் எழுதினபோது, உங்களைப்போன்ற சிலரை அவர் நினைவுகூர்ந்திருக்கவேண்டும்.  அந்த நித்திய இராஜ்யத்தை ஒரு பார்வை பார்த்தால்போதும், இவ்வுலகத்தின் அனைத்து சோதனைகளும் உபத்திரவங்களும் ஒன்றுமில்லாதவை போலிருக்கும்.  மீட்கப்பட்டவர்கள்: “அல்லேலூயா, பரலோகம் எவ்வளவு மலிவானது!” என்று முழங்குவார்கள்.

  1. மரிக்கிற சிறு குழந்தைகள் தேவனுடைய இராஜ்யத்தில் இரட்சிக்கப்பட்டிருப்பார்களா?

பதில்:  இந்த கேள்விக்கான குறிப்பான பதில் வேதாகமத்தில் இல்லை.  ஆனாலும் மத்தேயு 2:16-18 –ன் அடிப்படையில் சிறு குழந்தைகள் இரட்சிக்கப்படுவார்கள் என்று அநேகர் நம்புகிறார்கள்.  அதிலே துன்மார்க்க அதிபதியான ஏரோது பெத்லகேமில் இரண்டு வயதுக்குட்பட்ட அனைத்து ஆண் குழந்தைகளையும் கொன்றது குறிப்பிடப்பட்டிருக்கிறது.  இந்த கொடிய சம்பவத்தை பழைய ஏற்பாடு முன்குறிப்பிட்டிருக்கிறது.  அதிலே ஒருநாளிலே அந்தக் குழந்தைகள் அவர்களிடம் தீரும்பவும் கொடுக்கப்படுவார்கள் என்பதால் அழாதிருக்கும்படி தேவன் தாய்மார்களிடம் கூறுகிறார்.  “நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி,…. அவர்கள் சத்துருவின் தேசத்திலிருந்து திரும்பிவருவார்கள்…. உன் பிள்ளைகள் தங்கள் தேசத்துக்குத் திரும்பிவருவார்கள்” – ஏரேமியா 31:16,17.  இது உயிர்த்தொழுதலைக்குறித்த வெளிப்படையான குறிப்பு. 

  1. இரட்சிக்கப்பட்டவர்களின் வீடாகிய பரலோகம் இந்த பூமியிலேயே இருக்கும் என்று நான் சரியாகப் புரிந்துவைத்திருக்கிறேனா?

பதில்:  அது சரியே.  பரிசுத்த நகரம் இப்போது தேவன் வசிக்கும் இடத்தில் இருந்தாலும், அவர் அதை பூமிக்குக் கொண்டுவருவார்.  பாவமும் பாவிகளும் அக்கினியால் அழிக்கப்படுவார்கள்.  பூமி புதிதாக்கப்பட்டு, ஏதேனின் அழகிலும் மகிமையிலும் நீதிமான்களுக்குக் கொடுக்கப்படும்.  பரிசுத்த நகரம் புதிய பூமியின் தலைநகரமாயிருக்கும்.  தேவன் தமது சிங்காசனத்தை அதற்குள் கொண்டுவருவார் (வெளி. 21:2,3; 22:1,3) நித்தியத்திற்கும் நீதிமான்களோடு இந்த பூமியிலேயே இருப்பார்.  ஆண்டவர் எங்கே வாசம் பண்ணுகிறாரே, அதுதான் பரலோகம்.  ஆதாம் இழந்துபோன பரிபூரண வாழ்க்கையையும் பரிபூரணமான பூமியையும் அதன் மகிமையோடு மீண்டும் நிலைநிறுத்துவதே தேவனுடைய திட்டம்.  சாத்தானும் பாவமும் தேவனுடைய திட்டத்தில் குறுக்கிட்டன.  ஆனாலும் அந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.  நாம் அனைவரும் அதில் பங்கடைவோம்.  பங்கடையவேண்டும்!  இழந்துபோகக் கூடாத ஒன்று அது. (இதை குறித்து வேதாகமம் 12 –ல் படிக்கவும்) 

  1. இரட்சிக்கப்பட்டவர்களின் வீடு, ஆவிகளைப்போன்ற அதன் குடிகள் மேகங்களின்மேல் பறந்து தங்கள் சுரமண்டலங்களை வாசிப்பதைத்தவிர வேறு எதுவுமே செய்யாத ஒரு பனிசூழ்ந்த இடம் என்று ஏன் அநேகர் போதித்து நம்புகிறார்கள்?

பதில்:  இந்த போதனை பொய்களின் பிதாவாகிய ( யோவான் 8:44) பிசாசிடமிருந்து துவங்கியது.  தேவனுடைய அன்பான திட்டத்தைச் சிதைக்க அவன் கவனமாயிருக்கிறான். மேலும் பரலோகத்தை நிஜமற்ற, பயமுறுத்தும் இடமாகக் காண்பித்து, மக்களுக்கு அதன்மேலிருக்கும் வாஞ்சையைக் குறைக்கவோ அல்லது தேவனுடைய வார்த்தைகளின்மேலுள்ள நம்பிக்கை முற்றிலும் தகர்க்கவோ முயற்சிக்கிறான்.  இரட்சிக்கப்பட்டவர்களின் வீட்டைக்குறித்த வேதாகம உண்மைகளை மக்கள் முழுமையாக புரிந்துகொண்டால், அவர்கள்மேலிருக்கும் தன்னுடைய வல்லமை முறிந்துபோகுமென்று சாத்தான் நன்கு அறிவான்.  ஏனெனில் அந்த இராஜ்யத்திற்குள் நுழைவதற்கான திட்டங்களைத் துவங்கிவிடுவார்கள்.  எனவேதான் அதைக்குறித்த உண்மைகளை மறைத்து, பரலோக வீட்டைக்குறித்த பொய்களைப் பரப்ப அவன் மிக்க் கடினமாக உழைக்கிறான்.

Quiz Questions


 1.  விண்வெளியில் இருக்கும் பரிசுத்த நகரம்  (1)

(  )  உண்மையானதல்ல, ஒரு உருவகமே.

(  )  தேவன் வசிக்கும் இடத்தில் அவரால் ஆயத்தப்படுத்தப்பட்டுவருகிற ஒரு மெய்யான நகரம் அது.

(  )  சில மனிதர்களின் மனங்களில் தவிர அது வேறு எங்கும் இல்லை.

  1. பரிசுத்த நகரம் (1)

(  )  அணு வெடிப்பில் அழிக்கப்படும்.

(  )  சாத்தானாலும் அவன் சேனையாலும் பிடிக்கப்படும்.

(  )  இந்த பூமிக்கு இறங்கிவந்து புதிய பூமியின் தலைநகரமாகும்.

  1. பரிசுத்த நகரத்தைக்குறித்த வேதாகம உண்மைகள்: (7)

(  )  அது புதிய எருசலேம் எனப்படுகிறது.

(  )  அது இலண்டன் மாநகரத்தின் அளவில் இருக்கும்.

(  )  அதன் கற்கள் பளிங்கினாலானவை.

(  )  அந்த நகரம் சதுரமானது.

(  )  அதன் வீதிகள் பொன்னாலானவை.

(  )  அதற்கு 14 அஸ்திபாரங்கள் உண்டு.

(  )  அப்போஸ்தலனாகிய பேதுரு அதன் வாசலில் நிற்கிறார்.

(  )  அதன் ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தினாலானது.

(  )  அதன் சுற்றளவு 1500 மைல்கள்.

(  )  அதன் அஸ்திபாரங்கள் விலையேறப்பெற்ற கற்களால் ஆனாவை.

(  )  அந்த நகரம் பூரண அளவுகொண்டது.

  1. ஜீவவிருட்சம்: (1)

(  )தேவனுடைய பிள்ளைகளுக்கு பலத்தையும் இளமையையும் கொடுக்கும் உண்மையான மரம்.

( )  தேவன் தமது மக்களுக்கு பலம் கொடுப்பார் என்பதைக் காட்டுகிற ஒரு உருவகமே அது

(  )  ஆதியில் இருந்தது.  ஆனால் புதிய பூமியில் இருக்காது.

  1. தேவனுடைய புதிய இராஜ்யத்தில் மக்களுக்குக் கொடுக்கப்படும் வேதாகம வாக்குத்தத்தங்கள்: (5)

(  )  ஆண்டவர் அனுதினமும் திருமணங்கள் நடத்திவைப்பார்.

 

            (  )  ஜீவவிருட்சம் இருபதுவிதமான கணிகளைக் கொடுக்கும்.

(  )  ஆண்டவர்தாமே தமது மக்களோடு வசிப்பார்.

(  )  பத்து இலட்சம் வருடங்களுக்குப்பின் பரிசுத்தவான்கள் சலிப்படைவார்கள்.

(  )  அங்கே மரணமில்லை, துக்கமில்லை.

(  )  மக்கள் ஒருகாலும் சோர்வடையார்கள்.

(  )  முடவனை தூதர் சுமந்துசெல்வர்!

(  )  தூதர்கள் மருத்துவர்களாக அறுவை சிகிச்சை செய்வார்கள்.

(  )  குருடர் பார்வையடைவார்கள்.

(  )  பொறாமை, பயம், வெறுப்பு, பொய், பகை, அசுத்தம் போன்ற அனைத்தும் என்றைக்குமே கடந்துபோயிருக்கும்.

(  )  குழந்தைகள் வளரமாட்டார்கள்.

  1. புதிய பூமியைக்குறித்த உண்மைகள்: (6)

(  )  இன்றைய கடல்கள் இருக்காது.

(  )  பாலைவனங்கள் இப்போதைவிடவும் பெரியதாக இருக்கும்

(  )  மிருகங்கள் இனிமையான பரலோக கூண்டுகளில் அடைக்கப்பட்டிருக்கும்.

(  )  பூகம்பங்கள், வெள்ளங்கள் எதுவும் இருக்காது.

(  )  சிகரெட்டின் உதிரிகள் தூதர்களால் பரலோக வீதிகளிலிருந்து கவனமாக அனுதினமும் அகற்றப்படும்.

(  )  மலர்களும் மரங்களும் வாடாது.

(  )  பரலோகம் இந்த பூமியில் இருக்கும்

(  )  பாவம் மீண்டும் எழும்பாது.

(  )  புதிய பூமியின் மகிமைகள் விவரிக்கப்படமுடியாதவை.

  1. பரலோக இராஜ்யத்தில் நீதிமான்கள்: (1)

(  )  சுரமண்டலங்களை வாசித்து மேகங்களில் மிதக்கும் ஆவிகள்.

(  )  அன்பானவர்களையும் நண்பர்களையும் அறிந்திருக்கமாட்டார்கள்.

(  )  மாம்சமும் எலும்புகளும் கொண்டவர்கள் மெய்யான சரீரங்களோடு ஒருவரையொருவர் அறிந்திருப்பார்கள். 

 

  1. பரலோகத்தில் இருக்கும் மக்கள் நிஜமானவர்கள் என்றும் அவர்கள் நிஜமான காரியங்களைச் செய்வார்கள் என்றும் எனக்கு எவ்விதம் தெரியுமென்றால்: (1)

(  )  அறிவியல் இதை நிரூபித்திருக்கிறது.

(  )  உயிர்த்தெழுந்தபின்பு மெய்யான சரீரத்தோடு நிஜகாரியங்களைச்செய்த இயேசுவைப் போன்று நாமும் இருப்போம் என்கிறது வேதாகமம்.

(  )  அநேக போதகர்கள் இவ்விதம் கூறுகிறார்கள்.

  1. நான் இவ்விதம் செய்தால், அந்த பரலோக இராஜ்யத்தில் எனக்கு நிச்சயமாக ஒரு இடம் இருக்கும் (1)

(  )  ஆண்டவரை நேசிக்கிறேன் என்று நான் அனுதினமும் சொன்னால்.

(  )  நரகத்தைக்குறித்த பயத்தோடிருந்தால்.

(  )  இயேசுவை ஏற்றுக்கொண்டு, அவரைப்பின்பற்றி, அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டால்.

            கேள்விகள்

  1. இரட்சிக்கப்பட்டவர்கள் பரலோக இராஜ்யத்தில் என்ன செய்வார்கள்? (5)

(  )  வீடுகளைக் கட்டி அவைகளில் குடியிருப்பார்கள்.

(  )  திரட்சத்தோட்டங்களை நடுவார்கள்.

(  )  மிருகங்களைக் கொன்று புசிப்பார்கள்.

(  )  பரலோக இசைக்©கருவிகளை வாசித்து தேவனைத் துதித்துப் பாடுவார்கள்.

(  )  தேவனுடைய சிங்காசனமுன்பு ஆராதனை செய்வார்கள்.

(  )  நரகத்திற்குச் சென்று இரட்சிப்பை இழந்தவர்களை கேலிசெய்வார்கள்.

(  )  ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிப்பார்கள்.

  1. இயேசுவோடு நித்தியமான பரலோக இராஜ்ஜியத்தில் வசிப்பதற்கான அவருடைய ஈவை ஏற்றுக்கொள்ள நான் தீர்மானிக்கிறேன்.

(  )  ஆம்

(  )  இல்லை