AFDB-Doug-Tamil
Program Listings for Amazing Facts with Doug Batchelor
TITLE DESCRIPTION

மன்னிப்பைப் பெற்று அதை பிறரிடம் பகிருதல்

நாம் எவ்வாறு மன்னிப்பைப் பெறுகிறோம்? மற்றவர்களை நாம் எவ்வாறு மன்னிப்பது?

உண்மையான மனந்திரும்புதல்

உண்மையான மனந்திரும்புதல் என்றால் என்ன?

சிலுவையில் தொங்கிய திருடன்

நாம் நம்முடைய பாவங்களிலிருந்து எவ்வாறு இரட்சிக்கப்படுகிறோம்?

இயேசு யார்?

பலர் அவ்வப்போது இயேசுவின் நாமத்தைக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இயேசு யார் என்பதைப் பற்றி அவர்களுக்கு எந்தப் புரிதலும் இல்லை.

ஒப்பில்லா பலி (இணையற்ற தியாகம்)

தேவன் உங்களை மிகவும் நேசிக்கிறார். அதனால், உங்களை இரட்சிப்பதற்காகத் தம்முடைய குமாரனை அனுப்பினார். இதை நீங்கள் ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், இதன் உண்மையான அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொண்டிருக்கிறீர்களா?

சிம்சோன்: ஒப்புரவு ஆனதால் (மனந்திரும்பியதால்) ஜெயம்

சிம்சோன் கடைசி நேரத்தில் தேவனிடம் திரும்பியதால் இரட்சிக்கப்பட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

சிம்சோன்: கழுதையின் தாடை எழும்பு

தேவன் எளிய வழிகளின் மூலமாகவே உங்களுக்கு வெற்றியைப் பெறுவதற்கான பெலத்தை அளிப்பார். எனவே, தேவன் உங்களுக்காகச் செய்யக்கூடியவற்றை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்.

சிம்சோன்: சிங்கத்திலிருந்து தேன்

தேவனை விசுவாசிக்காத ஒருவரைத் திருமணம் செய்துகொள்வது சரியானதா?

கோதுமை மற்றும் களைகள்

கோதுமை மற்றும் களைகளைப் பற்றிய உவமையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம்.

ஞாயிற்றுக்கிழமை உண்மையில் புனிதமானதா?

ஓய்வுநாள் எது என்பதைப் பற்றிய உண்மையை அறிந்துகொள்ளுங்கள்.

பாபிலோன் பண்டசாலை

நம்முடைய உடல் ஆரோக்கியத்தில் தேவன் அக்கறை கொண்டிருக்கிறாரா?

மனந்திரும்புதல்

மனந்திரும்புதல் என்பது பாவத்திற்காக மனம் வருந்துவதையும், அந்தப் பாவத்தை விட்டுவிலகுவதையும் உள்ளடக்கியது.

அற்புதமான ராஜ்யம்

பரலோகம் எப்படியிருக்கும்? தேவன் நமக்காக மகிமை நிறைந்த ஓர் இராஜ்யத்தை ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறார்.

உபத்திரவத்திலிருந்து தப்பிபிழைப்பது

கஷ்டமான காலங்களில் தேவனுடைய வார்த்தையின் மூலம் எவ்வாறு உறுதியுடன் நிலைத்திருக்கலாம் என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்.

இருட்டுடன் பழகுவது

நாம் இருளில் நடப்பதற்குப் பழகிக்கொண்டிருக்கிறோமா அல்லது ஒளியில் நடப்பதற்குப் பழகிக்கொண்டிருக்கிறோமா?

தீர்க்கதரிசனத்தில் ரகசிய குறியீடு

வேதாகமத் தீர்க்கதரிசனங்களை நம்பலாமா? வேதாகமத்தில் கூறப்பட்ட அனைத்துத் தீர்க்கதரிசனங்களும் நிறைவேறியுள்ளனவா? மேலும் அறிந்துகொள்ள இந்தக் காணொளியைக் கண்டு ஆசீர்வாதம் பெறுங்கள்.

ராஜா வருகிறார் பகுதி 1

கிறிஸ்து மீண்டும் வரும்போது, அவர் அனைத்தையும் சரிசெய்வார். அதுவே உலக வரலாற்றின் மகத்தான உச்சக்கட்டமாக இருக்கும். பகுதி 1 / 2

தேவனின் பிரசன்னத்தை அனுபவிப்ப்தற்கான 7 படிகள்

நீங்கள் கர்த்தரோடு கொண்டிருக்கும் உறவில் இருந்து விலகிச் செல்வதாக உணர்ந்தால், இந்தச் செய்தியைக் கேளுங்கள். போதகர் டக் பேட்சலர் அவர்கள், மீண்டும் தேவனிடம் திரும்புவதற்கான சில எளிய வழிமுறைகளைப் பகிர்ந்துகொள்கிறார்.

பரிணாம்ம், உருவாக்கம் & தர்க்கம்

புவியியல், உயிரியல், தொல்லியல் மற்றும் தொல்லுயிரியல் ஆகிய துறைகளில் படைப்புக் கொள்கையை ஆதரிக்கும் நல்ல காரணங்கள் உள்ளன. நாம் எங்கிருந்து வந்தோம்? இங்கு நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்? நாம் எங்கே செல்லப்போகிறோம்?

ஒரு இரட்சிக்கப்பட்ட மனிதன் இழக்கப்படுவதை தேர்வு செய்ய முடியுமா?

ஒருமுறை இரட்சிக்கப்பட்டுவிட்டால், நாம் ஒருபோதும் இரட்சிப்பை இழக்க முடியாது என்று வேதாகமம் போதிக்கிறதா? தேவனுடைய வார்த்தை என்ன கூறுகிறது என்பதை ஆராய்ந்து பார்ப்போம்.

கிறிஸ்தவர்கள் விழும்போது

நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கைப் பயணத்தில் நாம் தடுமாறுவதற்கான சில காரணங்களையும், அந்தத் தவறுகளை எவ்வாறு தவிர்ப்பது என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.

தேவன் இருப்பதை நிருபிக்க முடியுமா?

இயற்கை தேவனுடைய மகிமையையும், அவருடைய வல்லமையான படைப்புச் செயல்களையும் வெளிப்படுத்துகிறது. தேவன் இருக்கிறார் என்பதற்கான மிகச் சிறந்த சான்று இதுவே. மேலும் அறிந்துகொள்ள இந்தக் காணொளியைக் கண்டு ஆசீர்வாதம் பெறுங்கள்.

லூதர் மற்றும் அவரின் சீர்திருத்த புரட்சி

தேவனுடைய வார்த்தைக்காகவும் சத்தியத்திற்காகவும் தங்கள் உயிரையே தியாகம் செய்த பல்வேறு சீர்திருத்தவாதிகளின் பணிகளை அறிந்துகொள்ளுங்கள்.

அர்மகெதோன் யுத்தம் பகுதி 2

தேவனுடைய மக்களுக்கு எதிராக சாத்தான் நடத்தும் இறுதிப் போராட்டம் என்ன? நியாயத்தீர்ப்பைப் பற்றி வேதாகமம் என்ன கூறுகிறது? அசுத்தமான தவளைகளைப் பற்றியும் அறிந்துகொள்ளுங்கள்.

அர்மகெதோன் யுத்தம் பகுதி 1

நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போராட்டத்தைப் பற்றிய மேலும் பல உண்மைகளை அறிந்துகொள்ளுங்கள். வெளிப்படுத்தின விசேஷம் 7:3-ல் வேதாகமம் குறிப்பிடும் முத்திரை எது?

குடும்பத்திற்குள் கனம்

குடும்பத்தில் சமாதானத்தையும் ஒற்றுமையையும் எவ்வாறு நிலைநாட்டுவது? மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கான வேதாகம வழிகாட்டுதல்கள். குடும்பத்தினருடன் இந்தக் காணொளியைக் கண்டு ஆசீர்வாதம் பெறுங்கள்.

கடினமான (போராட்ட) சூழ்நிலைகளை சமாளித்தல்

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ அல்லது ஆவிக்குரிய ரீதியாகவோ கடினமான காலங்களைச் சந்திக்கிறார்கள். அத்தகைய சூழ்நிலைகளை தேவனுடைய வார்த்தையின் மூலம் நாம் எவ்வாறு எதிர்கொண்டு சமாளிக்கலாம்?

என் கிறிஸ்தவம் உண்மையானதா? பகுதி 2

நான் உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்கிறேனா என்பதை வேதாகமத்தின் மூலம் எவ்வாறு அறிந்துகொள்ளலாம்? ஒரு கிறிஸ்தவராக, நம்முடைய வாழ்க்கையில் கிறிஸ்துவை எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும்? பகுதி 2 / 2

என் கிறிஸ்தவம் உண்மையானதா? பகுதி 1

நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கை உண்மையானதா என்பதை நாம் அறிந்திருக்கிறோமா? நாம் நம்முடைய செயல்களில் அதிக கவனம் செலுத்தி, நம்முடைய மனப்பான்மையைப் பற்றி மறந்துவிடுகிறோம். பகுதி 1 / 2

வரப்போகும் ராஜாவின் அடையாளங்கள் பாகம் 1

கர்த்தர் தாம் சீக்கிரமாக வருவதாகக் கூறுகிறார். இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றி நாம் என்ன அறிந்துகொள்ளலாம்? பகுதி 1 / 2

வரப்போகும் ராஜாவின் அடையாளங்கள் பாகம் 2

கர்த்தர் தாம் சீக்கிரமாக வருவதாகக் கூறுகிறார். இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றி நாம் என்ன அறிந்துகொள்ளலாம்? பகுதி 2 / 2

வெளிபடுத்தின விசேஷத்தின் கதாநாயகன் பகுதி 1

வெளிப்படுத்தின விசேஷம் இயேசுவைப் பற்றிய புத்தகமாகும். அவரே இப்புத்தகத்தின் மையக் கதாபாத்திரமும் நாயகனுமாவார். பகுதி 1 / 2

வெளிபடுத்தின விசேஷத்தின் வில்லன் பகுதி 1

தேவன் எல்லாவற்றையும் ஆளுகிறவராகவும், சர்வவல்லமையுள்ளவராகவும் இருந்தால், பிசாசாக மாறக்கூடிய ஒரு தேவதூதனை அவர் ஏன் படைத்தார்? பகுதி 1 / 2

வெளிபடுத்தின விசேஷத்தின் வில்லன் பகுதி 2

தேவன் சர்வவல்லமையுள்ளவராக இருந்தால், பிசாசாக மாறக்கூடிய ஒரு தேவதூதனை அவர் ஏன் படைத்தார்? பகுதி 2 / 2

ஆட்டுக்குட்டியானவரின் கட்டளை பகுதி 1

கிறிஸ்தவர்கள் சட்டவாதிகளாக மாறாமல், பத்துக் கட்டளைகளுடன் எவ்வாறு தொடர்புகொள்ள வேண்டும்? கீழ்ப்படிதல் என்பது சட்டவாதமா? பகுதி 1 / 2

மிருகத்தின் மீது சவாரி செய்த ஒரு ஸ்திரீ பகுதி 1

தானியேல் புத்தகத்திலும் வெளிப்படுத்தின விசேஷத்திலும் குறிப்பிடப்படும் பெண்களும் மிருகங்களும் யாரைக் குறிக்கின்றன? பகுதி 1 / 2

மிருகத்தின் மீது சவாரி செய்த ஒரு ஸ்திரீ பகுதி 2

தானியேல் புத்தகத்திலும் வெளிப்படுத்தின விசேஷத்திலும் குறிப்பிடப்படும் பெண்களும் மிருகங்களும் யாரைக் குறிக்கின்றன? பகுதி 2 / 2