எங்களுக்கு
ஜெபிக்க கற்றுத்தாரும்
CONTENTS
|
ஜெபத்தின் குதிங்கால்கள் மேல் |
|
பிரதான வேலை |
|
ஜெபத்தின் அமைப்பு. |
|
ஒரு குடும்பமாக நமது தேவனை அழைத்தல் |
|
“பரமண்டலங்களிலிருக்கிற” |
|
“உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” |
|
“உம்முடைய ராஜ்யம் வருவதாக” |
|
“உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக” |
|
ஒரு உயரிய சித்தம் |
|
கர்த்தருடைய ஜெபமும் நாமும் |
|
“………. இன்று எங்களுக்குத் தாரும்” |
|
“எங்களுக்கு வேண்டிய ஆகாரம்”. |
|
“எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல எங்கள் கடன்களை மன்னியும்”. |
|
“எங்களைச் சோதனைக்குட்படப் பண்ணாமல்” |
|
“தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும்” |
|
“ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே” |
|
“ஆமென்” |
|
“இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்” – கொலோசெயர் 4:2. |

ஒரு ஆச்சரியமான உண்மை: வாலி; போர்ஜ் யுத்த வேளையில், யுத்த களத்தில் புரட்சியாளர் துருப்புகள் உறைந்து போகவும் பட்டினியாயிருக்கவும் சிக்க வைக்கப்பட்டனர். ஒரு நாள், பக்கத்தில் வாழ்ந்த ஒரு விவசாயி துருப்புகளுக்கு தேவையான மளிகை சாமான்களைக் கொண்டு வந்தான் மற்றும் அவன் காட்டு வழியே திரும்பிப்போகும் போது யாரோ ஒருவர் பேசுவதைக் கேட்டான். அவன் அந்த சத்தத்தைத் தொடர்ந்து போய் ஓரிடத்தில் பனியில் முழன்காலிட்டு ஜெபித்துக் கொண்டிருந்த ஒரு மனிதனைப் பார்த்தான். அந்த விவசாயி தன் வீட்டுக்கு துரிதமாக சென்று உற்சாகமாக அவனுடைய மனைவியிடம் சொன்னார், “அமெரிக்கர்கள் தங்கள் சுதந்தரத்தைப் பாதுகாப்பார்கள்!” அவனுடைய மனைவி கேட்டாள், “எது உங்களை அப்படிச் சொல்ல வைக்கிறது?” விவசாயி பதிலளித்தார், “இன்று ஜார்ஜ் வாஷிங்டன் காட்டில் ஜெபம் பண்ணக் கேட்டேன் மற்றும் கர்த்தர் நிச்சயமாக அவருடைய ஜெபத்தைக் கேட்பார். அவர் கேட்பார்! அது நிச்சயமாகவே நடக்கும், அவர் கேட்பார்”. மற்றதெல்லாம் சரித்திரமாயிருக்கிறது.
ஜெபத்தின் குதிங்கால்கள் மேல்
அமெரிக்கா ஜெபத்தின்மேல் கட்டப்பட்டது – வேறு எதைக்காட்டிலும் ஒரு வலுவான அஸ்திபாரம் சுதந்தரத்தின் பிரகடனத்தை கையெழுத்திட்டவர்கள் எல்லாம் தேவனுக்கு என்று நேரமே எடுத்துக் கொள்ளாத பல தெய்வ வாதிகள், இயற்கைவாதிகள் அல்லது நாத்திகவாதிகளாயிருந்தார்கள் என்று மறு பார்வையாளர்கள் உங்களை நம்பச் சொல்லுகிறார்கள். அது உண்மையாயிருக்குமென்றால், இன்று கிறிஸ்தவர்களைக் காட்டிலும் நிச்சயமாகவே அப்போதைய இயற்கைவாதிகள் அதிகமாக ஜெபித்தார்கள். உதாரணத்துக்கு காலை, மாலை இரண்டு வேளையிலும், நம்முடைய முதல் ஜனாதிபதி தேவனுடைய வழி நடத்துதலுக்காக திறக்கப்பட்ட வேதாகமத்திற்கு முன்பதாக ஜெபம் செய்ய முழங்காலிட்டார். ஒரு வேளை இந்த தேசம் ஒழுக்கட்தில் தடுமாறுவதற்கு ஒரு காரணம் தேவனுடைய மக்கள் நாட்டிற்காக நேரமெடுத்து ஜெபிக்காததே.
எப்படியாயினும், விசேஷமாக கவர்கின்ற எஹ்த நான் காண்கிறேன் என்றால், அது இயேசுவும் ஜெபம் பண்ண வேண்டியதாயிருந்தது. இயற்கையாகவே அவருடிய விசுவாசம் இயல்பாகவே பலமாயிருந்தது என நாம் அனுமானிக்கிறோம், ஆஅனால் இயேசு அதிகாலையில் எழுந்து அவரே ஜெபம் செய்ய சென்றார் என்று வேதாகமம் சொல்லுகிறது. சில வேளைகளில் அவருடைய அப்போஸ்தலர்களை தேர்ந்தெடுக்கும் முன்பாக செய்தது போல இரவு முழுவதும் ஜெப்த்திருந்தார்.
இந்த கதையை படித்த பிறகு, நான் போதுமான அளவு ஜெபிக்கவில்லை என்பதை உணர்ந்தேன் மற்றும் நான் நன்றாக ஜெபம் பண்ணவில்லை என்றும் உணர்ந்தேன். இருந்தாலும், ஜெபம் மிக முக்கியமானது. உண்மையில் ஒவ்வொரு மறு மலர்ச்சியும் ஜெபத்தின் குதின்கால்களின் மேல் தான் வருகிறது. உதாரணத்துக்கு அவருடைய புதிய சபை 10 நாட்களுக்கு ஒன்றாக அதனுடைய முழங்கால்களில் நின்ற பிறகு தான் பெந்தேகொஸ்தே நாளில் தேவன் பரிசுத்த ஆவியானவரைப் பொழிந்தார். அதன் பிறகு, “ அவர்கள் ஜெபம் மண்ணின போது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு” (அப்போஸ்தலர் 4:31). சபையாகவும் நம்முடைய ஜீவியத்திலும் நாம் அதிகமாக ஜெபம் பண்ண வேண்டும்.
பிரதான வேலை
சார்லஸ் ஸ்பர்ஜன் சொன்னார், “ எல்லா கிறிஸ்தவ ஒழுக்கங்களும் ஜெபத்தின் வார்த்தையில் அடங்கியிருக்கிறது” கிறிஸ்தவனின் முதன்மையன பணிகளில் ஒன்று ஜெபம், தேவனுடன் நேரடியான தொட்ர்பு வைத்துக் கொள்ளுவது.
வில்லியம் கெரி பர்மா, இந்தயா மற்றும் வெஸ்ட் இண்டீச் போன்ர நாடுகளுக்கு தேவ செய்தியாளராக இருந்தார். ஆனால் அவர் ஒரு செருப்பு தைப்பவராகவும் இருந்தார். அவர் பெரும்பாலான நேரத்தை ஜெபத்திலும், விண்ணப்பித்தலிலும் நன்றி சொல்லுவதிலும் செலவிட்ட காரணத்தால் மக்கள் சில வேளைகளில் அவர் தன்னுடைய வேலையை “உதாசீனப்படுத்தினார்” என குற்றம் சாட்டினார். கெரி பதில் சொன்னார், “ செருப்பு தைப்பது என்னுடைய உப தொழில்; என்னுடைய செலவீனங்களை சந்திக்க அது உதவுகிறது. ஜெபம் என்னுடைய உண்மையான தொழில். தேவன் அநேகரை ஆதாயம் செய்ய அவரை பலமாய் உபயோகப்படுத்தினார். இந்த தலைப்பில், மார்ட்டின் லூத்தர் கருத்துரைத்தார். “தையல்காரர்களீன் வேல துணிகளை தைப்பது போல, கிறிஸ்தவர்களுடைய வேல ஜெபம் பண்ணுவது ஆகும்.
ஆனால் நாம் எப்படி ஜெபம் செய்கிறோம். இந்தக் கேள்வி அதிகமாக என்னிடத்தில் கேட்கப்படுகிறது. ஆனால் உண்மை என்னவென்றால், நானும் கேட்க வேண்டும், “கர்த்தாவே, எனக்கு ஜெபிக்க கர்றுத்தாரும்”. அவர் ஒரு இடத்தில் ஜெபம் பண்ணி முடிந்த பிறகு வருவதைப் பார்த்த சீஷர்கள் இந்த கேள்வியை கிறிஸ்துவின் டம் கேட்டனர். அவருடைய முகம் பரலோகத்தின் வெளிச்சத்தால் பிரகாசித்தது மற்றும் பரிசுத்த ஆவியினால் புத்துணர்ச்சி பெற்றிருந்தது. அவர்கள் கேட்டுக் கொண்டதில் ஆச்சரியமில்லை, “கர்த்தாவே, எங்களுக்கு ஜெபிக்க கற்றுத்தாரு”. இன்னமும், இந்த மனிதர்கள் அவர்களுடைய வாழ்நாட்கள் முழுவதும் சபைக்கு ஆலயத்துக் சென்றார்கள். அவர்கள் நூற்றுக்கணக்கான ஜெபத்தை ஒப்புவித்திருந்தார்கள் மற்றும் பாதிரியார் சத்தமாக ஜெபம் செய்ததை கேட்டிருந்தார்கள். ஆனாலும் அவர்கள் கிறிஸ்துவைப் பார்த்தபோது, அவர்கள் எதையோ இழந்திருந்ததை அறிந்தார்கள். எப்படியோ நம்மில் அநேகர் போல, அவர்கள் தங்களுடைய பிரதான வேலையை செய்யத் தவறினார்கள்.
துக்ககரமாக ஜெபம் பண்ணுவதின் அர்த்தம் என்ன என்று அநேகமானோர் அறிந்திருக்கவில்லை. மற்றும் இவ்வாறாக இது ஒருவேளை மிகவும் புறக்கணிக்கப்பட்ட வாய்ப்பும் மற்றும் நாம் பெற்றிருக்கும் சிறப்புரிமையுமாக இருக்கிறது. இருந்தாலும் ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் ஜெபத்தின் ஈவு தேவை ஏனென்றால் அது ஆத்துமாவின் சுவாசம். இயேசு சொன்னார், “நீங்கள் விண்ணப்பம் பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறாதில்லை” (யாக்கோபு 4:2). நாம் ஜெபிப்பதே இல்லை என்று அவர் சொல்லவில்லை, ஆனால் நாம் மோசமாக கேட்கிறோம். அதனால் நாம் எப்படி கேட்கிறோம்?
முதலில் நம்முடைய கர்த்தர் கொடுத்த அமைப்பை நாம் பார்ப்பதே அதை கண்டுபிடிப்பதின் சரியான வழி, இதுவே பொதுவாக “கர்த்தருடைய ஜெபம்” என்றழைக்கப்படுகிறது. உண்மையில் அது ஒரு தவறான சொல்வழக்கு, ஏனென்றால் அது உண்மையில் இயேசுவின் ஜெபம் அல்ல. இயேசு சொன்னார், “நீங்கள் ஜெபம் பண்ண வேண்டிய விதமாவது” (மத்தேயு 6:9). அது நாம் ஜெபிப்பதற்கு ஒரு அழைப்பு முறை, அதனால் உண்மையில் ஒரு சீஷனின் ஜெபம். தேவன் அவ்ரிடம் நாம் எப்படி வரவேண்டும் என்று விரும்புகிறார் என்பதைக் கற்றுக்கொள்ல ஜெபத்திற்கான இந்த செயல்திட்டத்தை நாம் பார்ப்போம்.
ஜெபத்தின் அமைப்பு.
கர்த்தருடைய ஜெபம் ஏழு விண்ணப்பங்களால் ஆனது, இவை பத்து கட்டளைகள் போலவே பிரிக்கப்படுகின்றன. முதல் மூன்று விண்ணப்பங்கள் தேவனை நோக்கி – செங்குத்தானது – மற்றும் கடைசி நான்கு விண்ணப்பங்கள் நாம் மற்றவர்களிடம் பெற்றிருக்கும் கிடைமட்ட உறவுகளோடு கையாளப்படுகிறது. அது போலவே, முதல் பெரிய கட்டளை கர்த்தரை நேசிப்பதற்கும் மற்றும் இரண்டாஅவது பெரிய கட்டளை உங்களுடைய அயலகத்தாரை நேசிப்பதற்குமாக இருக்கிறது. தேவன் நமது ஜெபங்களில் முதலாவது வர வேண்டும்; அவருடைய ஆலோசனையும் சித்தமுமே நம்முடைய வாழ்க்கையில் பெரும் முதலிடம் பெற வேண்டும். ஆனால் உலகத்தின் நம்முடைய உறவுகளையும் நாம் உதாசினப்படுத்தக் கூடாது, அதனால் தான் இயேசுவின் முன்மாதிரி நம்முடன் இருப்பவர்களையும் உள்ளடக்குகிறது.
இப்பொழுதுதானே, நாம் முதல் மூன்று விண்ணப்பங்கள் மீது கவனம் செலுத்துவோம், பிறகு நம்முடைய நண்பர்கள் குடும்பம் மற்றும் அயலகத்தார் பற்றிய நம்முடைய ஜெபத்தைக் குறித்து பார்ப்போம். பிற்பாடு ஜெபத்தைப் பற்றிய சில பொதுவான கேள்விகளுக்கு வெதாகம மற்றும் நடைமுறை பதில்களை நாம் காண்போம்.
முதலாவது தேவனுக்கு இந்த முதல் மூன்று விண்ணப்பங்கள் தேவத்துவத்துக்கு ஒரு விசேஷித்த உறவுமுறையை கொண்டிருப்பதை நாம் கவனிப்போம் ம்தல் விண்ணப்பம் பிதாவுடன் கையாளுகிறது, “எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக”. இரண்டாவது விண்ணப்பம் “ராஜ்யத்துடன்” கையாளுகிறது; அது குமாரன் ஆக இருக்கிறது. குமாரன் ஒரு ராஜ்யத்தை பெறப்போவது பற்றியும் மற்றும் மறுபடியுமாக ராஜாதி ராஜாவாக வருவது பற்றியும் இயேசு அநேக உவமைகளைப் பேசினார். அவரில்லாமல் நாம் பிதாவிடம் வரக்கூட முடியாது. மற்றும் “உம்முடைய சித்தம்” பற்றி, தேவனுடைய இரத்தத்துக்கு நம்மை வழி நடத்துவது யார்? ஆவியானவர்,இவர்தான் பிதாவினுடைய சித்தத்தையும் கிறிஸ்துவின் அன்பையும் மனதில் பதியவைக்கிறவர். தேவனுடைய சித்தத்தை செய்வ்தற்கு வல்லமையை கொடுப்பது ஆவியானவரே. அதனால் கர்த்தருடைய ஜெபத்தில் முதல் மூன்று விண்ணப்பங்களில் பிதா, குமாரன் மற்றும் ஆவியானவர் ஆகியோர் பிரதிநித்தித்துவப்படுத்தப்படுவதை நீங்கள் காண்கிறீர்கள்.
ஒரு குடும்பமாக நமது தேவனை அழைத்தல்
மொத்த வேதாகமம் முழுவதும் தேவனை ஒரு பிதாவாக கருதுவதையே ஒரு ஆய்வுப் பொருளாக இருக்கிறாது. அவரே எல்லா உயிர்களையும் படைத்தவர் மற்றும் அவருடைய பிள்ளைகளை பாதுகாப்பவர். பழைய ஏற்பாட்டில், அவருடைய நாமங்கள் இவைகளையும் உள்ளடக்குகிறாது; “அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தார், வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா” (ஏசாயா 9:6). அவர் வல்லமையுள்ளவர் மற்றும் எல்லாம் வல்லவர், இருந்தாஅலும் அவர் எல்லா போதுமானவற்றையும் அளிப்பவர். ஓன்று சேர்ந்து பார்க்கும் போது, அவர் நிச்சயமாக பரலோகத்திலிருந்து ஆட்சி செய்யும் பிரபஞ்சத்தின் தேவன் ஆனால் நாம் என்னமும் அவரை நமது பிதாவாக தனிப்பட்ட முறையில் அணுக முடியும்.
இன்னும் நன்றாக, “எங்கள் பிதா” நாம் தேவனுடைய பிள்ளைகளாக ஏற்றுக் கொள்ளப்படுகிறோம் என்றுரைக்கிறார். “நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்” (1 யோவான் 3:1). தேவன் நம்மை அவருடைய குடும்பத்தில் ஏற்றுக் கொள்ள சித்தமாயிருக்கிறார். என்ன ஒரு அழகான சத்தியம்! கிறிஸ்துவின் முலமாக அவர் கொடுத்த பிறப்புரிமையை நாம் பகிர்ந்து கொள்ள முடியும் என “ நம்முடைய பிதா” சொல்லுகிறார் – அதனால் நாம் பரலோக குடும்பத்தின் ஒரு அங்கமாகிறோம். வேதாகமம் சொல்லுகிறாது, “பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது….. உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?” (மத்தேயு 7:11). நமக்காக மிக அருமையான வெகுமதிகளை களஞ்சியத்தில் வைத்திருக்கும் நம்முடைய பிதாவினிடம் நாம் செல்லலாம்.
“நம்முடைய பிதா” எனும் பதம் மட்டுமே அன்பினால் உடுத்து விலக்கப்பட்டிருக்கிறாது. அவர் நம்மை கட்டுப்பாடுடன் நடத்தும்போதும் நாம் பாத்திரமாக அன்புடன் அணுகக்கூடிய ஒருவர் அவரே, நீதிமொழிகள் 3:12 பதிவிடுகிறாது, “தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறது போல, கர்த்தரும் எவனிடத்தில் அன்பு கூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார். “ ச்னக்கீதம் 103:13 சேர்க்கிறது, “தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறது போல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்”. ஒரு குடும்பமாக நாம் சகோதரர்களும் சகோதரிகளுமாக “நம்முடைய பிதா”விடம் ஜெபிக்கிறோம் எனவும் இது பொருள்படுகிறது, அவர் என்னுடைய பித மட்டுமல்ல; அவர் உங்களுடைய பிதாவுமாக இருக்கிறார்.
இந்த ஜெபம் ஏண் இவ்வளவு பெரிய அமைபு முறையை நமக்காக பெற்றிருக்கிறது என்பதற்கான இன்னொரு காரணத்தை இது நமது மனதி கொண்டு வருகிறது. “நான்” என்கின்ற வார்த்தை முழு ஜெபத்திலும் வரவில்லை என்பதை கவனியுங்கள்! நாம் எல்லாரும் வழக்கமாக அடிக்கடி “நான்” அல்லது “என்” என்கின்ற பதத்தை ஜெபத்தில் பயன்படுத்துகிறோம். ஆனால், இந்த ஜெபத்தில் அது ஒரு கூட்டாக இருக்கிறது. நம்முடைய கலாச்சாரத்தில், நாம் சமன்பாட்டை தலைகீழாக பார்க்கிறோம்; அது நீங்கள், பிறகு உங்கள் நண்பர்கள் மற்றும் பிறகு தேவன். வேதாகமத்தில், முன்னுரிமை நேர்மாறானது. கர்த்தரை நேசி, பிறகு உன்னுடைய அயலகத்தார் மற்றும் பிறகு நீ. (சுலபமாய் நினைவிற்கொள்ள, ஆங்கில வார்த்தையை நினையுங்கள் து.ழு.லு அது துநுளுருளு இயேசு, 015 நஎள மற்றவர்கள் மற்றும் லழர நீ !)
“பரமண்டலங்களிலிருக்கிற”
ஜெபத்தின் நம்முடைய அமைப்புமுறை நம்மிடமிருந்து நமது தேவன் எவ்வளவு பக்கத்தில் மற்றும் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார் என்றும் சொல்லுகிறது. “நம்முடைய பிதா” என்பது ஒரு மிக நெருக்கமாக், பக்கக்த்தில் என்கின்ற கருத்தை அளிக்கிறது. ஆனால் “பரமண்டலங்களில்” என்பது நம்மிடமிருந்து அவருடைய தூரத்தின் உணர்வை அளிக்கிறது. நாம் தேவனிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டிருக்கிறோம் மற்றும் இப்படி சொல்லுவதின் மூலம் அதனை நாம் உறுதிபடுத்துகிறோம், “ஒரு பிரச்சினை இருக்கிறது: நாங்கள் இங்கே இருக்கிறோம்; நீர் அங்கே இருக்கிறீர்”. எது இந்த பிரிவை ஏற்படுத்தியது? ஏசாயா சொல்லுகிறார், “உங்கள் அக்கிரமங்கள் (பாவங்கள்0 உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாக பிரிவினை உண்டாக்குகிறது” (ஏசாயா 59:2).
தோட்டத்தில் தேவன் ஆதாமிடம் கேட்டார், “நீ எங்கே இருக்கிறாய்?” நம்முடைய ஜெபத்தில், நாம் அவரிடமிருந்து வெகு தூரத்தில் இருக்கிறோம் என்று நாம் ஒப்புக் கொள்கிறோம் – தேவனிடமிருந்து ஆதாம் ஓடியது போலவே தான். பரத்திலிருந்து நாம் பிரிக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் நம்பிக்கை இருக்கிறது. வேதாகமத்தில் முதல் மூன்று அதிகாரங்கள் எப்படி சர்ப்பத்தின் மூலமாக பாவம் வளர்ந்தது என்பதையும் அதனால் பரமண்டலத்திலிருந்து பரதீசிலிருந்து நாம் பிரிக்கப்பட்டிருக்கிறோம் என்பதையும், எனினும், வேதாகமத்தின் கடைசி மூன்று அதிகாரங்கள் எப்படி சர்ப்பம் அழிக்கப்படுகிறது, பரதீசு மீட்கப்படுகிறாது மற்றும் மறுபடியும் தேவனுடன் ஒன்றாயிருப்போம் என சொல்லுகிறது என்பதையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?
வேதாகமம் சொல்லும், “பரமண்டலங்களிலிருக்கிற” என்பதற்
கு இனொரு காரணம், நம்முடைய உஅலக பிதாக்களுக்கும் நம்முடைய பரமண்டல பிதாவுக்கும் இடையில் ஒரு வித்தியாசத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே. மனுஷீகத்திலே நம்முடைய பூலோக பிதாக்கள் இயற்கையில் பலவீனமானவர்கள், சரீர சம்பந்தமானவர்கள் மற்றும் பாவிகளாயிருக்கிறார்கள், பரலோகத்தின் தேவன் பரிபூரணமானவர். நாம் எல்லாருமே நம்முடைய பூலோக பிதாவுடன் நம்முடைய உறவுமுறைகளை தேவன் மீது திணிப்பதற்க் இயல்பான உள் மனப்போக்கைப் பெற்றிருக்கிறோம். உதாரணத்துக்கு, எதிலாகிலும் அதிகமாக ஈடுபாடு காட்டுகின்ற உலக பிதாக்களைப் பெற்றிருப்பவர்கள் பரலோகப் பிதாவும் அப்படியே தான் இருப்பார் என நினைத்துக் கொள்ளுவார்கள். கண்டிப்பாக இருக்கின்ற பூலோக பிதாக்களைப் பெற்றிருப்பவர்கள் பொதுவாகப் பரலோகப் பிதாவை ஒரு நிஜமான நீதிபதியாக எண்ணுகிறார்கள்.
அது நம்மை யோசித்துப் பார்க்க வைக்கிறது. நம்முடைய பிள்ளைகளிடம் நாம் செய்திருக்கும் தவறுகளை ஒதுக்கித்தள்ள ஜெபத்தில் தேவனிடம் கேட்டுக் கொள்ள நிறைய நேரத்தை நாம் செலவிட வேண்டும். இருந்தாலும் வேதாகமம் “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே” என்று சொல்லும்போது, நாம் நம்முடைய குறைபாடுள்ள பூலோக உறவுமுறைகளை திருப்பிப் பார்க்க வேண்டும் என்றும் மற்றும் நாம் அவரை நேரடியாக அணுக முடியும் என்றும் அது சொல்லுகிறது. நீங்கள் தேவனை உங்களுடைய குடும்ப அனுபவ்த்தின் உடைந்த கண்ணாடிகள் மூலமாக பார்க்க வேண்டியதில்லை.
“உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக”
அதனால், நாம் தேவனை அணுகியிருக்கிறோம். ஏனென்றால் அவர் பரலோகத்திலிருக்கும் நம்முடைய பிதா. . மற்றும் நம்முடைய தேவனுக்கு நம்முடைய முதல் விண்ணப்பம் “உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக”. இப்பொழுது தேவனுடைய நாமம் நன்மைக்கும் தீமைக்கும் இடையில் இருக்கும் மாபெரும் போராட்டத்தில் மையப் பிரச்சினையயிருக்கிறது. இரட்சிப்பின் திட்டத்தின் மொத்த நோக்கமும் தேவனுடைய மகிமையைப் பாதுகாப்பது.
பிசாசு தேவனுடைய நாமத்தை நிந்தித்திருக்கிறான். “தேவன் அன்பாக இருந்தால், பிறகு ஏன் ஒன்றுமறியா குழந்தைகள் மரிக்கின்றனர்?” என்று யாராகிலும் கேட்டிருப்பதை நீங்கள் அறிவீர்களா? பூமியதிர்ச்சிகள், வெள்ளம் மற்றும் மற்ற இயற்கை பேரழிவுகள் “ தேவனுடைய செயல்கள்” என்று காப்பீட்டு கடிதங்கள் சொல்லுகின்றன. அது தேவனுக்கு எப்படிப்பட்ட நன்மதிப்பைக் கொடுக்கிறது? நமது பிதாவின் குணாதிசயத்தை தூற்றுவதில் பிசாசு கை தேர்ந்தவன். நல்ல, ஆச்சரியமான, நேசிக்கும், நீண்ட பொறாமையுள்ள, கிருபையுள்ள ஒரு தேவனை அவன் ஒரு கொடூரமான, அவருடைய சிருஷ்டிகளை மனம் போன போக்கில் தண்டிக்கும் அலட்சியமான கொடுங்கோன்மையாளராஅக சிதரிக்கிறான். தேவனுடைய நாம் பிசாசினால் தீட்டுப்படுத்தப்படுகிறது.
இவ்வாறாக தேவனுடைய கிருபையினால், அவர் உண்மையில் யார் என்பதை வெளிப்படுத்த தேவனுடைய நாமத்தை நம்மால முடிந்த அளவு பாதுகாப்பதே கிறிஸ்தவனின் நோக்கமாயிருக்கிறது. துரதிஷ்ட வசமாக நாம் “உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” என்று ஜெபிக்க வேண்டியதாயிருக்கிறது. ஏனெனில் நால் அதில் நன்றாக செயல்படுவதில்லை. வேதாகமத்தில் கூட, தேவனுடைய சொந்த ஜனங்களே முழுமையான அஞ்னானிகளைக்காட்டிலும் அவருடைய நாமத்தை மதிப்பிழக்கச் செய்ய அதிகமாய் செவதை நாம் பார்க்கிறோம். மற்றும் பழங்காலத்திலிருந்து காலங்களின் போக்கில் உண்மையில் பெரும் மாற்றம் ந்றும் ஏற்படவில்லை.
நினைவு கூருங்கள், கர்த்தருடைய ஜெபம் ஒருவகையில் பத்து கட்டளைகளை பிரதிபலிக்கிறது என்று நாம் சொன்னோம். மூன்றாவது கட்டளை கட்டளையிடுவது, “உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்” (யாத்திராகமம் 20:7). தேவனுடைய நாமத்தை அவதூறாக பயன்படுத்துவது இந்த கட்டளையை மீருவதின் ஒரு சிறு பகுதி, ஆனால் தேவனுடைய நாமத்தை ஏற்றுக் கொள்ளுவது என்பது ஒரு மனைவி அவளுடைய கணவனின் கடைசி பெயரை ஏற்றுக்கொள்ளுவது போல நீங்கள் ஒரூ கிறிஸ்தவனாக ஞானஸ்நானம் பெறும் போது நீங்கள் கிறிஸ்துவின் பெயரை ஏற்றுக் கொள்ளுகிறீர்கள், ஆனால் கிறிஸ்துவின் நாமத்தை ஏற்றுக் கொண்ட பிரகு நீங்கள் பிசாசைப் போல வாழ விரும்பினால், நீங்கள் அவருடைய நாமத்தை வீணில் வழங்குகிறீர்கள். கிறிஸ்தவ பாதைக்கு யார் அதிகமான தீங்கு விளைவிக்கிறார்கள், அந்நியர்களா அல்லல்து உலகத்தைப் போல வாழும் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களா?
கிறிஸ்தவர்கள் தேவனுடைய நற்குணத்துக்கு சாட்சிகளாயிருக்க வேண்டும், ஆனால் அநேக வேளைகளில் கிறிஸ்தவர்கள் அதிக தீங்கு விளைவிக்கிறார்கள். மாறாக, உலகம் முழுவதிலும், அயர்லாந்து, ஆப்பிரிக்கா மற்றும் குரோஷியா போன்ற நாடுகளில் இருப்பது போல, கிறிஸ்தவ்ர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் மற்றவர்களை தாக்குவதையும் சாகடிப்பதையும் நாம் பார்க்கிறோம். தேவனுடைய நாமத்துக்க் அது என்ன செய்கிறது? இயேசு சொல்லுகிறார், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள் டீமையை நன்மையினால் வெல்லு” (மத்தேயு 5:44, ரோமர் 12:21). அவருடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவர்களின் மோசமான நடத்தையினால் கிறிஸ்துவின் நாமம் அவதூரு செய்யப்படுகிறது. அதனால் “உம்முடைய நாம் பரிசுத்தப்படுவதாக” என்பது வார்த்தையிலும் செயலிலும் அவருடைய விலையேறப் பெற்ற நாமத்தை மதிக்க நமக்கு உதவிசெய்ய தேவனை கேட்பதாகும்.
“உம்முடைய ராஜ்யம் வருவதாக”
இரண்டு ராஜ்யங்களுக்கு இடையில் நடைபெறும் யுத்தத்தின் மத்தியில் நாம் இருக்கிறோம். தேவன் அவர்களுக்கு பூமியின் கொடுத்த ஆளுகையை ஆதாமும் ஏவாளும் சரணடையச் செய்த போது ஒரு எதிரியானவன் உலகத்தை கடத்தி விட்டான். அதிலிருந்து, தேவனுடைய பிள்ளைகளின் முன்னுரிமை “உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்றாகியது.
உண்மையில், நாம் தேவனுடைய ராஜ்யம் பற்றி பேசும்போது இரண்டு சிறப்பம்சங்களை நாம் பார்க்க வேண்டும். ஆவிக்குரிய மற்றும் சரீரத்துக்குரியவைகள். தேவனுடைய ஆவிக்குரிய ராஜ்யம் இன்று உலகத்தில் மிக அதிகமாக உயிருடன் இருப்பதை நாம் அறிகிறோம். ஏனென்றால் லூக்கா 17:21 சொல்லுகிறது, “தேவனுடைய ராஜ்யம் உங்களுக்கு இருக்கிறதே” அவருடைய ஞானஸ்நானத்துக்குப்பிறகு இயேசு பிரசங்கம் பண்ண ஆரம்பித்த போது அவர் சொன்னார், “காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று” (மாற்கு 1:15). ராஜ்யத்தின் இந்த அம்சம் இப்பொழுது கிடைக்கிறது. நீங்கள் கிறிஸ்துவை உங்கள் இருதயத்தில் ஏற்றுக் கொண்டிருப்பீர்களானால், அப்பொழுது அவருடைய சிங்காசனத்திலிருந்து உங்கள் இருதயத்தில் ஆட்சி செய்கிறார், பவுல் சொல்லுகிறார், “உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதக’” ஆனால் இயேசு உங்கள் ராஜாவாகைருந்து நீங்கள் செய்வதிலெல்லாம் ஆட்சி செய்யட்டும் (ரோமர் 6:12). நாம் நாட வேண்டிய முதல் ராஜ்யம் அதுதான்: நம்முடைய இருதயத்துக்குள் தேவனுடைய ஆவிக்குரிய ராஜ்யம்.
ஆனால் ஒருநாள் சாந்தகுணமுள்ளவர்கள் பூமியை சுதந்தரித்துக் கொள்ளுவார்கள் மற்றும் தேவனுடைய நேரடியான ராஜ்யம் மிக மெய்யான மற்றும் இயல்பான ராஜ்யத்துடன் இந்த உலகத்தை ஆளப்போகிறது. தேவனுடைய ராஜ்யம் ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டுவிட்டதென்றால் “உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்று நாம் ஜெபிக்க வேண்டியது தேவைதான் என்று நீங்கள் நினைகிறீர்களா? அப்போஸ்தலர் 1-ல் பதிவு செய்யப்பட்டிருப்பது போல இயேசு பரமேறி செல்வதற்கு சற்று முன்பதாக சீஷர்கள் கேட்டார்கள், “ இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர்”. இயேசு பதிலளித்தார், “காலங்களையும் வேளைகளையும் அறிகிறாது உங்களுக்கு அடுத்ததல்ல” (அப்போஸ்தலர் 1:6,7)
உலகத்தின் ராஜ்யங்களும், விக்கிரகங்களும், அவைகள் பொன்னினாலோ, வெள்ளியினாலோ, வெண்கலத்தாலோ அல்லது களிமண்ணினாலோ செய்யப்பட்டிருந்தாலும் அனைத்தும் தேவனுடைய ராஜ்யம் எனப்படும் யுகங்களின் கல் முன்பாக நொறுக்கப்பட்டுப் போகும் என்பதே தானியேல் புத்தகத்தின் மைய செய்தியாக இருக்கிறது.”பரலோகத்தின் தேவன் என்றென்றக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார். அந்த ராஜ்யம் வேறே ஜனத்து விடப்படுவதில்லை. …….அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்” (தானியேல் 2:44).
இந்த இடைக்காலத்துக்கு, ஒருநாள் இந்த பூமியை நிரப்பப்போகிற ராஜ்யத்துக்கு விளம்பரம் கொடுக்க நாம் வேறொரு ராஜ்யத்தின் தூதுவர்களாக இருக்கிறோம். இயேசு சொன்னார், “என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினது போல, நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன்” (லூக்கா 22:29). சிலுவையில் இருந்த கள்ளன் கிறிஸ்துவிடம் திரும்பி, “ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்” என்று சொன்ன போது அவன் கிறிஸ்துவை அவனுடைய ராஜாவாக ஏற்றுக் கொண்டான் (லூக்கா 23:42). அதனால் தான் அவன் ரஜ்யத்தில் இருப்பான், ஏனென்றால் உங்கள் இருதயத்தில் ஆரம்பிக்கும் ஆவிக்குரிய ராஜ்யத்தை அவன் பெற்றிருந்தான்.
“தேவனுடைய ராஜ்யம்” என்கின்ற பதம் புதிய ஏற்பாட்டில் 70 முறை காணப்படுகிறது. ஏன்? ஏனென்றால் இரண்டு ராஜாக்கள் போரிடுகிறார்கள். இயேசு மற்றும் தானேஇந்த உலகத்தில் அதிபதி என்று சொல்லும் பிசாசு; அதனால் தான் நாம் இன்னமும் அவருடைய ராஜ்யம் முதலில் நமக்குள், பிறகு ஒருநாள் நம்மைச் சுற்றி வர வேண்டும் என ஜெபிக்க வேண்டும்.
“உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக”
பிரசித்திப் பெற்றா நம்பிக்கைக்கு மாறாக, இந்த உலகத்தில் தேவனுடைய சித்தம் எப்பொழுதும் செய்யப்படுவது இல்லை. நடைபெறும் எல்லாமே சிருஷ்டிகரின் சித்தப்படி தான் நடக்கிறது என்கின்ற கருத்தை நான் மரியாதையுடன் மறுக்கிறேன். புயல் காற்று போல ஏதாகிலும் மோசமானது நேரிட்டால், நீங்கள் தவிர்க்க முடியாமல் யாரோ சொல்லுவதைக் கேட்கிறீர்கள், “நலல்து, அது தேவனுடைய சித்தமாயிருக்க வேண்டும்” இப்படித்தான் வேதாகமம் போதிக்கிறது என்பதை நான் நம்பவில்லை மற்றும் அது உண்மையில் சரி என்றால், ஏன் தேவன் அவருடைய சித்தம் செய்யப்பட வேண்டும் என்று ஜெபிக்க சொல்லுகிறார்?
எதிர்மறையாக, நல்லது போல தோன்றும் எல்லாமே தேவனுடைய பொக்கிஷ சாலையிலிருந்து வருவதும் இல்லை. சில வேளைகளில் பிசாசு தேவ்னுக்கான அவர்களுடைய வாஞ்சையை முடக்கி வைக்கவோ அல்லது விலக்கி வைக்கவோ எவருடைய பாதையிலும் செழிப்பை கொண்டு வரவும் செய்வான். நீங்களும் நானும் ஆவிக்குரிய திரமறாஇவில் என்ன நடக்கிறது என்று அறியாமல் இருப்பதால் தான் நாம் ஜெபிக்க வேண்டும், “ உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுக்றது போலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக”.
உங்களுடைய மற்றும் என்னுடைய சித்தங்கள் இயற்கையாகவே சரீரப்பிரகாரமான ஆசைகளால் மாற்றப்பட்டு குழப்பப்படுகின்றன. தேவண்டுஐய கிருபையும் பரிசுத்த ஆவியானவரும் அவருடைய சித்தத்துக்கு இசிவாக நம்மை வழி நடத்த நாம் ஜெபிக்க வேண்டும். நாமும் அவருடைய சித்தம் என்ன என்பதை கற்றுக் கொள்ள வேண்டும் மற்றும் தேவனுடைய வார்த்தையில் மிகச் சரியான வெளிப்படுத்துதலை நாம் காண்கிறோம். புதிதாக ஆரம்பிக்கிறவர்களுக்கு, தேவனுடைய சித்தத்தின் எளிமையான வடிவம் பத்து கட்டளைகள் என்றழைக்கப்படுகிறது, “என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன் உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது” (சங்கீதம் 40:8). அதனால் “உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக” என்று நாம் ஜெபிக்கும்போது, ஒப்புக் கொடுத்தல் மற்றும் கீழ்ப்படிதல் மூலமாக அவருடைய சித்தம் நம்மில் செய்யப்பட வேண்டுமென நாம் உண்மையில் ஜெபிக்கிறோம்.
உண்மையில், பூமியில் தேவனுடைய சித்தத்தை செய்வ்தற்கான பரிபூரண உதாரணம் இயேசுவே. யோவான் 6:38-ல் அவர் அறிவிக்கிறார், “என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறன்கி வந்தேன்”. கெத்சமனே தோட்டத்தில், பிதாவிடமிருந்து தனிமைப்படுத்துதலை சிந்தித்த போது, கிறிஸ்து மூன்று முறை விண்ணப்பித்தார், “என்னுடைய சிதத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக் கடவது” (லூக்கா 22:42). தேவனுடைய சித்தத்தை செய்வது எப்பொழுது சுலபம் தானோ? இல்லை. அது இயேசுவுக்கே மிகப்பெரிய போராட்டமாயிருந்தா, நாமும் “உமது சித்தம் செய்யப்படுவதாக” என்று ஜெபிப்பது அவசியம்.
ஒரு உயரிய சித்தம்
பெரும்பாலானவைகளை தேவன் சிருஷ்டித்தபோது, அவைகள் உருவாக வெறுமனே பேசினார். ஆனால் ஆதாமை அவர் உருவாக்கின்போது, அவர் பூமியிலிருந்து மண்ணை எடுத்து கைகளினால் உருவாக்கி அதற்குள் ஜீவசுவாசத்தை ஊதினார். மனுஷீகத்தை அவர் பூமியிலிருந்து உருவாக்கினார். அதனால் நாம் “உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்று ஜெபிக்கும்போது நாமும் உண்மையில் வெறும் களிமந்தான் என்று ஏற்றுக் கொள்ளுகிறோம். “பூமியில்” என்பது நம்மில் என்று பொருள்படும். நம்முடைய கலககுணத்தால் நம்முடைய சித்தங்கள் நெறி தவறுகின்றன என்பதை அங்கீகரித்து தேவனுக்கு முன்பாக நாம் நம்மை தாழ்த்துகிறோம். “உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக” என்று நாம் ஜெபிக்கும்போது, அவருடைய நோக்கத்துக்காக நம்மை உபயோகப்படுத்த அவருக்கு நாம் அனுமதி கொடுக்கிறோம்.
விலை மதிப்பற்ற ஈவாகிய சுதந்த்திரத்தின் காரணத்தால் கர்த்தர் ஒருபோதும் தன்னுடைய சித்தத்தை கட்டாயப்படுத்தமாட்டார், “உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக” என்று நீங்கள் ஜெபிக்க வேண்டும் என்று அவர் கட்டாயப்படுத்தப்போவதில்லை. அதைச் செய்ய நீங்கள் தெரிவு செய்யவேண்டும், உங்களுடைய சித்தத்தை ஒப்புவிக்க, அவருடைய ஊழியக்காரனாக மாற மற்றும் உங்களுடைய வாழ்க்கையில் அவருடைய வல்லமையையும் திட்டத்தையும் செயல்படுத்த அவருக்கு அனுமதி கொடுக்க வேண்டு. அந்த இரகசியத்தை நீங்கள் புரிந்து கொள்ளும் போது, நீங்கள் பரலோக வல்லமையின் பொக்கிஷ சாலையை நீங்கள் திறப்பீர்கள்.
ஆனால் அறிவுறுத்தப்படுங்கள், வேறு விதமாகவும் அது வேல செய்யக்கூடும். நம்மில் நிறைய பேர் பிசாசினால் தொல்லைப்படுத்தப்படுகிறோம். ஏனென்றால் நம்முடைய சித்தத்தை பிசாசின் வசம் ஒப்புக் கொடுக்கிறோம். யார் உங்களுடைய தலைவர் என நீங்கள் தெரிவு செய்யக்குடும். மற்றும் நிலையான ஒப்புக்கொடுத்தல் மூலம் பிசாசு நம்முடைய பாதையில் வைக்கும் சோதனைகளுடன் நாம் இருக்கும்போது நம்முடைய வாழ்க்கையில் அவனுடைய விருப்பங்களை செயல்படுத்த அவனுக்கு அதிகரித்த வல்லமையை நாம் கொடுக்க ஆரம்பிக்கிறோம். மற்றும் முரண்பாடாக, நம்முடைய சுதந்திரத்தை பிசாசிடம் ஒப்படைக்கும் போது நாம், அங்குலம் அங்குலமாக நம்முடைய சுதந்திரத்தை இழக்கிறோம்! பிசாசு நம்முடைய குணங்களை ஆட்கொள்ளுகிறான் மற்றும் நாம் அவனுடைய அடிமைகளாகிறோம்.
இருந்தாலும் தேவனுடைய ஆவியினால் நிரப்பப்படுவது சாத்தியமே. அந்த அனுபவத்தை நீங்கள் விரும்புகிறீர்களா? நம்மில் அநேகர் சித்தமுள்ள ஆவிக்கும் பலவீனமான சரீரத்துகும் இடையில் எங்கோ போராடிக்கொண்டிருக்கிறோம், ஆனால் “கர்த்தாவே, நீர் என்னுடைய தேவனாக இருக்க விரும்புகிறேன். நீர் என்னைக் கட்டுப்படுத்த விரும்புகிரேன். என்னுடைய சித்தத்தை நான் ஒப்புக் கொடுக்கிறேன். என்னையே உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன். என் சொந்த பலத்தில் நான் சத்துவமற்றவன்” என்று நீங்கள் தேர்ந்தெடுத்து சொல்லுவதின் மூலம் நீங்கள் புரிந்து கொள்ளும்போது அவருடைய சித்தத்தை உங்களுடைய வாழ்க்கையில் வெளிப்படுத்த அவருக்கு வல்லமை கொடுக்கிறீர்கள். அவர் காத்திருக்கிறார், ஆனால் அவர் அதனை நம்மீது திணிக்க முடியாது. அதனால் நீங்கள் ஜெபிக்கும்போது இதைக் கேட்க மறவாதீர்கள், “உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போலப் பூமியிலேயும் செய்யப்படுவ்தாக”.
கர்த்தருடைய ஜெபமும் நாமும்
இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஒரு பிரிட்டிஷ் போர் வீரன் மெல்லமாக ஊர்ந்து முண்ணனியில் சேர்ந்து கொள்ளப்பார்த்தான். அவன் அனுமதி இல்லாமல் வெளியில் சென்றிருந்த காரணத்தால் அவனுடைய இராணுவமே அவனைப் பிடித்து விரோதியுடன் சதி செய்ததாககுற்றம் சாட்டப்பட்டான். அவர் சொன்னார், “நான் காட்டில் ஜெபித்துக் கொண்டிருந்தேன்”. உடன் போர் வீரர்கள் அவாஇ ஏளனம் செய்து அதற்கு ஏதாவது ஆதாரத்தைக் காட்க்டச் சொன்னார்கள். அவன் தனிமையில் இருந்ததாகவும் ஜெபிக்க வேண்டியிருந்ததாகவும் வெறுமனே அவர்களிடம் சொன்னான். அவனைப் பிடித்தவர்கள் அவனை ஒரு துரோகியாக குற்றம் சுமத்துவதாக பயமுறுத்தி இப்படி சொன்னார்கள், ‘இப்பொழுதே ஜெபம் செய்து உண்மையில் நீ ஜெபம் செய்து கொண்டிருந்தாய் என்று எங்களை நம்பவைக்கவில்லையென்றால் நீ தூக்கிலிடப்படுவாய்”.
அந்தப் போர்வீரன் உடனே தன்னுடைய முழங்காலில் நின்று தன்னுடைய சிருஷ்டிகரை உடனே சந்திக்கப்போவது போன்று இருதயத்தை தொடும் சொல் திறமிக்க ஜெபத்தை ஜெபிக்க ஆரம்பித்தான். ஆனால் ஜெபத்தின் முடிவில், பொறுப்பில் இருந்த படைத்தலைவர் அவர் விடுதலையாக்கப்படுவதாக சொன்னார். அவர் சொன்னார், “நான் உன்னுடைய கூற்றை நம்புகிறேன். நீ அவ்வளவு நேரம் எடுத்த பயிற்சி செய்யவில்லையென்றாம் மறுபார்வையின் போது இவ்வளவு நன்றாக செய்திருக்க முடியாது”. மேலும் அவர் சொன்னார், “நீ ஜெபம் பண்ணும் விதத்தைப் பார்க்கும்போது நீ தேவனோடு வழக்கமாய் பேசுகிறவந்தான் என்பதை என்னால் சொல்ல முடியும்”.
நம்முடைய ஜெபங்களின் நேரங்கள் அடிக்கடியும் வழக்கமாய்மிருக்க வேண்டும், ஆனால் ஜெபத்தின் பொருள் இனமும் முக்கியமான ஒன்றாயிருத்தல் வேண்டும். நான் அடிக்கடி என்ண்டைய ஜெபத்தை “தாரும்” என்று சொல்லியே ஆரம்பிக்கிறேன்: “அன்புள்ள ஆண்டவரே, இதை எனக்குத் தாரும் மற்றும் அதை எனக்குத் தாரும்” மற்றும் இறுதியில் வரும்போது,” தேவனே உம்முடைய நாமத்தைப் போற்றுகிறேன்”. கிறிஸ்து நமக்குக்கொடுத்த அமைப்பு பிரகாரம் அது பின்னோக்கி செல்லுகிறது. இந்த செய்தியை ஏற்கனவே நான் கோடிட்டுக் காட்டியிருக்கிறேன், ஆனாலும் மறுபடியும் சொல்வதும் தகும். என்னுடைய ஜெபங்கள் மிகவும் சுயநலம் வாய்ந்தவை மற்றும் பிதாவிடம் நான் ஜெபத்தில் அணுகும்போது நான் அவரையும் மற்றாவர்களையும் முதலில் மனதில் கொள்ள வேண்டும் என்று தேவன் உணர்த்தியிருக்கிறார்.
நமக்காக ஏறெடுக்கப்படும் ஜெபத்தைப் பற்றி நாம் கவனம் செலுத்த முற்படும் முன்பதாக, இந்த இறுதியான தேவையான ஜெபத்தின் அம்சங்களை நாம் ஆராயுமுண்பாக நாம் நமது மனதில் சரியான ஜெபத்தின் முறைமைகளைப் பெற்றிருக்கிறோம் என உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று நான் உணர்கிறேன். வெளிப்படையாக, நாம் நமது தேவைகளுக்காக ஜெபிக்க வேண்டும், ஆனால் இயேசு குறிப்பிட்டது போல, நாம் ஜெபிக்கும் போது, நாம் தேவனுடைய பரிசுத்த நாமத்தை, அவருடைய நோக்கங்களை மற்றும் மற்ற எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய ராஜ்யத்தை அங்கீகரிக்க வேண்டும். மற்றும் நம்முடைய எல்லா தேவைகளையும் அவ்ருடைய சித்தத்தை வைத்துப் பார்க்க வேண்டும். அந்த கவனமான நினைப்பூட்டுதலுடன், நாம் கர்த்தரிடம் “எங்களுக்கு ஜெபிக்க கற்றுத் தாரும்” என்று கேட்கும் போது என நடைபெறுகிறது என்பதின் ஆராய்ச்சியையும் கண்டுபிடிப்பையும் நாம் தொடரலாம்!
“………. இன்று எங்களுக்குத் தாரும்”
ஆகாரம் என்பது வேதாகமத்தில் அநேகமானவற்றாஇக் குறிக்கிறது. முதலாவது, “அன்றன்றுள்ள ஆகாரம்” என்பது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஒவ்வொரு நாளும் தேவைப்படும் பலசரக்கை பொருள்படுகிறது. உண்மையில், இது ஜெபத்தின் வரைமுறை, அதனால் நீங்கள் தண்ணீருக்கும், உடைக்கும், மற்றும் மற்றா தேவைகளுக்கும் ஜெபம் பண்ண வேண்டாம் என்று பொருளில்லை. நம்முடைய அன்றன்றுள்ள ஆகாரத்துக்கு எஜ்பிக்கும்பொது, நாம் உண்மையில் நம்முடைய அன்றாட வாழ்வின் அடிப்படை தேவைகளைக் கொடுக்க தேவனிடம் கேட்கிறோம்.
தன்னுடைய அலமாரி நிறைந்திருக்கையில் ஒரு பணக்கார நபர் “ எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்” என்று இன்னமும் ஜெபிக்க வேண்டுமா? ஆம், நிச்சயமாக அட்ப்படை ஆசீர்வதத்தை தானாக் கிடைத்தவை என்று ஒருபோதும் எடுத்துக் கொள்ளக் கூடாது. நினைவு கூருங்கள். யோபினுடைய முழுமையான களஞ்சியங்கள் ஒரே நாளில் இழக்கப்பட்டன.
நம்முடைய தேவைகளை அவர் பூர்த்தி செய்யும்படி கேட்டு நாம் நம்பிக்கையோடு கர்த்தருக்கு முன்பாக வரவேண்டும் என்று தேவன் சொல்லுகிறார். உண்மையில், இந்த தேவைகளை ஏற்கனவே அவர் அறிந்திருக்கிறார், ஆனால் அவர் தான் தம்முடைய பிள்ளைகளுக்கு எல்லா நல்லவற்றையும் கொடுப்பார் என்று நாம் அறிய வேண்டுமென அவர் விரும்புகிறார். உதாரணட்துக்கு, யூதர்கள் வனாந்திரத்தில் சென்ற போது அவர்கள் ஆகாரத்துக்காக ஜெபித்தார்கள் மற்றும் தேவன் அவருடைய தொடர்ச்சியான அன்பின் முன் ஏற்பாட்டால் அவர் மன்னாவைப் பொழியச் செய்தார். கேட்பதற்கு பயப்படவோ அல்லது வெட்கப்படவோ வேண்டாம். அவர் நீங்கள் செய்ய வேண்டுமென்றிருக்கிறார்!
நினைவில் வையுங்கள், நாம் “ எங்களுக்கு ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்? என்று ஜெபித்தாலும், தேவன் நாம் வெளீல் சென்று அதனை சம்பாதிக்கத் தேவையில்லை என்று எதிர்பார்க்கிறார் என்று பொருள்படவில்லை. சில மக்கள் அவர்கள் கர்த்தருடைய் ஜெபத்தை செய்துவிட்டு அவர் பதில் அளிக்க எதிர்பார்த்து ஒன்றும் செய்யாமல் அமர்ந்திருப்பர். மன்னா பொழியப்பட்ட போது யூதர்கள் வெளியில் சென்று அதை சேகரித்தார்கள். அவர்கள் படுத்துக் கொண்டு தங்கள் வாய்களை திறந்து வைத்து அவ்ர்கள் வாயில் நேராக வந்து விடும் என்று காத்திருக்கவில்லை. மன்னா அவர்களுடைய பாளையத்துக்குப் புறம்பே விழுந்தது. அவர்களுடையா கூடாரத்தின் மேல் விழவில்லை என்பதையும் கவனியுங்கள். ஆகாரத்தைப் பெறுவதின் ஒரு பகுதிதான் அதனை நாம் செய்கின்ற வேளையினால் அறுவடை செய்வது. அதற்குப் பிறகு, யூதர்கள் மன்னாவை அரைத்து வேக வைக்க்க வேண்டியதாயிருந்தது; இப்படி வேலை செய்த பிறகு தான் அவர்களுடைய அன்றாட ஆகாரத்தை அவர்கள் சாப்பிட்டனர். இது போலவே நாமும் இந்த வேலையில் நம்மை ஈடுபடுத்த வேண்டும், கர்த்தருடைய ஆசீர்வாதங்களுடன் நாம் சோம்பேரித்தனமாய் இருக்கக்கூடாது. அன்றன்றுள்ள ஆகாரத்தை எங்களுக்குத் தாரும் என்பது “ ஆறு நாளும் நீ வேலை செய் என்கின்ற தாற்பரியத்தையும் சேர்க்கின்றது என புரிந்து கொள்ளப்படுகிறது.
“எங்களுக்கு வேண்டிய ஆகாரம்”.
சாப்பாடு மட்டும் தான் “வேண்டிய ஆகாரத்தில்” இன்றியமையாததாய் இருக்கிறதா? வேதாகமத்தில் பெரும்பாலான பாடங்கள் போல, “எங்களுக்கு வேண்டிய ஆகாரம்” மிகமுக்கியமான ஆவிக்குரிய தாக்கம் பெற்றிருக்கிறது. மத்தேயு 4:4ல் இயேசு கற்பிக்கிறார், “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்”. “அப்பம்” என்கின்ற வார்த்தையை மனித இனத்துக்கு தேவைப்படும் லௌகீக தேவைகளை விவரிக்கிறது.
மிக முக்கியமானது, பிற்பாடு அவர் சொல்லுவார், “ஜீவ அப்பம் நானே” (ஓவான் 6:35). நம்முடைய சரீர தேவைகளைப் பற்றி மட்டும் கிறிஸ்து பேசவில்லை, ஆனால் ஒவ்வொரு நாளும் நம்முடைய இருதயங்களில் தேவனை அழைக்க வேண்டுமென அறிவுரை சொன்னார். அப்பம் இயேசுவைக் குறிக்கிறது. அவரே நம்முடைய ஆவிக்குரிய அப்பம், இந்த அப்பமே மற்ற எந்த சரீர பிரகாரமான உலகத்தின் அப்பத்தை விட மிக உயர்ந்ததும் அதிக நிறைவேற்றம் தருகிறதாயுமிருக்கிறது.
எத்தனை முறை நாம் ஆவிக்குரிய விதத்தில் ஆகாரம் அளிக்கப்பட வேண்டும்? அதனுடைய எல்லா புனிதமான பக்கங்களிலும், வேதாகமம் தினமும் ஜெபிப்பதைப் பற்றிப் பேசுகிறது. “அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் நான் தியானம் பண்ணி” (சங்கீதம் 55:17). தினசரி அப்பம், கர்த்தரோடு தினசரி தொடர்பே நம்முடைய மேலான முன்னுரிமையாக இருக்க வேண்டும். “கர்த்தாவே ஒரு மாதத்துக்கு தேவையானவற்றை எனக்குத் தாரும்” என்றுநாம் ஏன் சொல்லக்கூடாது? நம்மில் பெரும்பாலானோர் நம்முடைய குளிர்சாதனப்பெட்டி ஒவ்வொரு நாளும் காலியாகிவிடும் என்று கவலைப்படாததால், தினசரி ஆகாரத்துக்காக நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. மன்ச்சோர்வுடனே வாழ்கின்ற அனைவரும் இப்படிப்பட்டக் கருத்தைப் புரிந்து கொண்டாலும், பெரும் ஏராளமானவற்றைப் பெற்றிருக்கும் சமுதாயத்தில் வாழும் சில அமெரிக்கர்கள் இன்று உணவுக்காக ஒவ்வொரு நாளும் கடினப்பட்டு தேடி அலைவதில்லை. உண்மையில் நம்மில் சிலர் சரக்கறையில் மாதக்கணக்கிற்கு உணவை பெற்றிருக்கிறோம்.
ஆனால் நம்மில் அநேகர், நம்முடைய இருதயங்களிலும் மனங்களும் ஒரு சில நிமிடங்களுக்குக் கூட ஆவிக்குரிய ஆகாரத்தை சேமித்து வைக்கவில்லை. எந்த அப்பம் அதிக முக்கியமானது, சரீர அல்லது ஆவிக்குரிய அப்பம்? நம்மில் எவ்வளவு பேர் ஒரு மாதத்துக்கு தேவாஇயான ஆவிக்குரிய அப்பத்தைப் பெற்றிருக்கிறோம்? நாம் சிலவற்றை தினமும் சேகரிக்க வேண்டும். நீங்கள் இன்று சேகரித்து வைத்ததைக் கொண்டு நாளைக்கு முழுமையாக நீங்கள் வாழ முடியாது. வேத வாக்கியங்களை மனப்பாடம் செய்து வைப்பதினால் சிலர் சக்தியை சேமித்து வைத்திருக்கிறார்கள் மற்றும் அது பயனுள்ளதாக அமையும், ஆனால் உங்களுடைய கிறிஸ்தவ அனுபலம் பலம் வாய்ந்தத்தாகவும் உயிரோட்டமாகவும் இருக்க வேண்டுமென்றால், நீங்கள் தின வழிபாடுகளைப் பெற்றிருக்க வேண்டும். நீங்கள் வெளியில் போய் ஆவிக்குரிய மன்னாவை சேகரிக்க வேண்டும்.
ஒரு கடைசி சிந்தனை: வேதாகமம் “இந்த் நாளின் அப்பத்தை எனக்கு தாரும்” என்று சொல்லவில்லை. மாறாக இயேசு நமக்கு ஜெபிக்கக் கற்றுத் தருகிறார், “எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்”. அது நம்முடைய ஆகாரம் நண்பனே. அது என்னுடைய ஆகாரம் அல்ல. நாம் மற்றவர்களுடைய தேவைகளைப்பற்றி அக்கறையுள்ளவர்களாக இருக்க வேண்டும். நம்முடையது போல மட்டுமல்ல அல்லது நம்முடையதைக் காட்டிலும் அதிகமாக அக்கறை காட்ட வேண்டும்.
வேத வாக்கியங்கள் போதிக்கிறாது, “ ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து” (கலாத்தியர் 6:2). நமக்கு இருக்கும் ஆதாரங்களையும் பலத்தையும் பலவீனர்களுக்கு அளித்து உதவி செய்து சரீரப்பிரகாரமாக அதனைச் செய்ய வேண்டும். ஒருவருக்கொருவரின் விண்ணப்பங்களை நமது முழங்காலில் ஜெபத்தின் வழியாக அதனை ஆவிக்குரிய பிரகாரமாகவும் செய்ய வேண்டும். இதனை நாம் தொடர்ந்து தினமும் செய்ய வேண்டும். “அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?” (லூக்கா 18:7).
“எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல எங்கள் கடன்களை மன்னியும்”.
கர்த்தருடைய ஜெபத்தின் மீது இயேசு ஒரு நேரடியான வியாக்கியானம் செய்தார் என்பதை அறிவீர்களா? மத்தேயுவில் ஜெபத்தை கற்றுக் கொடுத்தபோது, அவர் தொடர்ந்து சொன்னார், “மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரம பிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாத்ருப்பார்” (6:14,15). கிறிஸ்து செங்குத்தான மற்றும் கிடைமட்டமான உறவுகளுக்கு இடையில் இருக்கும் தொடர்பை வெளிக்காட்டுகிறார். சரியாக கர்த்தருடைய ஜெபத்தின் மத்தியில் ஒரு வேளை நாம் கவனிக்க வேண்டும்!
“நான் உங்களோடு ஒரு உடன்படிக்கை செய்கிறேன்: நீங்கள் ஒருவரை ஒருவர்” மன்னியுங்கள் – கசப்புத்தன்மை இல்லை, காழ்ப்புணர்ச்சி இல்லை, உங்களுக்குள்ளே செய்து கொண்ட தவறுகளைப்பற்றி இனிமேலும் பேசுவது இல்லை – அப்பொழுது உங்களை மன்னிப்பேன்” என்று தேவன் சொல்லுகிறாரா? இதைத் தான் தேவன் சொல்லுகிறாரா? அதுதான் சுவிசேஷமா? இல்லை, அது நம்முடைய மன்னித்தலுக்கு வழிநடத்துவதில்லை. நம்முடைய கிரியைகளின் மூலமாக நாம் இரட்சிக்கப்படவில்லை. மாறாக, நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே தேவனிடம் வரவேண்டும். அப்பொழுது அவர் நம்மை மன்னிப்பார். ஆயினும், தேவன் சொல்லுகிறார், “நான் உங்களை மன்னித்திருப்பதால், நீங்கள் ஒருவருக்கொருவர் மன்னிக்க வேண்டும்”.
எப்படியும், நீங்கள் உங்கள் கிரியைகளினால் இரட்சிக்கப்படாவீடாலும், நீங்கள் இணக்கமற்றா வாழ்க்கையை த்டர்ந்து நடத்திக் கொண்டிருந்தால், நீங்கள் இழக்கப்படுவீர்கள். ஏனென்றால் நீங்கள் இயேசுவைப் பின்பற்றுவது பற்றி அக்கறை காட்டவில்லை என்பது தெளிவாகிறது. கசப்புத்தன்மையும் மன்னிக்காமலிருக்கும் ஆவியையும் பெற்றிருக்கும் ஒரு இருதயத்தில் தேவனின் கருணையும் கிருபையும் வளர்க்கப்பட முடியாது. ஒரு நண்பரால் எப்பொழுதாகிலும் காட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறீர்களா? யாராகிலும் உங்களைப்பற்றி தவறாக பேசியிருக்கிறார்களா? நாம் எல்லாரும் புண்படுத்தப்பட்டிருக்கிறோம் மற்றும் அடிக்கடி நாம் தற்காத்துக்கொண்டு, அந்த நபர் பற்றி குறுகிய எண்ணத்தோடு பார்க்கிறோம். அது மட்டுமல்லாமல் அதை சமன்படுத்த நாமும் தூற்றலாமா என நினைக்கிறோம். “வையப்பௌட்ம்போது அவர் திரும்ப வையவில்லை” என்று நிரூபித்த இயேசுவின் ஆவியா அது?
நம்மை மன்னிப்பதற்காக கிறிஸ்துபெரும் விலையைக் கொடுத்தார் என்பதை நாம் உணரும்போது, ஒருவருக்கொருவர் மன்னிப்பதை அது சுலபமாக்குகிறது என்று வேதாகமம் சொல்லுகிறது. “நீங்களும் அவனவன் தந்த சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் ப்ரம பிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் (மத்தேயு 18:35). நாம் ஒருவரை ஒருவர் மன்னிப்பதற்கு முன் வர வேண்டும், இதனை தேவன் வேத வசனங்களில் திரும்ப திரும்ப சுட்டிக்காட்டுகிறார், “நீங்கள் நின்று ஜெபம் பண்ணும்போது, ஒருவன் பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுஙள். நீங்கள் மன்னியாதிருப்பீர்களானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவும் உங்கள் தப்பிதங்களை மன்னியாதிருப்பார்” (மாற்கு 11:25,26).
நீங்கள் அப்படிச் செய்ய விரும்பவில்லையென்றாலும், ஒரு நபரை மனதளவில் மன்னிக்க முடியுமா? ஆம், நீங்கள் மன்னின்க்கப்படமாட்டீர்கள் என்று உணர்ந்திருந்தாலும் மன்னிப்பை ஏற்றுக் கொள்ள நீங்கள் விரும்பலாம். அது விசுவாசத்தினால் நடைபெறுகிறது… உங்களுக்குத் தீமை செய்தவர்கள் மன்னிப்பை நீங்கள் தெரிவு செய்யலாம். நடந்ததை மறப்பதற்கு உங்களால் ஒருபோது முடியவில்லையென்றாலும், நீங்கள் சொல்லலாம், “கர்த்தாவெ, உம்முடைய கிருபையால் நான் அவனை மன்னிக்கப்போகிறேன்”. நீங்கள் அந்த உணர்வுள்ள தேர்வை செய்யுங்கள். அதன் பிறகு தேவனுடைய கிருபை தொடரும்.
நீங்கள் தேவனுடைய மன்னிப்பை ஏற்றுக் கொள்ளும்போது, அவருடைய கிருபை இயல்பாகவே தொடர்கிறது. தேவன் உங்களுக்கு மன்னிக்க உதவப் போகிறார் என்று முதலாவதாக நீங்கள் விசுவாசிக்க வேண்டும். “இரக்கமுள்ளவர்கள் பக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்” (மத்தேயு 5:7). நாம் ஒருவரையொருவர் மன்னிக்க முடியாதென்றால், தேவன் நம்மை மன்னிக்க முடியாது, ஏனென்றால் மற்றவர்களை மன்னிக்கவோ அல்லது மன்னிப்பைப் பெறவோ நம்முடைய இருதயங்கள் திறந்திருக்கவில்லை. அது அபாயகரமானது இல்லையா? அது கிருபையின் ஒரு செயல்பாட்ட வேண்டி இருக்கிறது. ஒரு அற்புதம் – நாம் அதனைச் செய்வதற்கு ஏதுவாக.
“எங்களைச் சோதனைக்குட்படப் பண்ணாமல்”
இந்த குறிப்பிட்ட விண்ணப்பம் பெரும்பாலும் தவறாக புரிந்துக் கொள்ளப்படும் ஒன்று. மேற்போக்காக, நம்மை சோதிக்காத படிக்கு தேவனிடம் நாம் கெஞ்சுவது போல பெரும்பாலும் தோன்றுகிறது. “ஆண்டவரே தயவு செய்து, நீர் எங்களை சோதிக்க விரும்பவில்லை என்று நாங்கள் அறிவோம். இருந்தாலும் என்னை சோதிக்க வேண்டாம் என்று நான் கேட்கவில்லையென்றாலும், நீர் என்னை சோதிக்கப் போகிறீர்”. அது உண்மையில் மோசமான மொழிபெயர்ப்பு. உண்மையில் யாக்கோபு 1:13 சொல்லுகிறது. “சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல”.
நாம், “கர்த்தாவே தயவு செய்து என்னை சோதிக்காதேயும்” என்று கெஞ்சுவதில்லை. அப்படியானால் இது உண்மையில் என்னத்தைச் சொல்லுகிறது; நல்லது, நாம் இயல்பாகவே சோதனையின் பக்கம் செல்லுவதற்கான ஏதுகரம் இருப்பதால், அதனிடமிருந்து நம்மை விலக்கி வைக்க நாம் தேவனைக் கேட்கிறோம். இன்னும் சரியாக மொழி பெயர்க்கப்படும்போது, ஜெபம் இதுபோல இருக்கும்; “எங்களுடைய சோதனைக்குட்படும் இயல்பிலிருந்து எங்களை விலக்கிக் காத்துக் கொள்ளும்.
அந்த ஜெபத்தை ஜெபிக்க வேண்டியது நமக்கு தேவைதானா? நீங்கள் பந்தயம் கட்டுங்கள்! விளிம்பின் பக்கத்தில் நாம் செல்லுவதற்கு வாய்ப்புள்ளது. சோதனையிலிருந்து பறந்து செல்ல கர்த்தர் சொல்லும்போது நாம் அடிக்கடி அது நம்மைப் பிடித்துக்கொள்ளும் வகையில் மெல்ல அதை விட்டு ஊர்ந்து செல்லத்தான் பார்க்கிறோம் என்று ஒரு ஊழியக்காரர் செல்லுகிறார். அது ஒரு இர்ப்பு சக்திபோல நம்முடைய இருதயங்களில் இருந்து கொண்டு பாவத்தின் பக்கம் நம்மை இழுக்கிறது. அதனால் அந்த சக்தியை எதிர்க்க தேவன் நமக்கு உதவி செய்ய கெஞ்ச வேண்டும்…
நாம் வளர்ந்து செல்லும்போது பிசாசு அதனை விரும்புகிறான், ஏனெனில் அந்த சிறுசிறு சமரசங்களில் நம்மை பிடித்துக் கொள்வது சுலபம். குற்றஞ்சாட்டப்பட்ட ஒன்றன் ஆல்டிரிக் ஏம்ஸ் என்பவன் அவன் ஒரு நாள் தூங்கி இதைச் சொல்ல எழும்பவில்லை, “நான் ஒரு ஒற்றனாகப் போகிறேன் என்று நினைக்கவில்லை. நான் எல்லாவற்றையும் ரஷ்யர்களுக்கு பணத்திற்காகக் கொடுக்கப்போகிறேன்” என்றான். ஒருநாள், ம்கவும் தீங்கற்றா முறையில் “உங்களுடைய தொலைபேசி விவர புத்தகத்தை எனக்கு தர முடியுமா? நான் உனக்கு நிறைய பணம் கொடுக்கிறேன்” என்று கேட்ட ஒரு ரஷ்யனை அவன் சந்தித்தான். அது ஒரு தொலைபேசி விவர புத்தகம் தானே, ஆனால் சிறிது சிறிதாக, அவன் அதிகதிகமாக கொடுத்தான், ஒரு நாள் அவன் அவர்களுக்கு அணுசக்தி இரகசியங்களை விற்குமளவுக்குச் சென்றான். இப்படித்தான் சோதனையுடன் பிசாசு வேலை செய்கிறான். சின்ன சின்ன சமரசங்கள். தாவீது ராஜா பத்சேபாளுடன் விபச்சாரம் பண்ணினான், உரியாவை கொலை செய்தான் மற்றும் அவனுடைய மக்களிடம் பொய் சொன்னான். அது ஒரு சிறிய, மாறுபாடான காமம் நிறைந்த பார்வையுடன் ஆரம்பித்தது. நம், “கர்த்தாவே, சிறிய காரியங்களிலிருந்தும் எங்களை விலக்கிக் காரும், ஏனென்றால் அப்படித்தான் பெரிய காரியங்கள் ஆரம்பிக்கின்றன” என்று ஜெபிக்க வேண்டும்.
“தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும்”
“தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும் என்று சொல்லும் ஏழாவது விண்ணப்பத்தை நான் உண்மையில் விரும்புகிறேன். பாவத்தின் காரிருளில் மூழ்கிக்கொண்டிருக்கும் ஒரு உலகத்தில் நாம் வாழ்கிறோம். நிலைமைகள் எப்பொழுது இப்படியே இருக்காது என்கின்ற வாக்குத்தத்தை தேவன் கொடுக்கும் நீண்ட கால நம்பிக்கையை கிறிஸ்தவர்களுக்கு கொடுப்பது இது ஒன்று மட்டுமே. இறுதியான மீட்புக்காக நாம் காத்துக் கொண்டிருக்கிறோம், மற்றும் நாம் எங்களை இரட்சித்துக்கொள்ளும்” என்று சொல்லும் போது வெள்ளை குதிரையில் வரப்போகும் கிறிஸ்துவைப்பற்றி நாம் பேசுகிறோம். அவருடைய ராஜ்யத்தை ஸ்தாபிக்கும் மற்றும் இந்த உலகத்தில் இன்று அரசாட்சி செய்யும் தீமையின் கடைசி அடிச்சுவட்டையும் அழிக்கும் ராஜாதி ராஜா மற்றும் கர்த்தாதி கர்த்தா.
“எங்களை இரட்சித்துக் கொள்ளும்” என்பது நம்மை தீமையிலிருந்து விடுவிக்கிறது. மற்றும் அதிலிருந்து என்றென்றும் நம்மை பிரிக்கிறது. வேறு வகையில் அதைச் சொன்னால், “தீமையானதிலிருந்து எங்களை இரட்சியும்”. தேவன் நம்மை சோதனையிலிருந்து விடுவிக்க நாம் ஜெபிப்பது மட்டுமல்ல, அவர் நம்முடைய சகோதரர்களையும் விடுவிக்க வேண்டும் என ஜெபிக்க வேண்டும். ஏனென்றால் பிசாசு நமக்கு நாமே இருப்பதைக் காட்டிலும் மிக அதிகமாக சக்தி வாய்ந்தவன் மற்றும் தந்திரமிக்கவன். அதனால் தான் நாம் தேவன் நம்மை வழி நடத்த அவ்வளவு தீவிரமாக வேண்டுகிறோம்.
இரண்டாம் வருகைக்குறித்து பேசும்போது, கிறிஸ்து சொன்னார், “எப்பொழுது ஜெபம் பண்ணூங்கள்” (லூக்கா 21:36). இது எவ்வளவு முறை என்று பொருள் படுகிறது என்பது பற்றி எனக்கு நிச்சயமாக சொல்ல முடியவில்லை, ஆனால் உங்களுடைய சொந்த ஜெப வாழ்க்கையைக் கவனித்து அது பொருந்துகிறதா என்று பாருங்கள். முழு வசனமும் சொல்லுகிறது. “இனிச் சம்பவிக்கப் போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷக் குமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்கல்லாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுது ஜெபம் பண்ணி விழித்திருங்கள்” நீங்கள் எப்பொழுதும் ஜெபம் பண்ணுகிறீர்களா? நாம் ஓடிப்போவது மாரிக்காலத்திலாவது, ஓய்வு நாளிலாவது சம்பவியாதபடி ஜெபிக்க வேண்டும் என்று இயேசு சொன்னார் (மத்தேயு 24:20). அந்த ஜெபத்தை ஜெபித்திருக்கிறீர்களா? இந்த உலகத்தில் நடைபெறப் போவதிலிருந்து நாம் தப்பிக்க ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் பிசாசிடமிருந்து விடுதலையாக்கப்பட நாம் ஜெபித்துக் கொண்டிருக்க வேண்டும். நம்மிடத்தில் மற்றும் நம்மைச் சுற்றி இருக்கும் தீமையிலிருந்து நாம் இறுதியில் விடுதலையாக்கப்படவும் காப்பாற்றாப்படவும் ஜெபியுங்கள். முதலாவது தீமையான இருதயத்திலிருந்து நீங்கள் இரட்சிக்கப்படும் வரை உலகத்தின் தீமையிலிருந்து நீங்கள் இரட்சிக்கப்பட முடியாது.
“ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே”
இந்த சக்திவாய்ந்த உச்சகட்ட ஜெபம் மத்தேயுவில் மட்டும் தான் காணப்படுகிறாது. மற்று அது நம்முடைய கவனத்தைதிருப்புவது பற்றிப் பேசுகிறாது. நாம் ஒரு மாபெரும் போராட்டத்தின் மத்தியில் இருக்கிறோம். தன் தான் சரியான ராஜா என்றும் வல்லமையைப் பெற்றிருக்கிறான் என்றும் ப்சாசு சொல்லுகிறான். ஆனால் கிறிஸ்து, பரத்திற்கு ஏறி செல்லு முன்பக, அவருடைய முன்னுரிமையை ஸ்தாபித்தார், “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறாது” (மத்தேயு 28:18). இந்த பிரபஞ்சத்தின் உரிமையாளர் யார் என்பதை நாம் ஒருபோதும் மறாந்து விடக் கூடாது என்று இந்த ஜெபம் வலியுறுத்துகிறது. ஜெபம், “ராஜ்யம் உம்முடையதாக மாறும்” என்று சொல்லவில்லை, மாறாக “ராஜ்யம் உம்முடையது” என்கிறது, உண்மையில், கர்த்தருடைய ஜெபத்தில் இருக்கும் எல்லா விண்ணப்பங்களும் நடக்கக்கூடியவைகளை ஏனென்றால் க்றிஸ்துவே வல்லமையாக இருக்கிறார். இப்பொழுது எல்லாவற்றின் மேலும் கட்டுப்பாடு க்ணொஎருக்கிறார்.
பிசாசு தனக்குத்தானே மகிஅமையை சூடிக்கொள்ள பெருமையுட்ன்வாழ்கிறான். கிறிச்தவனின் நோக்கம் தேவனுக்கு கள்ரவத்தைக் கொண்டு வருவதும் அவருக்கு மகிமையைக் கொடும்பதும் ஆக இருக்கிறது. அதனால் தான் சாத்தான் ஒரு தேவனாயிருக்க பசித்திருக்கிறான். தனக்கு தகுதி இல்லாத மகிமையை அவன் பெற விரும்புகிறான். அவருடைய குணாதிசயமும் தன்மையும் சீக்கிரத்திலே நிரூபிக்கப்படும் என்பதை நாம் அறிந்து தேவனுக்கு முன்பாக அறிக்கையிடும்போது இந்த ஜெபத்தின் முடிவு நேராக நம்முடைய மனங்களிலும் இருதயங்களிலும் சீர்படுத்தி பதிவிடுகிறது.
“ஆமென்”
இயேசு சொன்னார், “ஜெபம் பண்ண வேண்டிய விதமாவது”. அந்த அளவுக்கு இது அவருடைய ஜெபம் அல்ல. ஆனால் நம்முடைய ஜெபம். அவரைப் பின்பர்றி விரும்புவர்களின் ஜெபம் அது. ஆதுவும் கூட இந்த ஜெபம் உண்மையில் மனம் மாறியவர்களிடமிருந்து வரும் ஜெபம் இதுவே. உங்களுடைய ஆவி மற்றும் மனப்பான்மையின் ஒரு வரையறையாயிருக்க வேண்டும். ஒரு எழுத்தாளர் எப்படி சொல்லுகிறார்:
“நான் எனக்கு மட்டுமே வாழ்ந்தால் நான் ‘எங்கள்’ என்று சொல்ல முடியாது. அவருடைய பிள்ளையாக என்னை பாவிக்கவில்லையென்றால் நான் ‘பிதா’ என்று சொல்ல முடியாது. நான் அங்கே பொக்கிஷங்களை சேர்த்து வைக்கவில்லையென்றால் நான் ‘பரமண்டலங்களிலிருக்கிற’ என்று சொல்ல முடியாது. நான் பரிசுத்தத்துக்கு ம்டியவில்லையென்றால் நான் “உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக’ என்று சொல்ல முடியாது. நான் ஆசீர்வாதமான நம்பிக்கைக்கு துரிதப்பட விரும்பவில்லையென்றால் “உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்று நான் சொல்ல முடியாது. நான் அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் இருந்தேனாகில் நான் “உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக “ என்று சொல்ல முடியாது. இப்பொழுது இங்கே நான் அவருக்கு சேவை செய்யவில்லையென்றால், நான் ‘பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக’ என்று சொல்ல முடியாது. நான் சுயநலமாக எதிர் காலத்துக்காக சேமித்து வைத்துக் கொண்டிருந்தால் “எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்” என்று சொல்ல முடியாது. நான் யாருக்கும் எதிராக பழிவாங்கும் எண்ணம் கொண்டிருந்தால் “எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்” என்று நான் சொல்ல முடியாது. நான் வேண்டுமென்றே அதனுடைய பாதையில் நின்று கொண்டு “எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல்” என்று சொல்ல முடியாது. நான் பரிசுத்தப்பட விரும்பாமல் இருந்தால் ‘தீமையினின்ரு எங்களை இரட்சித்துக் கொள்ளும்’ என்று சொல்ல முடியாது. இயேசுவுக்கு என்னுடைய இருதயத்தில் சிம்மாசனம் கொடுக்கவில்லையென்றால் ‘உம்முடைய ராஜ்யம்’ என்று சொல்ல முடியாது. மனிதன் செய்யக் கூடியதிற்கு நான் பயப்படுவேன் என்றால் அவருக்கு ‘வல்லமையை’ நான் செலுத்த முடியாது. என்னுடைய கௌரவத்தையே நான் தேடுவேன் என்றால், நான் அவருக்கு “மகிமை”யை சேர்க்க முடியாது. நான் உலகப்பிரகாரமான தற்காலிக பயன்களுக்கு மட்டும் வாழ்வேன் என்றால் நான் “என்றென்றைக்கும்” என்று சொல்ல முடியாது.
நாம் கர்த்தருடைய ஜெபத்தை செய்யும் போது, அது முழு ஒப்புக் கொடுத்தலின் ஆவியுடன் இருக்க வேண்டும். இயேசு வரும்போது நாம் ஆயத்தமாயிருக்கப்போகிறோம் என்ரல், இயேசு சொல்லிக்கொடுத்தது போல ஜெபத்தை செய்ய நாம் கற்றுக்கொள்ளுவது அவசியம். ஜெபத்தின் சாராம்சமே நம்முடைய முழு இருதயங்களோடு தேவனை நேசிப்பதில் தான் கட்டப்பட்டிருக்கிறாது, ஏனென்றால் நாம் அவரை அறிந்திருக்கவில்லையென்றால் நாம் உண்மையில் அவரை நேசிக்க முடியாது. நாம் நம்முடைய துயரங்களையும், நம்முடைய சந்தோஷங்களையும், நம்முடைய பெரும் உள்ளான இரகசியங்களையும் கூட தெரியப்படுத்தவில்லையென்றால், நாம் எப்படி அவரை நேசிக்க முடியும்?
அதிகமான நேரத்தை உங்கள் முழங்கால்களில் முதலீடு செய்யுங்கள் என்று உங்களை வேண்டுகிறேன். ஆனால் முழங்கால்களில் நிற்கமுடியவில்லையென்றால் நீங்கள் வெறுமனே ஜெபம் செய்யும்படி உங்களை வேண்டுகிறேன். உங்களுடைய சொந்த மற்றும் குழுவின் ஜெபங்களிலும் தியானங்களிலும் போதுமான நேரத்தை கிறிஸ்துவோடு செலவிடுவது முக்கியம் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள், அதனால் தேவனை மகிமைப்படுத்தும் நம்முடைய வாழ்க்கைகளில் நாம் அந்த மாற்றங்களை செய்து காட்ட முடியும். தேவனுடைய வார்த்தையின் “தினசரி ஆகாரத்தின்” பயனை எடுத்துக் கொள்ளுங்கள் மற்றும் சுயநலத்திலிருந்து சுயமற்றவ்ர்களாக மாற்றம் பெறும் உங்களுடைய விருப்பத்தை தேவனிடம் தெரிவியுங்கள். வேறு எதைக்காட்டிலும் ஒருவருக்கொருவர் நாம் ஜெபிக்கக் கடவோம். நாம் கிறிஸ்துவின் சகோதரத்திலும் சகோதரித்திலும் நாம் இன்னமும் அதிகமாக ஒன்றிணைதிருக்க நாம் எல்லாரும் ஒன்றிணைந்து நம்முடைய குரல்களை பரலோகத்துக்கு நேராக ஏறெடுக்கக் கடவோம்.
வேதாகமத்தில் என்னுடைய பிடித்தமான ஆய்வுகளில் ஒன்று மகத்தான பழைய ஏற்பாட்டின் ஜெபங்களை வாசிப்பது. நீங்களும் அவைகளை வாசிப்பீர்களெனவும் நான் நம்புகிரேன். சாமுவேல் 2-ல் காணப்படும் அன்னாளில் ஜெபத்தை வாசியுங்கள். தானியேல் 9-ல் தானியேலின் ஜெபமும் மிக விசேஷமானது. நாளாகமத்தில் சாலமோனின் அசைத்துக் காட்டும் பிரதிஷ்டையின் ஜெபத்தையும் நீங்கள் காணலாம். இந்த ஜெபங்களின் பெரும்பாலானவைகள் கர்த்தருடைய ஜெபத்தின் அம்சங்களைப் பெற்றிருப்பதை நீங்கள் காணலாம். அவைகள் தேவனுடைய மகிமையைப்பற்றியவை, தேவனுடைய முன்னேற்பாடுகள் மற்றும் தேவனுடைய விடுவித்தல் மற்றும் அவைகள் நாம் எல்லாரும் கிறிஸ்தவர்களாக ஒருவருக்கொருவர் ஜெபித்து இதிலே ஒன்றாயிருப்பது பற்றியவை.
இந்த சிறிய புத்தகத்தை முடிக்கும் வகையில் சார்லஸ் ச்பர்ஜன் அவர்களுடைய தியான அறிக்கைகளுக்கு மேலாக என்னால் ஒன்றும் சொல்ல முடியாது;
“இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்” – கொலோசெயர் 4:2.
உதாரணங்களை கொடுப்பதாயினும் சரி, கட்டளைகளை செயல்படுத்துவதிலும் சரி, அல்லது வாக்குத்தத்தங்களைக் கொடுப்பதிலும் சரி, ஜெபத்தின் பொருளுடன் பரிசுத்த எழுத்துக்களின் பெரும்பகுதி எப்படி வியாபித்திருக்கிறாது என்பதை குறிப்பிடுவது சுவாரஸ்யமாக இருக்கிறது. நாம் வேதாகமத்தை படிக்கு முன்பாக அதனை திறந்த மாத்திரத்தில் நாம் வாசிப்பது, ‘கர்த்தருடைய நாமத்தை மனிதர் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள்’ மற்றும் புத்தகத்தை நாம் மூட நினைக்கும்போது ‘ஆமென்’ என்கின்ற ஆர்வமுள்ள வேண்டும் நமது காதில் தொனிக்கிறாது. உதாரணங்கள் நிறையவே இருக்கின்றன. இங்கே நாம் போரிடும் யாக்கோபைப் பார்க்கிறோம் – அங்கே ஒரு நாளில் மூன்று முறை ஜெபித்த தானியேல் – மற்றும் அவனுடைய முழு இருதயத்தோடும் அவனுடைய தேவனைத் தேடிய ஒரு தாவீது. பர்வத்டத்தில் எலியாவை நாம் பார்க்கிறோம்; பவுலையும் சீலாவையும் சிரையில் பார்க்கிறோம். நாம் பெருக்கமான கட்டளைகளையும் எண்ணற்ற வாக்குத்தத்தங்களையும் பெற்றிருக்கிறோம். ஜெபத்தின் பரிசுத்த முக்கியத்துவத்தையும் தேவையையும் அல்லாமல் வேறு எதனை நமக்கு இது போதிக்கிறது? அவருடைய வார்த்தையில் எதையெல்லாம் முக்கியப்படுத்தினாரோ, அவைகளையெல்லாம் அவர் நமது வாழ்க்கையில் எளிதில் பார்க்கக் கூடியதாக்கினார் என்பதை நாம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். அவர் ஜெபத்தைப் பற்றி நிறைய பேசியிருக்கினார் என்றால் அதற்கு காரணம் நமக்கு அதன் தேவை அதிகம் என்பதை அறிவார். நம்முடைய தேவைகள் ஆஅழமாயிருப்பதால் நாம் பரலோகத்துக்குச் செல்லும் வரை நாம் ஜெபிப்பதை நிறுத்தக் கூடாது. உமக்கு எதுவும் தேவையில்லையா? அப்படியென்றால், உம்முடைய ஏழ்மைத்தனத்தை நீர் அறியவில்லை, என்று அஞ்சுகிறேன். தேவனிடமிருந்து கிருபையை கேட்கவில்லையா? அப்படியென்றால், தேவனின் கிருபை உங்களுடைய துயரத்தை உங்களுக்குக் காட்டட்டும்! ஒரு ஜெபமில்லாத ஆத்துமா ஒரு கிறிஸ்து இல்லாதா ஆத்துமாவாக இருக்கிறது. ஜெபம் என்பது நம்புகின்ற சிசுவின் சிணுங்கல், போரிடும் விசுவாசியின் சத்தம், இயேசுவில் உறக்கம் கொள்ளும் மரித்துக் கொண்டிருக்கும் பரிசுத்தவானின் கொரிக்கை, அதுவே ஒரு கிறிஸ்தவனின் சுவாசம், சுலோகம், ஆறுதல், பல, கௌரவம். நீர் தேவனுடைய பிள்ளையாயிருந்தால் உம்முடைய தகப்பனாரின் முகத்தைத் தேடுவீர் மற்றும் உம்முடைய தகப்பனாரின் அன்பில் வாழுவீர். இந்த வருடத்தில் நீர் பரிசுத்தமாயிருக்கவும், தாழ்மையுடனிருக்கவும், வைராக்கியமாயிருக்கவும் மற்றும் பொறுமையாயிருக்கவும் ஜெபியும், கிறிஸ்துவோடு நெருங்கிய உறவு கொண்டிரும் மற்றும் அவருடைய அன்பின் விருந்து வீட்டிற்குள் அடிக்கடி நுழையும். மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் ஒரு ஆசீர்வாதமாகவும் நீர் இருக்க ஜெபியும் மற்றும் உம்முடைய ஆண்டவருக்கு அதிகமான மகிமை கொண்டு வரும்படி வாழிவீராக. இந்த வருடத்தின் குறிக்கோளாக ‘இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்’ என்றிருக்க வேண்டும் (காலையும் மாலையும் தினசரி வாசிப்புகள், 3டி, எட், ஜனவரி 2).
பிரிட்டிஷ் போர் வீரனின் ஜெபம் அவனை விடுதலையாக்கினது போல, நாம் சீக்கிரத்தில் நம்முடைய பரலோகத்தின் தேவனால் மதிப்பாய்வு செய்யப்படப் போகிறோம். அந்த பிரதான சம்பவத்துக்கு ஆயத்தப்பட நம்முடைய நேரத்தி பயிர்
சி செய்வதில் செலவிட வேண்டும். நாம் இப்படி சொல்ல வேண்டும், “கர்த்தாவே, எங்களுக்கு ஜெபிக்க கற்றுத்தாரும்”. அவருடைய ஜெபத்தின் மாதிரியை நமக்குக் கொடுத்திருக்கிறார், அதனால் அதனைப் பின்பற்ற உறுதியாயிருக்கக் கடவோம். நீங்கள் ஒருபோதும் இந்த ஜெபத்தை பழையது போலவே மறுபடியும் பார்க்க மாட்டீர்கள் என்பதே எனது நம்பிக்கை.

