CONTENTS

கூட்டத்தில் தனியாக

உணர்வைப் பின்பற்றுதல் அல்லது கூட்டத்தைப் பின்பற்றுதல்.

சத்தியத்தை பிரசங்கிப்பது சுலபமா?

மேன்மையாக எண்ணப்படுகிறது என்பதின் அபாயங்கள்
உணர்வுகளை பின் தொடர்தல் தவறான வாதம்

வினையாற்றுதல் அல்லது எதிர்வினையாற்றுதல்

குற்றங்களைக் கையாளுதல்

கூட்டத்தில் தனியாக

             

           வேதாகமத்தில் மிகவும் குறைத்து மதிப்பிடப்படும் ஒரு சிறிய கடல் ஜீவராசிபற்றி சில சுவாரஸ்யமானவைகளை நான் கண்டுப்பிடித்தேன்.  தோலுரித்தல் என்கின்ற செயல்முறை மூலமாக ஒரு வருடத்தில் அசுத்த வகையைச் சேர்ந்த இறால் மீன் ஒரு அற்புத விதமாக ஆறு அல்லது எட்டு முறை உடையை  மாற்றிக் கொள்ளுகிறது.  வெளிப்படையாக ஒரு புதிய ஆடை பழைய வெளிப்புற தோலின் உட்புறத்தில் வளர ஆரம்பிக்கிறது.  கல்பாகத்தை உராய்த்துக் கொள்வதின் முலம், இறால் மீன் வெளிப்புற பாகத்தை உடைக்கவும் இழக்கவும் ஆரம்பிக்கிறது, இது சீக்கிரத்திலே முழுமையுமாக உதிர்க்கப்பட்டு, அடிப்பாகத்தின் தரமான புதிய தோலுரையை வெளிக்காட்டுகிறது.

            ஒவ்வொரு தோலுரித்தல் நேரத்திலும், இன்னுமொரு அற்புதமான நிகழ்வு நடைபெறுகிறது.  சில உள்கட்டமைப்பின் பழைய உள்ளுணர்வுக்கு பதிலாக ஒவ்வொரு இறாலும் வெளிப்படையாக அதனுடைய தலையிலிருக்கும் விசேஷித்த இடத்தில் சிறிய மணலின் மணீயை வைத்துக்கொள்ளுகிறது. ஒவ்வொரு தோலுரித்தல் காலத்திலும் சின்ன கல் அதனுடைய பழைய தோலுடன் நிராகரிக்கப்படுகிறது.  மற்றும் ஒரு புதிய மணல் போன்ற மணி அந்த இடத்தில் ஜாக்கிரதையாக வைக்கப்படுகிறது.

          அந்தக் கற்களின் விசேஷித்த செயல்முறையாக அவைநிலைக்கற்கள் அல்லது நிற்கும் கற்கள் என பெயரிடப்பட்டிருக்கிறது.  இந்த நீர் ஜீவராசிகளின் உயிர் வாழ்வுக்கு அவைகள் மிகவும் முக்கியம். அவையில்லாமல் இறால் மீன் தொடர்ந்து குழம்பிப்போகும் மற்றும் திசை மாறும். போங்கி எழும் அலைகளும் நீரோட்டமும் வரும்போது அவைகள் இப்படியும் அப்படியுமாக தலை கீழாக தடுமாற்றம் பெறுகின்றன. அவைகளின் தலையில் இருக்கும் கல்லின் இழுபறி ஈர்ப்பினால் கிடைக்கும் உணர்வின் மூலமாய்தான் அவைகள் தலைகீழாக இருக்கிறோமா அல்லது நேராக இருக்கிறோமா என அறிந்துகொள்ளமுடியும்.

             அவருடைய பெரிதான அன்பிலும் ஞானத்திலும், தேவன் அவைகள் வாழும் இடத்தில் கொந்தளிப்பான கூறுகளின் மத்தியில் நல்ல சமநிலையோடு வாழ்வதற்கு இந்த வழிமுறையைத் தேவன் கொடுத்தார்.

             எந்த இறால் மீனும் இந்த உண்மைகளை என்னிடம் வந்து சொல்லிருக்க முடியாது என்பது வெளிப்படையாதலால், இந்த ஆச்சரியமான தகவல் எப்படி வெளிவந்தது என நீங்கள் வியப்படையக்கூடும்.  பல வருடங்களுக்கு முன்பாக ஒரு கடல் உயிரியலாளர் ஒரு பெரிய நீர் வாழ் காட்சி சாலையில் இருந்த அநேக இறால்கள் மீது பரிசோதனை நடத்தினார்.  நீர் தொட்டியின் அடியில் விஞ்ஞானி மணலுக்குப்பதிலாக இரும்பு கழிவுகளை வைத்தார்.  தோலுரிக்கும் நேரம் வந்தபோது இறால்கள் ஒவ்வொன்றும் கல்லுக்கு பதிலாக இரும்புத் துண்டை எடுத்துகொண்டது, பிறகு தனது தலையில் வைத்துக்கொண்டது.

             அதன் பிறகு உயிரியலாளர் ஒரு சக்தி வாய்ந்த மின் காந்தத்தை தொட்டி மீது வைத்தார்.  உடனே எல்லா இறால்களும் தலைகீழாக புரட்டிக்கொண்டு தலைகீழ் நிலையில் நீந்த அரம்பித்தன.  காந்தத்தின் இழுக்கும் சக்தி இரும்பின் மீது புவியீர்ப்பு சக்தியைவிட பலமாக இருந்ததால் அவைகள் கீழே இருப்பதை மேலாகவும் மேலே இருப்பதைக் கீழாகவும் இருந்ததாக நம்பின.  பரிசோதனையை இன்னமும் அதிகமாக செயல்படுத்த விஞ்ஞானி சமுத்திரத்திலிருந்து ஒரு இறாலைக் கொண்டுவந்து தொட்டியில் வைத்தார்.  இயற்கையாகவே இந்தக்காட்சியில்  புதிதாக வந்தவை சரியான நிலையில் நீந்த ஆரம்பித்தது.

             இந்த புதிய ஜீவி நீர் தொட்டியில் தோன்றினது ஒரு வேளை வெறுப்புணர்ச்சியை  தூண்டியிருக்கும் என நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?  கலங்கிய இந்த தண்ணீரில் சில மோசமான முறுமுறுப்புகள் அவைகளுக்குள் வலம் வந்திருப்பதுபோல தெரிகிறது.அவன் தன்னை என்ன என்று நினைக்கிறான்?  நம்மீது தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்ற இவன் யார்?  இந்த விசித்திரமானவன் நமக்கு இதை விட ஒரு சிறந்த வழியில் நீந்த கற்றுக் கொடுக்கப்போகிறானோ?  அவன் ஏன் அதை தலைகீழாக செய்கிறான்?”

             புதிதாக வந்த இறால் மினே சரியாக நீந்திக் கொண்டிருந்தது என தவறான வழியில் இருந்த கூட்டம், அவைகளுடைய தலையில் இரும்பைப் பெற்றுக் கொண்டு அதன் அறிகுறியை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்பதை நீங்கள் காண்கிறீர்கள்.  அவைகள் எப்பொழுதும் தாங்கள் செய்வதே சரி என நிரூபிக்க இரண்டு காரியங்களை நம்பீருந்தன அவைகளுடைய உணர்வு மற்றும் அவைகளைச் சுற்றி இருக்கும் பெரும்பாலானவை செய்வது.  ஆனால் இப்பொழுது அவர்களுடைய நிலைக்கற்கல் மாற்றம் செய்யப்பட்டு இரண்டிலுமே அவர்கள் பொய்யை நம்பத்தக்கதாக ஏமாற்றப்பட்டு விட்டனர்.

 

உணர்வைப் பின்பற்றுதல் அல்லது கூட்டத்தைப் பின்பற்றுதல்.

 

            அந்தக் கதையை அதிகமாக எண்ணிப் பார்க்கும்போது, நாம் இந்த உலகத்தில் வாழும்போது நாமெல்லாரும் ஒரு நீர்வாழ் அருங்காட்சியகத்தில் இருப்பதுபோன்று அதிகமாக உணர்கிறேன்.  நம்மைச் சுற்றி சோதனையின் சக்திவாய்ந்த காந்தங்கள் நம்முடைய ஆவிக்குரிய நிதானத்தை கலங்கடித்து நம்மை தலைகீழாக மாற்றுகின்றன.  உணர்ச்சி வசப்படுவதிலும் பெரும்பான்மையின் அபிமானத்திலும் நம்பிக்கை வைக்கிற அனைவரும் மிகச் சுலபமாக வெளிப்புற சக்திகளால் இழுக்கப்பட்டுப் போகின்றனர்.  அநேக மற்றவர்கள் செய்கின்றதையே செய்பவர்கலின் பிரசன்னத்தால் சமாதானப்பட்டு அவர்கள் எல்லாவற்றையும் தவறான பார்வையிலேயே காண ஆரம்பிக்கிறார்கள்.  தங்கள் கருத்திலிருந்து மாறுபடுகின்ற ஒவ்வொருவரும் செய்வது தவறே என்று எண்ணுமளவுக்கு அவர்கள் எல்லா அடையாளங்களையும் தலைக்கீழாக மாற்றி அதன் மீது உறுதியான நம்பிக்கையை வைத்து அதுவே சமநிலையானதும் சரியாகவும் இருக்கிறது என கருத்துகளை உருவாக்கிக் கொள்ளுகின்றனர்.  இறுதியில் சரியானதை தவறாகவும் தவறானதை சரியாகவும் பார்க்கின்றனர்.  எவராகிலும் அவருடைய அல்லது அவளுடைய செயலுக்கு மாறாக போகிறவர்களை ஒரு எதிர்மறையான சிக்கலை உருவாக்குபவர் என்று முத்திரையிடப்படுகின்றார்.

 

            இது ஒர் பெரும் உண்மையை சுட்டிக்காட்டுகிறது:  நம்முடைய உணர்வினாலோ அல்லது பெரும்பாலானோர் என்ன செய்கிறார்கள் என்பதை வைத்து சரியானது எது மற்றும் தவறானது எது என்று நாம் அளவிடமுடியாது!  உண்மை எங்கே இருக்கிறது என்பதை சொல்லுவதற்கு நமக்கு வெளியிலிருந்து ஏதோ ஒன்று நமக்கு தேவைப்படுகிறது.  காந்த சக்தியின் இழுக்கும் தன்மைப்போலவே நம்முடைய உணர்ச்சி வேகமும் இருக்கிறது.  ஆனால் அவைகள் தவறான வழி நடத்துதல் போலவே இருக்கும். நம்முடைய அநேக நண்பர்கள் அதீத மதிப்புக்குரிய மற்றும் சன்மார்க்கத்துக்குரியவர்களாக இருக்கலாம், ஆனால் அவர்களுடைய நிலைக்கல் அதே தவறான எதிரியின் புத்திசாலித்தனமான நாச வேலையின் வழிகாட்டும் அமைப்பிற்கு இணைக்கப்பட்டதாக இருக்கலாம்.

             ஒரே ஒரு உண்மைதான் இருக்கிறது, கிறிஸ்தவர்களுக்கு தவறிழைக்காத நிலைக்கல்லாக இருப்பது வேதாகமம் ஆகும். வார்த்தை மனதில் பதித்து வைக்கப்படும்போது, அது எப்பொழுதும் நம்பிக்கை வாய்ந்த சத்தியத்தின் நிலைப்பாட்டை அளிக்கிறது.  ஒவ்வொரு உணர்ச்சி வேகமும் அதனால் பரிசோதிக்கப்பட வேண்டும்.  வார்த்தைகள், நடக்கைகள் மற்றும் எண்ணங்கள் யாவையும் சேர்த்து மொத்த வாழ்க்கை முறையும் அந்த ஒரு திசை கட்டுப்பாட்டு மையத்தின் மேற்பார்வையின் கீழ்தான் கொண்டுவரப்படவேண்டும்.  இன்று தேவனுடைய சித்தத்திலிருந்து பெரும்பாலும் விலகிப்போவது என்பது உணர்வுகளைப் பின்பற்றுதல் அல்லது கூட்டத்தை பின்பற்றுதல் என்பதைப் பொறுத்ததுதான் என்று சொல்வது மிகைப்படுத்தப்படுவது அல்ல.

             சாத்தான் எந்த அளவுக்கு பிசாசின் தந்திரத்தோடு செயல்படுத்துகிற இந்த சக்தி வாய்ந்த இரண்டு ஆயுதங்களைப்பற்றி படிப்பது நமக்கு எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது.  இந்த இரண்டுமே மனிதனின் ஆழ்ந்த மனோதத்துவ தேவைகளில் வேறூன்றி இருக்கிறது. நம்முடைய ஆவிக்குரிய எதிரி மனிதனுடைய இயற்குணத்தை 6,000வருடங்களுக்கு மேலாக ஆராய்ந்து கொண்டிருக்கிறான் எனும் உண்மையை நாம் அடிக்கடி கவனிக்காமல் போகிறோம் பெரும்பாலான இன்றைய வெற்றிகரமான மனநல மருத்துவர்களின் மருத்துவ காலத்தை விட மிக அதிகமானது.  நாம் பாதிக்கப்படக்கூடிய நேரங்களில் இவைகளைப் பயன்படுத்தி நம்முடைய உணர்ச்சிவசப்பட்ட பலவீனங்களுடன் அவன் பரிசோதனையும் செய்திருக்கிறான்.

            அவனுடைய சூழ்ச்சியான சாதனங்களுக்கு எத்தனை பேர் இரையாக்கப்பட்டிருக்கின்றனர்?  நம்முடைய மாம்சம் சார்ந்த சமுதாயத்தை ஒருமுறை தெளிவாக பார்க்கும்போது அது பதிலை அளிக்கிறது.  அந்த தாக்குதல்களின் பலத்தைப்பற்றி அது நடைபெறும் முன்பதாகவே இயேசு பார்த்து அவருடைய சீஷர்களையும் நம்மையும் எச்சரிக்க முயற்சி எடுத்தார்.  அவர் சொன்னார்ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது;  அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர் (மத்தேயு 7:14).

             இன்னொரு தறுவாயில் போதகர் இந்த முக்கியமான கேள்வியை எழுப்பினார்,  “மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ (லுக்கா 18:8).  அதே பிரசங்கத்தில் அவர் அறிவித்தார்,நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும் (லூக்கா 17:26).

             வெளிப்படையாக பூமியில் குடியிருப்பவர்களில் ஒர் சிறுபங்கு மக்கள் மட்டுமே கடைசி நாட்களின் பெரும் மோசடிகளிலிருந்து தப்பித்து இரட்சிக்கப்படுவர்.  எப்பொழுதும் இருப்பது போல, ஒரு சிறு மீதமானவர்கள் தங்களைத் தாங்களே அல்லது கூட்டத்தை அல்லது வேறு ஒரு நபரை திருப்திபடுத்துவதைப்பார்க்கிலும் சரியானதை செய்வதுக்குறித்து அதிக அக்கறையுள்ளவர்களாக இருப்பார்கள்.  வசதியான கூட்டத்தின் கவர்ச்சியை நிராகரிக்கத் துணிந்த ஒரு சிறு குழுவினரின் சரித்திரம் தொடர்ந்து வரலாற்றின் பதிவேடுகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.  அவர்கள் விருப்பம்போல வாழ்வதற்கு அனுமதிக்கின்ற  ஒரு சுமூகமான, சுலபமான வசதியான மார்க்கத்தை தேடுவதுபோல பெரும்பாலானோர் ஒருபோதும் சத்தியத்தை தேடுவதுபோல தெரியவில்லை.  அவர்களுக்கு சுயத்தை வெறுக்கின்ற அல்லது ஒரு கட்டுப்பாடுள்ள தத்துவம் அடங்கிய வாழ்க்கைமுறை ஒரு கெட்ட செய்தியே.

 

சத்தியத்தை பிரசங்கிப்பது சுலபமா?

           சந்தேகமில்லாமல் இதனால்தான் இன்று பெரும்பாலான சபைகளில் ஒருதலையான  சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது.  பாராட்டப்படுகிற, நன்றாக ஏற்றுக் கொள்ளப்படுகிறவைகளைப் பேசுவது மனதுக்குகந்ததாயிருக்கிறது.  விசுவாசமும் ஏற்றுக் கொள்ளுதலும் மட்டுமே தேவைப்படுகிற நீதிமானாக்கப்படுதல் மற்றும் இலவச கிருபை பற்றிய விலைமதிப்பற்ற சத்தியங்களை அறிவிக்க தேவனுடைய செய்தியாளர் ஒருவரும் தயக்கம் காட்டுவதில்லை.  இருந்தாலும் பலன்கள் பற்றியும் நற்கிரியைகள் பற்றியும் அக்கறை கொண்டுள்ள சுவிசேஷத்தின் வேறொரு பக்கமும் இருக்கிறது.  அது பரிசுத்தமாக்கப்படுதல் என்றழைக்கப்படுகிறது. வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் கீழ்ப்படிதல் மற்றும் கிறிஸ்துவைப் போன்ற நடத்தையைப் பற்றி அது பேசுகிறது.   இன்று வெகு ஜனத்துடன் பிரசித்தம் அடையாத விசுவாசத்தினால் நீதிமானாகுதலின் அம்சத்தைப் பற்றியது. அதற்கு கிரியையும் கீழ்ப்படிதலும் தேவைப்படுகிறது.

             நிராகரிக்கப்பட்டு பரியாசம் பண்ணப்படும் பயத்தினால் இந்த அலங்கரிக்கப்படாத சத்தியத்தை எடுத்துச் சொல்ல சில பிரசங்கியார்கள் பயப்படுகிறார்களா?  மற்ற உண்மையுள்ள காவற்காரர்கள் சட்டதிட்டங்களை போதிப்பவர்கள் மற்றும் தீர்ப்பு செய்பவர்கள் என தாக்கப்படுவதை பார்ப்பதினால் அவர்கள் மிரட்டப்படுகிறார்களா?  உங்களுடைய சொந்த கவனிப்பின் மூலம் இந்த கேள்விக்கு பதிலளிக்கலாம்.  அது இருப்பதுபோலவே சொல்லுவது சுலபமல்ல என்கிறதை தீர்க்கதரிசி யோனவின் உதாரணம் வியப்பூட்டூம் ஒரு ஆதாரமாக இருக்கிறது.  அவனுடைய பணியை ஒருவரும் வரவேற்கமாட்டார்கள்.

             விதவிதமான பாவம் செய்பவர்களுக்கு முன்பாக நின்று இயேசுவின் இறுதி எச்சரிக்கையாக,போ, இனி பாவம் செய்யாதே என்று சொல்லுவது சுலபமான ஒன்றா?  ஒரு தேவனின் தூதுவனாக, அந்த போதை அடிமைகளுக்காகவும், குடிகாரர்களுக்காகவும் மற்றும் வேசிகளுக்காகவும் பரிதாபப்படுவதற்கு மற்றும் பாவத்தின் பழக்கத்தை விட்டுவிடுவதற்கான தேவைகளை பட்டியலிடவும் செய்வது ஒரு பயங்கர சோதனை ஏற்படுகிறது என்பதை நான் உங்களுக்கு சொல்ல முடியும்.  அவர்கள் மீது நாம் மிருதுவாய் இருக்க வேண்டுமென விரும்புகிறோம்.  அவர்கள் அவர்களுடைய வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டுமென்கிற எண்ணத்தைக் கொடுத்து அவர்களை அதைரியப்படுத்த நாம் விரும்புவதில்லை.  குறைந்த பட்சம், உடனே அல்ல சன்மார்க்கத்தை அவர்களுக்கு இன்னும் வசதியான ஒன்றாக செய்ய எப்படியும் கொஞ்சம் மனுஷீக தன்மையை பெற்றுக் கொண்டிருக்க நாம் விரும்புகிறோம்.

 கேள்வி:  எந்த ஒரு அளவிலாகிலும் பாவத்தை தொடர்ந்து பின்பற்றலாம் என்பதை ஏற்றுக்கொள்ளுகிற ஒரு உண்மையான சன்மார்க்கம் இருக்கின்றதா?  முழு வேதாகமத்தில் எங்காகிலும் நாம் செய்யும் பாவத்தின் அளவைக் குறைத்துக் கொண்டால் போதும் என்கின்ற எண்ணத்தை பிரதிபலிக்கும் அறிக்கை காணப்படுகிறதா?  நியாயப்படுத்தும், மாறுதல் அளிக்கும் கிறிஸ்துவின் கிருபை வேண்டுமென்றே அறிந்தே செய்யும் பாவத்தை  மூடிவிடமுடியுமா?  பவுல் அறிவிக்கிறார்,மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது;  நீங்கள்  செய்ய  வேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொண்று விரோதமாயிருக்கிறது (கலாத்தியர் 5:17).

             இந்தக் கூற்று இந்த பொருளின் மீது போதுமான பலமாயில்லை என்றால், தொடர்ந்து பவுலின் வார்த்தைகளை ரோமர் 8:13-ல் வாசியுங்கள்,மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்;  ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.” அதுவே தான்!  நாம் ஒன்றையோ அல்லது வேறொன்றையோ செய்யலாம் ஆனால் ஒரே சமயத்தில் இரண்டையும் செய்ய முடியாது.  நாம் மாம்சத்தின் பிரகாரமாகவோ அல்லது ஆவிக்குரிய பிரகாரமாகவோ வாழலாம்.  பவுல் சொன்னார்.இவைகள் ஒன்றுக்கொன்று முரண்பாடானவைகள்”.  அது போதுமான தெளிவுள்ளதாயிருக்கிறது. இந்த இரண்டு சக்திகளுக்கும் இடையே பங்கிடும் அதிகாரம் இருக்க முடியாது.  சரீரத்தின் செயல்களை நாம் அழிக்க வேண்டும் அல்லது அவைகளை வைத்துக்கொள்ளவேண்டும்.  அது எதுவாக இருக்கும்?  அது இரண்டுமாக இருக்க முடியாது.

             ஆனால் கூட்டத்தைப் பின்பற்றுதல் பற்றிய நம்முடைய விஷயத்துக்கு வருவோம்.  பெரும்பாலானவர்கள் பின்பற்றுவது பொதுவாகவே தவறாகத்தான் இருக்கிறது என்று நாம் கண்டுபிடித்திருக்கிறோம்.  மற்றும் அவர்களுடைய பாவங்களைப்பற்றி சொல்லப்படும்போது அதை அவர்கள் விரும்புகிறதில்லை.  கூட்டத்தார் செய்வது தவறு என்று அவர்களிடம் சொல்லுவது எவ்வளவு கடினம் என்றும் நாம் கவனித்தோம்.  இந்த சரியான இடத்தில் இயேசுவின் வார்த்தைகளை வாசிப்பது பொருத்தமாய் காணப்படுகிறது.  “நீங்கள் மனுஷர் முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்;  மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது (லூக்கா 16:15)

 

மேன்மையாக எண்ணப்படுகிறது என்பதின் அபாயங்கள்

கடைசி வாக்கியம் இன்று நம் எல்லாருக்கும் ஒரு விலைமதிப்பற்ற கோட்பாட்டைப் பெற்றிருக்கிறது.  அந்த நாளின் ஏற்றுக் கொள்ளப்பட்ட குறியீடுகளுக்கு அவர்கள் இணங்கிய காரணத்தால் வெட்கமில்லாமல் அநீதியான வழிகளை நியாயப்படுத்திய பரிசேயர்களுக்கு இதனை கூறினார்.  கிட்டத்தட்ட ஒவ்வொரு கேள்வியின் தவறான பக்கத்தில் தான் பெரும்பான்மையானவர்களின் கருத்து இருக்கும் என்று அவர் தெளிவாக சுட்டுக்காட்டினார்.  பெரும்பான்மையான மக்கள் அழிவிற்கான அகலமான பாதையில் பிரவேசிப்பார்கள் என்று ஏற்கனவே அவர் அறிவித்திருந்தார்.  அவர்களுடைய பார்வைகளும் நடைமுறைகளும் தவறாய் நடப்பவர்களையே, குறிப்பிடுவதாக இருக்கும் இழக்கப்பட்டுப் போகப் போகிறவர்கள்.  இருப்பினும் அது மிகப் பெரிய  எண்ணிக்கையாளர்களால் பெற்றிருக்கப்படும் குறுகலான பாதையில் போகிற வெகுசிலருக்கு எதிர்மறையாக. பெரும்பாலான மனிதர்களிடையேமேன்மையாக எண்ணப்படுகிறவைகள் தேவனுடைய பார்வையில் அருவருப்பாயிருக்கிறது என்பது அதிர்ச்சியூட்டுகின்றதாயிருக்கிறது.

             இன்று சமுதாயத்தில் நடைமுறைப்படுத்தப்படும் கோட்பாடுகளை நாம் பார்க்கும்போது இந்த அறிக்கையின் உண்மைத் தன்மையை காண்பதற்கு கடினமாயிருக்கவில்லை. உடை, உணவுமுறை, பொழுதுபோக்கு அல்லது கல்வியின் தரங்கள் என்று  எதைப்பார்த்தாலும் உலகத்தின் வழிகளுக்கும் தேவனுடைய குறிக்கோள்ளுக்கும் இடையே பெருத்த வித்தியாசம் இருக்கிறது.   சில வேளைகளில் இஸ்ரவேலர்களைப்போல, நாம் நம்மைச் சுற்றி இருக்கும் தேசங்கள்போல இருக்க முடியாத காரணத்தால் நாம் கஷ்டப்படுகிறோம்.  ஆனால் வாழ்வதற்கு தேவன் நமக்கு ஒரு சிறந்த, மேலான தரத்தை வழங்கியிருக்கிறார்.

             வேதாகமம் முழுவதிலும் விவரிக்கப்பட்டிருக்கும் பரிசுத்தததினால் தனிமைபடுத்துகிற தத்துவத்தைப்பற்றி  அநேகர் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள்.  அவருடைய பழங்கால மக்கள் அந்நிய தேசத்தாரோடு ஒன்று கலக்கவும் திருமண பந்தத்தில் ஈடுபடவும் தேவன் ஏன் தடைவிதித்தார்?  புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்கள் கூட அடுத்தடுத்து ஆவிக்குரிய இஸ்ரவேலரை அதைவிட்டுவெளியே வரவும் மற்றும்உலகம் என்றழைக்கப்படும் முறைமையிலிருந்து தனிமைப்படுத்தவும் அழைப்பு விடுத்தனர்.  எப்பொழுதும் உலகத்துக்கு எதிராகவே நிற்க்கவும் வெளியில் வர அழைக்கப்பட்டவர்கள் தாம்சபை என்று அறியப்பட்டிருக்கிறது.  சபை என்கின்ற மூல வார்த்தை இரண்டு கிரேக்க வார்த்தைகளிலிருந்து வருகிறது:  “வெளியில் என்று பொருள்படும் நம மற்றும்அழைக்கப்பட்டோர் என பொருள்படும் மயடடநழஇ அதனுடைய அர்த்தம் - நமடநளயை என்றழைக்கப்படும் சபை, வெளியில் அழைக்கப்பட்டோர்.

             அகலமான பாதையில்அநேகமாய் இருப்பவர்களோடுசிலராய் இருக்கும் பின்னடியார்கள் நெருக்கமான உறவு கொள்ளுவதை தேவன் ஏன் ஏற்றுக் கொள்ளுகிறதில்லை?  பெரும்பாலானவர்கள் ஏன் இழக்கப்பட தெரிந்து கொள்ளுகிறார்கள்?  எப்படி சாத்தான் இந்த பெரும் கும்பலை தன்னுடைய வழியைப் பின்பற்ற வைக்கிறான்?  இந்த கேள்விகளுக்கான பதில்கள் அந்த பெரும்பான்மையினரிடமிருந்து தனிமைப்பட தீர்க்கதரிசிகள் மற்றும் சுவிசேஷ எழுத்தாளர்களின் தொடர்ச்சியான அழைப்புக்கான  விளக்கத்தில் கிடைக்கிறது.

              நாம்  யாருடன் பழகுகிறோமோ, படிப்படியாக அவர்களை ஏற்றுக் கொள்ளுகிறோம் என்கின்ற மனதின் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு சட்டத்தை அடிப்படையாக வைத்திருப்பது அவனுடைய உறவாடுதலின் முறைமையாகும். இதனால் தான் பெரும்பாலானவர்கள்  பிசாசினால் கைப்பற்றப்படுகிறார்கள்: அவர்களுடைய வார்த்தைகள் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றை கேட்பது மற்றும் பார்ப்பதின் சுயநினவில்லாத தாக்கம்  ஒரு காலத்தில் வெறுக்கப்பட்டவைகளை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக் கொள்ளுவதை வளரவிடுகிறது.  இப்படிப்பட்ட வெளிப்பாட்டின் தன்மையின் உறுதியான செல்வாக்கு தார்மீக வளத்தை உடைத்துப்போடுகிறது மற்றும் பாவத்தின் மீது ஒரு சமரச மனப்பான்மைக்கு இறுதியாக வழி நடத்துகிறது.

             மொத்த திட்டமும் அபாயகரமானது ஏனென்றால் புறையேற்றும் முறை மிக நுட்பமாக நடைபெறுகிறது.  எந்த வேளையிலும் அவரைச் சுற்றி இருக்கும் மக்களால் மறைமுகமாக கையாளப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை அறியாமலே போகிறார்.  அபாய அறிவிப்புகள் ஏதுவும் எழுப்பப்படுவதில்லை.  புதிதாக சகித்துக் கொள்ளும் மனநிலைக்கு மனச்சாட்சி மெல்ல மெல்ல பணிந்து போகிறது.  இந்த வழியில் தான் ஆவிக்குரியநிலைக்கற்கள் மாற்றப்படுகின்றன. வேதாகம கோட்பாட்டிலிருந்து பெரும்பாலானவரின் கருத்துக்கு ஏற்படுத்தப்படும் மெதுவான மாற்றம் வழக்கமாக படிப்படியாக மாறும் தன்மையினால் ஒரு குறைந்த பட்சமாக ஆவிக்குரிய போராட்டத்துடன் நடைபெறுகிறது.

             தார்மீக  தரநிலைகள் சுற்றுப்புற சூழ்நிலையின் தலையீட்டின் அபாயகரமான செல்வாக்கின் கீழ் எப்படி கீழ்த்தரமாக மாற்றப்படுகின்றன என்பதை தொடர்ந்து கணக்கெடுப்புகள் வெளிப்படுத்துகின்றன.  பரிசுத்தமில்லாதவர்களுடன் நெருங்கிப் பழகும் போது பரிசுத்தமாயிருக்க வாய்ப்பில்லாமல் போகிறது.  பின்விளைவுகளை சந்திக்காமல் நாம் மனதை தொடர்ந்து அருவருப்புகளுக்கு ஒப்புக்கொடுக்கமுடியாது.  மாம்சிகரமான உலகத்திலிருந்து பிரிந்திருக்க தேவனுடைய ஆவியானவர் ஊக்கப்படுத்துவதில் எந்த தவறும் செய்யவில்லை.  கவர்ச்சியூட்டும் பாவகரமான காட்சிகளைப் பார்க்கவும் மனதை கெடுக்கும் வார்த்தைகளையும் ஒலிகளையும் கேட்கவும் வேண்டுமென்றே தெரிந்து கொள்ளுவதற்கு எதிராக நம்மை பாதுகாக்க ஜெபமும் வேத ஆராய்ச்சியும்கூட தொடர்ந்து பாதுகாக்க முடியாது.

உணர்வுகளை பின் தொடர்தல் தவறான வாதம்

             இறால் மீனின் பாடத்தை நாம் புரிந்து கொள்ளுவது ஏன் மூக்கியமானது என்று நிச்சயமாகவே இப்பொழுது நாம் புரிந்துகொள்ளமுடிகிறது.  கூட்டத்தைப் பின்பற்றி செல்லுவது ஒருபோதும் பாதுகாப்பல்ல.  ஆனால் இப்பொழுது இரண்டாவது ஒரு தவறான கல்லின் அபாயகரமான விளைவுபற்றி நாம் பார்ப்போம்.  நிலைகல்லின் மீது வெளிப்புற சக்திகளால் கொடுக்கப்பட்ட தாக்கத்தினால் ஏற்பட்ட உணர்வுகளை இறால் மீன் நம்பியது.  வெளிப்படையாக அதனுடைய தலையிலிருந்த கல் மாற்றப்பட்டதினால்  இந்த உணர்வுகள் எல்லாம் துல்லியமானதல்ல மற்றும் நம்பத்தகுந்ததுமல்ல.

              நன்றாக கவனியுங்கள்; கூட்டத்தைப் பின் தொடர்வது பாதுகாப்பு அல்ல என்பதைபோலவே உணர்வுகளை பின்பற்றுவதும் பாதுகாப்பு அல்ல.  காந்தத்தின் ஈர்ப்பு  பற்றி இறால் மீன் எவ்வளவு பாதுகாப்பாக உணர்ந்தாலும், அது அதனை தவறாக செயல்படுவதற்கு வழிநடத்தியது மற்றும் அதனை முட்டாளாக்கினது.  நம்மில் ஒவ்வொருவரையும் அதே முறையில் வழி நடத்த சாத்தான் சந்தோஷப்படுவான்.  அவன் தேவனுடைய வார்த்தையைக் காட்டிலும் வேறு ஏதோநிற்கும் கல்லை நம்ப வைத்து பெரும்பான்மையானவர்களுக்கு ஏற்கனவே இதனை செய்திருக்கிறான்.  சக்தி வாய்ந்த காந்தமாகிய வசீகரிக்கும் ஒளிவிடும் சமுதாயத்தைப் பயன்படுத்தி, சாத்தான் சில மனதிற்கு உகந்த ஆனால் ஏமாற்றும் உணர்வுகளை உண்டாக்கியிருக்கிறான்.  அவர்கள் கேலிக்குரிய அளவுக்கு மிஞ்சிய நம்பிக்கையையும் பாதுகாப்பையும் உணரும்  போலியான பாதுகாப்பின் நிலைக்கு லட்சக்கணக்கானோர் கவரப்பட்டிருக்கின்றனர்.  இது ஏறாக்குறைய அவர்கள் மெஸ்மரிசம் செய்யப்பட்டிருப்பதுபோல அவர்களுடைய சொந்த மனதைக்காட்டிலும் வேறு ஏதோ மனதின் சித்தத்துக்குக் கீழ்ப்படிகிறார்கள்.

             சாத்தானின் மெஸ்மரிசம் சக்தியினால் ஏற்படுத்தப்பட்ட தன் நினைவிழ்ந்த நிலையில் தான் உலகத்தின் பெரும்பாலானோர் உண்மையில் செயல்படுகிறார்களா?  அவர்களைப்  பார்க்கின்ற அல்லது கவனிக்கின்ற கிட்டதட்ட எவரிலும் அப்படிப்பட்ட மனதின் நிலையை விஞ்ஞானிகள் உருவாக்கும் திரமையை ஒருவரும்  சந்தேகிக்க முடியாது.  எப்பொழுதும் ஒருவரை மெஸ்மரிசம் நிலைக்கு  இட்டுச் செல்ல சில தொடர்பு புள்ளிகள் உபயோகப்படுத்தப்படுகிறது.  ஒரு ஒளியின் மீதோ அல்லது வேறு ஏதோ பொருளின் மீதோ, பேசப்படும் வார்த்தைகளையும் சேர்த்து கவனம் செலுத்தப்பட வேண்டும்.  இந்த திட்டமிட்ட கவனம் இல்லாமல் ஒருவரும் மெஸ்மரிசம் சக்திக்குள் கொண்டு வரப்பட முடியாது.

            எவரையும் அவனுடைய கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு சாத்தான் இப்படிப்பட்ட கவனத்தைப் பெற வேண்டுமா?  அவனும் எதோ ஒரு தொடர்பு புள்ளியை பயன்படுத்துகிறான், பொதுவாக ஒரு ஈடுபடும் பலவீனம், ஒரு மாம்சத்தின் கவர்ச்சி அல்லது வேறு ஒரு சோதனையின் இடம்.  அவனுடைய கவர்ச்சியூட்டும் கவனத்தை ஈர்க்கும் சாதனங்களுக்கு பார்ப்பதற்கோ அல்லது கேட்பதற்கோ நம்மை நாமே ஒருபோதும் அனுமதிக்காமலிருப்பதே நம்முடைய ஒரே பாதுகாப்பு.

             உணர்வுகள் சத்தியத்தை சோதிக்கும் அளவுகோலாக மாறும்போது ஒரு காரணமில்லாத தற்காப்பு அணுகுமுறை உருவாக்கப்படுகிறது.  பெரும்பாலான உண்மையுள்ள மக்கள் எல்லா கேள்விகளுக்கும் மேலாக அவர்கள் செய்வது சரியே என சமாதானப்படுத்திக் கொள்ளுகிறார்கள் மற்றும் மற்ற ஒவ்வொருவரும் செய்வது முற்றிலும் தவறு என எண்ணுகிறார்கள்.   அகநிலை உணர்வின் பாதுகாப்பான சுகத்தால் அவர்களுக்கு வெளியில் இருக்கிற புறநிலை சத்தியத்தை முன்வைத்து எல்லா வாதத்தையோ அல்லது காரணத்தையோ அவர்கள் எதிர்க்கிறார்கள்.

             அப்படிப்பட்ட உணர்வு அல்லது மனநிலை ஒரு கிறிஸ்தவனுக்கு அபாயகரமானதா?  உண்மையில் சாத்தான் பகுத்தறிவுடன் செயலாற்றும் திறமையை அழிப்பதற்கு அவர்களை பயன்படுத்துகிறான்.  காற்றோட்டம் இல்லாத ஒரு சிறிய அறையில் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள்.  ஒரு எண்ணெய் அடுப்பு கொஞ்ச நேரம் எரிந்து பிராணவாயுவை எடுத்துக்கொள்ளுகிறது.  உங்கள் மூளை சரியாக நினைக்க முடியாதபடி கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் மந்த நிலையை அடைகிறீர்கள்.  நீங்கள் உங்கள் நாற்காலியை விட்டு எழும்ப விரும்பவில்லை.  விசேஷமாக, நீங்கள் எழுந்து போய் ஜன்னலையோ அல்லது கதவையோ திறக்க எண்ணம் வருவதில்லை.  இருப்பினும் எழும்பி செல்லுவதற்கு எதிரான உணர்வு ஒர் அபாயகரமான அடையாளம்;  நீங்கள் உடனே பிராணவாய்வைப் பெற எழும்பி செல்ல வேண்டும் அல்லது நீங்கள் எப்பொழுதுமே மறுபடியும் எழும்ப முடியாது.

             நீங்கள் எப்பொழுதாகிலும் ஜெபம் பண்ண வேண்டாம் அல்லது உங்கள் வேதாகமத்தை படிக்க வேண்டாம் என்கின்ற மனநிலையில் இருந்திருக்கிறீர்களா?  உண்மையில் நீங்கள் இருந்திருக்கிறீர்கள், அப்படியே நானும் இருந்திருக்கிறேன்.  அந்த உணர்வுக்கு நாம் இடம் கொடுக்க வேண்டுமா?  கவனியுங்கள், பிராணவாயு சரீரத்தின் சுவாசமாய் இருக்கிறதுபோல ஜெபம் ஆத்துமாவின் சுவாசமாய் இருக்கிறது. ஜெபம் பண்ண வேண்டாம் மற்றும் வேதாகமம் வாசிக்க வேண்டாம் என்கின்ற மனநிலை வந்தால் சீக்கிரத்திலே அதனைச் செய்யவேண்டும் ஏனென்றால் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை அச்சுறுத்தப்படுகிறது என்பதற்கு அது ஒர் அடையாளாமாயிருக்கிறது.  இந்த வேளையில் தான் நாம் அறைக்குள் சென்று, நமது முழக்காலில் நின்று நாம் ஜெபிக்கும்போது, ஆவிக்குரிய விருப்பங்கள் திரும்ப ஆரம்பிக்கிறது.  வெகு சீக்கிரத்திலே ஜெபம் ஒரு மகிழ்ச்சியான நிறைவேறும் சிறப்புரிமையாக மீட்டெடுக்கப்படுகிறது.  ஆனால் சத்தானின்உணர்வு  கண்ணியின் மெஸ்மெரிச் வசியத்தை அவனுடைய தொடர்பு புள்ளிக்கு எதிராக செயல்படுவதை  நாம் உடைத்தாலொழிய நாம் பெரிய ஆவிக்குரிய ஆபத்தில் சிக்கிக்கொள்ளுகிறோம்.  நாம் செயலாற்ற வேண்டும் அல்லது நம்மீது செயலாற்றாப்படும் என்பதே உண்மையாயிருக்கிறது.

வினையாற்றுதல் அல்லது எதிர்வினையாற்றுதல்

            நம்மில் ஒவ்வொரு தனி நபரும் வினையாற்றும் அல்லது எதிர்வினையாற்றும் ஒரு வாழ்க்கையை முன்வைத்துதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்கின்ற அருமையான உணர்தலுக்கு இது நம்மை கொண்டுவருகிறது.  எப்படிப்பட்ட வாழ்க்கை வாழவேண்டும் என்பதற்கு நாமே சொந்தமான முடிவுகளை சுதந்தரமாக எடுத்துக்கொள்ளுகிறோம் அல்லது மற்றவர்கள் நம்மை எப்படி நடத்துகிறர்கள் என்பதற்கு எதிர்வினையாற்றி வாழ்கிறோம்.  இரண்டாவது பகுதியில் வருவது நம்முடைய வாழ்க்கையின் திசையை வேறு ஒருவர்பால் திருப்புகிறோம் மற்றும் நாம் எப்படிப் பட்டவர்களாக இருக்கவேண்டுமென அவர்களை தீர்மானிக்க விடுகிறோம்.

             நாம் இன்னமும் நம்முடைய உணர்வுகளின் சாத்தானுடைய  கையாளுதல் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை தயவுசெய்து குறித்துக் கொள்ளுங்கள்,  ஆனால் இந்த பகுதியில் அவன் தன்னுடைய கட்டுப்பாட்டை வேறு ஒர் நபர் முலமாக வினையாற்றுகிறான்.  ஒருவரும் மற்றவர்களுடைய நடவடிக்கைகளினால் ஏதோ ஒரு வகையில் ஈர்க்கப்பட்டிருப்பது சகஜமே, ஆனால் மிகப்பெரிய அளவில் பெரும்பாலானவர்கள் உண்மையில் அவர்களைச் சுற்றி நடைபெறும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளுகிறார்கள்.  அவர்களுடைய பெரும்பாலான முக்கியமான முடிவுகள் தேவையான காரணம் அல்லது ஜெபத்தின் மேலில்லாதபடிக்கு, மற்றவர்களால் உந்தப்பட்ட உணர்ச்சியை நம்பி அவர்கள் திடிரென்று ஒரு குறிப்பிட்ட அல்லது எல்லா திசைகளிலும் செல்லுகிறார்கள்.

             இரத்தக்குழாய் சார்ந்த வியாதியினால் பாதிக்கப்பட்டிருந்த டாக்டர் ஹண்டர் என்பவர் ஒரு ஆங்கிலேய இருதய அறுவை சிகிச்சை நிபுணர். அவர் தன் சக நண்பரிடம் விமர்சித்தார்,என்னுடைய வாழ்க்கை என்னைக் கோபப்படுத்தும் ஒரு வீணனுடைய கைகளில் இருக்கிறது”.  அவருடைய சுய-தரிசனம் உண்மை என நிரூபிக்கப்பட்டது.  பிற்பாடு யாரோ ஒருவர் அவரை கோபப்படுத்தும் வகையில் நடத்தினார், அதனால் அவர் மாரடைப்பினால் மரித்து விழுந்தார்.  கல்வியும் சிறந்த அறிவும் நம்முடைய விழுந்துபோன மனுஷீக குணத்தின் முட்டாள்தனத்திலிருந்து நம்மைக் காப்பாற்றாது என்பதற்கு என்ன ஒரு நல்ல எடுத்துக்காட்டு!  டாக்டர் ஹண்டர் அவர்களின் எல்லா மதிப்பு மிகுந்த படிப்பின் பட்டங்கள் அவருடைய சொந்த ஆத்துமாவை கட்டுப்படுத்த முடியவில்லை.  அவர் நேரடியாக வாழ்வதற்கோ அல்லது சாவதற்கோ வேறு ஒரு நபர் முடிவு எடுக்க அனுமதித்தார்.

             ஆனால் டாக்டரின் தவறு தங்கள் நித்தியத்தை உண்மையில் தீர்மானிக்க மற்றவர்களை அனுமதிக்கிறவர்களோடு ஒப்பிடும்போது மிகச் சிறியது தான்.   ஒவ்வொரு நாளும் நம்மைச் சுற்றி நடக்கும் தேவையற்ற நாடக பாணியின் அச்சமூட்டும் நடவடிக்கைகளை நாம் காண்கிறோம், மற்றும் இதில் சபை அங்கத்தினர்கள் பெரும்பாலும் ஈடுபடுகிறார்கள்.  அவர்களை நடத்தப்படும் விதத்தினால் மக்கள் அவர்களுடைய  கொந்தளிப்பான உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் எதிர்வினையாற்றும் விதத்தில் உணர்வுகளை அனுமதிக்கின்றனர், மற்றும் சில மோசமான பாவங்கள் அவர்களுக்கு எதிராக பரலோக புத்தகங்களில் பதிய வைக்கப்பட்டிருக்கின்றன.  அவர்களுடைய சொந்த செயல்பாட்டினை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பதினால் அநேகர் அவர்களுடைய ஆத்துமாக்களை இழந்து போவார்கள்.  உண்மையில், அவர்கள் வினையாற்றுவதே இல்லை; அவர்கள் வெறுமனே எதிர்வினையாற்றுகிறார்கள்.  ஒழுக்கமான கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்வதற்கு தெய்வீக வல்லமையை ஏற்றுக் கொள்ளாதவர்கள் சாத்தானால் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆளப்படுவார்கள் என்று சந்தேகமில்லாமல் நாம் சொல்ல முடியும்.  ஒரு நபர் கூட அப்படிப்பட்ட வலிமையை தனக்குள் பெற்றிருக்கவில்லை. தங்களுடைய சொந்த வாழ்க்கையில்  நண்பர்களிடமிருந்தும் எதிரிகளிடமிருந்தும் வரும் ஆத்திரமூட்டும் செயல்களை  கட்டுப்படுத்தும் திறன் தேவனுடைய கிருபை அவர்களுக்குள்ளே இருப்பதினால் தான் வரும்.     

     

         எதிர்வினையாற்றுவதிலிருந்து பாதுகாப்பதின், மெய்யான இரகசியம், பிலிப்பியருக்கு பவுலின் ஆலோசனையில் காணப்படுகிறது,  “கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது (பிலிப்பியர் 2:5).  இயேசுவின் சிந்தனையை அவன் நினைவில்கொள்வானேயாகில் ஒருவரும் அவனை மிஞ்ச முடியாது.   சிலுவையில் கிறிஸ்து பழிவாங்குதல், எரிச்சல்படுதல் அல்லது பதிலடி கொடுத்தல் போன்ற அடையாளங்களை  கொடுக்கவில்லை.  அவருடைய ஜெபம்,பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றிருந்தது.

             மாம்சத்திலிருக்கும் மனிதருக்கு அப்படிப்பட்ட மனப்பான்மை வர முடியுமா? உண்மையில், எல்லா பிள்ளைகளும் தங்கள் பெற்றோர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் அதே விழுந்துபோன மனுஷீக தன்மையையே இயேசுவும் பெற்றிருந்தார்.  இருப்பினும் ஒரு சின்ன மறுப்புக்கோ அல்லது அவமானத்துக்கோ அவர் ஒருபோதும் எதிர்வினையாற்றாவில்லை.  அவர் காண்பித்த இப்படிப்பட்ட அமைதி அதனை விசுவாசத்தோடு கேட்கும் ஒவ்வொரு தேவனுடைய விசுவாசப் பிள்ளைக்கும் வாக்களிக்கப்பட்டிருக்கிறது.  2 கொரிந்தியர் 10:5-ல் பவுல் அறிவித்தார்,  “தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்”.  இப்படிப்பட்ட கிறிஸ்துவின் எண்ணங்களும் மனதும் ஒருங்கிணைக்கப்படுதல் போராட்டம் மற்றும் ஒப்புக்கொடுத்தல் ஆகிய இரண்டும் இல்லாமல் கிடைக்கப் பெற முடியும் என்று ஒருவரும் நம்ப வேண்டாம்,  பரிசுத்த ஆவியோடு இணைந்து செயல்படும் இரண்டு விஷயங்களால் குணாதிசயம் தெய்வீக மாதிரிக்கு உறுதி செய்யப்படுகிறது - மனிதனின் சித்தம் மற்றும் மனிதனின் செயல்பாடுகள ஆகும்;. தேவன் ஒருபோதும் இந்த இரண்டு விஷயங்களை நமக்காக செய்யமாட்டார்.  ஒவ்வொரு நபரும் பாவத்திலிருந்து திரும்ப முடிவு எடுக்கவேண்டும்.  அதன் பிறகு அவன் பாவத்துக்கு எதிராக செயல்பட துவங்கவேண்டும்.  பரிசுத்த ஆவியின் இயக்கச் செய்யும் வல்லமையினால் இணைந்து செயல்படவில்லையென்றால் இந்த இரண்டு வழிகளில் எதுவுமே பயனுள்ளதாயிருக்காது.  அவனை நடத்தப்படும் விதத்தினால் கோபத்தோடு எதிர்வினை செய்வதை தடுக்க ஒரு மனிதனுக்கும் சக்தி இல்லை, ஆனால் அவர் எதிர்வினையாற்றுவதை தடுக்க தெரிந்துகொள்வதற்கு அவனுக்கு சக்தி இருக்கிறது.  எதிர் வினையாற்றுவதற்கு வரும் உணர்ச்சி வேகத்தை கட்டுப்படுத்தும் திறனும் அவனுக்கு இருக்கிறது.  அந்த இரண்டு வழிகளும் வெற்றியைக் கொண்டு வருகின்றனவா? ஆம், வாக்குத்தத்தம் பண்ணப்பட விடுதலையைப் பெற்றுக்கொள்ளும்போது, அவைகள் உண்மையான விசுவாசத்தின் தெளிவான ஆதாரத்தை அளிக்கின்றன.  மற்றும் அதற்கு பதிலாக விசுவாசம், எந்தப் பாவத்தின் ஈடுப்படுதலுக்கும் எதிராக மிகுந்த வல்லமையோடு தலையிடுவதற்கு தேவனின் எல்லாம் வல்ல கரத்தை பயன்படுத்த வைக்கிறது.

குற்றங்களைக் கையாளுதல்

            விசுவாசத்தோடு, எதிராக குற்றம் செய்பவர்கள் போல் தோன்றும் நபர்கள் பால் ஒரு புரிந்து கொள்ளுதலின் தத்துவத்தை உருவாக்குவதும் மிக முக்கியமானதாக இருக்கிறது.  அவர் ஏன் அப்படி செயல்படுகிறார் என்பதை கருத்தில் கொள்ளுவதற்கு விருப்பமின்மை அல்லது திறமையின்மை தான் பெரும்பாலான பிரச்சனையை உருவாக்கிறது.

            நமக்கு எதிராக குற்றம் செய்தவருக்கு நாம் எப்படி எதிர்வினையாற்றுகிறோம் என்பது குற்றம் இழைத்தவர் பால் நம்முடைய சொந்த அணுகுமுறையே பெருமளவுக்கு தீர்மானிக்கிறது என்பது ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மை. துரதிஷ்டவசமாக ஒருவர் சரீர பிரகாரமான அல்லது வாய் மொழி தாக்குதலின் கீழ் இருக்கையில் சிந்தனையுள்ளவர்களாகவும் நியாயமுள்ளவர்களாகவும் இருப்பது மிகக் கடினமே.  மனக்கிளர்ச்சியின் கோபம் மேற்கொள்ளுகிறது மற்றும் நம்மை பாதுகாத்துக் கொள்ள கண்முடித்தனமாக நடந்து கொள்ளுகிறோம்.  அந்த அதிக பட்ச உணர்ச்சிமிக உணர்வுகளுக்கு மேலாக நம்மைக் கட்டுப்படுத்த முடியுமென்றால் மற்ற நபர்களின் நோக்கங்களைப் பற்றி கேட்கவும் சில கேள்விகளுக்கு பதிலளிக்கவும் நமக்கு அது நேரத்தைக் கொடுக்கும்.  ஒரு சில பகுத்தறியும் தருணங்கள் கூட குற்றம் செய்தவர் தவறான  தகவல்களால் செயலாற்றியிருக்கக் கூடும் மற்றும் அவர் செய்வதில் அவர் உண்மையாயிருந்தார் என்பதை பரிந்துரைக்கும்.  இது நிச்சயமாகவே அவர் மேல் நம்முடைய சொந்த எதிர்வினைகளை சீர்படுத்தக் கூடும்.

             சில வருடங்களுக்கு முன்பாக ஒரு கதையைக் கேட்டேன், அது எனக்கு என்னுடைய ஊழியம் முழுவதும் அடிக்கடி பகிர்ந்து கொள்ளுமளவுக்கு ஒரு தூண்டு கோலாக இருந்திருக்கிறது.  தனிப்பட்ட விதத்தில் மனச்சோர்வு ஏற்படும் போதெல்லாம் வரும் கடினமான நேரங்களில் என்னை சாந்தப்படுத்த இந்தக் கதையை அநேக  நேரங்களில் எனக்கு நானே சொல்லிக் கொள்ள வேண்டியதாயிருந்தது. அது பிலிப்பு எனப் பெயருள்ள பழைய கிரேக்க தத்துவ ஞானியைப் பற்றியது.  அவர் ஒரு நாள் ஒரு நண்பருடன் தெருவில் நடந்து கொண்டிருந்தார்.  பிலிப்புவின் எதிரி ஒருவர் மேலிருந்து ஜன்னல் வழியாக பார்க்க நேரிட்டது.  அவர்கள் இருவரும் அந்தப்பக்கம் சென்றபோது அந்த வயதான ஞானியின் மீது அவர் ஒரு வாளி தண்ணீரை ஊற்றினார்.  இதற்கு எந்தவித எதிர்வினையும் செய்யாதபடி ஒன்றுமே  நடக்காததுபோல தன்னுடைய உரையாடலை பிலிப்பு தொடர்ந்தார்.  அவருடைய நண்பர் நின்று அவரை மோசமாக நடத்தியவரை கண்டு பிடித்து தண்டனை கொடுக்க முன் வந்தார்.  பிலிப்பு தனக்கு யாரும் ஒரு தவரும் இழைக்கவில்லை என்று மெதுவாகப் பதிலளித்தார்.  நண்பர் ஆச்சரியத்துடன் எச்சரித்தார்.ஆனால் அந்த மனிதன் உங்கள் மீது தண்ணீரை ஊற்றினார்.  நீங்கள் முழுவதுமாக நனைந்திருக்கிறீர்கள்”.  “இல்லை என்று தத்துவஞானி பதிலளித்தார்,நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.  அவர் என்மீது தண்ணீரை ஊற்றவில்லை.  நான் யாரென்று அவர் நினைத்தாரோ அவர் மீது தான் அதை ஊற்றினார்”.

             எப்படிப்பட்ட ஒரு மனப்பான்மை!  மற்றவர்களுடைய உணர்வுகளுக்கு இப்படிப்பட்ட தன்னலமற்ற மதிப்பு கொடுக்கும் ஆவியை ஒவ்வொருவரும் பெற்றிருப்பாறென்றால் என்ன வித்தியாசமான ஒரு உலகமாக அது இருந்திருக்கும்.  ஒவ்வொருவரும் பிலிப்புவின் தத்துவத்தை பின்பற்றியிருந்தால் பெரும்பாலான தனிப்பட்ட ஒடுக்கப்படுதல், இனப்பிரச்சனைகள் மற்றும் சர்வதேச சர்ச்சைகள் யாவும் கனப்பொழுதில்  தீர்ந்திருக்கும்.

             கொஞ்ச காலத்துக்கு முன்பாக ஒரு இளம் தாயாரை ஞானஸ்நானத்துக்காக ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தேன்.  சபையின் கோட்பாடுகளை கடைசியாக மறுப்பார்வையிட்டு சொல்ல நான் சென்றபோது அவர் திடீரென கண்ணீர்விட்டழுதாள்.நான் ஞானஸ்நானம் எடுக்க முடியாது,” அவள் அழுதாள்.நேற்று இரவு என்னுடைய அம்மா என்னை சந்தித்து நான் என்னுடைய சகோதரனை வெறுக்கிறதினால் ஞானஸ்நானம் எடுப்பது சரியல்ல என்று சொன்னார்கள்.” என்னுடைய மெதுவான கேள்வியினால், கேரல் முதன்முறையாக தன்னுடைய சகோதரனை இவ்வளவு வருடங்களாக வெறுத்தது ஏன் என்று பகிர்ந்து கொள்ள சம்மதித்தாள்.  அந்த கசப்பான ஆவியின் பின்னால் இருந்த காரணங்களை அவளுடைய அம்மா கூட அறியவில்லை. அவள் ஏழு வயதுடையவளாயிருந்தபோது அவளுடைய வாலிப சகோதரன் அவளை பாலியல் பலாத்காரம் செய்ய ஆரம்பித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று பயமுறுத்தி வைத்திருந்தான்.  அந்தக் கொடூரமான சகோதரனிடம் எட்டு வருடங்களாக நினைத்துப் பார்க்கமுடியாத வன்கொடுமையை அனுபவித்தாள்.

             கேரலுடைய துண்டுகின்ற கோபத்தையும் அவளுடைய சகோதரன் மீது இருந்த வெறுப்பையும் என்னால் உண்மையில் புரிந்துகொள்ளமுடிந்தது.  அவளுடைய மனிதநேயமற்ற மற்றும் இழிவுபடுத்தப்பட்ட நியாயமான உணர்வினால் நான் மிகவும் தொடப்பட்டேன்.  அந்த ஆழமான உளரீதியான வலிகள் மற்றும் வடுக்கள் மீது அவளுக்கிருந்த உணர்வுகளை மாற்றுவதற்கு நான் எப்படி எதையும் கூற மூடியும்?  அப்பொழுது வயதான கிரேக்க தத்துவ ஞானியின் கதையை நான் நினைவுகூர்ந்தேன்.  அதை அவளிடம் பகிர்ந்து கொண்ட பிறகு அந்த  இழிவான சகோதரன் பற்றி அதிக தகவல்களைக் கேட்டேன்.  அவன் ஒரு கிறிஸ்தவனாக எப்பொழுதாவது இருந்தானா?  கேரல் சொன்னாள்இல்லை”.அவன் ஒரு கிறிஸ்தவனுக்கு எதிரானவனாக இருந்தான்.  அவன் எப்பொழுதும் பிசாசுகளின்  கட்டுப்பாட்டுக்குள் இருந்தான் மற்றும் அவன் இன்னுமும் அப்படியே இருக்கிறான்”.

             நான் சொன்னேன்,கேரல், உன்னுடைய சகோதரன் தேவனுடைய கிருபையின் வல்லமையை அவனுடைய வாழ்நாளில் அறிந்து கொள்ளவே இல்லை என்பது சோகமான ஒன்றல்லவா? அவனுடைய வாழ்கையில் தேவனில்லாமல் அவன் மூலமாக சாத்தான் செய்கின்ற செயல்களை  எதிர்க்க அவனுக்கு வாய்ப்பே இல்லை.  அவன் பிசாசினால் கையாளப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டான்.  அவன் கர்த்தராகிய இயேசுவை  அறிந்திருந்தானேயானால், அப்படி ஒருபோதும் நடந்திருக்கமாட்டான்.  அவன் உன்னை அன்போடும் மரியாதையோடும் நடத்தியிருப்பான்.  அவன் இப்பொழுதும் ஒரு கிறிஸ்தவனல்ல என்று நீ சொல்லுகிறாய். அவன் இன்னமும் திமையானவற்றைச் செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறான் மற்றும் எதிர்வினையாற்றா அவனுக்கு சக்தியில்லை. அவன் மட்டும் இயேசுவைப் பற்றி அறிந்துகொண்டு அவரை ஏற்றுக்கொள்ளுவானேயாகில் எவ்வளவு பெரிய வித்தியாசம் காணப்பட்டிருந்திருக்கும். நீ கிறிஸ்துவிடம் கண்டு கொண்ட அதே சந்தோஷத்தை அவனும் பெற்றுக் கொண்டிருந்திருப்பான்.  கேரல், அவனை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் தீய சக்தியை விட்டு அவன்  வெளியே வர நாம் அவனுக்காக ஜெபம் பண்ணவேண்டும்.

             நான் பேசும்போது மறுபடியும் கண்ணீர் வழிய ஆரம்பித்தது, ஆனால் இந்தமுறை அது துக்கத்தின் கண்ணீர் மற்றும் ஒரு இழக்கப்பட்ட வெறுத்தொதுக்குவதைக் காட்டிலும் பரிதாபப்பட மற்றும் ஜெபிக்கப்பட வேண்டிய சகோதரனுக்கான கண்ணீர். சாத்தானின் சக்தியில் அவனுடைய பரிதாபகரமான பிடியிலிருந்து அவளுடைய சகோதரன் மீட்க தேவனிடத்தில் ஜெபிக்க கேரல் அவளுடைய முழங்கால்களை ஊன்றி ஜெபிக்க ஆரம்பித்துவிட்டாள்.  அவளுடைய தனிப்பட்ட வெறுப்பு அந்த கண்ணீரினால் கழுவப்பட்டது மற்றும் மறுநாள் பழைய கேரல் தண்ணீர் கல்லறையில் புதைக்கப்படும் சந்தோஷத்தை நான் பெற்றேன்.  அவளுடைய சகோதரன் அவளை புரிந்து கொள்ளவும் இல்லை - உண்மையில் இல்லை என்பதை அவள் உணர ஆரம்பித்த போது அவளுடைய வாழ்க்கை மாற்றப்பட்டது.  அவன் அவளை ஒரு நபராக முக்கியப்படுத்தியிருந்தால், அவன் அவளை அப்படி நடத்தியிருக்கமாட்டான்.  அவனுடைய புரிந்துகொள்ளும் தன்மை பாவத்தினால் சிதைக்கப்பட்டிருந்தது.

 

            வாழ்க்கையின் பாதையில் நம்மை மோசமாக நடத்தும் மக்களைப் பற்றி இதுபோலவே நாம் நம்ப முடியுமா?  அவர்கள் செய்வது என்ன என்பதை அவர்கள் முழுமையுமாக புரிந்திருந்தால் அவர்கள் இப்படி நடந்து கொள்ளுவார்களா?  நம்மைப்பற்றிய முழுமையான தகவல், நம்முடைய உணர்வுகள் மற்றும் நாம் உண்மையில் யார் என்பதையெல்லாம் அவர்கள் உண்மையில் அறிந்திருக்கவில்லை என்று நாம் நினைத்துக் கொள்ள முடியாதா?  சந்தேகத்தின் பலனை அவர்களுக்குக் கொடுத்து இப்படி நாம் சொல்லுவோம் எனில்,அவர்கள் மெயாக எனக்குச் செய்யவில்லை.  அவர்கள் நான் யாரென்று நினைத்தார்களோ அந்த நபருக்குத்தான் அதைச் செய்தார்கள்”.  அப்பொழுது நாம் அவர்களுக்காக விசனப்படலாம் ஏனென்றால் அவர்களுக்கு இதைவிட அதிகமாக எதையும் அறிந்து கொள்ளவில்லை. மற்றும் எல்லாவற்றைக் காட்டிலும் சிறந்த ஒன்று, நாம் அவர்களுக்காக ஜெபிக்க ஆரம்பிக்கலாம்.

 

            அதனால் தலைகளில் கற்களை வைத்திருக்கும் இறால் மீனால் கற்றுக்கொடுக்கப்பட்ட இரண்டு பெரும் படிப்பினைகளுக்கு நாம் மறுபடியும் கொண்டு வரப்பட்டிருக்கிறோம்.  நம்முடைய அகநிலை உணர்வுகளால் அல்லது பெருபான்மையினர் என்ன செய்கிறார்கள் என்பதினால் எது சரி எது தவறு என நம்மால் அளவிடமுடியாது.  நம்முடைய நிற்கும் கல் தேவனுடைய வார்த்தையாக மட்டுமே இருக்கவேண்டும்.  கூட்டத்தைப் பொருட்படுத்தாமல், நம்முடைய மனநிலைகள் அல்லது உணர்வுகள் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், மக்கள் நம்மை நடத்தும் விதத்தைப் பொருட்படுத்தாமல், நாம் நம்முடைய வாழ்க்கை முறைகளை தெய்வீக நியமத்தின்படி தெரிந்தெடுக்கவேண்டும்.  பவுலைப் போல நாம் சொல்லவேண்டும்,கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும் பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்;  நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன் (கலாத்தியர் 2:20).