Lesson 14
1.
1. தேவன் உண்மையில் தனிப்பட்டவிதத்தில் என்மேல் கவனம் வைக்கிறாரா?
“என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன்” - ஆதி. 16:13; “கர்த்தவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர். என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர் … என் வழிகளெல்லாம் உமக்குத்தெரியும். என் நாவில் சொல் பிறவாததற்குமுன்னே, இதோ, கர்த்தவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்” - சங்கீதம் 139:1-4; “உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது” - லூக்கா 12:7.
பதில்: ஆமாம். நாம் நம்மை அறிந்திருக்கிறதைவிடவும் நம் ஒவ்வொருவரையும் தேவன் மேம்பட்ட விதத்தில் அறிகிறார். அவர் ஒவ்வொருவருக்கும் தனிக்கவனம் கொடுத்து, நாம் செய்கிறவைகளை கவனமாக கவனிக்கிறார். ஒரு வார்த்தையும், நினைவும் செயலும் அவருக்கு மறைவாயில்லை.

2.1. பரிசுத்த வேதாகமத்தில் காணப்படுகிறதைப்போன்று அவருக்கு கீழ்ப்படியாதபோதும் அவருடைய இராஜ்யத்தில் நான் இரட்சிக்கப்படமுடியுமா?
“பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தவே! கர்த்தவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை” - மத்தேயு 7:21; “நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள்” - மத்தேயு 19:17; “தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி” - எபி. 5:9.
பதில்: முடியாது. இக்காரியத்தில் வேதவாக்கியங்கள் மிகத் தெளிவாக இருக்கின்றன. தேவனுடைய கற்பனைகளுக்கு கீழ்ப்படிகிறவர்களுக்கே இரட்சிப்பும் தேவனுடைய இராஜ்யமும், வெறுமனே விசுவாசிகள் என்று சொல்லிகொள்ளுகிறவர்களுக்கோ அல்லது சபை உறுப்பினர்களுக்கோ அல்லது ஞானமுழுக்கு எடுத்தவர்களுக்கோ தேவன் நித்திய ஜீவனை வாக்களிக்கவில்லை. மாறாக, வேதவாக்கியங்களில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிற அவருடைய சித்தத்தைச் செய்கிறவர்களுக்கே அதை வாக்குக்கொடுக்கிறார். இந்த கீழ்ப்படிதல் கிறிஸ்துவின் மூலமாகவே சாத்தியம் (அப். 4:12).

3.1. கீழ்ப்படியவேண்டுமென்று தேவன் ஏன் கேட்கிறார்? அது அவசியமா?
“ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்” - மத்தேயு 7:14; “எனக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனோ, தன் ஆத்துமாவைச் சேதப்படுத்துகிறான்; என்னை வெறுக்கிறவர்கள் யாவரும் மரணத்தை விரும்புகிறார்கள் என்று சொல்லுகிறது” - நீதி. 8:36; “நம்மை அவர் உயிரோடே காப்பதற்கும், எந்நாளும் நன்றாயிருக்கிறதற்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து இந்த எல்லாக் கட்டளைகளின்படியேயும் செய்யக் கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டார்” - உபா. 6:24.
பதில்: தேவனுடைய சாயலுக்கும், அவ்விதம் அவருடைய இராஜ்யத்திற்கும் நம்மை நடத்துகிற ஒரே ஒரு இடுக்கமான வாசலே இருக்கிறது. அனைத்து தெருக்களும் ஒரே இடத்திற்குச் சென்று சேருவதில்லை. அந்த இராஜ்யத்தை எவ்விதம் பாதுகாப்பாக சென்றடையலாம் என்கிற முழுமையான போதனைகளோடும் எச்சரிப்புகளோடும் அறிவிப்புகளோடும் வேதாகமம் ஒரு வரை படமாகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறது. அதன் எந்தவொரு பகுதியை அலட்சியப் படுத்தினாலும் அது தேவனிடமிருந்தும் அவருடைய இராஜ்யத்திலிருந்தும் நம்மை தூர நடத்தும். தேவனுடைய பிரபஞ்சம் சட்டமும் ஒழுங்குமுள்ளது. இயற்கையான சன்மார்க்க மற்றும் ஆவிக்குரிய சட்டங்களெல்லாம் அதில் சம்மந்தப்பட்டிருக்கின்றன. இதில் எந்த ஒரு பிரமாணத்தை மீறினாலும் அதற்குரிய குறிப்பான பலன்கள் உண்டு. ஒருவேளை வேதாகமம் கொடுக்கப்பட்டிருக்கவில்லையெனினும், மக்கள் விரைவாகவோ அல்லது சற்று தாமதமாகவோ (தங்களுடைய போராட்டங்களாலும் ஏச்சரிப்புகளை), வேதாகமத்தின் மாபெரும் கொள்கைகள் இருக்கிறது என்றும் அவைகள் உண்மை என்றும் கண்டுகொள்வார்கள். இந்த வேதாகம கொள்கைகள் நம்முடைய நரம்பு மண்டலத்திலும் நம்முடைய சுரப்பிகளிலும் மனங்களிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அவைகள் நெகிழப்படும்போது சிதறின நரம்புகளும் வியாதிகளும், அனைத்து விதமான வருத்தங்களுமே விளையும். எனவே நாம் ஏற்றுக்கொள்ளலாம் அல்லது நிராகரித்துவிடலாம் என்பதுபோன்ற விளைவுகளில்லாத வெறும் ஆலோசனைகள் அல்ல வேதாகம வார்த்தைகள். அப்படிப்பட் செயலின் விளைவுகள் என்னவென்பதையும் அவைகளை எவ்விதம் தவிர்க்கலாம் என்பதையுங்கூட வேதாகமம் சொல்லுகிறது. ஒரு நபர் தனக்கு விருப்பமானபடி வாழ்ந்தாலும் தேவ சாயலை பெற்றுக்கொள்வார் என்பது, வீட்டிற்கான செயல்திட்ட நகல் இல்லாமல் வீட்டைக்கட்டுகிறவன் எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் வீட்டைக் கட்டிவிடுவேன் என்று சொல்வதைப்போன்றதே. எனவேதான் பரிசுத்த வேதவாக்கியங்களின் செயல்திட்ட நகலைப் பின்பற்றும்படி தேவன் நம்மிடம் கேட்கிறார். அவரைப்போல மாறுவதற்கும் அவருடைய இராஜ்யத்தில் பங்கடைவதற்கும் உண்மையான மகிழ்ச்சிக்கும் வேறு ஒரு வழியும் கிடையாது.
4.
1. தேவன் ஏன் கீழ்ப்படியாமையைத் தொடர அனுமதித்தார்? ஏன் பாவிகளையும் பாவத்தையும் இப்போதே அழித்துவிடக்கூடாது?
“இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும், தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூடக் கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்” - யூதா 1:14,15; “முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் தேவனை அறிக்கைபண்ணும் என்று என் ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன்” - ரோமர் 14:11.
பதில்: தேவனுடைய நீதியையும், அன்பையும், இரக்கத்தையும் குறித்து அனைவரும் முடிவாக முழுமையாக உணர்த்தப்படும்வரைக்கும் கீழ்ப்படியாமையையும் பாவத்தையும் தொடரும்படி தேவன் அனுமதிக்கிறார். கீழ்ப்படிதலை கோரினதில் தம்முடைய சித்தத்தை அவர் நம்மேல் தினிக்க பார்க்கவில்லை; மாறாக, நாமே நம்மைக் காயப்படுத்தி அழிப்பதிலிருந்து நம்மைக் காப்பாற்றவே அதைக் கோரினார் என்பதை முடிவாக அனைவரும் உணருவார்கள். அதிக குறைகாணும் கடினமடைந்த பாவியுங்கூட, ஆண்டவருடைய அன்பை உணர்ந்து அவர் நீதியுள்ளவர் என்று அறிக்கையிடும்வரையிலும் பாவப்பிரச்சனை அடங்காது. சிலரை உணர்த்தும்படியாக பெரும்பாலும் மிகப் பெரிய பேரழிவுகளும் அல்லது ஆபத்துகளுங்கூட வரும். என்றாலும் பாவ வாழ்க்கையின் பயங்கரமான விளைவுகள் தேவன் நீதியுள்ளவரென்றும் அவர் செய்தது சரியே என்றும் அனைவரையும் உணர்த்தும். அதன்பின்னரே பாவமும் கீழ்ப்படியாமையும் ஆண்டவரால் பாதுகாப்பாக முடிவிற்குக் கொண்டுவரப்பட முடியும்.
5.
1. தேவன் உண்மையில் கீழ்ப்படியாதவர்களை அழிப்பாரா?
“பாவஞ்செய்த தூதர்களைத் தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து” - 2 பேதுரு 2:4; “கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார்” - சங்கீதம் 145:20; “தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தாகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு” - 2 தெசலோனிக்கேயர் 1:7.
பதில்: அதைக்குறித்த கேள்விக்கே இடமில்லை. பிசாசும் அவனுடைய தூதர்களும் உட்பட பாவம் செய்து கீழ்ப்படியாதவர்கள் அனைவரும் அழிக்கப் படுவார்கள். இது உண்மையாயிருக்க, சரியா தவறா என்கிறதைக்குறித்த அனைத்து குழப்பங்களையும் தெளிவாக்க இதுவே காலம். மக்கள் தங்கள் மடத்தனமான சலனங்களையும், நான் என்னும் அகங்கார உணர்வுகளையும் விட்டுவிட்டு, தேவனுடைய மாபெரும் புத்தகத்திற்கு கவனம் கொடுப்பது நல்லது. அதிக காலம் இல்லை. எனவே இப்போதே செய்வது நல்லது! (பாவத்தையும் பாவிகளையும் அழிப்பதைக்குறித்து பாடம் 7லும், இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறித்து பாடம் 8லும் பார்க்கவும்).
6.
1. தேவனுடைய அனைத்து சட்டங்களுக்கும் நான் கீழ்ப்படிய விரும்புகிறேன். எதையும் விட்டுவிடவில்லை என்பதை நான் எப்படி அறியலாம்?
“கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்;” - மத்தேயு 7:7; “நீ … சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு” - 2 தீமோ. 2:15; “அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ … என்று அறிந்துகொள்ளுவான்” - யோவான் 7:17; “இருளில் நீங்கள் அகப்படாதபடிக்கு ஒளி உங்களோடிருக்கையில் நடவுங்கள்;” - யோவான் 12:35; “அவர்கள் என் சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்” - சங்கீதம் 18:44.
பதில்: சந்தேகத்திற்கு தேவன் எந்த இடத்தையும் வைக்கவில்லை. நான் 1. நடத்துதலுக்காக ஊக்கமாக ஜெபித்து, 2. தேவனுடைய வார்த்தையை உண்மையாக ஆராய்ந்து, 3. உண்மையைக் கண்டுகொண்டதும் அதை பின்பற்றத் தீர்மானிக்கும்போது, தவறிலிருந்து என்னைப் பாதுகாத்து, சகல சத்தியத்திற்குள்ளும் பாதுகாப்பாக நடத்துவதாக அவர் வாக்குக் கொடுக்கிறார்.

7.1. எனக்கு ஒருபோதும் தெளிவாக்கப்பட்டிராத தேவனுடைய சத்தியங்களுக்கு கீழ்ப்படியாமல் இருந்ததினால் தேவன் என்னைக் குற்றவாளியாக பார்ப்பாரா?
“நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது; நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலை நிற்கிறது” - யோவான் 9:41; “ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்” - யாக். 4:17; “என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்; நீ அறிவை வெறுத்தாய், ஆகையால் … நானும் உன்னை வெறுத்து விடுவேன்” - ஓசியா 4:6; “தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்;” - மத்தேயு 7:7.
பதில்: ஒருசில குறிப்பான வேதாகம சத்தியங்களை கற்றுக் கொள்ள எனக்கு சந்தர்ப்பம் கிடைக்காமலிருந்தால், தேவன் அதற்கு என்னிடம் கணக்குக் கேட்கமாட்டார். ஆனால் நான் பெற்றுக்கொண்ட பெற்றுக்கொள்ளக் கூடிய அனைத்து வெளிச்சத்திற்கும் (சரியானவை குறித்த அறிவிற்கும்) அவருக்கு கணக்குக்கொடுக்க வேண்டும் என்று வேதாகமம் போதிக்கிறது. படிக்கவும், தேடவும், கற்றுக்கொள்ளவும், கேட்கவும் மறுக்கிற அநேகமக்கள் “அறிவை வெறுத்ததினால்” தேவனால் அழிக்கப்படுவார்கள். இப்படிப்பட்ட மிகவும் முக்கியமான காரியங்களில் நெருப்புக்கோழிபை்போன்று விளையாடுவது மிகவும் ஆபத்தானது. சத்தியத்தை ஜாக்கிரதையோடு தேடவேண்டியது நம் கடமை.
8.
1. ஆனால் ஒவ்வோரு குறிப்பிலும் ஒவ்வொரு சிறிய விளக்கத்திலுங்கூட கீழ்ப்படியவேண்டுமென்று ஆண்டவர் மிகவும் குறிப்பாயிருப்பதில்லை. அப்படித்தானே?
“உத்தமமாய் என்னைப் பின்பற்றின … காலேபும் … யோசுவாவும் தவிர, எகிப்திலிருந்து வந்தவர்களில் … ஒருவரும் என்னை உத்தமமாய்ப் பின்பற்றாதபடியால், அவர்கள் நான் … ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காண்பதில்லை” - எண். 32:11,12; “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்” - மத்தேயு 4:4; “நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்” - யோவான் 15:14.
பதில்: அப்படியில்லை. அவர் குறிப்பாக இருக்கிறார். பழைய ஏற்பாட்டில் தேவனுடைய மக்கள் இதை கடினமான அனுபவங்களினால் கற்றுக்கொண்டார்கள். 6,03,550 பேர் எகிப்தைவிட்டு வாக்குத்தத்தமான கானான் தேசத்தை நோக்கிப் புறப்பட்டார்கள். இந்தக் கூட்டத்தில் இரண்டு பேர் மாத்திரமே (காலேபும் யோசுவாவும்) முழுமையாக ஆண்டவரை பின்பற்றி கானானிற்குள் பிரவேசித்தார்கள். மற்ற 6,03,548 பேரும் வனாந்தரத்தில் மடிந்துபோனார்கள். நாம் வேதாகமத்தின் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைக்கவேண்டுமென்று இயேசு கூறுகிறார். அதில் எந்த ஒரு வார்த்தையும் மிக அதிகமானதோ அல்லது எந்த ஒரு வார்த்தையும் மிகக் குறைவானதோ அல்ல. அனைத்தும் முக்கியமானதே.

9.1. புதிய சத்தியத்தை கண்டுகொள்ளும்போது, அதைப் பெற்றுக்கொள்ளும் முன்பாக அனைத்து இடையூறுகளும் கடந்துபோக காத்திருக்கிறேன். இது மிகச் சிறந்ததுதானே?
“இருளில் நீங்கள் அகப்படாதபடிக்கு ஒளி உங்களோடிருக்கையில் நடவுங்கள்” - யோவான் 12:35; “உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி, நான் தாமதியாமல் தீவிரித்தேன்” - சங்கீதம் 119:60; “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்” - மத்தேயு 6:33; “அவர்கள் என் சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்” - சங்கீதம் 18:44.
பதில்: இல்லை. வேதாகம சத்தியத்தில் ஒருமுறை நீங்கள் தெளிவடையும்போது அதற்குப்பின் காத்திருப்பது சிறப்பானது அல்ல. சொல்லப்போனால், தள்ளிப்போடுவதுதான் பிசாசுடைய மிகவும் ஆபத்தான கண்ணி. காத்திருப்பதில் எந்த ஆபத்தும் இல்லை என்பதுபோலத் தோன்றலாம். ஆனால் ஒரு நபர் வெளிச்சம் கிடைத்ததும் உடனடியாக செயல்படவில்லையென்றால் அந்த வெளிச்சம் வேகமாக இருண்டுபோய்விடும். கீழ்ப்படிவதற்காக நாம் எழும்பி நிற்கும்வரையிலும் இடையூறுகள் அகற்றப்படுவதில்லை. மாறாக, அவைகள் பொதுவாக பெரிதாகிக்கொண்டே போகும். மனிதன் தேவனிடம்: உங்கள் பாதையைத் திறவுங்கள்; நான் முன்செல்லுகிறேன் என்று சொல்லுகிறான். ஆனால் ஆண்டவருடைய பாதை அதற்கு எதிரானது. அவர்: நீ முன் செல்; நான் உனக்கு பாதையைத் திறக்கிறேன் என்கிறார்.

10.1. ஆனால் முழுமையான கீழ்ப்படிதல் மனிதனுக்கு சாத்தியமில்லைதானே?
“தேவனாலே எல்லாம் கூடும்” - மத்தேயு 19:26; “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” - பிலிப்பிர் 4:13; “கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி … தேவனுக்கு ஸ்தோத்திரம்” - 2 கொரிந்தியர் 2:14; “ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த களிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” - யோவான் 15:5; “நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள்” - ஏசாயா 1:19.
பதில்: நம்மில் ஒருவரும் நம்முடைய பெலத்தினால் கீழ்ப்படிய முடியாது. ஆனால் கிறிஸ்துவின் உதவியினால் கீழ்ப்படியமுடியும்; கீழ்ப்படியவும்வேண்டும். தேவனுடைய கோரிக்கைகளை காரணமற்றவைகளாகக் காண்பிக்கும்படியாக, கீழப்படிதல் கூடாதகாரியம் என்கிற பொய்யை சாத்தான் கண்டுபிடித்தான்.

11.1. தெரிந்தும் மனதார கீழ்ப்படியாமலிருக்கிற ஒரு நபருக்கு என்ன சம்பவிக்கும்?
“சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்” - எபிரேயர் 10:26,27; “இருளில் நீங்கள் அகப்படாதபடிக்கு ஒளி உங்களோடிருக்கையில் நடவுங்கள்; இருளில் நடக்கிறவன் தான் போகிற இடம் இன்னதென்று அறியான்” - யோவான் 12:35.
பதில்: வேதாகமம் சந்தேகத்திற்கு இடம் வைக்கவில்லை. இதற்கான பதில் மிகத்தெளிவானதும் அதிர்ச்சியூட்டுகிறதுமாயிருக்கிறது; ஆனால் உண்மை. ஒரு நபர் அறிந்தே வெளிச்சத்தை நிராகரித்து கீழப்படியாமையில் தொடரும்போது, அந்த வெளிச்சம் படிப்படியாக மறைந்துவிடும். பின்னர் அவர் முழுமையான இருட்டில் விட்டுவிடப்படுவார். சத்தியத்தை நிராகரிக்கும் ஒரு நபர் வல்லமையான வஞ்சகத்தைப் பெற்றுக்கொண்டு பொய்யை சத்தியம் என்று நம்பிவார் (2 தெசலோனிக்கேயர் 2:11). இது நடக்கும்போது அந்த நேரத்திலேயே அவர் இரட்சிப்பை இழந்தவரே.

12.1. அன்புதான் கீழ்ப்படிதலைவிட மிக முக்கியம் என்று நான் நினைத்தேன்! சாிதானே?
“இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான் … என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான்” - யோவான் 14:23,24; “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல” - 1 யோவான் 5:3.
பதில்: இல்லவே இல்லை. தேவன்மேல் காட்டும் உண்மையான அன்பு கீழ்ப்படிதல் இல்லாமல் இருக்கமுடியாது என்று வேதாகமம் போதிக்கிறது. எந்த ஒரு நபரும் அன்பில்லாமல் உண்மையாக கீழ்ப்படிய முடியாது. எந்த ஒரு குழந்தையும் தன் பெற்றோரை நேசிக்காதபோது அவர்களுக்கு முழுமையாக கீழ்ப்படியாது. அது கீழ்ப்படியாதபோது பெற்றோரை நேசிக்கவும் செய்யாது. மெய்யான அன்பும் கீழ்ப்படிதலும் ஒட்டிப்பிறந்த இரட்டைப் பிள்ளைகளைப்போல. பிரிக்கப்படுமானால் மரித்துப்போகும்.

13.1. ஆனால் கிறிஸ்துவிற்குள் பெற்ற சுதந்திரம் என்னை விடுதலையாக்கிற்று என்று நினைத்தேன். அப்படிதானே?
“நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் … சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.” “பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான்” - யோவான் 8:31.32.34; “முன்னே நீங்கள் பாவத்திற்கு அடிமையளாயிருந்தும், இப்பொழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம். பாவத்தினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள்” - ரோமர் 6:17.18; “நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன். நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால், விசாலத்திலே நடப்பேன்” - சங்கீதம் 119:44,45.
பதில்: இல்லை. உண்மையான சுதந்திரம் கீழ்ப்படிதலின் வழியாகவே கிடைக்கிறது. அதாவது தேவனுடைய பிரமாணத்தை மீறுகிற பாவத்திலிருந்து (1 யோவான் 3:4; ரோமர் 618). அல்லது கீழ்ப்படியாமையிலிருந்து சுதந்திரம். சட்டத்திற்குக் கீழ்ப்படிகிற குடிமகன் சுதந்திரம் பெற்றிருக்கிறான். கீழ்ப்படியாதவர்களே பிடிக்கப்பட்டு தங்கள் சுதந்திரத்தை இழக்கிறார்கள். கீழ்ப்படிதலில்லாத சுதந்திரம் காற்றிலே மிதக்கிற பலூனைப்போல அல்லது ஓட்டுனர் இல்லாத வாகனத்தைப்போல இருக்கிறது. அது குழப்பத்திற்கும் அராஜகத்திற்குமே நடத்தும். உண்மையான சுதந்திரம் கீழ்ப்படியாமையிலிருந்து பெறுகிற சுதந்திரமே. கீழ்ப்படியாமை எப்போதும் ஒரு நபரை காயப்படுத்தி, பிசாசின் கொடுமையான அடிமைத்தனத்திற்கு நடத்துகிறது.

14.1. தேவன் குறிப்பிட்ட காரியத்தைக் கோரும்போது, ஏன் அதைக் கேட்கிறார் என்பதை புரிந்துகொள்ளாதபோதும் நான் கீழ்ப்படியவேண்டுமா?
“கர்த்தருடைய வார்த்தைக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது உமக்கு நன்மையாயிருக்கும், உம்முடைய ஆத்துமா பிழைக்கும்” - எரேமியா 38:20; “தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்” - நீதிமொழிகள் 28:26; “மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்” - சங்கீதம் 118:8; “பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது” - ஏசாயா 55:9; “அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்! கர்த்தருடைய சிந்தையை அறிந்தவன் யார்? - ரோமர் 11:33,34; “அவர்கள் அறியாத வழியிலே நடத்தி” - ஏசாயா 42:16; “ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்” - சங்கீதம் 16:11.
பதில்: நிச்சயமாக! நாம் புரிந்துகொள்ளாத காரியத்தையும் செய்யும்படி நம்மை கேட்கிற தெய்வம் ஞானமுள்ளவர் என்று நாம் அவருக்கு மதிப்பு கொடுக்கவேண்டும். நல்ல பிள்ளைகள் தங்களுக்குக் கொடுக்கப்படும் கட்டளைகளை தெளிவாக காரணப்படுத்த முடியாவிட்டாலும், தங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படிகின்றனர். எளிமையான விசுவாசமும் தேவன்மேல் வைக்கும் நம்பிக்கையும், நமக்கு மிக சிறந்ததை அவர் அறிவார் என்றும், தவறான எந்த பாதையிலும் நம்மை நடத்தமாட்டார் என்றும் நம்பவே நடத்தும். அவருடைய ஞானத்தை முழுமையாக புரிந்துகொள்ளாத போதும் நம்முடைய அறியாமையில் தேவனுடைய தலைமையை கேள்வி கேட்பது நமது மதியீனமே.

15.1. எல்லாக் கீழ்ப்படியாமைக்கும் பின்னால் இருப்பது யார்? ஏன்?
“பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான்;” “இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் … இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல” - 1 யோவான் 3:8,10; “உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு” - வெளி. 12:9.
பதில்: பிசாசே அதற்குக் காரணம். அனைத்து கீழ்ப்படியாமையும் பாவம் என்றும், பாவம் வருத்தத்தையும், வேதனையையும், தேவனிடமிருந்து பிரிவையும், முடிவாக அழிவையும் கொண்டுவரும் என்றும் அவன் அறிவான். கசப்பான வெறுப்போடு ஒவ்வொரு நபரையும் கீழ்ப்படியாமைக்குள் நடத்த அவன் விரக்தியோடு முயற்சிக்கிறான். உங்களிடமும் அவ்விதம் முயற்சிக்கிறான். சத்தியத்தை ஏற்றுக்கொண்டு நீங்கள் தீர்மானிக்கவேண்டும், ஒன்று கீழ்ப்படியாதிருந்து அழிந்துபோகலாம், அல்லது கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவருக்குக் கீழ்ப்படியலாம். கீழ்ப்படிதலைக்குறித்த உங்கள் தீர்மானம் கிறிஸ்துவைக்குறித்த ஒரு தீர்மானம். சத்தியத்திலிருந்து அவரைப் பிரிக்க முடியாது. ஏனெனில், “நானே … சத்தியமும்” (யோவான் 14:6) என்று அவர் சொல்லுகிறார். “யாரை சேவீப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்” - யோசுவா 24:15.

16.1. மிக உன்னதமான அற்புதத்தைக்குறித்த என்ன மகிமையான வாக்குத்தத்தத்தை வேதாகமம் அவருடைய பிள்ளைகளுக்குக் கொடுக்கிறது?
“உங்களில் நற்கரியைதை் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள் பரியந்தம் முடிய நடத்திவருவார்” - பிலிப்பியர் 1:5.
பதில்: தேவனுக்கு தோத்திரம். புதிய பிறப்பிற்குள் நம்மைக் கொண்டுவர ஒரு அற்புதத்தைச் செய்வதைப்போலவே, (அவரை மகிழ்ச்சியோடு பின்பற்றும்போது) அவருடைய இராஜ்யத்திற்குள் பாதுகாப்பாக நுழையும்வரையிலும் தேவையான அற்புதங்களை நம்முடைய வாழ்க்கையில் அவர் தொடர்ந்து செய்கிறார்.
17.1. நீங்கள் இப்போதே இயேசுவை அன்போடும், கீழ்ப்படிதலோடும் முழுமையாக அவரை பின்பற்ற ஆயத்தமா?
உங்கள் பதில்: ________________________________________________________________________________________
சிந்தனைக் கேள்விகள்
1. இராட்சிக்கப்பட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிற எவராகிலும் இரட்சிப்பை இழந்துபோவர்களா?
பதில்: ஆமாம். தீர்க்கதரிசனம் சொல்லி, பிசாசுகளை துரத்தி, கிறிஸ்துவின் நதமத்தினால் அற்புதங்களை நடப்பித்த அநேகர் இரட்சிக்கப்பட்டதாக நினைத்துக்கொண்டிருக்கும்போது அதை இழந்துபோவார்களென்று மத்தேயு 7:21-23 சொல்லுகிறது. அவர்கள் “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி” (வசனம் 21) செய்யாததாலேயே அதை இழந்துபோவார்களென்று கிறிஸ்து கூறினார். தேவனுக்குக் கீழ்ப்படிய மறுக்கிறவர்கள் பொய்யை நம்புவதிலேயே முடிவடைவார்கள் (2 தெசலோனிக்கேயர் 2:11,12). இவ்விதம் இரட்சிக்கப்பட்டதாக நினைத்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் உண்மையில் இரட்சிப்பை இழந்திருப்பார்கள்.
2. ஒரே ஒரு சரியான பாதையே இருப்பதால் தவறிலிருக்கும்போது தாங்கள் சரியாக இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிற உண்மையான மக்களுக்கு என்ன சம்பவிக்கும்?
பதில்: அவர்களை மெய்யான வழிக்கு தேவன் அழைப்பார் என்று வேதாகமம் சொல்லுகிறது. அவருடைய உண்மையான ஆடுகள் அவருடைய சத்தத்தைக் கேட்டு அவருக்குப் பின்செல்லும் (யோவான் 10:16.27).
3. உண்மையாக இருப்பதும் வைராக்கியமாக இருப்பதும் போதாதா?
பதில்: போதாது, சரியானவரகளாகவும இருக்கவேண்டும். பவுல் அவருடைய மனமாறுதலுக்குமுன்பு கிறிஸ்தவர்களை உபத்திரவப்படுத்தினபோது உண்மையானவராகவும் வைராக்கியம் கொண்டவராகவும் இருந்தார். ஆனால் தவறில் இருந்தார். (அப்போஸ்தலர் 22:3,4; 26:9-11)
4. தேவனால் அனைவரையும் ஒரே நேரத்தில் பார்க்கமுடியும் என்பது அறிவியலில் சாத்தியமில்லையல்லவா?
பதில்: அவ்வாறே நோவாவின் வெள்ளமும் சாத்தியமற்றதுதான். (அதற்குமுன் மழையே பெய்ததில்லை! ஆதியாகமம் 2:5,6). ஆனாலும் அது சம்பவித்தது. “தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி” (ரோமர் 1:22) என்று சொல்லப்பட்டிருக்கிற கூட்டத்திற்கு கீழ்ப்படியாமைக்கான காரணமான அறிவியலைக் காட்டுவது விருப்பமான பொழுதுபோக்கு.
5. வெளிச்சத்தைப் பெற்றிராத மக்களுக்கு என்ன சம்பவிக்கும்?
பதில்: அனைவரும் கொஞ்சமாவது வெளிச்சத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்று வேதாகமம் சொல்லுகிறது. “உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி” - யோவான் 1:9. ஒவ்வொருவரும் அவருக்குக் கிடைத்த வெளிச்சத்தை எவ்விதம் பின்பற்றினார்கள் என்பதைப் பொறுத்து நியாயந்தீர்க்கப்படுவார்கள். ரோமர் 2:14,15 ன்படி புறஜாதிகள்கூட வெளிச்சம் பெற்று பிரமாணத்தை பின்பற்றுகிறார்கள்.
6. கீழ்ப்படியவேண்டுமென்றால் எனக்கு அடையாளம் கொடுக்கும்படி நான் தேவனிடம் கேட்டிருக்கிறேன். இது பாதுகாப்பானதா?
பதில்: இல்லை. பாதுகாப்பானது அல்ல. “இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்” (மத்தேயு 12:39) என்று இயேசு கூறினார். அனைத்து போதனைகளும் வேதாகமத்தோடு ஒப்பிடப்பட்டு பரிசோதிக்கப்படவேண்டும். தேவனுடைய வார்த்தைக்கு ஒத்ததாக இருக்குமானால் பின்பற்றப்படவேண்டும். (ஏசாயா 8:20; 2 தீமோத்தேயு 2:15). “அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள்” (லூக்கா 16:31) என்று இயேசு சொன்னதைப்போல, வேதாகமத்தின் வெளிப்படையான போதனைகளை ஏற்றுக்கொள்ளாத மக்கள் ஒரு அடையாளத்தினால் மன உணர்த்துதல் அடையமாட்டார்கள்.
7. ஒரு நபர் சத்தியத்தை அதிகம் தெரிந்தபிறகு ஒரே ஒரு பாவத்தை மனதார செய்தாலும் அவர் இரட்சிப்பை இழந்துபோனவரே என்று எபிரெயர் 10:26,27 காண்பிப்பதாகத் தோன்றுகிறது. இது சரியா?
பதிலு்: இல்லை. எவரும் அப்படிப்பட்ட பாவத்தை அறிக்கைசெய்து மன்னிப்பு பெறலாம். ஒரு தவறான செய்கையையோ அல்லது பாவத்தையோ குறித்து வேதாகமம் இங்கே பேசவில்லை. மாறாக, துணிகரமாக பாவத்திலே நிலைநிற்பதையும், அதிகம் தெரியும்போது கிறிஸ்துவிற்கு ஒப்படைக்க மறுப்பதையுமே குறிக்கிறது. அப்படிப்பட்ட செயல் பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தி (எபேசியர் 4:30), அவன் உணர்ச்சியற்று (எபேசியர் 4:19) இரட்சிப்பை இழந்துவிடும் வரையிலும் அவனை கடினப்படுத்துகிறது. “துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும், அவைகள் என்னை ஆண்டுகொள்ள ஒட்டாதிரும்; அப்பொழுது நான் உத்தமனாகி, பெரும்பாதகத்துக்கு நீங்கலாயிருப்பேன்” (சங்கீதம் 19:13) என்று வேதாகமம் சொல்லுகிறது.
8. வேதாகமத்தைப் புரிந்துகொள்ள ஒரு நபர் படித்திருக்கவேண்டாமா?
பதில்: இல்லை. மிகவும் பேதையும்கூட ஆண்டவருக்கு தன்னை ஒப்புவிக்கும்போது அதை புரிந்துகொள்ளலாம் (சங்கீதம் 19:7; 119:130; மத்தேயு 11:25.
கேள்விகள்
1) இரட்சிக்கப்படுகிறவர்கள்: (1)
( ) கிறிஸ்துவின் நாமத்தில் பிசாசுகளைத் துரத்துவார்கள்.
( ) கிறிஸ்துவை நேசிப்பதாக உரிமைபாராட்டுவார்கள்.
( ) ஆண்டவரை ஏற்றுக்கொண்டு அவருக்குக் கீழ்ப்படிவார்கள்.
2) முழு சத்தியத்தையும் பெற்றுக்கொள்ள எனக்கு நிச்சயம்கொடுக்கிற 3 காரியங்கள்: (3)
( ) என்னுடைய மனநல மருத்துவரிடம் கேட்கவேண்டும்.
( ) வெளிச்சத்திற்காக ஜெபிக்கவேண்டும்.
( ) என் ஊழியக்காரர் சொல்லுவதை செய்யவேண்டும்.
( ) ஆலயத்தில் தாராளமான காணிக்கை கொடுக்கவேண்டும்.
( ) என்னை நானே தண்டித்துக் கொள்ளவேண்டும்.
( ) சிறந்த கல்வியைப் பெறவேண்டும்.
( ) ஆண்டவரிடத்தில் அடையாளம் கேட்கவேண்டும்.
( ) வேதாகமத்தை ஆராயவேண்டும்.
( ) நான் புரிந்துகொண்ட சத்தியத்தை இப்போது பின்பற்றவேண்டும்.
3) தேவனுக்கு நான் எதற்கு கணக்குக்கொடுக்கவேண்டும்: (1)
( ) என் போதகரின் ஆலோசனைபடி நடப்பதற்கு.
( ) என் பெற்றோரின் அடிச்சுவடை பின்பற்றுவதற்கு.
( ) நான் பெற்றுக்கொண்ட பெறக்கூடிய வெளிச்சத்திற்கு.
4) புது சத்தியத்தை நான் கண்டுகொள்ளும்போது: (1)
( ) அதை நிராகரிக்கவேண்டும்.
( ) உந்தப்பட்டதாக உணரும்வரையிலும் அதை ஏற்றுக்கொள்ள காத்திருக்கவேண்டும்.
( ) உடனடியாக ஏற்றுக்கொண்டு கீழ்ப்படியவேண்டும்.
5) ஆண்டவருடைய பிரமாணங்களுக்கு முழுமையாக கீழ்ப்படிவது: (1)
( ) எந்த சூழ்நிலையிலும் சாத்தியமில்லை.
( ) பிசாசினால் உண்டானது.
( ) கிறிஸ்துவினால் மாத்திரமே முடியும்.
6) மனதார கீழ்ப்படியாமல் இருப்பது: (1)
( ) இருளிற்கும் நித்திய அழிவிற்கும் நடத்துகிறது.
( ) வைராக்கியமான சபை ஊழியக்காரருக்கு சரியே.
( ) நாம் பிடிவாதமாக இருந்தால் ஆண்டவர் காணாதவர் போல இருந்துவிடுவார்.
7) ஆண்டவர்மேலிருக்கிற மெய்யான அன்பு: (1)
( ) கீழ்ப்படிதலைக் காட்டிலும் மேலானது.
( ) கீழ்ப்படிதலை அவசியமாக்குகிறது.
( ) சந்தோஷமாக அவருக்குக் கீழ்ப்படிய நடத்துகிறது.
8) மெய்யான கிறிஸ்தவ சுதந்திரம் என்பது: (1)
( ) எல்லாவற்றிலும் எனக்கு விருப்பமானபடி செய்யும் உரிமை.
( ) தேவனுக்குக் கீழ்ப்படியாமலிருக்கும் உரிமை.
( ) கீழ்ப்படியாமையிலிருந்தும் பிசாசிற்கு அடிமையாக இருப்பதிலிருந்தும் கிடைக்கும் விடுதலை.
9) ஒரு சத்தியம் எனக்குத் தெளிவானாலும் அதற்குக் கீழ்ப்படியவேண்டுமென்று தேவன் ஏன் கேட்கிறார் என்கிற காரணத்தை நான் புரிந்துகொள்ளாதபோது: (1)
( ) காரணம் தெளிவாகும்வரை காத்திருக்கவேண்டும்.
( ) அந்த சத்தியத்தை நிராகரிக்கவேண்டும்.
( ) ஏற்றுக்கொண்டு தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியவேண்டும்.
10) எல்லாக் கீழ்ப்படியாமைக்கும் யார் உண்மையில் பொறுப்பாளி? (1)
( ) அரசாங்கம்.
( ) என்னை தவறாக வளர்த்திய என் பெற்றோர்கள்.
( ) பிசாசு.
11) கீழ்ப்படிதல் ஏன் அவசியம்? (1)
( ) ஏனெனில் தேவன் என்னைவிடவும் பெரியவராயிருப்பதால் அவருக்கு நான் பயப்படுகிறேன்.
( ) தேவனுக்கு கோபமூட்டுவதைத் தவிர்க்க.
( ) நான் ஆண்டவரை நேசித்து, கிறிஸ்தவ குணங்களுக்கான அவருடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிய விரும்புவதால்.
12) தேவன் ஏன் கீழ்ப்படியாதவர்களை உடனே அழிப்பதில்லை? (1)
( ) அப்படிச் செய்ய அவருக்கு பயம்.
( ) துன்மார்க்கம் பெருகுவதை அவர் இரசிக்கிறார்.
( ) அவருடைய அன்பையும் நீதியையும் குறித்து அனைவரும் முழுமையாக உணரும்வரை அவர் காத்திருக்கிறார்.
13) இயேசுவை ஏற்றுக்கொண்டு அவரைப் பின்பற்றுபவர்களுக்கு அவர் மறுபிறப்பின் அனுபவத்தைக் கொடுப்பது மட்டுமல்லாமல், அவருடைய இராஜ்யத்தில் அவர்கள் பாதுகாக்கப்படும்வரைக்கும் அவர்களுடைய வாழ்க்கைக்குத் தேவையான அற்புதங்களை அவர் தொடர்ந்து செய்கிறார் என்பது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறதா?
( ) ஆம்.
( ) இல்லை.


