உங்களுக்கு அன்பானவர்களை நோகடித்து உங்கள் மனச்சாட்சியை காளப்படுத்தினதில் சோர்வடைந்திருக்கிறீர்களா? உங்களுடைய கடந்தகாலத் தவறுகளைக்குறித்த வருத்தத்தில் தொடர்ந்து வாழ்கிறீர்களா? ஒரு முழுக்கு எடுத்து உள்ளும் புறமும் சுத்தமாக வேண்டும் என்ற ஆசை எப்போதாவது உங்களுக்கு இருந்திருக்கிறதா? அப்படியானால், சுத்தமாக முடியும் என்ற மாபெரும் செய்தி ஒன்று இருக்கிறது. உங்கள் பாவங்களை முற்றிலும் கழுவி, உங்கள் குணமேம்பாட்டிற்கு வல்லமையைத் தரக்கூடிய திட்டம் ஒன்றை தேவன் வைத்திருக்கிறார். கூடாத்தாகத் தோன்றுகிறதா? அப்படி இல்லை! “ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்” (ரோமர் 6:4) என்று வேதாகமம் கூறுகிறது. கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போது பழைய வாழ்க்கை மரிக்க, நம் பாவங்களை எல்லாம் மறந்துவிடுவதாக ஆண்டவர் வாக்குக்கொடுக்கிறார். அதுமட்டுமல்ல, பாவகுணங்கள் ஒவ்வொன்றையும் மேற்கொள்ளவும் அவரால் உங்களுக்கு உதவமுடியும். வேதாகமத்தில் சிலுவை 28 முறை குறிப்பிடப்பட்டிருக்க, ஞானஸ்நானம் 97 முறை குறிப்பிடப்பட்டிருக்கிறது. உயிரோட்டமுள்ள ஒரு புதிய வாழ்க்கையையும், பாவம் நிறைந்த கடந்தகாலம் புதைக்கப்பட்டு என்றைக்குமாக மறக்கப்படுகிறதையும் குறிப்பதினால் முக்கியமானதாகவே இருக்கவேண்டும்; இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. நம்பக் கடினமான இந்தப் பொருளைக் குறித்த வேதாகம ஆச்சரிய உண்மைகளை படியுங்கள். உங்களில் மாற்றத்தைக் காண்பீர்கள்!
- ஞானஸ்நானம் உண்மையில் அவசியமா?
“விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்” – மாற்கு 16:16.
பதில்: ஆமாம், அவசியமே! இதைக்காட்டிலும் வேறு எந்த வார்த்தைகள் அதைத் தெளிவாக்கமுடியும்!
- ஆனால் சிலுவையில் தொங்கின அந்தக் கள்ளன் ஞானஸ்நானம் எடுக்கவில்லையே, நான் ஏன் எடுக்கவேண்டும்?
“நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூறுகிறார்” – சங்கீதம் 103:14.
பதில்: ஞானஸ்நானம் எடுக்காதது மாத்திரமல்ல, எசேக்கியேல் 33:15-ல் ஆண்டவர் குறிப்பாக கூறியுள்ளபடி, தான் கொள்ளையிட்ட பொருட்களை அவன் திருப்பிக் செலுத்தவும் இல்லை. நம்மால் செய்யக்கூடிய காரியங்களுக்கு மாத்திரமே நாம் கணக்குக்கொடுக்கவேண்டும் என்று தேவன் நியமித்திருக்கிறார். “மண்ணாக” இருக்கிற நம்முடைய எல்லைகளை அவர் அறிந்திருக்கிறார். சரீரப்பிரகாரமாக செய்யக்கூடாத ஒன்றை அவர் கோருகிறதில்லை. ஒருவேளை அந்தக் கள்ளன் சிலுவையிலிருந்து இறங்கி வந்திருப்பானானால் உடனடியாக ஞானஸ்நானம் எடுத்திருப்பான். வேதாகமத்தில் இந்த சட்டத்திற்கு விதிவிலக்காயிருக்கிற ஒரே எடுத்துக்காட்டு இந்த சம்பவம் மாத்திரமே. ஞானஸ்நானம் எடுக்கும் சாத்தியம் பெற்றிருக்கிற ஒவ்வொரு நபரும் கட்டாயம் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும்.
- அநேக சடங்குகள் ஞானஸ்நானம் என்று அழைக்கப்படுகின்றன. ஒருநபர் உண்மையாகவும் ஊக்கமாகவும் இருக்கும்போது, இதில் எதாவது ஒன்றைச் செய்தால் போதுமா?
“ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும்” – எபேசியர் 4:5.
பதில்: அப்படியில்லை. மெய்யான ஞானஸ்நானம் ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. ஞானஸ்நானம் என்று அழைக்கப்படுகிற மற்ற அனைத்தும் போலிகளே.
குறிப்பு: பிசாசினுடைய பஃபே திட்டம்: “உனக்கு விருப்பமானதை தெரிந்துகொள்; எவ்விதம் ஞானஸ்நானம் எடுக்கிறாய் என்பதல்ல, எடுக்கும் ஆவியே முக்கியம்” என்று சொல்லுகிறது. ஆனால் வேதாகமம்: “ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும்” (எபேசியர் 4:5) என்று கூறுகிறது. கூடவே, “கர்த்தருடைய வார்த்தைக்குச் செவிகொடும்” (எரேமியா 38:20) என்றும் சொல்லுகிறது.
- இயேசு எவ்விதம் ஞானஸ்நானம் எடுத்தார்?
“இயேசு….. யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார். அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, வானம் திறக்கப்பட்டதையும் …… கண்டார்” – மாற்கு 1:9,10.
பதில்: இயேசு முழுகி ஞானஸ்நானம் எடுத்தார். இந்தச் சடங்கின் பின்னர் அவர்: “ஜலத்திலிருந்து கரையேறினவுடனே” என்பதை கவனியுங்கள். இநேகர் விசுவாசிப்பதைப்போல யோர்தானின் கரையில் அல்ல, யோர்தான் நதியில் இயேசு ஞதனஸ்நானம் எடுத்தார். தண்ணீர் போதுமான அளவு ஆழுமாக இருக்கவேண்டும் என்பதற்காக, ஞானஸ்நானம் கொடுப்பதற்கு “தண்ணீர் மிகுதியாயிருந்த” (யோவான் 3:23) இடத்தையே யோவான் எப்போதும் தெரிந்துகொண்டான். இயேசுவின் மாதிரியை பின்பற்றும்படியாக வேதாகமம் நமக்குக் கட்டளை கொடுக்கிறது. (1 பேதுரு 2:21). முழுக்கு ஞானஸ்நானத்தை விடுத்து வேறு எந்த முறையான ஞானஸ்நானமும் இந்தக் கட்டளையை மீறுவதற்குச் சமம். ஞானஸ்நானம் என்கிற வார்த்தை “பேப்டிசோ” என்கிற கிரேக்க வார்த்தையிலிருந்து வந்திருக்கிறது. இதன் பொருள் “மூழ்கு” அல்லது “மூழ்கவை” என்பதாகும். நீரின் உபயோகத்தை விவரிக்கும் 8 வெவ்வேறு கிரேக்க வார்த்தைகள் புதிய ஏற்பாட்டில் இருக்கின்றன. தெளிப்பதையோ, ஊற்றுவதையோ, மூழ்கவைப்பதையோ குறிக்கிற இந்த வெவ்வேறு வார்த்தைகளில் ஞானஸ்நானத்தைக் குறிக்க மூழ்கு என்கிற ஒரே ஒரு வார்த்தையே உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது.
- ஆனால் இயேசுவோ அல்லது அப்போஸ்தலரோ ஞாஸ்நான முறையை மாற்றவில்லையா?
“அப்பொழுது பிலிப்பும் மந்திரியும் ஆகிய இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள்; பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானங்கொடுத்தான். அவர்கள் தண்ணீரிலிருந்து கரையேறினபொழுது, கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பைக் கொண்டுபோய்விட்டார்” – அப்போஸ்தலர் 8:38,39.
பதில்: இல்லை. ஆதி சபையின் தலைவராக இருந்த பிலிப்பு எத்தியோப்பிவின் பொக்கிஷதார்ருக்கு யோவான் கொடுத்ததைப்போன்றே முழுக்கு ஞானஸ்நானம் கொடுத்ததை கவனியுங்கள். அப்போஸ்தலனாகிய பவுல், இயேசு போதித்ததற்கு எதிர்மாறானவைகளைப் போதிக்கிறவன் “சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்” (கலா. 1:8) என்று எச்சரிக்கிறார். எவ்வளவுதான் பக்தியான மனிதனாக இருந்தாலும், தேவனுடைய வார்த்தைகளையோ கட்டளைகளையோ மாற்ற எவரும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை.
- இயேசுவும் சீடர்களும் முழுக்கு ஞானஸ்நானம் எடுத்திருக்க, ஞானஸ்நானம் என்று அழைக்கப்படுகிற இனறைய முறைகளை அறிமுகப்படுத்தினது யார்?
“மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள்” – மத்தேயு 15:9.
பதில்: தவறாக நடத்தப்பட்ட மனிதர்கள் தேவனுடைய வார்த்தைக்கு நேரெதிராக மற்ற ஞானஸ்நான முறைகளை அறிமுகப்படுத்தினர். “நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்?” “உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள்” (மத்தேயு 15:3,6) என்று இயேசு கேட்கிறார். மனிதனுடைய போதனையை பின்பற்றும் ஆராதனை வீணானது. இதைக்குறித்து யோசியுங்கள். நூற்றாண்டுகள் நெடுக சத்தியம் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டிருந்தபோது, சடங்கான ஞானஸ்நானத்தின் பரிசுத்த முறையும் மாற்றப்பட்டு அற்பமானதாக்கப்பட்டது. “பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்கு நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று” (யூதா 1:3) வேதாகமம் ஆலோசனை கூறுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை.
- ஞானஸ்நானத்திற்கு ஆயத்தப்பட ஒரு நபர் என்ன செய்யவேண்டும்?
பதில்:
அ. தேவனுடைய கோரிக்கைகளைக் கற்றுக்கொடுள்ளவேண்டும். “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்” – மத்தேயு 28:19,20.
ஆ. தேவனுடைய வார்த்தைகளின் சத்தியத்தை நம்பவேண்டும். “விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்” – மாற்கு 16:16.
இ. தன்னுடைய பாவங்களுக்காக மனம்வருந்தி, அவைகளிலிருந்து திரும்பி, மாறவேண்டும். “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்.” – அப்போஸ்தலர் 2:38 “உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்” – அப்போஸ்தலர் 3:20.
- ஞானஸ்நானத்தின் பொருளென்ன?
“மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம். ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம். நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்” – ரோமர் 6:4-6.
பதில்: கிறிஸ்துவின் மரணத்தையும், அடக்கத்தையும், உயிர்த்தெழுதலையும் பின்பற்றுகிற விசுவாசியை அது காட்டுகிறது. அதனுடைய அடையாளம் பூரணமானதும், மிக ஆழமான பொருளுடையதுமாயிருக்கிறது. ஞானஸ்நானத்தில் கண்கள் மூடப்பட்டு, கைகள் மடக்கப்பட்டு, மரணத்திலிருப்பதைப்போல மூச்சும் நிறுத்தப்படுகிறது. பின்னர் தண்ணீருள் அடக்கம்பண்ணப்படுவதும், கிறிஸ்துவிற்குள்ளான புதிய வாழ்க்கைக்காக நீரான கல்லறையிலிருந்து உயிர்த்து எழும்பி வருவதும் தொடர்கிறது. தண்ணீரிலிருந்து எழுப்பப்படும்போது கண்கள் திறக்கப்பட, உயிர்தெழுதலின் அடையாளமாக அந்த நபர் மீண்டும் சுவாசிப்பதில் தொடர்ந்து, தன் நண்பர்களோடு பழகுகிறார். கிறிஸ்தவத்திற்கும் மற்ற அனைத்து மதங்களுக்குமிடையே இருக்கிற மாபெரும் வேறுபாடு கிறிஸ்துவின் மரணமும், அடக்கமும், உயிர்த்தெழுதலுமே. இம்மூன்றின்வழியாக நமக்காக செய்ய விரும்பியிருக்கிற அனைத்தையும் செய்ய தேவனால் முடிகிறது. இந்த மூன்று முக்கியமான செய்கைகளை காலங்களின் முடிவுவரையிலும் கிறிஸ்தவர்களின் மனதில் பதியவைக்க ஞானமுழுக்கை நினைவுச்சின்னமாக ஆண்டவர் ஏற்படுத்தினார். மற்ற ஞானஸ்நான முறைகளில் மரணத்தையும் அடக்கம்பண்ணப்படுதலையும் உயிர்த்தெழுதலையுங்குறித்த அடையாளங்கள் இல்லை. – ரோமர் 6:4-6 – வரையிலான வசனங்களை முழுக்கு ஞானஸ்நானம் மாத்திரமே பூர்த்தி செய்கிறது.
- ஒரு மனிதன் மீண்டும் தவறி விழமாட்டான் எனும் நிச்சயம் பெறும்வரை ஞானஸ்நானம் எடுக்கக்கூடாதுதானே?
“என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்” – 1 யோவான் 2:1.
பதில்: இனிமேல் விழவேமாட்டேன் என்கிற நிச்சயத்தைப் பெறும் வரை ஒரு குழந்தை நடக்க முயற்சிக்கக்கூடாது என்று சொல்லுவதைப்போல இது இருக்கிறது. ஒரு கிறிஸ்தவன், கிறிஸ்துவிற்குள் புதிதாகப் பிறந்த குழந்தையைப் போன்றவன். எனவே தான் இந்த மனமாறும் அனுபவம் புதிய பிறப்பு என்று அழைக்கப்படுகிறது. தீயதன்மைகொண்ட, பாவம் நிறைந்த கடந்த காலம் தேவனுடைய பிள்ளைக்கு அதற்குப்பின் இருக்காது. ஒரு நபருடைய பாவம் நிறைந்த கடந்த காலம் மனமாறுதலில் தேவனால் மன்னிக்கப்பட்டு, மறக்கப்படுகிறது. அந்த பழைய வாழ்க்கை அடக்கம் பண்ணப்படுவதையே ஞானஸ்நானம் அடையாளப்படுத்துகிறது. நாம் பெரியவர்களைப்போல அல்ல, குழந்தைகளைப்போல கிறிஸ்தவ வாழ்க்கையை துவங்குகிறோம். நாம் சந்திக்கிற தவறுகளையும் விழுகைகளையும் அல்ல, நம்முடைய வாழ்க்கையின் குணங்களையும் போக்கையும் வைத்துதான் தேவன் நம்மை நியாயந்தீர்க்கிறார்.
- மனந்திரும்பின பாவிக்கு ஏன் ஞானஸ்நானம் அவசரமான ஒரு காரியம்?
“இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஞானஸ்நானம்பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு என்றான்” – அப்போஸ்தலர் 22:16.
பதில்: மனந்திரும்பின பாவி மன்னிக்கப்பட்டு இயேசுவால் சுத்தப்படுத்தப்பட்டான் என்பதற்கும் (1 யோவான்1:9), அவனுடைய துரோகம் நிறைந்த கடந்தகாலம் அவனுக்குப் பின்னாக இருக்கிறது என்பதற்குமான ஒரு சாட்சியே தவிர மனந்திரும்புதலுக்குப்பின், அவனுடைய குற்றத்தைச் சுட்டிக்காட்டுகிற சாட்சியல்ல ஞானஸ்நானம். இன்று ஆண்களும் பெண்களும் பாவ குற்றத்தின் பாரத்தினால் போராடிக்கொண்டிருக்கிறார்கள். மன்னிக்கப்பட்டு துய்மையடையவேண்டும் என்ற உணர்வினால் எவ்வளவு தூரமென்றாலும் போக விரும்புமளவு, இப்படிப்பட்ட பாரம் மனித் தனித்தன்மைக்கு பெரிய அழிவை ஏற்படுத்துகிறது. மனிதருக்கு ஊக்கமாக உதவிசெய்யும் மனநல மருத்துவர்களிடம் அநேகர் நடத்தப்படுகிறார்கள். ஆனால் மெய்யான உதவி, “எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு” (மத்தேயு 8:3) என்கிற இயேசுவிடமே இருக்கிறது. அவர் நம்மைச் சுத்தப்படுத்தி, நமக்குள் இருக்கும் பழைய பாவ இயல்பையும் சிலுவையில் அறைகிறார்.
நமது பழைய பாவவாழ்க்கை அடக்கம் பண்ணப்படுவதை தண்ணீரில் மூழ்குதல் காட்டுகிறது. நமக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கிற மிகவும் உன்னத ஏற்பாட்டை அனைவர்முன்பும் எடுத்துக் காட்டுவதால், இந்தச் சடங்கு மிகவும் முக்கியமான ஒன்று.
மனம்மாறும்போது தேவன்
அ. நம்முடைய கடந்த காலத்தை மன்னித்து மறக்கிறார்.
ஆ. நம்மை அற்புதமாக புதிய ஆவிக்குரிய மனிதனாக மாற்றுகிறார்.
இ. நம்மை அவருடைய சொந்த குமாரர்களாகவும் குமாரத்திகளாகவும் சுவிகாரம் எடுக்கிறார். இந்த அற்புதங்களையெல்லாம் தனக்குள் நடப்பித்ததற்காக இயேசுவிற்கு பொதுமக்கள்முன் நன்றி செலுத்துகிற சந்தர்ப்பமான ஞானஸ்நானத்தைத் தள்ளிப்போட மனந்திரும்பின மனிதன் நிச்சயமாக வீரம்பமாட்டான்.
- ஞானஸ்நானத்திற்கு ஆயத்தப்பட எவ்வளவு காலம் ஆகும்?
பதில்: இது தனிப்பட்ட நபரைப் பொருத்தது. சிலர் வேகமாகக் காரியங்களைப் பிடித்துக்கொள்ளுவார்கள். அநேக சமயங்களில் சிறிது காலத்திலேயே ஆயத்தமடையலாம். வேதாகம உதாரணங்களைக் கவனியுங்கள்..
அ. எத்தியோப்பிய மந்திரி (அப்போஸ்தலர் 8:26-39) சத்தியத்தைக் கேட்ட அன்றே ஞானஸ்நானம் பெற்றார்.
ஆ. பிலிப்பு பட்டணத்தின் சிறைச்சாலைக்காரனும் அவனுடைய குடும்பமும் (அப்போஸ்தலர் 16:23-34) சத்தியத்தைக் கேட்ட அன்று இரவிலேயே ஞானஸ்நானம் எடுத்தனர்..
இ. தர்சு பட்டணத்து சவுல் (அப்போஸ்தலர் 9:1-18) தமஸ்குவிற்குப் போகும் வழியில் கிறிஸ்து தன்னைச் சந்தித்த மூன்றாவது நாளில் ஞானஸ்நானம் பெற்றான்.
ஈ. கொரநேலியு (அப்போஸ்தலர் 10:1-48) சத்தியத்தைக் கேட்ட அன்றையதினமே ஞானஸ்நானம் எடுத்தான்.
- மனந்திரும்பின மனிதனின் ஞானஸ்நானத்தைக்குறித்து தேவன் எவ்விதம் உணருகிறார்?
பதில்: தம்முடைய குமாரனின் ஞானஸ்நானத்தின்போது: “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்” (மத்தேயு 3:17) என்று அவர் கூறினார். அதேபோல இன்றும் அவருடைய கட்டளைக்கு இசைவாக ஒரு நபர் முழுக்கு ஞானஸ்நானம் எடுக்கும்போது தேவன் மகிழ்ச்சியடைகிறார். ஆண்டவரை நேசிக்கிறவர்கள் அவரை இன்பப்படுத்த விரும்புவார்கள் (1 யோவான் 3:22; 1 தெசலோனிக்கேயர் 4:1). தேவன் உங்களுடைய ஞானஸ்நானத்தைக்குறித்து மகிழ்ச்சியாயிருக்கிறாரா?
-
- தேவனுடைய சபையில் அங்கத்தினர் ஆகாமல் ஒரு நபர் ஞானஸ்நானம் பெறமுடியுமா?
பதில்: முடியாது. தேவன் இவைகளைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். கவனியுங்கள்.
அ. அனைவரும் ஒரு சரீரத்திற்குள் அழைக்கப்படுகிறார்கள். “நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்” – கொலோசெயர் 3:15.
ஆ. சபையே அந்த சரீரம். “அவரே சபையாகிய சரீரத்திற்குத் தலையானவர்” – கொலோசெயர் 1:18.
இ. ஞானஸ்நானத்தினால் நாம் அந்த சரீரத்தில் இணைகிறோம். “எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு” – 1 கொரிந்தியர் 12:13.
ஈ. மனந்திரும்பின தேவனுடைய மக்கள் சபையில் சேர்க்கப்படுகின்றனர். “இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையில் சேர்த்துக்கொண்டு வந்தார்” – அப்போஸதலர் 2:47.
- ஞானஸ்நானம் செய்யாத நான்கு காரியங்களைக் கவனியுங்கள்.
முதலாவது:
ஞானஸ்நானம் ஒரு மனிதனுடைய இருதயத்தை மாற்றுவதில்லை. மாறாக, ஏற்கனவே அங்கு நடந்த மாற்றத்தைக் காட்டுகிறது. விசுவாசமின்றி மனந்திரும்புதலின்றி, புது இருதயமின்றி ஒரு மனிதன் ஞானஸ்நானம் எடுக்கலாம். இயேசுவின் மாதிரியை பின்பற்றியே முழுக்கு ஞானஸ்நானம் எடுக்கலாம். ஆனாலும் வெளியே வரும்போது, மனந்திரும்பின மனிதனாக அல்லாது, இன்னமும் விசுவாசமில்லாத, மனந்திரும்பாத, புதிய இருதயம் இல்லாத–நனைந்த (காய்ந்திராத) ஒரு பாவியாகவே வரலாம். ஞானஸ்நானம் ஒரு மனிதனை புதியவானக்குவதில்லை. அதினால் அவனை மாற்றவோ புதுப்பிக்கவோ முடியாது. மனந்திரும்புதலில் ஒரு மனிதனை மாற்றுவது இருதயத்தைப் மாற்றுகிற பரிசுத்த ஆவியானவரின் வல்லமையே! ஒரு நபர் ஆவியினாலும் பிறந்திருக்கவேண்டும்; தண்ணீரினாலும் பிறந்திருக்கவேண்டும். (யோவான் 3:5).
இரண்டாவது:
ஞானஸ்நானம் எந்த ஒரு நபரையும் மேன்மையானவனாக உணர நடத்துவதில்லை. அது அவனுடைய உணர்வுகளை மாற்றுவதில்லை. ஞானஸ்நானத்திற்குப்பிறகு வேறு விதமாக உணராததினால் அநேகர் ஏமாந்துபோகிறார்கள். இரட்சிப்பு என்பது உணர்வுகளைக் குறித்ததல்ல, விசுவாசத்தையும் கீழ்ப்படிதலையும் குறித்தது.
மூன்றாவது:
ஞானஸ்நானம் சோதனைகளை அப்புறப்படுத்துவதில்லை. ஞானஸ்நானம் எடுத்த நபரை சாத்தான் அண்டமாட்டான் என்று அல்ல. எனினும் ஒவ்வொரு விசுவாசிக்கும் இயேசு உதவி செய்கிறார். “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (எபிரெயர் 13:5) என்று அவர் கூறுகிறார். தப்பிப்பதற்கான போக்கு இல்லாத எந்த சோதனையும் வராது. இது வேதவாக்கியங்களின் வாக்குறுதி (1 கொரிந்தியர் 10:13).
நான்காவது:
ஞானஸ்நானம் இரட்சிப்பிற்கு உத்திரவாதம் கொடுப்பதில்லை. அது ஒரு மந்திர சடங்கு அல்ல. புது பிறப்பை அனுபவிக்கிற ஒரு நபருக்கு இயேசுவிடமிருந்து வருகிற இலவச ஈவே இரட்சிப்பு. ஞானஸ்நானம் மெய்யான மனந்திரும்புதலின் அடையாளம். ஞானஸ்நானத்திற்குமுன் ஒரு மாற்றம் வராதபோது, அந்தச் சடங்கு அர்த்தமற்றது.
- உங்களுடைய பாவங்கள் கழுவப்பட்டதன் அடையாளமாக ஞானஸ்நானம் எடுக்கும்படி இயேசு உங்களைக் கேட்கிறார். இந்தப் பரிசுத்த சடங்கிற்கு உங்களை விரைவாக ஒப்புக்கொடுக்க நீங்கள் தீர்மானிக்கிறீர்களா?
உங்கள் பதில்: ________________________________________________________________________________________________________
சிந்தனைக் கேள்விகள்
1. ஒருமுறைக்குமேல் ஞானஸ்நானம் எடுப்பது சரியா?
பதில்: முறையே! குறிப்பிட்ட சம்பவங்களில் மீண்டும் ஞானஸ்நானம் எடுப்பதை அப்போஸ்தலர் 19:1-5 ஆதரிக்கிறது.
- குழந்தைகள் ஞானஸ்நானம் எடுப்பது சரியா?
பதில்: தவறு: அவர்கள் ஞானஸ்நானம் எடுக்கக்கூடாது. காரணம், ஒரு நபர்
அ. தேவனுடைய சத்தியத்தை அறியும்முன்பாக.
ஆ. அதை விசுவாசிக்கும்முன்பாக.
இ. மனம்திரும்பும்முன்பாக.
ஈ. மனமாற்றத்தை அனுபவிக்கும்முன்பாக ஞானஸ்நானம் எடுக்கக்கூடாது. இதன்படி எந்தக் குழந்கையும் அதற்குத் தகுதியானதல்ல. ஒரு குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுக்க எவருக்கும் உரிமையில்லை. உண்மையில் அப்படிச் செய்வது ஞானஸ்நானத்தைக்குறித்த நேரடியான தேவனுடைய கட்டளையை கருத்தில் கொள்ளாத்தற்குச் சமம். அநேக வருடங்களுக்கு முன்பு, ஞானஸ்நானம் எடுக்காத குழந்தைகள் இரட்சிப்பை இழந்துபோவார்கள் என்ற அறிவிப்பு, தவறாக நடத்தப்பட்ட சபை மனிதர்களால் அறிவிக்கப்பட்டது. ஆனால் வேதவாக்கியத்தின்படி இது பொய். தகுதியில்லாத பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்காததினால், மரித்துப்போன குற்றமில்லாத குழந்தைகளை அழிக்கும் அநீதியான கொடுங்கோலனாக அது தேவனைக் காட்டுகிறது. அது வார்த்தைகளால் விவரிக்கக்கூடாத தேவனை நிறைந்த போதனை. குழந்தைகளின்மேல் தெளித்து, அதை ஞானஸ்நானம் என்று சொல்லுவதும் அதைப்போன்றதே. கவலையற்ற பெற்றோர்கள் தங்கள் கடமையை செய்யத் தவறினதால் குழந்தைகள் நித்தியத்தை இழந்துபோவார்கள் என்கிற வேதாகமத்திற்கு அப்பாற்பட்ட கருத்தினை வைத்திருப்பது சொல்லக்கூடாத அளவு மோசமானது.
- ஞானஸ்நானம் என்பது தனிப்பட்ட நபருடைய கருத்து இல்லையா?
பதில்: ஆமாம், அது தனிப்பட்ட நபருடைய கருத்துதான். ஆனால் உங்களுடைய கருத்தும் என்னுடைய கருத்துமல்ல; கிறிஸ்துவினுடைய கருத்து! ஞானஸ்நானம் தமக்கு முக்கியமானது என்று கிறிஸ்து கூறுகிறார். “ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறாவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான்” – யோவான் 3:5. ஞானஸ்நானத்தை நிராகரிப்பது தேவனுடைய நேரடியான ஆலோசனையை நிராகரிப்பதற்குச் சமம் (லூக்கா 7:29,30).
- எவ்விதம் ஒருவர் ஞானஸ்நானத்திற்கு தகுதிப்படவேண்டும்?
பதில்: சரியான செய்கைக்கும் தவறான செய்கைக்குமிடையே இருக்கிற வேறுபாட்டை புரிந்துகொண்டு, கிறிஸ்துவிற்கு ஒப்படைத்து அவரைப் பின்பற்றும் ஞானமான தீர்மானத்தை எடுக்கும் வயதே ஞானஸ்நானத்திற்கான வயது. அநேக குழந்தைகள் 9 அல்லது 10 வயதிலேயே ஞானஸ்நானத்திற்கு ஆயத்தமாகிறார்கள். சிலர் 8, 9 வயதில் ஆயத்தமடைகிறார்கள். சிலர் 13,14 வயதிலும் அயத்தமடைவதில்லை. குழந்தைகள் வெவ்வேறு அனுபவங்களைப் பெற்று வெவ்வேறு விதங்களில் புரிந்துகொள்ளுவதால் வேதாகமம் எந்த வயதுவரம்பையும் குறிக்கவில்லை. சிலர் மற்றவர்களைவிட இளவயதிலேயே ஞானஸ்நானத்திற்கு ஆயத்தமாகிறார்கள்.
- ஞானஸ்நானம் தன்னில்தானே நம்மைக் காப்பாற்றுமா?
பதில்: காப்பாற்றாது. ஆனால் ஞானஸ்நானத்தை மறுப்பது கீழ்ப்படியாமையை சுட்டிக்காட்டுவதால் ஒருவர் இரட்சிப்பை இழந்துபோக வழிவகுக்கும். ஏனெனில் “தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்கு” (எபிரெயர் 5:9) என்று வேதாகமம் சொல்லுகிறது.
- பரிசுத்த ஆவியினால் எடுக்கும் ஞானஸ்நானம்தானே அவசியம்?
பதில்: அப்படியல்ல. பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெற்றிருந்தாலும் தண்ணீரில் எடுக்கும் ஞானஸ்நானம் அவசியம் என்று அப்போஸ்தலர் 10:44-48 காண்பிக்கிறது.
- நாம் இயேசுவின் நாமத்தினால் மாத்திரம்தானே ஞானஸ்நானம் எடுக்கவேண்டும்?
பதில்: மத்தேயு 28:19-ல் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் எடுக்க நாம் போதிக்கப்படுகிறோம். இவைகள் இயேசுவின் வார்த்தைகள். எனவே, மிகவும் பரிசுத்தமானதாக கருதப்படவேண்டும். அப்போஸ்தலர் நடபடிகளில் இயேசுவின் நாமத்தினால் நிறைய விசுவாசிகள் ஞானஸ்நானம் எடுத்ததைக் காண்கிறோம். அது இயேசுவை மேசியாவாகவும் கிறிஸ்துவாகாவும் அறிக்கைசெய்கிற அந்தக்காலத்திற்குரிய சத்தியமாக இருந்தது. எனவே அவருடைய நாமத்தினாலே ஞானஸ்நானம் எடுப்பது அப்போது அவசியமாக இருந்தது. இன்றைக்கும் அது அவசியம் என்கிறதை நாம் நம்புகிறோம். மத்தேயுவின் சாட்சியையும் அப்போஸ்தலர் புத்தகத்தின் சாட்சியையும் இணைக்கும்போது, பிதா, குமாரனாகிய இயேசுகிறிஸ்து, பரிசுத்த ஆவியானவரின் நாமத்தினால் நாம் மனிதருக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறோம். இவ்விதம் செய்வது ஒரு வேதவாக்கியத்தை மற்றதற்கு எதிராக உயர்த்துவதை தடைசெய்கிறது.
- ஒப்புக்கொடுக்க விரும்பாத ஒரு பாவம் என்னிடத்தில் இருக்கிறது. நான் ஞானஸ்நானம் எடுக்கலாமா?
பதில்: சில நேரங்களில் ஒரு குறிப்பிட்ட பாவத்துடன் நாம் போராடிக்கொண்டிருப்போம்? மேலும் அதை நம்மால் மேற்கொள்ள முடியாது எனவும் நினைப்போம். நம்பிக்கையிழக்கவேண்டாம்! “ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச்சுற்றி நெருக்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஒட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;” என்று தேவன் உங்களிடம் கூறுகிறார். எந்தப் பாவமானாலும் தேவனால் உங்களுக்கு ஜெயத்தைக் கொடுக்கமுடியும்! நீங்கள் தயாராக முடியாது, ஏனெனில் பழைய பாவ வாழ்க்கையானது இன்னும் மரிக்கவில்லை. நாம் நம் சுயத்திற்கு மரித்தாலொழிய கிறிஸ்துவிற்காக வாழமுடியாது.
- கலாத்தியர் 3:27-ஜ உங்களால் விவரிக்க முடியுமா?
பதில்: இங்கே தேவன் ஞானஸ்நானத்தை திருமணத்திற்கு ஒப்பிடுகிறார். திருமணத்தின்போது தன் கணவனுடைய பெயரை தான் எடுத்துக்கொண்டதாக பொதுமக்கள்முன் அறிவிக்கும் மணமகளைப்போலவே, ஞானஸ்நானம் எடுக்கும் நபரும், கிறிஸ்துவின் பெயரை தான் எடுத்துக்கொண்டதாக பொதுமக்கள்முன் அறிவிக்கிறார். திருமணத்தைப்போலவே ஞானஸ்நானத்திற்கும் பல சட்டங்கள் பொருந்துகின்றன.
அ. மெய்யான அன்பு ஆட்சி செய்யாத பட்சத்தில் ஞானஸ்நானத்திற்குள் நுழையக்கூடாது.
ஆ. எப்படிப்பட்ட நெருக்கடியிலும் உண்மையாக இருக்க தீர்மானம் எடுக்காதபட்சத்தில் ஒருநபர் ஒருபோதும் அதற்குள் நுழையக்கூடாது.
இ. முழுமையான புரிந்துகொள்ளுதலோடு அது எடுக்கப்படவேண்டும்.
ஈ. அது தேவையன்றி தாமதப்படுத்தப்படக்கூடாது.
கேள்விகள்
1. ஒரே கர்த்தரும் ஒரே விசுவாசமும் என்று வேதாகமம் சொல்லுகிறது.(1)
( ) 15 ஞானஸ்நானங்களும்.
( ) 5 ஞானஸ்நானங்களும்.
( ) 12 ஞானஸ்நானங்களும்.
( ) ஒரே ஞானஸ்நானமும்.
- ஞானஸ்நானத்தின் அவசியத்தை இயேசு போதித்தாரா? (1)
( ) ஆம்.
( ) இல்லை.
- இயேசு (1)
( ) ஊற்றப்பட்ட தண்ணரில் ஞானஸ்நானம் எடுத்தார்.
( ) தெளிக்கப்பட்ட நீரினால் ஞானஸ்நானம் எடுத்தார்.
( ) மூழ்கி ஞானஸ்நானம் எடுத்தார்.
- ஞானஸ்நானம் என்கிற வார்த்தையின் பொருள்: (1)
( ) மகிழ்ச்சியாயிருங்கள்.
( ) தெளியுங்கள்.
( ) ஊற்றுங்கள்.
( ) ஆழமாக மூழ்கி எழுங்கள்.
- இன்றைய போலி ஞானஸ்நானங்கள் யாரால் கொண்டுவரப்பட்டன? (1)
( ) கிறிஸ்துவால்.
( ) அப்போஸ்தலரால்.
( ) தவறாக நடத்தப்பட்ட நபர்களால்.
- ஞானஸ்நானத்திற்கு ஆயத்தப்பட ஒரு நபர் செய்யவேண்டியவை. (4)
( ) வேதாகமத்தை 5 முறை வாசிக்கவேண்டும்.
( ) சத்தியத்தை விசுவாசிக்கவேண்டும்.
( ) மறுபிறப்பை அனுபவிக்கவேண்டும்.
( ) 10 நாட்கள் தொடர்ந்து ஜெபிக்கவேண்டும்.
( ) 40 நாட்கள் தொடர்ந்து உபவாசம் இருக்கவேண்டும்.
( ) தேவனுடைய கோரிக்கைகளைக் கற்றுக்கொள்ளவேண்டும்.
( ) மனந்திரும்பி பாவத்தை விட்டுவிடவேண்டும்.
- ஞானஸ்நானம் எதன் அடையாளம்? (1)
( ) உலக சிருஷ்டிப்பிற்கு.
( ) வேதாகமத்திற்கு.
( ) பரலோகத்திற்கு.
( ) கிறிஸ்துவின் மரணம், அடக்கம், மற்றும் உயிர்தெழுதலுக்கு.
( ) தூதர்களுக்கு.
- புதிதாக ஞானமுழுக்கெடுக்கும் கிறிஸ்தவன்: (1)
( ) ஆவிக்குரிய குழந்தை.
( ) ஆவிக்குரிய மனிதன்.
- ஜெபத்தோடும் உண்மையோடும் புரிந்து கொள்ளுதலோடும் ஞானஸ்நானம் எடுப்பது:(1)
( ) மனமாற்றத்தை பொதுமக்கள்முன்பு அறிக்கை பண்ணுவது.
( ) வெறுமனே ஒரு நீச்சல்.
( ) அவர் மீண்டும் சோதிக்கப்படவே மாட்டார் என்னும் நிச்சயம் பெறுவது.
- குழந்தை ஞானஸ்நானம் வேதாகம போதனையா?(1)
( ) ஆம்.
( ) இல்லை.
- சில குழந்தைகள் மற்றவர்களைவிட சீக்கிரம் ஞனஸ்நானத்திற்கு ஆயத்தமாகிறார்கள்: (1)
( ) உண்மை.
( ) பொய்.
- வேதாகம ஞானஸ்நானத்தைக்குறித்த உண்மைகள்: (6)
( ) வேதாகமம் ஞானஸ்நானத்தை திருமணத்தோடு ஒப்பிடுகிறது.
( ) பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானமே அவசியமான ஒன்று.
( ) மனிதனுடைய போதனைகளை தேவன் ஏற்றுக்கொள்ளமாட்டார்.
( ) நம்முடைய உதாரணமாக இயேசு ஞானஸ்நானம் எடுத்தார்.
( ) மீண்டும் ஞானஸ்நானம் எடுப்பதைக் குறித்த உதாரணம் வேதாகமத்தில் இருக்கிறது.
( ) ஞானஸ்நானம் புதிய பிறப்பின் அடையாளம்.
( ) பழைய மனிதனை ஞானஸ்நானத்தில் நீங்கள் அடக்கம்பண்ணுகிறீர்கள்.
( ) நீங்கள் ஏழு முறை ஞானஸ்நானம் எடுக்கவேண்டும்.
- ஞானஸ்நானத்திற்கு ஆயத்தமாக, ஒரு நபர் அநேக வாரங்களையோ அல்லது மாதங்களையோ எடுத்துக்கொள்ளுவது எப்போதும் அவசியமா? (1)
( ) அவசியம்.
( ) அவசியமில்லை.
- சபையில் அங்கத்தினராக விரும்பாதபோது ஒரு நபர் மெய்யான ஞானஸ்நானத்தை எடுக்கமுடியுமா? (1)
( ) முடியும்.
( ) முடியாது.
- விரைவில் முழுக்கு ஞானஸ்நானம் எடுக்க நான் ஆசைப்படுகிறேன்.
( ) ஆம்.
( ) இல்லை.
( ) நான் ஏற்கனவே முழுக்கு ஞானஸ்நானம் எடுத்தவன்.



