ஏறக்குறைய அனைவருமே முற்றிலும் மறந்துபோன நாள் ஒன்று இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?  மனித சரித்திரம் முழுவதிலும் மிகவும் முக்கியமான நாட்களில் ஒன்றாக இருப்பினும், ஒரு சிலரே அதைக்குறித்து அறிந்திருக்கிறார்களென்பது அதிர்ச்சியூட்டுகிறது. அது கடந்த காலத்தின் நாள் மாத்திரமல்ல, நிகழ்கால மற்றும் எதிர்காலத்தின் நாளாகவும் இருக்கிறது. மேலும் நெகிழப்பட்ட இந்த நாளில் என்ன நடந்தது என்பது உங்களுடைய வாழ்க்கையில் சொல்லக்கூடிய மாற்றத்தைக் கொண்டுவரும். சரித்திரத்தில் தொலைந்துபோன நாளைக்குறித்த ஆச்சரியமான உண்மைகளை அறிந்துகொள்ள விருப்பமா? அப்படியானால் இந்த பாடத்தை கவனியுங்கள்.

1)  இயேசு எந்த நாளில் வழக்கமாக ஆராதித்தார்?

 “தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெப‌ஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார்.” லூக்கா – 4:16.

பதில்: ஒய்வுநாளில் ஆராதனை செய்வது இயேசுவின் வழக்கமாயிருந்தது.

2) ஆனால் வாரத்தின் எந்தநாள் ஒய்வுநாள்?

“ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்;…” யாத்திராகமம் – 20:10;  “ஓய்வுநாளானபின்பு ….வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிறபோது கல்லறையினிடத்தில் வந்து,” மாற்கு – 16:1, 2.

பதில்: அநேகர் நம்புவதைப்போன்று ஒய்வுநாள் வாரத்தின் முதல்நாள் (ஞாயிற்றுக்கிழமை) அல்ல, மாறாக வாரத்தின் ஏழாம்நாளே (சனிக்கிழமையே). மேற்கூறிய வசனத்தில் ஒய்வுநாள் வாரத்தின் முதல்நாளுக்கு முன்னர் வருகிறதை கவனியுங்கள்.

3) ஒய்வுநாளை யார், எப்போது உண்டாக்கினது?

“ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.”  “தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.” ஆதியாகமம் – 1:1; 2:2,3.

பதில்: தேவன் இந்த உலகத்தை சிருஷ்டித்தபோது ஒய்வுநாளை உண்டாக்கினார். அவர் ஒய்வுநாளில் ஒய்ந்திருந்து, அதை ஆசீர்வதித்து, பரிசுத்தப்படுத்தினார். (பரிசுத்த வேலைக்காகப் பிரித்துவைத்தார்).

4) தமது சொந்த விரலினால் எழுதின பத்துக் கற்பனைகளில் ஒய்வுநாளை கைக்கொள்ளுவதைகுறித்து தேவன் என்ன சொல்லுகிறார்?

“ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக; ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக; ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம். கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.” யாத் – 20:8-11; “அப்பொழுது தேவனுடைய விரலினால் எழுதியிருந்த இரண்டு கற்பலகைகளைக் கர்த்தர் என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்….” உபாகமம் – 9:10.

பதில்: பத்துக் கற்பனைகளில் நாலாவது கற்பனையான ஏழாம்நாள் ஒய்வுநாளை அவருடைய பரிசுத்த நாளாக கைக்கொள்ளூம்படி தேவன் நமக்குக் கட்டளை கொடுக்கிறார். மக்கள் அவருடைய ஒய்வுநாளை மறந்துவிடுவார்கள் என்பதை தேவன் அறிவார். எனவே “நினைப்பாயாக” என்று தமது கட்டளையை கொடுக்கிறார். வாரத்தின் ஏதாவது ஒரு நாளை வாராந்திர பரிசுத்த நாளாக ஆசரிக்கும்படி வேதாகமத்தில் அவர் எவருக்கும் எங்கும் ஒருபோதும் கட்டளை கொடுக்கவில்லை.

5) ஆனால் பத்துக் கற்பனைகள் மாற்றப்படவில்லையா?

“வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு அவமாய்ப் போவதைப்பார்க்கிலும், வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிதாயிருக்கும்.” (லூக்கா – 16:17) என்று இயேசு சொல்லுகிறார்.  “என் உடன்படிக்கையை மீறாமலும், என் உதடுகள் விளம்பினதை மாற்றாமலும் இருப்பேன்.” (சங்கீதம் – 89:34) என்று தேவன் குறிப்பிடுகிறார். “தேவன் பேசிச் சொல்லிய சகல வார்த்தைகளுமாவன.” (யாத் – 20:1) பத்துக்கற்பனைகள் அவருடைய உதடுகளிலிருந்து வந்தன என்பதைக் கவனியுங்கள். (பத்துப்பிரமாணங்கள் இதைத் தொடர்ந்து வசனங்கள் 2 – 17 வரை வருகின்றன).

பதில்: இல்லவே இல்லை! தேவனுடைய சன்மார்க்க பிரமாணத்தில் ஒன்றுகூட மாற்றப்படுவது கூடாதகாரியம். அனைத்துப் பத்துக் கற்பனைகளும் இன்றும் கடைபிடிக்கப்படவேண்டும்.

6) அப்போஸ்தலர் ஒய்வுநாளை ஆசரித்தார்களா?

“பவுல் தன் வழக்கத்தின்படியே அவர்களிடத்தில் போய், மூன்று ஓய்வுநாட்களில் வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து அவர்களுடனே சம்பாஷித்து,” – அப். 17:2; “பின்பு பவுலும் அவனைச் சேர்ந்தவர்களும்…ஓய்வுநாளிலே ஜெப‌ஆலயத்தில் பிரவேசித்து, உட்கார்ந்தார்கள்.” – அப். 13:13,14; “ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே வழக்கமாய் ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த ஸ்திரீகளுக்கு உபதேசித்தோம்.” – அப். 16:13; “ஓய்வுநாள்தோறும் அவன் ஜெப‌ஆலயத்திலே சம்பாஷணை பண்ணி, யூதருக்கும் கிரேக்கருக்கும் புத்திசொன்னான்.” – அப் – 18:4.

பதில்: ஆமாம்! பவுலாரும் ஆதிகால திருச்சபையும் ஒய்வுநாளைக் கைக்கொண்டதை அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகம் தெளிவாக்குகின்றது.

7) புறஜாதிகளும் ஒய்வுநாளில் ஆராதனை செய்தார்களா?

தேவன் கட்டளையிட்டார்:

“ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி ஆசரித்து,….மனுபுத்திரனும் பாக்கியவான்.”  ” கர்த்தரைச் சேவிக்கவும், கர்த்தருடைய நாமத்தை நேசிக்கவும்,….ஓய்வுநாளைப் பரிசுத்தக்குலைச்சலாக்காதபடி ஆசரித்து, என் உடன்படிக்கையைப் பற்றிக்கொண்டிருக்கிற அந்நியபுத்திரர் அனைவரையும், நான் என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவந்து: என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன்;…… என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும்.” (ஏசாயா – 56:2,6,7 ) என்று தேவன் கூறிகிறார்.

அப்போஸ்தலர் போதித்தனர்:

“அவர்கள் யூதருடைய ஜெப‌ஆலயத்திலிருந்து புறப்படுகையில், அடுத்த ஓய்வுநாளிலே இந்த வசனங்களைத் தங்களுக்குச் சொல்லவேண்டும் என்று புறஜாதியார் வேண்டிக்கொண்டார்கள்.”  “அடுத்த ஓய்வுநாளிலே கொஞ்சங்குறையப் பட்டணத்தாரனைவரும் தேவவசனத்தைக் கேட்கும்படி கூடிவந்தார்கள்.” – அப்போஸ்தலர் – 13:42,44. “ஓய்வுநாள்தோறும் அவன் ஜெப‌ஆலயத்திலே சம்பாஷணைபண்ணி, யூதருக்கும் கிரேக்கருக்கும் புத்திசொன்னான்.” – அபோஸ்தலர் – 18:4.

பதில்: புதிய ஏற்பாட்டு ஆதிசபையின் அப்போஸ்தலர், தேவனுடைய ஒய்வுநாள் கட்டளைக்கு தாங்கள் கீழ்ப்படிந்தது மாத்திரமல்ல, மனந்திரும்பின புறஜாதிகளும் ஒய்வுநாளில் ஆராதனை செய்யவேண்டும் என்று போதித்தார்கள். ஒருமுறைகூட ஞாயிற்றுக்கிழமை பரிசுத்தநாள் என்று அவர்கள் குறிப்பிட்டுக் காட்டவில்லை.

8) கிறிஸ்துவின் மரணத்தில் அல்லது உயிர்த்தெழுதலில் ஒய்வுநாள் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்படவில்லையா?

பதில்: இல்லை. கிரிஸ்துவின் மரணத்தின்போதோ அல்லது உயிர்த்தெழுதலின்போதோ ஒய்வுநாள் மாற்றப்பட்டது என்பதற்கான குறைவான ஆதாரம்கூட இல்லை. மாறாக, வேதாகமம் அதற்கு எதிராகவே போதிக்கிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள சாட்சிகளை கவனமாகத் திருப்பிப்பாருங்கள்.

A. God blessed the Sabbath.
“The Lord blesse

அ. அவர் ஒய்வுநாளை ஆசீர்வதித்தார்: “கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.” – யாத்.20:11; “தேவன் ஏழாம்நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.” – ஆதி. 2:3.

ஆ. கி.பி. 70-ல் எருசலேம் அழிக்கப்பட்டபோது, தமது மக்கள் ஒய்வுநாளைக் கைக்கொண்டுருப்பார்கள் என்று கிறிஸ்து எதிர்பார்த்தார்: கி.பி 70-ல் எருசலேம் ரோமர்களால் அழிக்கப்படும் என்பதை இயேசு நன்கு அறிந்திருந்தும், “நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்.” (மத்.24:20) என்று கூறி, தமது பின்னடியாருக்கு எச்சரிப்பு கொடுத்தார். அவர் உயிர்த்தெழுந்து நாற்பது வருடங்களுக்கு பின்பும்கூட ஒய்வுநாள் கைக்கொள்ளப்படவேண்டும் என்று தாம் எதிர்பார்ப்பதை இயேசு தெளிவாக்கினார். கூறப்போனால் உண்மையில், இயேசுவாகிலும், அவருடைய பிதாவாகிலும், அல்லது அப்போஸ்தலராகிலும் பரிசுத்த ஏழாம்நாள் ஒய்வுநாளை வேறு ஒரு நாளுக்கு எந்த நேரத்திலாவது எந்த சூழ்நிலையிலாவது மாற்றினார்கள் என்பதற்கான மிகக் குறைவான அறிவிப்புகூட இல்லை.

 

 

இ. கிறிஸ்துவின் மரித்த சரீரத்தை அபிஷேகம் செய்யவந்த பெண்கள் ஒய்வுநாளை ஆசரித்திருந்தனர்.  இயேசு “ஒய்வுநாளுக்கு முந்தினநாள்” (மாற்கு 15:37,42) மரித்தார். அது இப்போது பெரிய வெள்ளி என்று அழைக்கப்படுகிறது: இயேசுவின் சரீரத்தை அபிஷேகம் பண்ணுவதற்காக நளதைலங்களை ஆயத்தம் பண்ணின பெண்கள், “கற்பனையின்படியே ஒய்வுநாளில் ஒய்ந்திருந்தார்கள்” – லூக்கா 23:56.  “ஒய்வுநாளானபின்பு” (மாற்கு 16:1) அவர்கள் “வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே” (மாற்கு 16:2), தங்களுடைய துக்கமான வேவையைத் தொடரும்படி கல்லறையினிடத்தில் வந்தார்கள். “வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு,” (வசனம் 9) அவர்கள் அறிந்தனர். இது இன்று ஈஸ்டர் ஞாயிறு என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. “கற்பனையின்படி” ஒய்வுநாள் என்பது ஈஸ்டர் ஞாயிறுக்கு முந்தைய நாள்; அதாவது இன்றைய சனிக்கிழமை என்பதை தயவுகூர்ந்து கவனியுங்கள்.

ஈ. வேதாகமத்தின் லூக்கா சுவிசேஷம் மற்றும் அப்போஸ்தல நடபடிகள் ஆகிய இரு புத்தகங்களை கிறிஸ்துவின் பின்னடியாரான லூக்கா எழுதியிருக்கிறார். தாம் எழுதின லூக்கா புத்தகத்தில், இயேசுவின் போதனைகள் “எல்லாவற்றையுங்குறித்து” (அப்போஸ்தலர் 1:1-3) எழுதினதாக அவர் கூறுகிறார். ஆனாலும் ஞாயிறு ஆசரிப்பைக் குறித்தோ அல்லது ஒய்வுநாள் மாற்றத்தைக்குறித்தோ அவர் ஒருபோதும் எழுதவில்லை.

9) ஒய்வுநாள் புதிய பூமியிலும் கைக்கொள்ளப்படும் என்று சிலர் சொல்லுகிறார்களே அது சரியா?

“நான் படைக்கப்போகிற புதிய வானமும் புதிய பூமியும் எனக்கு முன்பாக நிற்பதுபோல, உங்கள் சந்ததியும், உங்கள் நாமமும் நிற்குமென்று கர்த்தர் சொல்லுகிறார். அப்பொழுது: மாதந்தோறும், ஓய்வுநாள்தோறும், மாம்சமான யாவரும் எனக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.” – ஏசாயா 66:22,23.  .

பதில்: ஆமாம்! அனைத்து யுகங்களிலும் இரட்சிக்கப்பட்ட மக்கள் புதிய பூமியில் ஒய்வுநாளைக் கைக்கொள்ளுவார்கள் என்று வேதாகமம் கூறுகிறது.

10) ஆனால் ஞாயிற்றுக்கிழமை கர்த்தருடைய நாள் இல்லையா?

“..கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி” -ஏசாயா 58:13; “மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார்” – மத்தேயு 12:8.

பதில்: வெளிப்படுத்தல் 1:10-ல் கர்த்தருடைய நாளைக்குறித்து வேதாகமம் கூறுகிறது. எனவே கர்த்தருக்கு ஒரு விசேஷமான நாள் இருக்கிறது. ஆனால் எந்த ஒரு வேதவாக்கியமும் ஞாயிற்றுக்கிழமையை கர்த்தருடைய நாள் என்று குறிப்பிட்டுக் காட்டவில்லை. மாறாக, ஒய்வுநாளையே கர்த்தருடைய நாள் என்று அடையாளப்படுத்துகிறது. தம்முடைய பரிசுத்த நாளாக ஆண்டவர் ஆசீர்வதித்து உரிமை கோருகிற ஒரே நாள் ஏழாம்நாள் ஒய்வுநாள்.

11) கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை கனப்படுத்தும்படி நான் ஞாயிற்றுக்கிழமையை கைக்கொள்ள வேண்டுமல்லவா?

“கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா? மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம். ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம். நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.”- ரோமர் 6:3-6.   .

பதில்: அவருடைய மரணத்தை கனப்படுத்த வெள்ளிக்கிழமையை கைக்கொள்ள முடியாததைப் போன்றே, ஞாயிற்றையும் கைக்கொள்ளமுடியாது. கிறிஸ்து தமது மரணத்தையும் அடக்கத்தையும் உயிர்த்தெழுதலையும் நினைவுகூரும்படி ஞானஸ்நானம் என்னும் சடங்கை கொடுத்திருக்கிறார். தமது உயிர்த்தெழுதலின் நினைவாக (வேறு என்ன காரணத்திலும்) ஞாயிற்றுக்கிழமை ஆசரிப்பை வேதாகமம் ஒருபோதும் ஆதரிக்கிறதில்லை. கிறிஸ்துவிற்கு கீழ்ப்படிவதினால் (யோவான் 14:15) அவரை கனப்படுத்துகிறோமேயன்றி, அவர் நியமித்தவைகளுக்குப் பதிலாக மனிதன் உண்டாக்கின கோரிக்கைகளை  பொருத்துவதினால் அல்ல.

(இயேசு கிறிஸ்து தமது உயிர்த்தெழுதலை கனப்படுத்தும்படியாக ஞானஸ்நானத்தையே ஏற்படுத்தினார், ஞாயிறு ஆசரிப்பை அல்ல.)

12) நல்லது. ஞாயிறு ஆசரிப்பு வேதாகமத்தில் இல்லையென்றால் யாருடைய யோசனை அது?

“…காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான்” -தானி. 7:25;  “உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள்.” “மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள்” – மத். 15:6,9; “அதின் ஆசாரியர்கள் என் வேதத்துக்கு அநியாயஞ்செய்து…” “அதின் தீர்க்கதரிசிகள்…கர்த்தர் உரைக்காதிருந்தும், கர்த்தராகிய ஆண்டவர் உரைத்தாரென்று சொல்லி, அவர்களுக்குச் சாரமற்ற சாந்தைப் பூசுகிறார்கள்.”- எசே. 22:26,28.

பதில்: அநேக வருடங்களுக்கு முன் தவறாக நடத்தப்பட்ட மனிதர்கள் தேவனுடைய பரிசுத்தநாள் ஒய்வுநாளிருந்து ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டதாக அறிவித்தனர். இது நடக்கும் என்று தேவன் முன்னறிவித்திருந்தார்; அப்படியே நடந்தது. இந்தத் தவறு பாரம்பரியத்தை நம்புகிற நம் தலைமுறைக்கும் சுவிசேஷமாக கடந்து வந்திருக்கிறது. ஞாயிரு ஆசரிப்பு தேவாவியால் ஏவப்படாத மனிதர்களின் பாரம்பரியம். அது தேவனுடைய பிரமாணத்தை மீறுவதாகும். தேவன் மாத்திரமே ஒரு நாளை பரிசுத்தப்படுத்தமுடியும். தேவன் ஒய்வுநாளை ஆசீர்வதித்தார். தேவன் ஆசீர்வதிக்கிறதை எவரும் “திருப்பக்கூடாது” – எண். 23:20.

13) தேவனுடைய பிரமாணத்தில் மாற்றம் செய்வது மிகவும் ஆபத்தானதல்லவா?

“உங்கள் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளை நீங்கள் கைக்கொள்ளும்படி, நான் உங்களுக்குக் கற்பிக்கிற வசனத்தோடே நீங்கள் ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்” – உபாகமம் 4:2;  “தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்;…அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்வார், நீ பொய்யனாவாய்.” – நீதிமொழிகள் 30:5,6.

பதில்: கூட்டுவதாலோ குறைப்பதாலோ தமது பிரமாணங்களை மாற்றகூடாதென்று தேவன் குறிப்பாக மனிதருக்கு தடை விதித்திருக்கிறார். தேவனுடைய பரிசுத்த பிரமாணத்தை மாற்றுவது எவ்விதத்திலும் ஒரு நபர் செய்யக்கூடிய மிகவும் பயங்கர ஆபத்தான காரியமே.

14) எதற்காக தேவன் ஒய்வுநாளை உண்டாக்கினார்?

அ. சிருஷ்டிப்பின் அடையாளம்:

“ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக; கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.” – யாத்திராகமம் 20:8,11.

ஆ. மீட்பு மற்றும் பரிசுத்தப்படுத்துதலின் அடையாளம்:

“நான் தங்களைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று அவர்கள் அறியும்படிக்கு, எனக்கும் அவர்களுக்கும் அடையாளமாய் இருப்பதற்கான என் ஓய்வுநாட்களையும் அவர்களுக்குக் கட்டளையிட்டேன்.” – எசேக்கியேல் 20:12.

பதில்: தேவன் ஒய்வுநாளை இரட்டிப்பான அடையாளமாக கொடுத்திருக்கிறார்.

  1. அவர் உலகத்தை 24 மணி நேரங்கள் கொண்ட ஆறு நாட்களில் உண்டாக்கினார் என்பதற்கான அடையாளமாக.

2. மனிதனை மீட்டு அவனைப் பரிசுத்தப்படுத்தும் தேவனுடைய மாபெரும் வல்லமைக்கான அடையாளமாக. நிச்சயமாகவே ஒய்வுநாளை தேவனுடைய சிருஷ்டிப்பு மற்றும் மீட்பின் அடையாளமாக ஒவ்வொரு கிறிஸ்தவனும் நேசிப்பான். (யாத். 31:13,16,17; எசே. 20:12,20). அவருடைய ஒய்வுநாளை மீறுவது தேவனுக்குக் கொடுக்கப்படும் மகாபெரிய அவமரியாதை. ஏசாயா 58:13,14ல் தேவனுடைய ஆசீர்வாதத்தை விரும்புகிற அனைவரும் ஒய்வுநாளைக் கைக்கொள்ளவேண்டுமென்று தேவன் கோருகிறார்.

15) ஒய்வுநாளை ஆசரிப்பது எவ்வளவு முக்கியம்?

“நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்” – 1 யோவான் 3:4;  “பாவத்தின் சம்பளம் மரணம்” – ரோமர் – 6:23;  “எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்.” – யாக்கோபு – 2:10; “கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.” – 1 பேதுரு 2:21; “தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி.” – எபிரெயர் 5:9.

பதில்: அது வாழ்வையும் சாவையுங்குறித்த ஒரு விஷயம். ஒய்வுநாள் கற்பனை தேவனுடைய பிரமாணத்தின் நான்காவது கற்பனையாக இணைக்கப்பட்டிருக்கிறது. பத்துக் கற்பனைகளில் எந்த ஒன்றையும் மனதார மீறுவது பாவமாகும். கிறிஸ்தவர்கள் ஒய்வுநாளை கைகொள்ளும் கிறிஸ்துவின் மாதரியை மகிழ்வோடு பின்பற்றுவார்கள். நமக்கிருக்கும் ஒரே பாதுகாப்பு வேதாகமத்தை ஜாக்கிரதையாக ஆராய்ந்து, “சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்து” (1 தீமோத்தேயு 2:15) போதிப்பதே. நாம் செய்யும் ஒவ்வொரு கிறிஸ்தவ பழக்கத்திற்கும் வேதவாக்கியங்களிலிருந்து போதுமான ஆதாரத்தைக் கொண்டிருக்கவேண்டும்.

16)ஒய்வுநாளை அலட்சியப்படுத்துகிற மதத்தலைவர்களைக்குறித்து தேவன் எவ்விதம் உணருகிறார்?

“அதின் ஆசாரியர்கள் என் வேதத்துக்கு அநியாயஞ்செய்து, என் பரிசுத்த வஸ்துக்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறார்கள்; பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும் வித்தியாசம்பண்ணாமலும்,…என் ஓய்வுநாட்களுக்குத் தங்கள் கண்களை மூடிக்கொள்ளுகிறார்கள்; அவர்கள் நடுவிலே நான் கனவீனம்பண்ணப்படுகிறேன்.”  “ஆகையால், நான் அவர்கள்மேல் என் கோபத்தை ஊற்றி” – எசேக்கியேல் 22:26,31.

 

பதில்: தங்கள் கண்களை தேவனுடைய மெய்யான ஒய்வுநாளுக்கு மூடிக்கொள்ளுவதினால் மதத்தலைவர்கள் பரலோகத்தின் தேவனை காயப்படுத்துகிறார்கள். அப்படிப்பட்ட பொய்மேய்ப்பர்களுக்கு ஆண்டவர் தண்டனையை வாக்குப்பண்ணுகிறார். இந்தக் காரியத்தில் இலட்சக்கணக்கானோர் தவறாக நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தேவன் இதை எளிதாக எடுத்துக்கொள்ளமாட்டார். தேவனை நேசிப்பதாகக் கூறி, அவருடைய பத்துப்பிரமாணங்களில் ஒன்றை பாரம்பரியத்தினால் அப்புறப்படுத்தின பரிசேயர்களை இயேசு கடிந்துகொண்டார். (மாற்கு 7:7-13).    

17) ஒய்வுநாளைக் கைக்கொள்ளுவது என்னை தனிப்பட்டவிதத்தில் பாதிக்குமா?

“நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்” – யோவான் 14:15; “ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்து தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்” – ரோமர் 14:12; “ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்” –யாக்கோபு 4:17; “ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்” – வெளி. 22:14; “தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும்” – வெளி. 14:12.

பதில்: ஆம் எவ்விதத்திலும் மெய்யான ஒய்வுநாளே உங்களுடைய ஒய்வுநாள். தேவன் உங்களுக்காக அதை சிருஷ்டிப்பிலே ஏற்படுத்தினார். நீங்கள் அவரை நேசிப்பீர்களானால், அதைக் கைக்கொள்ளுவீர்கள். ஏனெனில் அது அவருடைய கற்பனைகளில் ஒன்று! கற்பனையைக் கைக்கொள்ளாமல் அவரில் அன்பாயிருக்கிறேன் என்பது அன்பே அல்ல. (1 யோவான் 2:4). நீங்கள் ஒரு தீர்மானம் செய்யவேண்டும். உங்களால் அதை தவிர்க்கமுடியாது. ஒருவரும் அதற்கு சாக்குக் கொடுக்கமுடியாது. நீங்கள்தான் இந்த முக்கியமான காரியத்தில் தேவன் முன்பு நின்று பதில் கூறவேண்டும். தம்மை நேசித்து தமக்குக் கீழ்ப்படிய தேவன் உங்களிடம் இப்போது கேட்கிறார்.

18) ஒய்வுநாளைக் கைக்கொள்ளும் இயேசுவின் மாதிரியை பின்பற்ற நீ தீர்மானிக்கிராயா?

 உங்கள் பதில்: ___________________________________________________________

சிந்தனைக் கேள்விகள்

  1. ஒய்வுநாள் யூதர்களுக்கு மாத்திரம்தானே?

பதில்: இல்லை. “ஒய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது.” (மாற்கு 2:27) என்று இயேசு கூறினார். அது யூதர்களுக்கு மாத்திரமல்ல, மனிதக்குலம் அனைத்திற்கும், எங்குமிருக்கிற ஆண்களுக்கும் பெண்களுக்குமானது. ஒய்வுநாள் உண்டாக்கப்பட்டு, ஏறக்குறைய 2500 வருடங்கள் வரையிலும் யூதர் என்னும் ஒரு ஜாதியே இருந்திருக்கவில்லை.

  1. சீடர்கள் ஞாயிற்றுக்கிழமையை பரிசுத்த நாளாக ஆசரித்தார்கள் என்பதற்கு அப்போஸ்தலர் 20:7-12 ஆதாரமாக இல்லையா?

பதில்: வேதாகமத்தின்படி ஒவ்வொரு நாளும் சூரிய அஸ்தமனத்தில் துவங்கி அடுத்த சூரிய அஸ்தமனத்தில் முடிவடைகிறது. (ஆதியாகமம் 1:1, 5, 8, 13, 19, 23, 31; லேவியராகமம் 23:32). ஒரு நாளின் இருண்ட பகுதியே முதலாவது வருகிறது. எனவே ஒய்வுநாள் வெள்ளிக்கிழமை மாலை சூரிய அஸ்தமனத்தில் துவங்கி, சனிக்கிழமை மாலை சூரிய அஸ்தமனத்தில் முடிவடைகிறது. அப்போஸ்தலர் 20-ல் உள்ள இந்தக் கூட்டம், ஞாயிற்றுகிழமையின் இருண்ட பகுதியில் செய்யப்பட்டது: அல்லது இன்று நாம் அழைப்பதைப்போன்று சனிக்கிழமை இரவில் செய்யப்பட்டது. ஆங்கில புதிய மொழிபெயர்ப்பு, அப்போஸ்தலர் 20:7ஐ சனிக்கிழமை இரவு கூட்டத்தில் என்று மொழிபெயர்த்திருக்கிறது. அது ஒரு ஞாயிறுஇரவுக் கூட்டமாக நடுஇரவுவரைத் தொடர்ந்திருந்தது. பவுல் பிரிந்து செல்லவிருந்து, அந்த மக்களை தன்னுடைய மரணத்திற்குமுன்பு மற்றொரு முறை பார்க்கமுடியாது என்பதை நன்கு அறிந்திருந்ததால் (வசனம் 25) அந்த நேரம் வரை போதித்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. (எந்த ஒரு வாராந்திரகூட்டமும் இரவு முழுவதும் நடந்திருக்காது). பவுல் “மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்தார்.” அப்பம் பிட்குதலும் பரிசுத்தநாளைக்குறித்த குறிப்படையாளமல்ல. ஏனெனில் அவர்கள் அனுதினமும் அப்பம்பிட்டார்கள் (அப். 2:46). முதலாம் நாள் பரிசுத்தநாளென்றோ, ஆதிகால கிறிஸ்தவர்கள் அந்நாளை அவ்விதம் பார்த்தார்களென்றோ வேதவாக்கியத்தில் எவ்வித குறிப்பும் இல்லை. அதேபோல ஒய்வுநாள் மாற்றப்பட்டது என்பதைக்குறித்த சான்றும் இல்லை. மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்து மரித்து மீண்டும் உயிர்ப்பிக்கபட்ட ஐத்திகுவிற்கு நடந்த அற்புதத்தைச் சொல்லவே இந்தச் சம்பவம் பெரும்பாலும் குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும். எசேக்கியேல் 46:1ல் ஞாயிற்றுக்கிழமையை தேவன் ஆறு வேலைநாட்களில் ஒன்றாகச் சுட்டிக்காட்டுகிறார்.

  1. 1 கொரிந்தியர் 16:1, 2 வசணங்கள் ஞாயிற்றுப்பள்ளியின் காணிக்கையைக் குறித்து கூறவில்லையா?

பதில்: இல்லை. இங்கே பொது கூட்டத்தைக் குறித்த எந்த குறிப்பும் இல்லை. பணம் அவரவர் வீட்டில் தனியாக வைக்கப்படவேண்டும். யூதேயாவில் ஒரு பஞ்சம் வந்தது. (ரோமர் 15:26-28; அப். 11:26-30). பவுலார் ஆசியா மைனரில் இருந்த சபைகளுக்கு, பஞ்சத்தினால் அடிபட்ட சகோதரரை தாங்கும்படியாக இவ்விதம் எழுதுகிறார். இந்த கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒய்வுநாளைப் பரிசுத்தமாக ஆசரித்துவந்தனர். எனவே ஒய்வுநாள் முடிந்தபிறகு, ஞாயிற்றுக்கிழமை காலையில் (அன்றுதான் மக்கள் தங்களுடைய ரசீதுகளைக் கட்டி கணக்குகளை முடித்தனர்) தேவையிலிருக்கும் சகோதரருக்கு தான் வரும்போது தன் கையில் எடுத்துச் செல்ல வசதியாக ஒரு பகுதியை ஒதுக்கி வைக்கும்படி ஆலோசனை கூறினார். இது பொதுவாகவும் வைக்கப்படவில்லை. அவரவர் தனித்தனியாக வைக்கவேண்டும். அல்லது ஸ்பானிய வேதாகமம் குறிப்பதுபோல் அவரவர் வீட்டில் வைக்கவேண்டும். மீண்டும் ஞாயிற்றுக்கிழமையை பரிசுத்த நாளாக குறிப்படும் எந்த குறிப்பும் இல்லை என்பதை கவனியுங்கள். வேதாகமம் எவ்விடத்திலும் ஞாயிறு ஆசரிப்பை கோரவில்லை.

  1. ஆனால் கிறிஸ்துவிற்குப்பிறகு காலம் தொலைந்துபோய் வாரங்களின் நாட்கள் மாற்றப்படவில்லையா?

பதில்: இல்லை. நம்பக்கூடிய களஞ்சியங்களும், ஒத்துப் பார்க்கக்கூடிய புத்தகங்களும் நாம் இன்றைக்கு ஆசரிக்கும் ஏழாம் நாளே இயேசு ஆசரித்த ஏழாம் நாள் என்பதை தெளிவுபடுத்துகின்றன. இது ஒரு ஆராய்ச்சியின் பதில்.

  1. ஆனால் உயிர்த்தெழுதலை கனப்படுத்தும்படி சீடர்கள் ஞாயிற்றுக்கிழமையை நிலை நாட்டினதன் பதிவாக யோவான் 20:19 இல்லையா?

பதில்: இல்லை! அந்த நேரத்தில் உயிர்த்தெழுதல் நடந்துவிட்டது என்பதைக்கூட சீடர்கள் அறியாதிருந்தனர் (மாற்கு 16:14). அவர்கள் “யூதர்களுக்குப் பயந்ததினால்” ஒன்றுகூடி கதவுகளைப் பூட்டியிருந்தனர். இயேசு அவர்கள் நடுவே வந்தபோது, “…உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமற் போனதினிமித்தம் அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்தும் இருதய கடினத்தைக்குறித்தும், அவர்களைக் கடிந்துகொண்டார்.” ஞாயிற்றுக்கிழமையை பரிசுத்த நாளாக அவர்கள் பார்த்தனர் என்பதற்கான எதுவும் அங்கில்லை. புதிய ஏற்பாட்டில் எட்டு வசனங்கள் வாரத்தின் முதல்நாளைக்குறித்துப் பேசுகின்றன. அதில் எதுவும் அதை ஒய்வுநாள் என்று கூறவில்லை.

  1. கொலோசெயர் 2:14-17 ஏழாம் நாள் ஒய்வுநாளை ஒழிக்கவில்லையா?

பதில்: இல்லவே இல்லை. அவைகள் வரவிருந்த காரியங்களுக்கு நிழலாயிருந்த ஒய்வுநாட்களையே குறிப்பிட்டன. ஏழாம்நாள் ஒய்வுநாளை அல்ல. வருடத்தில் ஏழு பரிசுத்த நாட்கள் அல்லது விடுமுறை நாட்கள் இருந்தன. அவை முற்கால இஸ்ரவேலில் ஒய்வுநாட்கள் என்று அழைக்கப்பட்டன. இவை “கர்த்தருடைய ஒய்வுநாட்களை” தவிர (லேவியராகமம் 23:38) அல்லது ஏழாம் நாள் ஒய்வுநாளைத்தவிர கூட்டப்பட்ட நாட்கள். இவை அனைத்தும் சிலுவையை சுட்டிக்காட்டி சிலுவையோடு முடிவடைந்தன. தேவனுடைய ஒய்வுநாளான ஏழாம்நாள் ஒய்வுநாள் பாவம் நுளைவதற்கு முன்பாக உண்டாக்கப்பட்டதால், பாவத்திலிருந்து கிடைக்கும் மீட்பை எவ்விதத்திலும் சுட்டிக்காட்டவில்லை. எனவேதான் கொலோசெயர் 2, நிழலாயிருந்த ஒய்வுநாட்களை குறிப்பாக வேறுபடுத்திக் காண்பிக்கின்றன. ஒழிக்கப்பட்ட இந்த வருடாந்தர ஏழு ஒய்வுநாட்களும் லேவியராகமம் 23ல் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.

  1. ரோமர் 14:5ன்படி எந்த நாளை நாம் ஆசரிக்கிறோம் என்பது தனிப்பட்ட கருத்து இல்லையா?

பதில்: ரோமர் 14 முழுவதும் ஒருவரையொருவர் நியாயந்தீர்ப்பதைக்குறித்து பேசுவதைக் கவனியுங்கள் (வசனம் 4, 10, 13). அந்கு இருக்கும் கருத்து தேவனுடைய மாபெரும் சன்மார்க்கப் பிரமாணத்தின் ஏழாம் நாள் ஒய்வுநாளைக் குறித்ததல்ல. மாறாக, சடங்குப் பிரமாணத்திலிருந்த வருடாந்தர பண்டிகை நாட்களைக் குறித்தவை. யூத கிறிஸ்தவர்கள் இந்த பண்டிகை நாட்களை ஆசரிக்காத புறஜாதிக் கிறிஸ்தவர்களை குற்றப்படுத்தினர். ஒருவரையொருவர் நியாயந்தீர்க்கவேண்டாம் என்றும், சடங்குப் பிரமாணம் முடிவிற்கு வந்தது என்றுமே பவுலார் சொல்லுகிறார்.

கேள்விகள்

1) இயேசு: (1)

( ) ஞாயிற்றுக்கிழமையை பரிசுத்தமாக ஆசரித்தார்.

( ) ஏழாம் நாள் ஒய்வுநாளை பரிசுத்தமாக ஆசரித்தார்.

( ) அடித்தடுத்த நாளை பரிசுத்த நாளாக ஆசரித்தார்.

2) கர்த்தருடைய நாள்: (1)

( ) வாரத்தின் முதல்நாளாகிய ஞாயிற்றுக்கிழமை.

( ) வாரத்தின் ஏழாம்நாளாகிய ஒய்வுநாள்.

( ) நான் ஆசரிக்கிற எந்த நாளாகவும் இருக்கலாம்.

3) ஒய்வுநாள்: (1)

( ) யூதர்களுக்காக மாத்திரம் உண்டாக்கப்பட்டது.

( ) தேவனால் சிருஷ்டிப்பில் எக்காலத்திலுமுள்ள அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் உண்டாக்கப்பட்டது.

( ) பழைய ஏற்பாட்டுக் காலத்தில் வாழ்ந்த மக்களுக்காக மாத்திரம் உண்டாக்கப்பட்டது.

4) ஒய்வுநாளை ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றியது: (1)

( ) கிறிஸ்து.

( ) சீடர்கள்.

( ) தவறாக நடத்தப்பட்ட மனிதர்கள்.

5) ஒய்வுநாள் கட்டளையை உள்ளடக்கிய தேவனுடைய பிரமாணம்: (1)

( ) இன்று செயல்பாட்டில் இல்லை.

( ) ஒருபோதும் மாறாது. இன்றும் நம்மைக் கட்டுப்படுத்துகிறது.

( ) கிறிஸ்துவின் மரணத்தில் முடிவடைந்தது.

6) புதிய ஏற்பாட்டு சபையில் மனமாறிய புறஜாதிகளும் அப்போஸ்தலரும்: (1)

( ) ஞாயிற்றுக்கிழமையை பரிசுத்த நாளாக ஆசரித்தனர்.

( ) நீங்கள் உண்மையாக மாத்திரம் இருந்தால்போதும், எந்த நாளையும் ஆசரிக்கலாம் என்று போதித்தனர்.

( ) ஒய்வுநாளை ஆசரித்தனர்.

7) ஒய்வுநாள்: (1)

( ) சிலுவையில் முடிவடைந்தது.

( ) கிறிஸ்துவின் இரண்டாம் வருகையோடு முடிவடையும்.

( ) அனைத்து யூகங்களிலுமிருந்து மீட்கப்பட்ட மக்களால் தேவனுடைய புதிய இராஜ்யத்திலும் ஆசரிக்கப்படும்.

8) ஒய்வுநாள் தேவனுடைய கற்பனையின் ஒரு பகுதியாக இருப்பதால் அதை மீறுவது: (1)

( ) கிறிஸ்துவின் மரணத்திற்குப்பிறகு அதில் கருத்து ஒன்றுமேயில்லை.

( ) பரிசுத்தக் காரியமாகையால் அதை மீறுவது மிகவும் ஆபத்தான பாவம்.

( ) இன்றைக்கு முக்கியமானதல்ல.

9) இயேசுவை மெய்யாகவே நேசித்துப் பின்பற்றுகிறவர்கள்: (1)

( ) இயேசு செய்ததைப்போல ஒய்வுநாளைக் கைகொள்ளுவார்கள்.

( ) அடுத்தடுத்த நாளை பரிசுத்த நாளாக ஆசரிப்பார்கள்.

( ) ஞாயிற்றுக்கிழமையை பரிசுத்தநாளாக கைக்கொள்ளுவார்கள்.

10) ஒய்வுநாள்: (1)

( ) வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிற்றுக்கிழமை.

( ) வாரத்தின் ஏழாம் நாளாகிய சனிக்கிழமை.

( ) தேவனுக்கு அர்ப்பணிக்கிற எந்த நாளாகவும் இருக்கலாம்.

11) ஞாயிறு ஆசரிப்பு: (1)

( ) வேதாகமத்தில் முன்சொல்லப்பட்டிருந்த ஒரு கண்டுபிடிப்பு.

( ) இன்றைக்கான தேவனுடைய திட்டம்.

( ) கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் துவங்கி பெந்தெகொஸ்தேயில் அங்கிகரிக்கப்பட்ட ஒன்று.

12) ஒயவுநாளைக் கைக்கொள்ளுவது: (1)

( ) கிரியையினால் இரட்சிப்படைவதன் அடையாளம்.

( ) யூதர்களுக்கு மாத்திரமே முக்கியமான ஒன்று.

( ) சிருஷ்டிப்பு மற்றும் மீட்பைக்குறித்த இரட்டிப்பான அடையாளம்.

13) ஒய்வுநாளைக் கைக்கொள்ளூம் இயேசுவின் மாதிரியை பின்பற்ற நான் தீர்மானிக்கிறேன்.

( ) ஆம்.

( ) இல்லை.