“நினைப்பாயாக” என்று தேவன் ஏன் சொன்னார்?
CONTENTS
| அவர் என்ன செய்யமுடியும்? |
| சிருஷ்டிப்பு – தேவனுடைய ஆட்சி அதிகாரத்தின் அடையாளம் |
| மனமாற்றம் - சிருஷ்டிப்பின் வல்லமை இன்னும் கிரியை செய்துவருகிறது |
| அதிகாரத்தின் மீது போர் |
| பிரமாணத்தின் சோதனைக்களம் |
| போலியான வாதம் 1 – ஓய்வுநாள் யூதர்களுக்காக மட்டுமே உண்டாக்கப்பட்டது |
| போலியான வாதம் 2 – ஏழு நாளில் ஏதேனும் ஒரு நாளை ஆசரிக்கவும் |
| போலியான வாதம் 3 – உண்மையான ஏழாம் நாளை நம்மால் கண்டுபிடிக்கமுடியாது |
| போலியான வாதம் 4 – ஓய்வுநாள் - எகிப்திலிருந்து பெற்ற விடுதலைக்கான நினைவுகூருதல் மட்டுமே |
| போலியான வாதம் 5 – உயிர்த்தெழுதலை கனப்படுத்தும்படி ஞாயிறை ஆசரிக்கவும் |

அத்தியாயம் 1
அவர் என்ன செய்யமுடியும்?
கடவுள் நம்பிக்கையைக் குறித்த நவீனகால சந்தேகங்களில் மிகப்பிரபலமான ஒன்று சிருஷ்டிப்பின் உண்மையை நிராகரிப்பதாகும். இதை எண்ணற்ற மதிப்பாய்வுகளும் கேள்வித்தாள்களும் உறுதி செய்திருக்கின்றன. இதைக் குறித்தப் பேட்டி எடுக்கப்பட்டபோது, 72 சதவிகித ஊழியர்கள் வேதத்தில் எழுதியிருக்கிறபிரகாரம் தேவன் உண்மையாகவே வார்த்தையால்தான் உலகத்தைப் படைத்தார் என்பதைக் குறித்த தங்களுடைய சந்தேகங்களை வெவ்வேறு அளவுகளில் வெளிப்படுத்தினார்கள். இந்த அடிப்படையான அவநம்பிக்கையே உலகளாவிய கிறிஸ்தவ சமுதாயத்தின் மற்ற அஸ்திபாரக் கோட்பாடுகளான “கன்னியின் வயிற்றில் பிறத்தல்” மற்றும் “பாவநிவிர்த்தி” போன்ற சத்தியங்களை நிராகரிக்க வழிவகுத்தது.
தமது கட்டளையினால் சிருஷ்டித்ததைக் குறித்த ஆதியாகமப் பதிவுகளால் பிற்காலத்தில் அநேக சர்ச்சைகள் உருவாகும் என்று தேவன் ஏற்கனவே வெளிப்படையாக எதிர்பார்த்தார் என்பதுபோன்ற கருத்து நமக்கு ஆச்சரியத்தைத் தருகிறது.
மலைக்கவைக்கும் அண்டசராசரத்தின் கூறுகளை தம்முடைய கட்டளையால் உருவாக்கியதை தேவன் உரிமைக்கோருவதால் - ஆம், நிச்சயமாகவே இந்தக் கருத்தைக் குறித்த சந்தேகங்களும் அவநம்பிக்கைகளும் மக்களிடையே காணப்படும் என்பதில் சந்தேகமேதுமில்லை. மேலும், இதை வேதத்திலிருந்து படித்தவர்களும் விசுவாசித்தவர்களும்கூட இனி எழும்பவிருக்கும் கோடிக்கணக்கான பொய்யான தெய்வங்களுடைய செல்வாக்கினால் ஏற்படவிருக்கும் குழப்பத்திற்கடியில் இந்த அற்புதமான உண்மையை சீக்கிரம் மறந்துபோவார்கள்.
எனவே, அவருடைய வல்லமையான சிருஷ்டிப்பின் செயல்பாட்டைக் குறித்த அறிவைப் பாதுகாக்க அசாதாரணமான ஒன்றை தேவன் செய்யவேண்டியிருந்தது. வானத்தையும் பூமியையும் வார்த்தையால் உண்டாக்கிய அந்த வல்லமை மற்ற அனைத்துப் பொய்யான தெய்வங்களையும் அவைகளின் வஞ்சகமான கூற்றுகளிலிருந்தும் அவரை வேறுபடுத்திக் காண்பிக்கும். நித்தியத்திற்கும் அவர் ஸ்தாபித்த அவருடைய தெய்வீக வல்லமையை சிருஷ்டிப்பின் வாரமானது நமக்கு தொடர்ந்து சுட்டிக்காண்பித்துக்கொண்டேயிருப்பதற்கு அவர் என்ன செய்யமுடியும்?
அத்தியாயம் 2
சிருஷ்டிப்பு - தேவனுடைய ஆட்சி அதிகாரத்தின் அடையாளம்
அனைவரையும் இணங்கவைக்கும் வெளிப்பாடான சிருஷ்டிப்பின் வல்லமையை ஒரு நினைவுச்சின்னமாக்க, தேவன் சிருஷ்டிப்பின் வாரத்தில் ஏழாம் நாளைப் பரிசுத்த நாளாக, அதில் ஓய்ந்திருக்கவும், அதை நினைவில்கொள்ளவும், பிரித்தெடுத்தார். இது தேவனுடைய ஆட்சி அதிகாரத்திற்கு பெருமளவில் ஒரு பாதுகாப்பாக அமைவதுடன் - உண்மையுள்ள ஒரே தேவனாக அவர் ஆட்சி செய்யும் அவருடைய உரிமையின் அடையாளமாகவும் இருக்கிறது. அதே வேளையில், வானத்தையும் பூமியையும் உண்டாக்காத போலியான ஒவ்வொரு தெய்வத்தின் வெளிப்பாடுகளையும் அழித்து இந்த நாள் என்றென்றைக்கும் நிலைநிற்கும்.
பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகளுடைய எழுத்துக்கள் தேவனுடைய அசாதாரணமான படைப்பின் வல்லமைகளைக் குறித்த தொடர்ச்சியான நினைப்பூட்டுதல்களாகும். தாவீது, “சகல ஜனங்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர்” என்று சங்கீதம் 96:5ல் எழுதியுள்ளார். எரேமியா கூறுவதாவது: “கர்த்தரோ மெய்யான தெய்வம்; அவர் ஜீவனுள்ள தேவன்…வானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள், பூமியிலும் இந்த வானத்தின்கீழும் இராதபடிக்கு அழிந்துபோகும்…அவரே பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கினார்…” எரேமியா 10:10-12.
சிருஷ்டிப்பின் சத்தியத்தை அனைவரும் விசுவாசிக்கும்படி, இந்த உலகத்தின் கண்களுக்கு முன்பாக ஒரு தெளிவான, தீவிரமான, துரித நிலையைக் குறித்து தேவனே செயல்முறை விளக்கமளித்தாரா? ஆம், எந்த அளவிற்கு என்று பார்த்தால், உயிருள்ள ஒவ்வொரு ஆத்துமாவையும் கட்டுப்படுத்தும் கடமையாகிய ஓய்வுநாள் ஆசரிப்பை அவருடைய மாபெரும் ஒழுக்கப்பிரமாணத்தின் மையத்தில் (இருதயத்தில்) எழுதி, அதைப் பரிசுத்தமாக ஆசரிக்கச்செய்து, இவ்வாறு அவருடைய தெய்வீக வல்லமையை அனைவரும் ஒப்புக்கொள்ளச் செய்தார். அவருடைய பூரணமான சொந்தக் குணத்தை வெளிப்படுத்துகின்ற அவருடைய ஆட்சியின் அஸ்திபாரத்தை உருவாக்குகின்ற, அந்த நித்திய கோட்பாடுகளுக்கிடையே, தேவன் இவ்வாறு எழுதினார்: “ஓய்வுநாளை பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக. ஆறுநாளும் நீ
வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக; ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும்,உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம். கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே
ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்” யாத்திராகமம் 20:8-11.
சர்வவல்லமையுள்ள படைப்பின் வேலையை உயர்த்திக்காட்டும் எப்படிப்பட்ட ஒரு செயல்பாடு அது! ஒவ்வொரு வாரமும் பூமி தன்னுடைய அச்சில் சுழலும்போது, ஓய்வுநாளைக் குறித்த நினைப்பூட்டுதல், வார்த்தையால்தான் அனைத்தும் சிருஷ்டிக்கப்பட்டது என்ற செய்தி உலகம் முழுவதும் பயணித்து, ஒவ்வொரு ஆண், பெண் மற்றும் குழந்தையை சென்றடையும். “நினைப்பாயாக” என்று தேவன் ஏன் சொன்னார்? ஏனெனில், ஓய்வுநாளை மறப்பதென்பது சிருஷ்டிகரையே மறப்பதாகும்.
அத்தியாயம் 3
மனமாற்றம் - சிருஷ்டிப்பின் வல்லமை இன்னும் கிரியை செய்துவருகிறது
உலகம் சிருஷ்டிக்கப்பட்டது என்ற பதிவுகளுக்கு இணையாக, தேவனுடைய வல்லமையானது மனிதனுடைய இருதயத்தையும் புதிதாக சிருஷ்டிக்கமுடியும் என்றப் பதிவையும் நாம் காண்கின்றோம். சந்தேகத்திற்கிடமின்றி, இந்த இரு செயல்முறைகளும் சர்வவல்லமையான ஒரே ஆதாரத்திலிருந்துதான் வெளிப்படுகின்றன. மனமாற்றத்தை ஏற்படுத்த அல்லது புது இருதயத்தை உருவாக்கத் தேவைப்படும் அதே வல்லமைதான் வார்த்தையினால் ஒன்றைப் பெயர்ச்சொல்லி அழைத்து உருவாக்கவும் தேவைப்படுகிறது. அப்போஸ்தலனாகிய பவுலும், “மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்” என எபேசியர் 4:24ல் கூறுகிறார். மறுபிறப்பின் அனுபவமானது நீதிமானாக்கப்பட்ட விசுவாசியின் அடிப்படையான அடையாளம் என்பதால், அனைத்துப் பொய்யான தெய்வங்களிலிருந்து உண்மையானத் தேவனை வேறுபடுத்திக்காட்டும் சிருஷ்டிப்பின் வல்லமையைக் குறித்து வேதாகம எழுத்தாளர்களும் தொடர்ச்சியாக நினைப்பூட்டிக்கொண்டேயிருக்கிறார்கள் என்பதில் ஆச்சரியமில்லை.
உலகத்தின் சிருஷ்டிப்பு என்னும் உண்மையைச் சுட்டிக்காட்டுவதற்கு அப்பால் தேவன், “நான் தங்களைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று அவர்கள் அறியும்படிக்கு, எனக்கும் அவர்களுக்கும் அடையாளமாய் இருப்பதற்கான என் ஓய்வுநாட்களையும் அவர்களுக்குக் கட்டளையிட்டேன்” என்னும் வார்த்தைகளையும் எசேக்கியேல் 20:12ல் பேசினார்.
அதாவது, பரிசுத்தமாக்கப்பட்ட ஓய்வுநாளே பரிசுத்தமாக்கப்பட்ட மக்களுக்கான அடையாளமாகவும் இருக்கவேண்டியதாயிருந்தது என்பதை நாம் கவனத்தில்கொள்ளவேண்டும். “பரிசுத்தமாக்குதல்” என்ற வார்த்தைக்கான அர்த்தம், பரிசுத்தமான பயன்பாட்டிற்காக பிரித்தெடுத்தல் (தேவனுடைய சிருஷ்டிப்பின் வல்லமையைக் குறித்து பேசியநாள்) என்பதாகும். அதாவது, மறுபிறப்பு மற்றும் மறுசிருஷ்டிப்பின்மூலம் மக்களை ஒரு பரிசுத்தமான பயன்பாட்டிற்காக தேவனால் பிரித்தெடுக்கமுடியும் என்பதற்கான நினைப்பூட்டுதலாகவும் அந்த நாள் இருந்தது.
இந்த சத்தியத்தின் வெளிச்சத்தில் பார்த்தால், ஏன் சாத்தானானவன் தொடர்ச்சியான, துணிச்சலான போரை ஏழாம் நாளாகிய ஓய்வுநாளுக்கு விரோதமாகத் தொடுத்துக்கொண்டேயிருக்கிறான் என்பதை மிகவும் எளிதாகப் புரிந்துகொள்ளமுடியும். ஏறத்தாழ 6000 ஆண்டுகளாக, பாரம்பரியம், தவறான தகவல்கள் மற்றும் ஆவிக்குரிய வைராக்கியமென்னும் பெருமையின்மூலம் தேவனுடைய அதிகாரத்தின் விசேஷமான அடையாளமான அவருடைய ஓய்வுநாளை அழிக்க அவன் வேலை செய்துகொண்டிருக்கின்றான்.
தேவனுடைய ஆட்சிசெய்யும் உரிமையின் அடையாளமாக, சாத்தான் தேவனுடைய இடத்தை எடுத்துக்கொள்ளப்போவதாகக் கூறிய அவனுடைய மேன்மைப்பாராட்டலுக்கு ஓய்வுநாள் ஒரு சவாலாக அமைந்துள்ளது. “தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்… உன்னதமானவருக்கு ஒப்பாவேன்…” ஏசாயா 14:13, 14
என்று பகைவன் கூறினான். தன்னை தொழவேண்டும் என்று சாத்தான் விரும்பினான். இதை நிறைவேற்றுவதற்காக, தேவன்தான் உண்மையான அதிகாரி என்னும் உரிமைக்கோரலை அவன் ஒன்றுமில்லாமல் போகச்செய்யவேண்டும். தேவனுடைய அதிகாரமானது அவர்தான்
சிருஷ்டிகர் என்னும் அவருடைய உரிமையின்மீது நிலைபெற்றிருந்தது, மேலும், ஓய்வுநாளானது அந்த அதிகாரத்தின் அடையாளமாக இருந்தது. இந்த ஓய்வுநாளை அழித்துப்போடுவதன்மூலம், பொய்யான அதிகாரத்தை உரிமைக்கோரும் பொய்யான ஒரு அரசாங்கத்தையும், அதன் அடையாளச்சின்னமாக ஒரு பொய்யானத் தொழுகையின்
நாளையும் அமைப்பதற்கு சாத்தானால் ஒரு வழியை உருவாக்கமுடியும் என்று அவன் நினைத்தான்.
அத்தியாயம் 4
அதிகாரத்தின் மீது போர்
கடந்துபோன யுகங்களை நாம் திரும்பிப்பார்த்தால், கிறிஸ்துவுக்கும் சாத்தானுக்கும் இடையே வெளிப்பட்ட அந்த மாபெரும் ஆன்மீகப் போராட்டம் நமக்கு வியப்பைத் தரும். ஏனெனில், இந்தப் போட்டியானது எப்போதும் அதிகாரத்தை முன்வைத்தே நடத்தப்பட்டுவந்ததை நாம் காணமுடியும்.
தேவனே சிருஷ்டிகர் என்னும் உரிமைக்கோரலுக்கு தீமையானவனின் திட்டமானது இருகூர்முனைத் தாக்குதலாக இருந்தது. அதாவது, முதலில் இயற்கை விதிகளுக்கு மாறுபட்ட பரிணாமக்கொள்கையையும், அதனுடன் இணைக்கப்பட்ட மனிதநேயக் கோட்பாட்டையும் உபயோகித்தான். இரண்டாவதாக, சிருஷ்டிப்பின் வல்லமையின் அடையாளமான ஏழாம்நாளாகிய ஓய்வுநாள் ஆசரிப்பை அழிப்பதற்காக யுகங்கள் நெடுகிலும் முயற்சிகள் செய்தான்.
மற்ற எல்லா எதிர்பார்ப்புகளுக்கும் அப்பால், தேவனுடைய ஆளுகையின் அதிகாரத்தை இழிவுபடுத்துவதற்காக எடுக்கப்பட்ட இவ்வகையான நரகத்தின் ஒவ்வொரு முயற்சியும் கசப்பான வெற்றியையே கொடுத்திருக்கிறது என்றுதான் கூறமுடியும். டார்வினுடைய பரிணாமக்கொள்கை என்னும் இயற்கை சார்ந்த கோட்பாட்டினால் கோடிக்கணக்கான மக்கள் இறைநம்பிக்கையை சந்தேகிக்கிறவர்களாகவும், இறைநம்பிக்கையற்றவர்களாகவும் மாறினர். பாவத்தினிமித்தம் ஏற்படும் ஒரு மனிதனுடைய எந்த விழுகைக்கும் ஓர் இரட்சகர் தேவை என்னும் கருத்தை நம்ப மறுத்ததால், பரிணாமக்கொள்கையானது ‘இரட்சிப்பின் திட்டம்’ மற்றும் ‘சிருஷ்டிப்பு’ போன்ற சத்தியங்களை வெகுவாகத் தாக்கியது.
அதைப்போலவே, ஓய்வுநாள்மீதான சாத்தானின் தாக்குதல்கள் அனைத்தும், தேவன் அனைத்துக் கற்பனைகளையும் கீழ்ப்படிவதற்கு சோதனையாக வைத்திருந்த அந்த ஒரு கற்பனையை மீறும்படிக்கு கோடிக்கணக்கானோரை வழிநடத்தியது.
உண்மையான தேவனுக்கு முற்றிலுமாக அர்ப்பணித்திருந்த கோடிக்கணக்கான மக்களின்
மெய்விசுவாசத்தை கவிழ்ப்பதற்கு, ஒரு தலைசிறந்த தந்திரமானத் திட்டம் சாத்தானுக்கு
தேவைப்பட்டது. அதற்கு நேரமெடுக்கும். ஏனெனில் நூற்றாண்டுகள் நெடுகிலும் அவன் உபயோகித்த, மனங்களை திசைத்திருப்பக்கூடிய வஞ்சனையானத் திட்டமாக அது இருக்கும். தேவனுக்கு ஊழியஞ்செய்யும் ஒருவர் திடீரென்று நாடகபாணியில் சாத்தானுக்கு ஊழியஞ்செய்ய முடியாது. அதாவது, கீழ்ப்படிதலை ஆன்மீக உபாயத்தந்திரத்தின்மூலம் பெறுவதே அவனுடைய திட்டமாகும். பவுல் இதை எழுதுவதற்கு முன்னமே, “மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?” என்ற ரோமர் 6:16ன் கோட்பாட்டை சாத்தான் நன்கு அறிந்திருந்தான்.
பற்றுறுதி மற்றும் தொழுகையின் உயரிய நிலை கீழ்ப்படிதலாகும். தேவனுக்கு நாம் கீழ்ப்படியாமல் இருக்க ஒரு பிரச்சனையை உருவாக்கிவிட்டால், அவனுடைய நோக்கத்திற்கு மக்களைக் கீழ்ப்படியப்பண்ணுகிற வாய்ப்பை, அதாவது அவர்களுடைய கீழ்ப்படிதலை அவனால் வெல்லமுடியும். இந்த வஞ்சனையானப் போட்டியானது தேவனுடைய கற்பனையை முன்னிட்டே நடைபெறும். ஏனெனில், பிரமாணமே தேவனுடைய அரசாங்கத்தின் அஸ்திபாரமாக அமைந்துள்ளது. கற்பனையின் மேலுள்ள மக்களின் நம்பிக்கையை அழித்து, அதற்கு பதிலாக மக்களை எவ்வாறு அவனுக்கு கீழ்ப்படியப்பண்ணமுடியும்? அப்படியானால் எந்தக் கட்டளையை அவன் தாக்கவேண்டும்? வெளிப்படையாக, எந்தக் கற்பனை தேவனுடைய படைப்பின் வல்லமை மற்றும் ஆட்சிசெய்யும் அவரது உரிமையை சுட்டிக்காட்டுகின்றதோ, அதைத்தானே. உண்மையுள்ள தேவன் யார் என்று அடையாளம் காணக்கூடிய விதத்தில் அமைந்துள்ள, அந்த அடையாளச்சின்னமான ஓய்வுநாளே சாத்தான் எப்பொழுதும் வெறுக்கக்கூடிய ஒன்றாகும். பழைய ஏற்பாட்டில், அவருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிவதில் ஓய்வுநாளையே இஸ்ரவேலரின் விசுவாசத்தை பரிசோதிப்பதற்கான சோதனைக்களமாக தேவன் தேர்வுசெய்திருந்தார்: “…அதினால் அவர்கள் என் நியாயப்பிரமாணத்தின்படி நடப்பார்களோ நடக்கமாட்டார்களோ என்று அவர்களைச் சோதிப்பேன்” (யாத்திராகமம் 16:4).
அத்தியாயம் 5
பிரமாணத்தின் சோதனைக்களம்
பத்துக் கற்பனைகளில் சோதனைக்களமாக தேவன் ஓய்வுநாளை வைத்ததினால், யுகங்கள் நெடுகிலும் அந்தக் கற்பனையையே ஒரு மகாப்பெரிய பிரச்சனையாக வைத்திட சாத்தான் தீர்மானித்தான். ஓய்வுநாளை அழிப்பதன்மூலம், பொய்யானத் தொழுகைநாளுக்கான கீழ்ப்படிதலை உரிமைக்கோரும் அவனது மாபெரும் திட்டத்தை அமுலுக்கு கொண்டுவர அ ன் ஆயத்தமாக இருப்பான். மெதுவாக அஞ்ஞான செல்வாக்குகளை ஏற்றுக்கொண்ட, சமரசம் செய்யப்பட்ட கிறிஸ்தவத்தின் பெலவீனத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதனால், சாத்தான் அவனது மாபெரும் திட்டத்தை – உலகளாவிய சபை மற்றும் அரசியல் - என்ற அமைப்பிற்கு அடிபணியும்படி, இரக்கமின்றி அவனது பொய்யானத் தொழுகைமுறையை ஏற்படுத்துவான்.
ஆயிரம் வருடங்களுக்கு மேலாக, அஞ்ஞான சக்ரவர்த்தியான கான்ஸ்டன்டைன் பேரரசனுடைய மனமாற்றம் துவக்கி, மருளவிழுகையின் இருள்சு+ழ்ந்த சரித்திரமானது வெளிப்படுத்தப்பட்டது.
கிறிஸ்தவப்போர்வையில் இருந்த அந்தப் புதிய கிறிஸ்தவ சக்ரவர்த்தியின் முதல் செயல்பாடே ஓய்வுநாள் ஆசரிப்பிற்கு எதிரான ஒரு சட்டத்தை உருவாக்கி, ஒரு திடமான விடுப்புநாளை அஞ்ஞான சு+ரிய வழிபாட்டிற்காக அர்ப்பணித்து, வாரத்தின் முதலாம் நாளில் ஓய்வு தேவை என்ற மற்ற சட்டங்களை இயற்றுவதாக இருந்தது.
அநேகருடைய மரண ஓலங்களின்மீது இயற்றப்பட்டு, மிக நேர்த்தியாகப் பதிவு செய்யப்பட்ட போப்பு சபையின் ஆலோசனைகளின் சரித்திரத்தை இப்போது நாம் தியானிக்கப்போவதில்லை. திறந்த மனதுடன் இதைக்குறித்த உண்மைகளை பதிவேடுகளிலிருந்து ஆராயநினைப்பவர்களுக்கு அவை மிகவும் வெளிப்படையானவைகளாகும். நான்காம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளில், வேதாகமத்தின் உண்மையான ஓய்வுநாளைப் புரட்டிப்போட்ட போப்பு சட்டத்தின் அடிப்படையில் வந்த வாரத்தின் முதலாம் நாளானது கனப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்பாராதவிதமாக, தப்பெண்ணங்களும், பொய்யானத் தகவல்களும்
இந்தத் தவறான, கட்டுப்படுத்தும் சரித்திரச் சான்றுகளைக் குறித்து ஆராயவிடாமல் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தங்கள் கண்களை மூடிக்கொள்ளச் செய்தது. அவர்களுடைய தப்பெண்ணங்களுக்கான வேர்களை கண்டறிவது மிகவும் கடினமான ஒன்றல்ல. சாத்தான் தன்னுடைய எதிர்கொள்கை அமைப்பில் உண்மையான ஓய்வுநாள் சுலபமாக
நிராகரிக்கப்படும்படி மிக நீண்டகாலமாக வேலை செய்திருந்தான். யுகங்கள் நெடுகிலும் அவனுடைய பொய்யானத் தொழுகை நாளுக்கு கீழ்ப்படிவதற்கான நுட்பமான தொடர் பொய் வாக்குவாதங்களை உயர்த்திப்பிடிப்பதில் அவன் கைதேர்ந்தவனாகிவிட்டான். உண்மையான தேவனை அடையாளம் காட்டும் ஓய்வுநாளை அவன் இன்னும்
வெறுக்கிறான்.
ஏழாம் நாள் ஓய்வுநாள் குறித்ததான எதிர்தாக்குதல்களை நாம் வெளிப்படுத்தும்போதுதான், ஏன் கோடிக்கணக்கான மக்கள் ஒரு வேதாகமச் சான்றுகூட இல்லாத, வாரத்தின் முதலாம் நாளை தொடர்ந்து ஆசரித்து வருகிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளமுடிகிறது. “ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே…யாதொரு வேலையும் செய்யவேண்டாம்” என்ற தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பனையின் பொருளைக் குறித்து ஒருவருக்கும் கருத்துவேறுபாடு இல்லாதிருந்தும் கோடிக்கணக்கானோர் இதற்கு கீழ்ப்படிவதில்லை. ஞாயிறு ஆசரிப்பு என்னும் அஞ்ஞான துவக்கத்தின் மூழ்கடிக்கும் சான்றுகள் பொய்யானவை என ஒருவரும் மறுக்கமுடியாது, எனினும் வெளிப்படையாகக் கட்டளையிடப்பட்டப் பத்துக்கற்பனைகளிலுள்ள ஓய்வுநாளுக்கு பதிலாக அதை கோடிக்கணக்கானோர் கைக்கொள்ளுகிறார்கள், ஏன்? நான் மறுபடியும் கூற விரும்புவது என்னவெனில், சாத்தானுடைய புத்திசாலித்தனமான வாதங்களுக்குள் இதற்கானக் காரணம் வேர்விட்டிருக்கிறது. அதாவது தேவனுடைய பரிசுத்த ஓய்வுநாளைக்குறித்த தப்பெண்ணங்கள் என்னும் சு+ழ்நிலையானது உருவாக்கப்பட்டாயிற்று. இதைக்குறித்த போலியான வாதங்களை இப்பொழுது நாம் ஆராய்வோம்.
அத்தியாயம் 6
போலியான வாதம் 1 – ஓய்வுநாள் யூதர்களுக்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்டது
இந்தப் பொய்யானது, பெருந்திரளான கிறிஸ்தவர்கள் இதை “யூதர்களின் ஓய்வுநாள்” என்று அழைக்குமளவிற்கு மாபெரும் பலத்தைப் பெற்றது. ஆனால் இப்படிப்பட்ட ஒரு சொற்றொடரை நாம் வேதத்தில் எங்கேயும் காணமுடியாது. “தேவனுடைய ஓய்வுநாள்” என்று சொல்லப்பட்டிருக்கிறதே தவிர “யூதர்களின் ஓய்வுநாள்” என ஒருபோதும் சொல்லப்படவில்லை (யாத்திராகமம் 20:10). சீஷனான லூக்கா புதிய எற்பாட்டுக் காலத்து புறஜாதியாவார்; மேலும், அவர் எப்போதும் யூதர்களுக்குரியதையே குறிப்பிட்டுக் காட்டுவார்: அவர் “யூதர்களின் தேசம்,” “யூத ஜனங்கள்,” “யூதர்களின் நிலம்” மற்றும் “யூதர்களுக்கான
ஆலயம்” (அப்போஸ்தலர் 10:22; 12:11; 10:39, 14:1) என்று கூறியிருக்கிறார், ஆனால்
ஓய்வுநாளைக் குறித்து தொடர்ச்சியாக பேசியபோதும்கூட அவர் “யூதர்களின் ஓய்வுநாள்”
என்று ஒருபோதும் கூறியதில்லை.
“ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது” (மாற்கு 2:27) என்று கிறிஸ்து தெளிவாக உபதேசித்துள்ளார். தேவன் ஓய்வுநாளை உண்டாக்கியபோது, அந்தக் காலக்கட்டத்தில் ஆதாம் என்ற ஒரு மனிதன் மட்டுமே வாழ்ந்தார் என்பது ஓர் உண்மையாகும். உலகம் படைக்கப்பட்டபின் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு எந்த ஒரு யூதனும் உலகத்தில் இருந்ததில்லை; எனவே அது அவர்களுக்காக ஏற்படுத்தின ஒன்றாக இருக்கமுடியாது. தேவன் மனுக்குலம் முழுவதையும் குறிக்கக்கூடிய “மனிதன்” என்ற வார்த்தையை பொதுப்படையான அர்த்தத்திலே உபயோகித்தார். அதே வார்த்தையைத்தான் சிருஷ்டிப்பின்போதும், திருமணத்தை நிறுவியபோதும் பயன்படுத்தினார். ஓய்வுநாள் மனிதனுக்காகப் படைக்கப்பட்டதைப்போல மனுஷி மனுஷக்காகப் படைக்கப்பட்டாள். இப்படியிருக்க, திருமணம் யூதர்களுக்குமட்டுமே உரியது என நிச்சயமாக யாரும் நம்புவதில்லை.
திருமணம் மற்றும் ஓய்வுநாள் என்ற அழகான அசலான நிறுவனங்கள் பாவம் உலகத்திற்குள்
வருவதற்கு முன்னமே தேவனால் ஸ்தாபிக்கப்பட்டவையாகும். இவ்விரண்டும் மனிதனுக்காக உண்டாக்கப்பட்டன. இரண்டுமே சிருஷ்டிகருடைய விசேஷமான ஆசீர்வாதங்களைப் பெற்றிருந்தன. மேலும், ஏதேன் தோட்டத்தில் பரிசுத்தமாக்கப்பட்ட அதே விதத்தில் இவை தொடர்ந்து பரிசுத்தமானவையாகவே இருக்கும்.
காலத்தின் முதல் வாரத்தில் இயேசுவே ஓய்வுநாளை உண்டாக்கினார் என்பது ஆச்சரியமூட்டும் தகவலாகும். மேலும் அவர் “ஓய்வுநாளுக்கும் ஆண்டவராயிருக்கிறார்” என உரிமைக்கோருவதற்கும் ஒரு காரணம் இருக்கவே செய்தது (மாற்கு 2:28). அவரே ஓய்வுநாளுக்கு ஆண்டவர் என்றால், பின் ஓய்வுநாள் “கர்த்தருடைய நாளாக” இருக்கவேண்டும். வெளிப்படுத்தல் 1:10ன் பிரகாரம் யோவான் “கர்த்தருடைய நாளில்” தான் தரிசனம் கண்டார். அந்த நாள் ஓய்வுநாளாக இருக்கவேண்டும். வேதாகமத்தில், இந்த நாளே தேவனால் நியமிக்கப்பட்ட மற்றும் தேவனால் உரிமைக்கோரப்படும் நாளாகும். பத்துக் கற்பனைகளை எழுதுகையில், தேவன் இதை, “கர்த்தருடைய ஓய்வுநாள்” (யாத்திராகமம் 20:10) என்றே அழைத்தார். ஏசாயா புத்தகத்திலும், அவர் “ஓய்வுநாள், என் பரிசுத்தநாள்” (ஏசாயா 58:13) என்று மேற்கோளிட்டுள்ளார்.
ஆனால் உலகத்தைப் படைத்து, ஓய்வுநாளையும் உண்டாக்கின இந்த தேவன் இயேசு கிறிஸ்துவே என்பதில் நாம் கவனமற்று இருக்கக்கூடாது. “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை…அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும்
சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; (அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே
இருந்தது)” (யோவான் 1:1-3, 14) என்று யோவான் எழுதினார்.
இயேசுவை சிருஷ்டிகராக பவுல் தெளிவாக அடையாளம் கண்டார். “…(குமாரனாகிய) அவருக்குள்: அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது. ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது”
(கொலோசேயர் 1:13-16) என்று கூறினார்.
ஓய்வுநாளிலிருந்து இயேசுவைப் பிரிப்பது கிறிஸ்தவர்கள் செய்யும் ஒரு மிகப்பெரிய தவறாகும். ஏனெனில் அவரே ஓய்வுநாளின் ஆசாரியர், சிருஷ்டிகர், பரிசுத்தப்படுத்துகிறவர் மற்றும் வடிவமைப்பாளர் ஆவார். அந்த நாளுக்கென அவர் அளித்த ஆசிர்வாதத்தைத் தள்ளுபடி செய்வதென்பது அவருடைய அதிகாரத்தைப் புறக்கணிப்பதைப் போன்றதாகும்.
இந்த வாதமானது, சிருஷ்டிப்பிற்கு பின் ஓய்வுநாள் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு மட்டுமே இருந்தது என அநேகரை நம்பும்படி வழிநடத்தியது. ஆனால் இது உண்மையா? அதாவது, மனித குடும்பத்தினுள் பாவம் நுழைவதற்கு முன்னமே ஓய்வுநாள் உண்டாக்கப்பட்டபடியினால், ஓய்வுநாள் என்பது ஏதாவது ஒன்றினுடைய மாதிரிப்படிவமாகவோ
அல்லது நிழலாட்டமாகவோ ஒருபோதும் இருக்கமுடியாது. குறிப்பிட்ட நிழலாட்டமான மற்றும் மாதிரி வழக்கங்கள் பாவத்தின் விளைவினாலேயே நிறுவப்பட்டன, பாவத்திலிருந்து மீட்கப்படப்போவதைச் சுட்டிக்காட்டின. அவை தேவ ஆட்டுக்குட்டியான இயேசுவின் மரணத்தை அடையாளப்படுத்தும்விதமாக கொடுக்கப்பட்ட பலிமுறைகளாகும். பாவமில்லாதிருந்திருக்குமானால், விலங்குகளை வைத்து பலிசெலுத்தும் முறைமைகளும் இல்லாதிருந்திருக்கும். இந்த பலிமுறைகளும் காணிக்கைகளும் கிறிஸ்து சிலுவையில் மரித்தபோது ஒழிக்கப்பட்டுவிட்டன. ஏனெனில், அனைத்து நிழலாட்டமான சடங்காச்சாரங்களும்; அவற்றின் நிறைவேறுதலை பெற்றுவிட்டன (மத்தேயு 27:51), ஆனால் பாவம் இந்த உலகத்தில் நுழைவதற்கு முன் எந்த ஒரு நிழலாட்டமான சடங்கும் இருந்ததில்லை; எனவே, மாதிரி வழக்கங்களிலும், நிழலாட்டமான சடங்காச்சாரப்பிரமாணங்களிலும் ஓய்வுநாள் இணைக்கப்பட்டிருக்கமுடியாது.
தற்காலிகச் சடங்காச்சார முறைமைகளைக் குறித்து கொலோசேயர் 2:14-16ல் “நமக்கு எதிரிடையாகவும்,” “நமக்கு விரோதமாகவும்” என பவுல் குறிப்பிட்டுள்ளார். “முற்றிலும் ஒழிக்கப்பட்ட” பானபலி மற்றும் சடங்காச்சாரப்பிரமாணத்தின் வருடாந்திர பண்டிகைகளுடன்
அவர் ஓய்வுநாட்களைக் குறித்தும் அந்த வசனத்தில் குறிப்பிட்டிருந்தார் என்பது
உண்மைதான், ஆனால் “வருங்காரியங்களுக்கு நிழலாட்டமான ஓய்வுநாட்கள்” என்று அவைகளை அழைத்தார் என்பதை நாம் கவனித்துப்பார்க்கவேண்டும். சிலுவையில் சில ஓய்வுநாட்கள் ஒழிக்கப்பட்டதா? ஆம், ஒரு மாதத்திற்கு குறிப்பிட்ட நாட்களில் குறைந்தது நான்கு வருடாந்திர ஓய்வுநாட்கள் வந்தன, அவைகளே சிலுவையில் ஒழிக்கப்பட்டன. அவைகள் நிழலாட்டமானவைகளும், அந்நாட்களில் குறிப்பிட்ட போஜன மற்றும் பானபலிகள்
படைக்கப்படவேண்டியுமிருந்தன. இந்த வருடாந்திர ஓய்வுநாட்கள் குறித்து லேவியராகமம் 23:24-36ல் விவரிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவை 37 மற்றும் 38ம் வசனங்களில் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. “நீங்கள் கர்த்தருடைய ஓய்வுநாட்களில் செலுத்துவதும் தவிர, நீங்கள் கர்த்தருக்குப் படைக்கிற உங்கள் எல்லாக் காணிக்கைகளும், பொருத்தனைகளும் உற்சாகபலிகளும் தவிர, நீங்கள் அந்தந்த நாளுக்குத்தக்கதாய்க் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலி, போஜனபலி, இரத்தபலி, பானபலி, முதலானவைகளைச் செலுத்தும்படி சபைகூடிவந்து, பரிசுத்தமாய் ஆசரிப்பதற்காக நீங்கள் கூறவேண்டிய கர்த்தருடைய பண்டிகைகள் இவைகளே.”
நிழலாட்டமான “வருடாந்திர ஓய்வுநாட்களுக்கும்,” “கர்த்தருடைய வாராந்திர
ஓய்வுநாட்களுக்குமுரிய” வித்தியாசங்களை வேதாகமம் தெளிவாக வேறுபடுத்திக்காட்டுகிறது. சடங்காச்சாரமான ஓய்வுநாட்களோ சிலுவையில் ஒழிக்கப்பட்டுவிட்டன; ஆனால் அவை பாவத்தின் விளைவினால் சேர்க்கப்பட்டவையாகும். ஆனால் பத்துக்கற்பனைகளின்
ஓய்வுநாளானது பாவம் அறிமுகமானதற்கு முன்பே போற்றப்பட்டது, பின் தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட மாபெரும் ஒழுக்கப்பிரமாணத்துடன் சேர்க்கப்பட்டது. ஓய்வுநாள், அதின்
இயல்பிலேயே நித்தியமானதாகும்!
அத்தியாயம் 7
போலியான வாதம் 2 – ஏழு நாளில் ஏதாவது ஒரு நாளை ஆசரிக்கவும்
இந்த வாதத்தின்மூலம், தேவன் கட்டளையிட்டிருந்த ஓய்வுநாளுக்கான மற்றொரு மாற்று நாளை ஏற்றுக்கொள்ளும்படி சாத்தான் உலகத்தை தயார் செய்தான். கற்பலகைகளின்மீது யுகங்களுக்கான அந்த மாபெரும் மாற்றப்படாத சட்டத்தை அவர் எழுதினார். ஒவ்வொரு
வார்த்தையும் கண்டிப்பானதும் அர்த்தமுள்ளதாயுமிருந்தது. ஒரு வரிகூட குழப்பமாகவோ புதிராகவோ இல்லை. பாவிகளும், கிறிஸ்தவர்களும், படித்தவர்களும், படிக்காதவர்களும் பத்துக்கற்பனைகளின் எளிமையான, தெளிவான வார்த்தைகளைப் புரிந்துகொள்வதில் எவ்வித
பிரச்சனையும் இல்லை. தேவன் என்ன அர்த்தத்தில் நினைத்தாரோ அதைத்தான் பேசினார், எதைப் பேசினாரோ அதைத்தான் அர்த்தம்கொண்டார். புரிந்துகொள்ள மிகவும் சிக்கலானதாக மாற்ற, அந்தக் கற்பனையை அவமாய் போகும்படிச்செய்ய ஒருவரும் முயற்சித்ததில்லை.
பத்துக்கற்பனைகளில் பெரும்பாலானவைகள் “செய்யாதிருப்பாயாக” என்ற ஒரே விதமான சொற்றொடரை உடையதாக இருக்கும், ஆனால் கற்பனைகளின் இருதயமான நான்காம் கற்பனையிலோ “நினைப்பாயாக” என்னும் வார்த்தையானது அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்தக் கற்பனை மட்டும் ஏன் வித்தியாசமாக இருக்கிறது? ஏனெனில் தேவனானவர் எற்கனவே இருந்த ஆனால் மறந்துபோன கற்பனையை நம்முடைய ஞாபகத்திற்கு மறுபடியும் கொண்டுவர கட்டளையிட்டிருந்தார். ஓய்வுநாளின் ஆரம்பத்தைக் குறித்து ஆதியாகமம் இவ்வாறு வர்ணிக்கிறது, “இவ்விதமாக வானமும் பூமியும், அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டுத் தீர்ந்தன. தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை
ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தப்பின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்” (ஆதியாகமம் 2:1-3).
தேவன் எந்த நாளை ஆசீர்வதித்து பரிசுத்தமாக்கினார்? ஏழாம் நாளை. அது எவ்வாறு பரிசுத்தமாக ஆசரிக்கப்படவேண்டும்? ஓய்ந்திருப்பதினால். வாரத்தின் மற்ற எந்த நாளையாவது பரிசுத்தமாக ஆசரிக்கலாமா? இல்லை. ஏன்? ஏனெனில் ஆறு நாட்களும் ஓய்ந்திராமல் வேலை செய்யுமாறு தேவன் கட்டளையிட்டிருக்கிறார். தேவனுடைய ஆசீர்வாதம் ஒரு மாற்றத்தைக் கொண்டுவருமா? நிச்சயமாக. இதனால்தான் பெற்றோர்களும் தங்கள்
பிள்ளைகளை தேவன் ஆசீர்வதிக்கும்படி ஜெபம் செய்கிறார்கள். இது ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும் என அவர்கள் விசுவாசிக்கிறார்கள். மற்ற ஆறு நாட்களைக் காட்டிலும் ஏழாம்நாள் வித்தியாசமானதாகும், ஏனெனில் அதில் தேவனுடைய ஆசீர்வாதம் இருக்கிறது. இன்னும் சில கேள்விகள்: தேவன் ஏன் இந்த நாளை ஆசீர்வதித்தார்? ஏனெனில் அவர் உலகத்தை ஆறு நாட்களில் சிருஷ்டித்து முடித்தார். அது உலகத்தினுடைய பிறந்தநாளைப்
போன்றது. அந்த சர்வவல்லமையுள்ள கிரியையின் நினைவுச்சின்னத்தைப் போன்றது. ஓய்வுநாள் நினைவுச்சின்னம் மாற்றப்படக்கூடுமா? ஒருபோதும் முடியாது. ஏனெனில் அது நிறைவேற்றப்பட்ட உண்மையை பின்னோக்கி சுட்டிக்காட்டுகிறதாயிருக்கிறது. அமெரிக்காவில், ஜுலை 4 சுதந்திர தினமாகும். இதை மாற்றமுடியுமா? இல்லை. ஏனெனில் சுதந்திரத்திற்கான
பிரகடனமானது ஜுலை 4, 1776ல் கையொப்பமிடப்பட்டது. அதைப்போலவே, உங்கள் பிறந்தநாளையும் மாற்றமுடியாது. அது அந்தக் குறிப்பிட்ட நாளில் நடந்த, உங்கள் பிறப்பிற்கான ஒரு அடையாளச்சின்னமாகும். உங்கள் பிறந்தநாளையோ, சுதந்திர தினத்தையோ அல்லது ஓய்வுநாளையோ மாற்ற சரித்திரமானது மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பித்துக் கடந்துச் செல்லவேண்டும். நாம் மற்றொரு நாளை சுதந்திரதினம் என்றும் ஓய்வுநாள் என்றும் கூறிக்கொள்ளலாமே ஒழிய அது உண்மையாகவே அவ்வாறு ஆகிவிடமுடியாது.
தனக்கானச் சொந்த ஓய்வுநாளைத் தேர்வு செய்துகொள்ள தேவன் எப்போதாவது மனிதனுக்கு அந்த சிலாக்கியத்தை கொடுத்தாரா? இல்லை. மாறாக, ஓய்வுநாள் அவரது சொந்த தெய்வீக தேர்வின்படி வரையறுக்கப்பட்டு முத்திரையிடப்பட்டாயிற்று, அதை யாரும் இடையில் நுழைந்து மாற்றம் செய்யக்கூடாது என தேவன் வேதாகமத்தில் உறுதிசெய்திருக்கிறார். மன்னா பொழிந்ததைக் குறித்து யாத்திராகமம் 16ல் வாசிக்கவும். எந்த நாள் பரிசுத்தமானது என்பதை இஸ்ரவேலுக்கு தெரிவிக்கும்படி தேவன் நாற்பது வருடங்களில் ஒவ்வொரு வாரமும் மூன்று அற்புதங்களை செய்துவந்தார்.
(1) ஏழாம்நாளில் மன்னா பொழியவில்லை
(2) கெட்டுப்போகாமல் விடியற்காலைவரை அதில் மீதியாக அவர்களால்
வைக்கமுடியவில்லை
(3) ஆனால் ஓய்வுநாளுக்காக அவர்கள் அதை வைத்துவைக்கையில்,
அது புதிதாகவும் இனிப்பாகவும் இருந்தது.
ஆனால் சில இஸ்ரவேலர்கள் நவீன கால கிறிஸ்தவர்களைப்போன்றே எண்ணமுடையவர்களாக இருந்தார்கள். ஏழுநாளில் எந்த நாளையும் பரிசுத்தமாய் ஆசரிப்பது தவறல்ல என்று அவர்கள் நினைத்தார்கள்: “ஏழாம்நாளில் ஜனங்களில் சிலர் அதைச் சேர்க்கப் புறப்பட்டார்கள்; அவர்கள் அதைக் காணவில்லை. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: என் கட்டளைகளையும் என் பிரமாணங்களையும் கைக்கொள்ள எந்தமட்டும் மனதில்லாதிருப்பீர்கள்?” (யாத்திராகமம் 16:27, 28) என்றார்.
இந்தக் கருத்தைப் புரிந்துகொண்டீர்களா? மற்ற எந்த நாளைப்போல ஏழாம் நாளையும் நினைத்துக்கொள்ளலாம் என அவர்கள் நினைத்தனர். மேலும் அவர்கள் வாரத்தின் முதல் நாளையோ அல்லது அவர்களுக்கு வசதியாக இருந்த வேறொரு நாளையோ ஆசரிக்கத் திட்டமிட்டிருந்தனர். என்ன நடந்தது? ஏழாம் நாளில், சொந்த வேலையை செய்வதற்கு சென்றதினால், தேவன் அவர்களை சந்தித்து, அவருடைய கற்பனையை அவர்கள் உடைத்துப்போட்டதாக குற்றம்சாட்டினார். இன்று ஓய்வுநாளை உடைத்துப்போடக்கூடியவர்களிடமும் அதே காரியத்தை தேவன்
கூறுவாரா? ஆம். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் - அவர் மாறுவதில்லை.
அவர்களுடைய உணர்வுகள் எப்படிப்பட்டவைகளாக இருந்தாலும், ஓய்வுநாளில் வேலை செய்வதற்காகக் கடந்துசெல்பவர்கள் அவருடைய கற்பனையை உடைத்ததற்கான குற்றத்திற்கு ஆளாவார்கள் என்பதை தேவன் மிகத் தெளிவாகத் தெரிவித்துவிட்டார். யாக்கோபும், பத்துக் கற்பனையில் ஒன்றில் தவறினாலும் பாவம் என்று விளக்குகிறார்: “எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான். ஏனென்றால், விபசாரஞ்செய்யாதிருப்பாயாக என்று சொன்னவர் கொலைசெய்யாதிருப்பாயாக என்றும் சொன்னார்; ஆதலால் நீ விபசாரஞ்செய்யாமலிருந்தும் கொலைசெய்தாயானால் நியாயப்பிரமாணத்தை மீறினவனாவாய்” (யாக்கோபு 2:10, 11).
அத்தியாயம் 8
போலியான வாதம் 3 - உண்மையான ஏழாம் நாளை நம்மால் கண்டுபிடிக்கமுடியாது
இந்த மூடநம்பிக்கைதான் நான்காம் கற்பனைக்குக் கீழ்ப்படியாமலிருந்த அநேகருக்கு ஆறுதலளித்தது எனக் கூறலாம். ஆனால் இந்த வாதம் உண்மையல்ல. இன்றும் உண்மையான ஓய்வுநாளை அடையாளம் காணமுடியும். அதற்கான நான்கு நேர்மறையான ஆதாரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன:
- வேத வாக்கியங்களின் பிரகாரம், கிறிஸ்துவானவர் வெள்ளிக்கிழமையில் மரித்து வாரத்தின் முதலாம் நாளாகிய ஞாயிற்றுக்கிழமையில் உயிர்த்தெழுந்தார் என்று பார்;க்கிறோம்.
இந்த ஒரு உண்மையை அனைத்து சபைகளும் ஏற்றுக்கொள்ளும் வண்ணமாக ஈஸ்டர் ஞாயிறு மற்றும் பெரிய வெள்ளியை ஆசரிக்கின்றனர். இதற்கான வேதாகமச் சான்று: “அவன் பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டு, அதை இறக்கி, மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதுமாய் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்படாததுமாயிருந்த ஒரு கல்லறையிலே வைத்தான். அந்த நாள் ஆயத்தநாளாயிருந்தது; ஓய்வுநாளும் ஆரம்பமாயிற்று” (லூக்கா 23:52-54).
இயேசு ஓய்வுநாளுக்கு முந்தைய நாளில்தான் மரித்தார் என்பதற்கான ஆதாரம் பின்வருமாறு காணவும்: அதை “ஆயத்தநாள்” என்று அழைத்தனர், ஏனெனில் அது ஓய்வுநாளுக்கான ஆயத்தத்தை செய்யக்கூடிய நேரமாக இருந்தது. நாம் இதற்கடுத்த வசனங்களை வாசிப்போம்: “கலிலேயாவிலிருந்து அவருடனேகூட வந்திருந்த ஸ்திரீகளும் பின்சென்று, கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து, திரும்பிப்போய்,
கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி, கற்பனையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்” (வசனங்கள் 55, 56).
இங்கே ஸ்திரீகள் “கற்பனையின்படி” ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தனர் என்பதை
கவனத்தில்கொள்ளவும். “ஏழாம் நாளே ஓய்வுநாள்” என கற்பனை சொல்கிறது, எனவே அவர்கள் அதை சனிக்கிழமையில் ஆசரித்தார்கள் என்பதை நாம் அறிகிறோம். ஆனால் இதற்கடுத்த வசனத்திலேயே, “வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம்பண்ணின கந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக்கொண்டு வேறு சில ஸ்திரீகளோடுங்கூடக் கல்லறையினிடத்தில் வந்தார்கள். கல்லறையை அடைத்திருந்த
கல் புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதைக்கண்டு…” (லூக்கா 24:1, 2) என்று வாசிக்கிறோம்.
தொடர்ச்சியான இந்த மூன்று நாட்களும் எத்தனை தெளிவாக நமக்கு
விவரிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக, புனிதவெள்ளி என அழைக்கப்படும் ஆயத்தநாளில் அவர் மரித்தார். “கற்பனையின்படி” ஓய்வுநாளாகிய ஏழாம் நாளில் அவர் கல்லறையில் ஓய்ந்திருந்தார். அது சனிக்கிழமையாகும். பின், ஈஸ்டர் ஞாயிறு என பலரால் அழைக்கப்படும் வாரத்தின் முதலாம் நாளாகிய ஞாயிற்றுக்கிழமையில் கல்லறையிலிருந்து இயேசு உயிர்த்தெழுந்தார்.
புனிதவெள்ளியை அல்லது ஈஸ்டர் ஞாயிறை அடையாளம் காணும் எவருக்கும் உண்மையான ஓய்வுநாளை அடையாளம் காண்பதில் எந்த ஒரு கஷ்டமும் முற்றிலும் இருக்காது.
- வாரத்தின் நாட்களைக் குறித்து குழப்பமடைவதற்கு காலண்டரில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
நாம் ஆசரிக்கும் ஏழாம் நாள்தான் இயேசு இவ்வுலகத்தில் இருந்தபோதும் ஆசரித்தார் என்பதைக் குறித்து நாம் நேர்மறையான கருத்துடையவர்களாக இருக்கலாம். எட்டாம் போப்பு கிரெகோரி கி.பி. 1582ல் காலண்டரில் ஒரு மாற்றத்தைச் செய்தார், ஆனால் அது வார சுழற்சியில் எந்த ஒரு இடையூறையும் ஏற்படுத்தவில்லை. நாம் தற்போது உபயோகித்துக்கொண்டிருக்கும் கிரெகோரியின் காலண்டரானது, அந்தச் சிறு மாற்றத்தை அவர் 1582ல் செய்தபோது, அவருடைய பெயராலேயே அழைக்கப்பட்டது.
போப்பு கிரெகோரி காலண்டரில் என்ன மாற்றத்தை செய்தார்? 1582ற்கு முன் ஜுலியன் காலண்டரே நடைமுறையில் இருந்தது. இந்தக் காலண்டரானது ஜுலியஸ் சீசரால் ஏறத்தாழ கி.மு. 46ல் அமைக்கப்பட்டு, அவருடைய பெயராலேயே அழைக்கப்பட்டது. ஜுலியன் காலண்டரில் ஒரு வருடத்தின் நீளம் 365¼ நாட்களாக கணக்கெடுக்கப்பட்டது, ஆனால் ஒரு வருடமானது 365¼ நாட்களுக்கு பதினொரு நிமிடங்கள் குறைவானதாகும். இந்த பதினொரு நிமிடங்களும் சிறிது சிறிதாக ஒன்றுசேர்ந்து, 1582 ஆண்டு வருவதற்குள், சு+ரிய குடும்பத்தின்படி பத்து நாட்கள் விடுபட்டுப்போயிற்று. கிரெகோரி அந்தப் பத்து நாட்களை அவருடைய காலண்டரில் சேர்க்கவில்லை. வியாழக்கிழமை, அக்டோபர் 4, 1582க்கு அடுத்த நாள் காலண்டர் வரிசையின்படி வெள்ளிக்கிழமை, அக்டோபர் 5ஆக இருந்திருக்கவேண்டும். ஆனால் கிரெகோரி பத்து நாட்களைக் கழித்துவிட்டு, வானமண்டல கோள்களுடன் காலண்டர் பொருந்துவதற்காக, அடுத்த நாளை அக்டோபர் 15 எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதனால் வாரசுழற்சியில் குழப்பம் ஏற்பட்டதா? இல்லை. வெள்ளிக்கிழமைக்கு முன் வியாழன்தான் வந்தது. வெள்ளிக்கு அடுத்து சனிக்கிழமைதான் வந்தது. ஏழாம்நாள் அதனுடைய இடத்தில் சரியாக இருந்தது, இது வார சுழற்சியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இன்று நாம் சனிக்கிழமையில் ஏழாம் நாளை ஆசரிக்கும்போது, இயேசு ஆசரித்த அதே நாளைத்தான் நாமும் ஆசரிக்கிறோம். மேலும் லூக்கா 4:16ன்படி, அவர் இதை ஒவ்வொரு வாரமும் ஆசரித்தார் என்றும் வேதத்தில் வாசிக்கிறோம்.
- உண்மையான ஓய்வுநாளுக்கான மூன்றாவது ஆதாரம்தான் மற்றெல்லாவற்றைக் காட்டிலும் மிகவும் தீர்க்கமான முடிவுரையாக இருக்கிறது. ஆபிரகாம் காலந்துவக்கி இன்று வரையிலும் யூதர்கள் ஏழாம் நாளை ஆசரித்துவருகின்றனர்.
ஒவ்வொரு வாரமும், காலண்டர் இருந்தாலும் இல்லையென்றாலும் ஆயிரம் ஆண்டுகளாக, கோடிக்கணக்கானத் தனிநபர்கள் அடங்கிய ஒரு முழு தேசமே மிக உன்னிப்பாக நேரத்தை கவனித்துக்கொண்டிருக்கின்றது, அது திசைமாறிப்போயிருக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதா?
கண்டிப்பாக இல்லை. ஒருவேளை அவர்கள் நேரத்தை கணிக்கக்கூடாத ஒரு வாய்ப்பு இருந்திருக்குமானால், அவர்கள் அனைவரும், தேசமாக சேர்ந்து, இருபத்து நான்கு மணிநேரத்திற்கு தூங்கி, பின் எழுந்து அதை ஒருவரும் அவர்களுக்கு அறிவியாமல் போயிருந்தால் மட்டுமே அவ்வாறு நடந்திருக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.
ஆதியிலே தேவன் ஓய்வுநாளைப் படைத்தது துவக்கி எந்த ஒரு மாற்றமோ காலஇழப்போ ஏற்படவில்லை. வாரம் துவங்கினதை நாம் சிருஷ்டிப்பில்தான் காணமுடியும். ஏழுநாள் சுழற்சியின்பிரகாரம் காலத்தை அளப்பதற்கு எந்த ஒரு விஞ்ஞான அல்லது வானவியல் ரீதியான விளக்கமும் இல்லை. இது தன்னிச்சையாக நிகழக்கூடிய விதத்தில் தேவனால் ஏற்பாடு செய்யப்பட்டு, ஒரே ஒரு காரணத்திற்காக அதிசயவிதமாகப் பாதுகாக்கப்பட்டுவருகிறது. ஏனெனில் பரிசுத்த ஓய்வுநாளானது உண்மையான தேவனுடைய சிருஷ்டிப்பின் வல்லமையைக்குறித்து சுட்டிக்காட்டுகிறது. இது உலகத்தின்மீதான, மனுக்குலத்தினுடைய வாழ்வின் மீதான, அவருடைய ஆட்சியின் உரிமைiயாகவும், சிருஷ்டிப்பு மற்றும் மீட்பின் அடையாளமாகவும் விளங்குகிறது.
ஓய்வுநாள் ஆசரிப்பை நித்தியத்திற்கும் தேவன் பாதுகாப்பதற்கு இந்த ஒரு காரணம் ஏற்றதாக இல்லையா? ஏசாயா 66:22, 23ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “நான் படைக்கப்போகிற புதிய வானமும் புதிய பூமியும் எனக்கு முன்பாக நிற்பதுபோல, உங்கள் சந்ததியும், உங்கள் நாமமும் நிற்குமென்று கர்த்தர் சொல்லுகிறார். அப்பொழுது: மாதந்தோறும்,
ஓய்வுநாள்தோறும், மாம்சமான யாவரும் எனக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.”
ஓய்வுநாள் தேவனுக்கு மிகவும் விலையேறப்பெற்றதாகும், இதை அவர் அவருடைய மக்கள் காலங்கள் நெடுகிலும் புதிய பூமியிலும் ஆசரிக்கும்படிக்குச் செய்வார். அவருக்கு ஓய்வுநாள் விலையேறப்பெற்ற ஒன்றானால், நமக்கும் அது விலையேறப்பெற்ற ஒன்றாக
இருக்கவேண்டுமல்லவா? நாம் புதிய பூமியில் ஓய்வுநாளை
கைக்கொள்ளப்போகிறவர்களானால், இப்போதும் அதைக் கைக்கொள்ளவேண்டுமல்லவா?
பொய்யான கடவுள்களும், மனிதனின் நாத்திகப் பரிணாமமும் பாரம்பரியமும் காணப்படும் இந்த யுகத்தில், அந்த மாபெரும் சிருஷ்டிகராகிய தேவனிடத்தில் நாம் வைக்கும் விசுவாசத்திற்கானப் பரீட்சையாகவும், அவருடைய வல்லமையினால் நாம் பரிசுத்தமாக்கப்படுகிறோம் என்பதற்கான அடையாளமாகவும் இருக்கும் ‘ஓய்வுநாள்’ முன்பு இருந்ததைக்காட்டிலும் இப்பொழுது இந்த உலகிற்கு இன்னும் அதிகமாகத் தேவைப்படுகிறது!
- உலகத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் சனிக்கிழமையை “ஓய்வுநாள்” என்றே பயன்படுத்துகின்றன என்னும் உண்மைக்குமேல்தான் நான்காவது ஆதாரம் நிற்கிறது. உதாரணத்திற்கு, ஓய்வுநாள் என்ற வார்த்தைக்கான ஸ்பானிய வார்த்தை “சபாடோ” ஆகும். இது எதை நிரூபிக்கிறது என்றால், தொன்றுதொட்டு உருவான இந்த நூறு மொழிகளும் சனிக்கிழமையைத்தான் ஓய்வுநாளாக அடையாளம் காண்கின்றன என்பதே. அதுமாத்திரமல்ல, அந்த நாளுக்குரிய பெயராகவே அது ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்பதும் ஆச்சரியமான ஒன்றாகும்.
அத்தியாயம் 9
போலியான வாதம் 4 – ஓய்வுநாள் - எகிப்திலிருந்து பெற்ற விடுதலைக்கான நினைவுகூருதல் மட்டுமே
இந்த விசித்திரமான கருத்தானது பழைய ஏற்பாட்டிலுள்ள ஒரு வசனத்திலிருந்து
எடுக்கப்பட்டதாகும். ஆனால் இது உண்மையான ஓய்வுநாளின் துவக்கத்தைக் கூறும் அநேகத் தெளிவான வாக்கியங்களுக்கு முரண்பாடாகத் தவறாக வெளிப்படுத்தப்படுகிறது. இந்த வசனம் உபாகமம் 5:14, 15ல் உள்ளது: “ஏழாம் நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் எருதானாலும், உன் கழுதையானாலும், உனக்கு இருக்கிற மற்றெந்த மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும் யாதொரு வேலையும் செய்யவேண்டாம்; நீ இளைப்பாறுவதுபோல உன் வேலைக்காரனும் உன் வேலைக்காரியும் இளைப்பாறவேண்டும்; நீ எகிப்துதேசத்தில் அடிமையாயிருந்தாய் என்றும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அவ்விடத்திலிருந்து வல்லமையுள்ள கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் புறப்படப்பண்ணினார் என்றும் நினைப்பாயாக; ஆகையால் ஓய்வுநாளை ஆசரிக்க உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டார்.”
எகிப்திலிருந்து வெளியேறினதற்கான நினைவுச்சின்னமாகவே தேவன் ஓய்வுநாளைக் கொடுத்தார் என சில மக்கள் இந்த வசனத்திலிருந்து அர்த்தம்கொள்ளுகின்றனர். ஆனால் ஆதியிலே ஓய்வுநாள் உருவாக்கப்பட்ட வரலாறு (ஆதியாகமம் 2:1-3) மற்றும் தேவனே தம்முடைய வாயினால் பேசிச்சொல்லிய நான்காம் கற்பனையின் நிகழ்வு (யாத்திராகமம் 20:11) ஆகிய இரண்டுமே ஓய்வுநாள் “சிருஷ்டிப்பின் நினைவுச்சின்னம்” என்பதை தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்துகின்றன.
மேற்கூறிய இரு வசனங்களையும் விளங்கிக்கொள்வதற்கான முக்கியமானத் தார்ப்பரியம் “அடிமை” என்ற வார்த்தையில்தான் அடங்கியுள்ளது. தேவன், “நீ எகிப்துதேசத்தில் அடிமையாயிருந்தாய் என்றும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அவ்விடத்திலிருந்து வல்லமையுள்ள கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் புறப்படப்பண்ணினார் என்றும் நினைப்பாயாக…” என்று கூறினார். இந்த வசனத்திற்கு முந்தைய வசனத்தில் அவர், “நீ இளைப்பாறுவதுபோல உன் வேலைக்காரனும் உன் வேலைக்காரியும் இளைப்பாறவேண்டும்…” என்று அவர்களுக்கு நினைப்பூட்டினார். அதாவது, எகிப்தில் அவர்கள் அடிமைகளாக இருந்த அந்த அனுபவத்தை மனதில் வைத்து, இவர்கள் தங்களுடைய அடிமைகளுக்கும் ஓய்வுநாளின் ஓய்வைக் கொடுத்து, அவர்களை நியாயமாக நடத்தவேண்டுமென்று இந்தக் கட்டளையை அவர்களுக்கு நினைப்பூட்டுதலாகக் கொடுத்தார்.
அதைப்போலவே, “யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்தவேண்டாம். உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனை சுதேசிபோல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தீர்களே; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்” (லேவியராகமம் 19:33, 34) எனக் கட்டளையிட்டார்.
எகிப்திலிருந்து பெற்ற விடுதலையை நினைப்பூட்டி மற்றக் கற்பனைகளை கீழ்ப்படியும்படி சொல்வது தேவனுடைய வழக்கத்திற்கு மாறான ஒன்று அல்ல. உபாகமம் 24:17,18ல், “நீ அந்நியனுடைய நியாயத்தையும் திக்கற்ற பிள்ளையின் நியாயத்தையும் புரட்டாமலும், விதவையின் வஸ்திரத்தை அடகாக வாங்காமலும் இருந்து, நீ எகிப்திலே அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அங்கேயிருந்து மீட்டுக்கொண்டுவந்ததையும் நினைப்பாயாக; ஆகையால், இப்படிச் செய்யும்படி நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்” என தேவன் கூறினார்.
நியாயமாக நடக்கும்படியும், ஓய்வுநாளைக் கைக்கொள்ளும்படியும் தேவன் சொன்னது எகிப்திலிருந்து பெற்ற விடுதலையை ஞாபகச்சின்னமாக்குவதற்காக அல்ல. மாறாக அவர்களை அடிமைத்தனத்திலிருந்து வெளியே கொண்டுவந்த அவருடைய தயவிற்கு ஒரு
வலிமையான, கூடுதலான காரணம் ஒன்று இருந்தது. அதாவது, அவர்கள் தங்களுடைய வேலைக்காரர்களை ஓய்வுநாளில் தயவாக நடத்தவும், திக்கற்றவர்களையும் விதவைகளையும் நியாயமாக விசாரிக்கவும் வேண்டுமென்பதே அந்தக் காரணமாகும்.
அதேவிதமாக, லேவியராகமம் 11:45ல் தேவன், “நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக” என்று கூறினார். இதனால், ‘பரிசுத்தம்’ என்ற ஒன்று இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வெளியே வருவதற்குமுன் இல்லை என நிச்சயமாக யாரும்
வலியுறுத்த முடியாது. மேலும், இந்த வசனம் அவர்களுடைய விடுதலையை
நினைப்பூட்டுவதால், பரிசுத்தம் யூதர்களுக்கு மட்டுமே உரியது என்றும் கூறமுடியாது!
அத்தியாயம் 10
போலியான வாதம் 5 – உயிர்த்தெழுதலை கனப்படுத்தும்படி ஞாயிறை ஆசரிக்கவும்
வாரத்தின் முதலாம் நாளில் கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்பது உண்மைதான் ஆனால் அந்த நாளைப் பரிசுத்தமாக ஆசரிக்கவேண்டுமென எந்த ஒரு அறிவிப்பும் வேதத்தில் எங்கேயும் கொடுக்கப்படவில்லை. ஓய்வுநாள் ஆசரிப்பின் அடித்தளம் நேரடியாக தேவனுடைய
விரலினால் எழுதப்பட்டக் கட்டளையாகும்.
வாரத்தின் குறிப்பிட்ட நாட்களில் பல அற்புதமான நிகழ்வுகள் நடந்தன, ஆனால் அவைகளை பரிசுத்தமாக ஆசரிக்கும்படி எந்த ஒரு கட்டளையும் நமக்கு கொடுக்கப்படவில்லை. நம்முடைய பாவங்களுக்காக கிறிஸ்து வெள்ளிக்கிழமையன்று மரித்தார். நிச்சயமாக, பதிவு செய்யப்பட்ட வரலாற்று நிகழ்வுகள் அனைத்திலும் இதுவே மிகவும் குறிப்பிடத்தக்க
நிகழ்வாகும். ஏனெனில் அது என்னுடைய மரணசாசனம் மாற்றியமைக்கப்பட்டு, எனது இரட்சிப்பை எனக்கு நிச்சயப்படுத்தியத் தருணமாகும். ஆனால் இந்த நாளை ஒரு மாபெரும் நாளாக ஆசரிக்கும்படி குறிப்பிடத்தக்கவிதத்தில் ஒரு வேதாகம வசனம்கூட இல்லை.
இயேசு கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்த அந்த ஞாயிறு காலை ஒரு வியக்கத்தக்கத் தருணமாகும், ஆனால் ஒரு அணுவளவு வேதாகமச் சான்றுகூட உயிர்த்தெழுதலை கனப்படுத்தும்படி, அந்த நாளை ஆசரிக்கவேண்டும் எனக் குறிப்பிடவில்லை. ஞாயிற்றுக்கிழமையில் ஓய்வுநாள் ஆசரிக்கப்பட்டதென்று வேதாகமத்தில் ஒரு நிகழ்வும் பதிவுசெய்யப்படவுமில்லை.
உயிர்த்தெழுதலை நாம் நினைவுகூரும்படி உண்மையாகவே ஒரு நினைவுச்சின்னமானது வேதத்தில் உள்ளது, ஆனால் அது ஞாயிறு ஆசரிப்பல்ல. அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு எழுதுகிறார்: “மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து
எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட
அடக்கம்பண்ணப்பட்டோம் (ரோமர் 6:4).”
ஞானமுழுக்கோ கிறிஸ்துவின் மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதலை நமக்கு ஞாபகமூட்டும் நினைவுச்சின்னமாகும். ஞாயிறு ஆசரிப்பு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை கனப்படுத்துகிறது என நம்புகிறவர்கள், அவர் கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்த அதே நாளில், சீஷர்கள் மேல்வீட்டறையிலே கூடியிருந்ததை மேற்கோளிட்டுக் காட்டுவர். அவர்களுக்கு அந்தக் கூடுகையானது உயிர்த்தெழுதலை கனப்படுத்தக்கூடிய ஒரு கொண்டாட்டமாகும். ஆனால் அந்த நிகழ்வைக் குறித்த வேதாகமப் பதிவை நாம் படிக்கும்போது, சு+ழ்நிலைகள் முற்றிலும் வித்தியாசமாக இருந்ததை நாம் கண்டுபிடிக்கமுடியும். இதை லூக்கா பின்வருமாறு எழுதுகிறார். மகதலேனா மரியாள் கண்கூடாகப் பார்த்ததை அவர்கள் கேள்விப்பட்டபோதிலும், அதை அவர்கள் “விசுவாசிக்கவில்லை.” “அதன்பின்பு அவர்களில் இரண்டு பேர் ஒரு கிராமத்துக்கு நடந்துபோகிறபொழுது அவர்களுக்கு மறுரூபமாய்த் தரிசனமானார். அவர்களும் போய், அதை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்களையும் அவர்கள் நம்பவில்லை. அதன்பின்பு பதினொருவரும் போஜனபந்தியிலிருக்கையில் அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமற்போனதினிமித்தம் அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்தும் இருதய கடினத்தைக்குறித்தும் அவர்களைக் கடிந்துகொண்டார்” (மாற்கு 16:12-14).
மேல்வீட்டு அறையில் இருந்த சீஷரும் அவர் உயிர்த்தெழுந்தார் என்பதை
விசுவாசிக்கவில்லை, எனவே அவர்கள் மகிழ்ச்சியுடன் உயிர்த்தெழுதலை
கொண்டாடியிருக்கக்கூடிய வாய்ப்பு இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அவர்கள் ஒன்றாகக் கூடியிருந்ததற்கான காரணத்தை யோவான் இவ்வாறு விளக்குகிறார்: “வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று:
உங்களுக்குச் சமாதானம் என்றார்” (யோவான் 20:19).
இவ்வாறு, நாம் தேவனுடைய பரிசுத்த ஓய்வுநாளுக்கு எதிராகக் கூறப்பட்ட முக்கிய வாதங்களை ஆராய்ந்திருக்கிறோம். தேவன் ஓய்வுநாளைக் குறித்து தனது எண்ணத்தை மாற்றிவிட்டார் என்பதற்கான ஒரு ஆட்சேபிக்கும் கருத்துகூட அதற்கான ஆதாரத்தின் சுவடை நமக்கு கொடுக்கவில்லை. நான்காம் கற்பனையினுள் “நினைவுகூருவாயாக” என்று அவர்
எழுதியது, இன்று நமது சுவரில் மாட்டியுள்ள காலண்டரில் உள்ள அதே ஏழாம் நாளைக் குறித்தும் சான்று பகருகிறது. மனிதர்களோ, பேய்களோ, யாராக இருந்தாலும், அந்த நித்தியமான ஒழுக்கப்பிரமாணத்தின் செல்லுபடித்தன்மையை ஒருபோதும் குறைத்துவிடமுடியாது.
நமது அன்பு மற்றும் விசுவாசத்திற்கான பரலோகத்தின் விசேஷித்தப் பரீட்சையான ஓய்வுநாள் கற்பனையை கனப்படுத்துவதற்கேற்ற தைரியத்தை நம் ஒவ்வொருவருக்கும் தேவன் தந்தருளுவாராக! நாம் கண்டறிந்ததைப்போல, இயேசு மீண்டும் வரும்போது, யுகங்கள் நெடுகிலும் முடிவே இல்லாத அதே ஓய்வுநாளை நாம் அவருடன் ஆசரிப்போமாக!! ஆமென், கர்த்தராகிய இயேசுவே வாரும்!!!

