இது ஒரு கற்பனைக் கதையல்ல.  உலகத்தை இன்று பாதித்திருக்கிற அனைத்து காயங்களிலிருந்தும், பசியிலிருந்தும், தனிமையிலிருந்தும், குற்றங்களிலிருந்தும், குழப்பங்களிலிருந்தும் ஒருநாள் உங்களால் விடுதலையாக முடியும்.  வியப்பாயிரக்கிறதல்லவா?  பூமிக்குரிய எந்த ஒரு கவர்ச்சியான தலைவரும் அல்ல; அவர்களைக் காட்டிலும் மிக மிக  உன்னதமான ஒருவரே உங்களை விடுவிக்கப்போகிறார்.  இயேசு சீக்கிரமாக வரவிருக்கிறார்.  ஆனால், அவர் எவ்விதம் வருவார் என்பதைக்குறித்த அதிக தவறான கருத்துக்கள் இருந்துவருகின்றன.  எனவே, நீங்கள் இந்த விடுதலையை இழந்துபோகாதிருக்க, இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது என்பதைப் புரிந்துகொள்ள கொஞ்ச நேரம் செலவழியுங்கள்.

  1. இயேசு இரண்டாவது முறையாக பூமிக்குத் திரும்புவாரா, அதில் நிச்சயமாயிருக்கலாமா?

“கிறிஸ்துவும்…. இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்” – எபிரெயர் 9:28; “நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணின பின்பு,… நான் மறுபடியும் வந்து” – யோவான் 14:3.

பதில்:  ஆமாம்.  இயேசு பூமிக்கு மீண்டும் திரும்ப வரப்போகிறதை ஒரு ஆணையோடே உறுதிப்படுத்தினார்.  (மத்தேயு 26:64). வேதவாக்கியம் தவறாததாயிருப்பதால் ( யோவான் 10:35), இது மிக சாதகமான ஆதாரம்.  இது எவ்விதம் சொல்லுகிறதோ அவ்விதமே நம்புங்கள்.  இது கிறிஸ்துவினுடைய உத்திரவாதம்.

  1. இயேசு இரண்டாம் முறை எவ்விதமாக வருவார்?

“அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது.  அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டுபேர் அவர்களருகே நின்று:  கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறீர்கள்?  உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்” – அப்போஸ்தலர் 1:9-11.

பதில்:  இயேசு பூமியைவிட்டு உயர எழும்பிப்போனவிதமாகவே, காணக்கூடியவராக, நிஜமானவராக, சரீரத்தோடு திரும்பி வருவார் என்று வேதவாக்கியம் வாக்குக்கொடுக்கிறது.  “மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை” என்று மத்தேயு 24:30 கூறுகிறது.  அவர் நிஜ நபராக, மாமிசத்தையும் எலும்புகளையும் உடையவராக, மேகங்கள்மேல் வருவார் (லு|க்கா 24:36-43; 50, 51).  அவருடைய வருகை காணக்கூடியது!  இந்த உண்மைகளில் வேதவாக்கியம் தெளிவாக இருக்கிறது.

  1. கிறிஸ்துவின் இரண்டாம் வருகை அனைத்து மனிதர்களும் காணக்கூடியவிதத்தில் இருக்குமா, அல்லது தெரிந்துகொள்ளப்பட்ட கூட்டம் மாத்திரம் அதைக் காணுமா?

“இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும்” – வெளி. 1:7; “மின்னல் கிழுக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்” – மத்தேயு 24:27; “ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்” ( 1 தெசலோனிக்கேயர் 4:16).

 

பதில்:  இயேசுவின் இரண்டாம் வருகையில், இந்த உலகத்தில் வசிக்கிற ஒவ்வொரு ஆணும், பெண்ணும், குழந்தையும் அவரைக் காண்பார்கள்.  தள்ளாடச் செய்யும் அவருடைய வருகையின் மும்மடங்கு பிரகாசம் (லூக்கா 9:26)  பூமியின் ஒரு எல்லையிலிருந்து அதன் மறு எல்லைவரையிலும் பரவியிருக்கும்.  மின்னலைப்போன்ற பிரகாசம் வானத்தை மூடும்.  எவரும் மறைந்துகொள்ளமுடியாது.  உயிரோடிருக்கும் ஒவ்வொரு ஆத்துமாவும் இயேசுவை சந்திக்க நிர்பந்திக்கப்படும்.  சந்தேகப்படுவதற்கோ தவறாக புரிந்துகொள்ளப் படுவதற்கோ இயேசு எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் வைத்திருக்கவில்லை.

குறிப்பு:  இன்று பொதுவாகப் போதிக்கப்பட்டு வருகிற இரகசிய வருகை வேதாகமத்தில் இல்லை.  அது ஒரு மனித கண்டுபிடிப்பு.  அது மனந்திரும்பும்போது இருதயத்தில் நடக்கிற ஆவிக்குரிய வருகை அல்ல; மனிதனின் மரணத்தில் நடக்கிறதல்ல, சிறப்பான எதிர்காலத்தின் அடையாளமும் அல்ல.  இந்த கொள்கைகளெல்லாம் மனிதன் கொண்டுவந்தவைகளே.  இரண்டாம் வருகையில் நடக்கப்போகிற ஒன்று; உலகமுழுவதும் காணக்கூடிய ஒன்று; இந்த உலகத்தை முடிவிற்குக் கொண்டுவந்து, அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் பலனையோ அல்லது தண்டனையையோ தர கிறிஸ்துதாமே மேகங்கள்மேல் தனிப்பட்ட விதத்தில் வரப்போகிறார்.

  1. இயேசு இரண்டாம் முறை வரும்போது அவருடன் யார் வருவார்கள்? ஏன்?

“அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார்” – மத்தேயு 25:31.

பதில்:  பரலோகத்தின் அனைத்து தூதர்களும் இயேசுவின் இரண்டாம் வருகையில் அவரோடுகூட வருவார்கள்.  பூமியை நெருங்கும்போது இயேசு தமது தூதர்களை அனுப்புவார்.  பரலோகத்திற்குத் திரும்பிச்செல்லும் பயணத்திற்கு ஆயத்தமாயிருந்த நீதிமான்கள் அனைவரையும் அவர்கள் சேர்ப்பார்கள். (மத்தேயு 24:31).

  1. இயேசு இந்த பூமிக்கு இரண்டாம் முறை வரும் நோக்கம் என்ன?

“இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு  நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது” – வெளி, 22:12; “நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்” – யோவான் 14:3; “இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடத்தில் அனுப்பும்படிக்கும்,…. எல்லாம் நிறைவேறித் தீருங்காலங்கள் வருமளவும் பரலோகம் அவரை ஏற்றுக்கொள்ளவேண்டும்” – அப். 3:19-21.

பதில்:  தாம் ஆயத்தம் பண்ணி வைத்திருக்கிற அழகான வீட்டிற்கு அழைத்துச் செல்லுவதாக வாக்குக் கொடுத்திருந்தபடியே, தமது ஜனத்திற்கு பலனளிக்க இயேசு பூமிக்குத் திரும்ப வருகிறார்.  பாவத்தினால் ஆதாமும் ஏவாளும் இழந்துபோன மகிமையையும்  சந்தோஷங்களையும் அவர் தமது ஜனத்திற்கு திரும்பக் கொடுப்பார்.  அவருடைய இரண்டாம் வருகை தற்போதைய தீமையான காலத்திற்கு ஒரு முடிவைக் கொண்டுவரும்.

  1. இயேசுவின் இரண்டாம் வருகையில் நீதிமான்களுக்கு என்ன சம்பவிக்கும்?

“ஏனெனில், கர்த்தர் தாமே… வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர் கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்” – 1 தெச. 4:16,17; “….. நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்…. அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்;….. அழிவுள்ளதாகிய இது அழியாமையை…. தரித்துக்கொள்ளவேண்டும்” – 1 கொரி. 15:51-53; “அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.  அவர்…. நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்” – பிலிப்பியர் 3:20,21.

பதில்:  மரித்த நீதிமான்கள் அவர்களுடைய கல்லறைகளிலிருந்து எழுப்பப்பட்டு, கிறிஸ்துவைப்போன்ற பூரணமான அழியாத சரீரங்கள் கொடுக்கப்பட்டு, கர்த்தரைச் சந்திக்கும்படி மேகங்கள்மேல் எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.  பின்னர் உயிரோடிருக்கும் நீதிமான்களும் கிறிஸ்துவைப்போன்ற சரீரம் கொடுக்கப்பட்டு ஆகாயத்தில் கர்த்தரைச் சந்திக்கும்படி எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.  இயேசு அவர்களை தம்மோடுகூட பரலோகத்திற்கு எடுத்துச்செல்வார்.  இயேசு இரண்டாம் வருகையில் இந்த பூமியைத் தொடவில்லை; பூமிக்குமேல் மேகங்களிலேயே இருப்பார் என்பதைக் குறித்துக்கொள்ளுங்கள்.  பரிசுத்தவான்கள் அவரை ஆகாயத்தில் சந்திக்கிறார்கள்.  எனவே தேவனுடைய பிள்ளைகள், கிறிஸ்து சென்னையில் இருக்கிறார், மதுரையில் இருக்கிறார் என்கிற செய்திகளை பொருட்படுத்தமாட்டார்கள்.  கள்ளக் கிறிஸ்துக்கள் தோன்றி, பூமியில் அற்புதங்களைச் செய்வார்கள் (மத்தேயு 24:23-27).

  1. இயேசு மீண்டும் வரும்போது துன்மார்க்கருக்கு என்ன சம்பவிக்கும்?

“தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்” – ஏசாயா 11:4; “அக்காலத்திலே பூமியின் ஒரு முனை துவங்கிப் பூமியின் மறுமுனைமட்டும் கர்த்தரால் கொலையுண்டவர்கள் கிடப்பார்கள்” –  ஏரேமியா 25:33.

பதில்:  துன்மார்க்கர் இயேசுவால் சங்கரிக்கப்படுவார்கள்.

  1. கிறிஸ்துவின் இரண்டாம் வருகை இந்த பூமியை எவ்விதம் பாதிக்கும்?

“பூமி மிகவும் அதிர்ந்தது, பூமியின்மேல் மனுஷர்கள் உண்டான நாள்முதற்கொண்டு அப்படிப்பட்ட பெரிய அதிர்ச்சியுண்டானதில்லை.” “தீவுகள் யாவும் அகன்றுபோயின; பர்வதங்கள் காணப்படாமற்போயின” – வெளிப்படுத்தல் 16:18,20; “பின்னும் நான் பார்க்கும்போது, கர்த்தராலும், அவருடைய உக்கிரகோபத்தாலும் பயிர்நிலம் வனாந்தரமாயிற்று; அதின் பட்டணங்களெல்லாம் இடிந்துபோயின” – எரேமியா 4:26; “இதோ, கர்த்தர் தேசத்தை வெறுமையும் பாழுமாக்கி” “தேசம் முழுதும் கொள்ளையாகி, முற்றிலும் வெறுமையாகும்” – ஏசாயா 24:1,3.

பதில்:  ஆண்டவரின் வருகையில் இந்த பூமியில் மகா பெரிய அதிர்ச்சி சம்பவிக்கும்.  அது மிகவும் பெரிதாக இருக்கப்போவதினால், முழுமையான அழிவு ஏற்படும்.

9. Does the Bible give specific information regarding the nearness of Christ’s second coming?

Answer:   Yes! Jesus Himself said, “When you see all these things, know that it is near—at the doors!” (Matthew 24:33). The Lord placed signs all along the way from His ascension to His second coming. See below …

A. The Destruction of Jerusalem
Prophecy: “Not one stone shall be left here upon another, that shall not be thrown down. … Let those who are in Judea flee to the mountains” (Matthew 24:2, 16).

Fulfillment: Jerusalem was destroyed in ad 70 by the Roman warrior Titus.

B. Great Persecution, Tribulation

Prophecy: “Then there will be great tribulation, such as has not been since the beginning of the world” (Matthew 24:21).

Fulfillment: This prophecy points primarily to the tribulation that took place during the Dark Ages and was instigated by the apostate Christian church. It lasted more than 1,000 years. Over 50 million Christians were slain by the false church, which “has shed more innocent blood than any other institution that has ever existed among mankind.” W.E.H. Lecky, History of the Rise and Influence of the Spirit of Rationalism in Europe, (Reprint New York: Braziller, 1955) Vol. 2, pp. 40-45.

  1. கிறிஸ்துவின் இரண்டாம் வருகை சமீபமாக இருக்கிறதென்பதைக் குறித்து வேதாகமம் குறிப்பான அறிவிப்பு கொடுக்கிறதா?

பதில்:  ஆமாம்.  வேதாகமம் கொடுக்கிறது.  இயேசு தாமும்: “இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்” – (மத்தேயு 24:33) என்று கூறினார்.  அவர் உயரே எழுந்ததிலிருந்து இரண்டாம் வருகைவரைக்கும் நடக்கவிருக்கிற அநேக அடையாளங்களை ஆண்டவர் கொடுத்திருக்கிறார்.  அவைகளை கவனமாகப் படியுங்கள்.

அ. எருசலேம் அழிக்கப்படும்

தீர்க்கதரிசனம்:  “இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும்.”  “யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்” – மத்தேயு 24:2,16.

நிறைவேறுதல்:  கி.பி. 70-ல் தீத்து என்னும் ரோமராயனால் எருசலேம் அழிக்கப்பட்டது.

 

ஆ.  மாபெறும் உபத்திரவம் உண்டாகும்

தீர்க்கதரிசனம்:  “ஏனெனில், உலகமுண்டானது முதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்” – மத்தேயு 24:21.

 

நிறைவேறுதல்:  இருண்ட காலத்தில் தேவதுரோகம் செய்த சபையினால் துவங்கப்பட்ட நீண்ட உபத்திரவ காலத்தை இந்தத் தீர்க்கதரிசனம் முதலாவது சுட்டிக்காட்டுகிறது.  அது ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்தது.  ஏறக்குறைய ஐந்து கோடி கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்திற்காக அந்த பங்கரமான உபத்திரவ காலத்தில் கொல்லப்பட்டனர்.  “மனிதக் குலத்தில் இதுவரையிலும் இருந்திருந்த வேறு எந்த நிருவனத்தைக் காட்டிலும் (தேவ துரோகம் செய்த சபை) அதிகமான குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தியிருக்கிறது” என்று ஒரு எழுத்தாளர் எழுதியிருக்கிறார்.  W.E.H.Lecky. History of the Rise and Influence of the Spirit of Rationalism in Europe, (Reprint New York: Braziller; 1955) Vol.2, pp.40-45.

இ.  சூரியன் இருண்டுபோகும்

தீர்க்கதரிசனம்:  “சூரியன் அந்தகாரப்படும்” – மத்தேயு 24:29.

நிறைவேறுதல்:  மனித சக்திக்கு அப்பாற்பட்ட இருட்டினால், மே 19, 1780 அன்று இது நிறைவேறியது.  அது ஒரு கிரகணம் அல்ல. “1780, மே 19-ம் நாள் குறிப்பிடத்தகுந்த இருண்ட நாள்.  அநேக இல்லங்களில் மெழுகு வர்த்திகள் கொளுத்தப்பட, பறவைகள் மௌனமாகி காணாமற்போயின.  பட்சிகள் தங்கள் கூடுகளுக்குத் திரும்பின.  நியாயத்தீர்ப்பின் நாள் வந்துவிட்டது என்கிற பொதுவான கருத்து அன்று இருந்தது” என்று தீமோத்தேயு டிவைட் என்பவர் கூறுகிறார்.

Quoted in Connecticut Historical Collections, compiled by John Warner Barber (2nd ed. New Haven: Durrie & Peck and J.W. Barber, 1836) p.403.

ஈ.  சந்திரன் இரத்தமாக மாறும்

தீர்க்கதரிசனம்:  “சந்திரன் இரத்தமாகவும் மாறும்” – யோவேல் 2:31.

நிறைவேறுதல்:  இருண்ட நாளான மே 19, 1780 இரவு சந்திரன் இரத்தம் போல ஆகிற்று.  மிலோ வாஸ்டிக் என்பவர்:  “Stone’s History of V” என்ற புத்தகத்தில் “முழுமையாக இருந்த சந்திரன் அன்று இரத்தம் போல காணப்பட்டது” என்று கூறுகிறார்.

உ.  நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும்

தீர்க்கதரிசனம்:  “நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும்” – மத்தேயு 24:29.

நிறைவேறுதல்:  1833, நவம்பர் 13 இரவன்று, மாபெரும் நட்சத்திர விழுகை நடந்தது.

ஒரு செய்தித்தாளை தெருவில் நின்று வாசிக்குமளவு அது பிரகாசமாயிருந்தது.  ஒரு எழுத்தாளர்: “ஏறக்குறைய நான்கு மணி நேரங்கள் வானம் பிரகாசமாயிருந்தது” என்கிறார்.  உலகத்தின் முடிவு வந்துவிட்டது என்று மனிதர் நினைத்தனர்.  கண்களை மிகவும் கவரும் இயேசுவின் இரண்டாம் வருகைக்கான இவ்வடையாளங்களைச் சிந்தியுங்கள்.

ஊ.  இயேசு மேகங்கள்மேல் வருவார்.

தீர்க்கதரிசனம்:  “அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும், அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்” – மத்தேயு 24:30.

நிறைவேறுதல்:  இதுதான் அடுத்து நடக்கவிருக்கும் சம்பவம்.  நீங்கள் ஆயத்தமா?

  1. உலக சரித்திரத்தினுடைய கடைசி நாளை அடைத்துவிட்டோம் என்று எப்படி நாம் அறியலாம்? கடைசி காலத்தைக்குறித்தும் மக்களைக்குறித்தும் வேதாகமம் தெளிவாக விவரிக்கிறதா?
பதில்:  ஆம்,  வேதாகமம் சொல்லுகிறது.  கீழே கொடுக்கப்பட்டுள்ள அடையாளங்களைக் கவனியுங்கள், ஆச்சரியப்படுவீர்கள்.

உலக சரித்திரத்தின் கடைசி நாட்களில் நாம் இருக்கிறோம் என்று காண்பிக்கக்கூடிய அநேக அநேகமான அடையாளங்களில் ஒரு சில இவை:

அ. யுத்தங்களும் குழப்பங்களும்.

“யுத்தங்களையும் கலகங்களையுங்குறித்து நீங்கள் கேள்விப்படும்போது, பயப்படாதிருங்கள்; இவைகள் முன்னதாகச் சம்பவிக்கவேண்டியதே” – லூக்கா 21:9.

யுத்தங்களும் பொது அழிவுகளும் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோரை பாதித்துக் கொண்டிருக்கிறது.  இயேசுவின் அதிசீக்கிர வருகையே யுத்தத்தின் வேதனையையும் அழிவையும் முடிவிற்குக் கொண்டுவரும்.

ஆ.  அமைதியின்மை, பயம், கலகங்கள்.

“பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்;…. பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்” – லூக்கா 21:25,26.

இது இன்றைக்கு அன்றாடம் வருகிற செய்தித்தாளின் முழுமையான படமாகத் தோன்றுகிறது. நாம் உலக சரித்திரத்தின் கடைசி நாட்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதே அதற்குக் காரணம்.  இன்று உலகில் நிலவிவரும் நெருக்கடியான சூழ்நிலை நம்மை ஆச்சரியப்படுத்தவேண்டியதில்லை.  கிறிஸ்து ஏற்கனவே அவைகளை அறிவித்திருக்கிறார்.  அவரின் வருகை சமீபமாக இருக்கிறதென்று இது நம்மை உணர்த்தவேண்டும்.

 

இ.  அறிவு பெருகிப்போம்.

“முடிவுகாலமட்டும்… அறிவும் பெருகிப்போம்” – தானியேல் 12:4.

இன்றைய அறிவின் காலத்தில் இது மிகவும் தெளிவாகத் தெரிகிறது.  கடவுளையே நம்பாத மனிதனும் கூட, இந்த அடையாளம் நிறைவேறியிருக்கிறதை ஒப்புக்கொள்ளவேண்டும்!  அனைத்து திசைகளிலும் அறிவு விரிந்துக்கொண்டிருக்கிறது.  உலகத்தின் ஒட்டுமொத்த அறிவியல் என்பது சதவிகிதம் கடைசி பத்து ஆண்டுகளில் வெளிப்பட்டிருக்கிறது என்றும், இதுவரை வாழ்ந்திருந்த அறிவியல் ஆராய்ச்சியாளர்களில் 90 சதவிகிதம் பேர் இன்றைக்கு உயிரோடு இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

 

ஈ.  பரியாசக்காரரும் சந்தேகவாதிகளும் வேதாகம சத்தியத்திலிருந்து விலகுவார்கள்.

“கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து” – 2 பேதுரு 3:3; “அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல்,… சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்” – 2 தீமோத்தேயு 4:3,4.

இந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலாக இன்று பரியாசக்காரரைப் பார்ப்பது நமக்கு கடினமல்ல.  மதத்தலைவர்கள்கூட சிருஷ்டிப்பையும், ஜலப்பிரளயத்தையும், கிறிஸ்துவின் தெய்வீகத்தையும், இரண்டாம் வருகையையும், அநேக முக்கியமான சத்தியங்களை போதிக்கிற வேதாகம போதனைகளையும் குறித்துப் பரிகசிக்கிறார்கள்.  மாபெரும் சத்தியங்களை பரிகாசிக்கவும். பரிசுத்த வேதாகமம் தெளிவாக போதிக்கிற எளிய உண்மைகளுக்கு பதிலாக பரிணாமக் கொள்கையையும் மனிதனின் படைப்புகளையும் வைக்கவும் உலக ஆசிரியர்கள் நம்முடைய வாலிபருக்குப் போதிக்கிறார்கள்.  அமெரிக்காவில், ஊழியத்திற்காகப் படிக்கும் மாணவர்களில் 2 சதவிகிதம் பேரே கிறிஸ்துவின் இரண்டாம் வருகை நடக்கக்கூடிய ஒன்று என்று நம்புவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

 

உ.  சன்மார்க்க சீரழிவு, ஆவிக்குரிய வாழ்க்கையின் தாழ்வு

“மேலும், கடைசிநாட்களில்… மனுஷர்கள் தற்பிரியராயும்,…. சுபாவ அன்பில்லாதவர்களாயும்,…. இச்சையடக்கமில்லாதவர்களாயும்,…. நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்,…. தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்” – 2 தீமோத்தேயு 3:1-5.

அமெரிக்கா மாபெரும் நெருக்கடியின் மத்தியில் இருக்கிறது.  மனிதப் பிரச்சனைகளுக்கு தற்கொலை மிகவும் பிரபலமான விடிவாக மாறிக்கொண்டிருக்கிறது.  ஏறக்குறைய இரண்டு திருமணங்களில் ஒன்று விவாகரத்தில் முடிய, விலாகரத்துக்களின் சதவிகிதம் ஏறிக்கொண்டிருக்கிறது. அசுத்தத்திலும் பாலுறவிலும் மிதமிஞ்சி, சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து – உண்மையான ஆவிக்குரிய வாழ்க்கை கீழிறங்கிக் கொண்டிருக்க – சன்மார்க்கர்களின் எண்ணிக்கை அதிகரித்து – உண்மையான ஆவிக்குரிய வாழ்க்கை கீழிறங்கிக் கொண்டிருக்க – சன்மார்க்க சீரழிவிலிருக்கும் இன்றைய தலைமுறை, தேவனுடைய வார்த்தையின் நிறைவேறுதலுக்கான தெளிவான ஒரு ஆதாரம். 2 தீதோ. 3:1-5ல் பட்டியலிடப்பட்டிருக்கிறவைகளில் எத்தனை காரியங்கள் ஞாயிற்றுகிழமையின் செய்தித் தாளில் இருக்கின்றன என்பது அதிர்ச்சியாக இருக்கும்.  உலகத்தை ஆட்கொண்டிருக்கிற தீமையின் அலையை ஆண்டவரின் வருகையைத்தவிர வேறெதுவும் நிறுத்தமுடியாது.

 

ஊ.  இன்பத்தின்மேல் மயக்கம்.

“மேலும், கடைசிநாட்களில்… மனுஷர்கள்…. தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்” – 2 தீமேத்தேயு 3:1-4.

உலகம் இன்பத்தின்மேல் பைத்தியமாகிக் கொண்டிருக்கிறது.  மகா பெரிய பட்டணங்களின் மக்கள் தொகையில் மிகக் குறைவான சதவிகிதத்தினரே ஆலய ஆராதனையில் வழக்கமாக கலந்துகொள்ளுகின்றனர். ஆனால் இன்பத்திற்கான கூடுகைகளுக்கு ஆயிரக்கணக்கானோர் செல்கின்றனர்.  இன்பத்திற்காக கோடிக்கணக்கான பணத்தை செலவிட்டு, தேவனுக்காக மிகசொற்பத்தையே கொடுக்கிறது.  இன்பத்திற்காக ஏங்குகிற மக்கள், 2 தீமோ. 3:4-ன் நேரடி நிறைவேறுதலாக தங்கள் தொலைக்காட்சிப் பெட்டிமுன் அநேக மணி நேரங்களை வீணாக்குகின்றனர்.

 

எ.  அக்கிரமமும், இரத்தக்குற்றங்களும், கொடுமைகளும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.

“அக்கிரமம் மிகுதியாவதினால்” – மத்தேயு 24:12;  “பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள்… மேனமேலும் கேடுள்ளவர்களாவார்கள்” – 2 தீமோத்தேயு 3:13;  “தேசம் … இரத்தப்பழிகளால் நிறைந்திருக்கிறது; நகரம் கொடுமையால் நிறைந்திருக்கிறது” – எசேக்கியேல் 7:23.

இந்த அடையாளம் நிறைவேறிவிட்டதென்பது வெகுத்தெளிவாக இருக்கிறது.  குற்றமும் அக்கிரமும் அதிர்ச்சியூட்டும் வேகத்தில் அதிகரித்திருக்கின்றன.  பெரிய பட்டணங்களில் வசிக்கும்  அநேக மக்கள் இருட்டினபிறகு தங்கள் கதவுகளில் ஒலிக்கும் மணிக்குக்கூட பதில் தருவதில்லை.  கட்டுப்படுத்த முடியாததைப்போல குற்றங்கள் வளர்ந்துகொண்டு வருவதால், மக்களை பாதுகாப்பதற்கே தேசத்தலைவர்கள் கவனம் கொடுத்துவருகின்றனர்.

 

ஏ.  அழிவுண்டாக்கும் நில அதிர்வுகள், வெள்ளங்கள், பஞ்சங்கள்

“பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும் உண்டாகும்” – லூக்கா 21:11.

பூமியதிர்ச்சிகளும், சுழல்காற்றுகளும், வெள்ளங்களும் முன்னெப்போதும் இல்லாதளவு அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.  உலகத்தின் மூன்றிலொரு பகுதியினர் பசியோடிருக்கிறார்கள்.  ஆயிரக்கணக்கானோர் அனுதினமும் பட்டினியால் சாகிறார்கள்.  இவைகள் அனைத்தும் நாம் பூமியின் கடைசி மணிநேரங்களில் வாழ்ந்து கொண்டிருப்பதற்கான கூடுதல் ஆதாரங்கள்.

ஐ.  இந்த கடைசி நாட்களில் உலகத்திற்கான விசேஷ செய்தி.

“ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்” – மத்தேயு 24:14.

கிறிஸ்துவின் இரண்டாம் வருகயைக்குறித்த மாபெரும் பவித்திரமான எச்சரிப்பின் செய்தி ஏறக்குறைய 900 மொழிகளிலும் பேச்சுக்களிலும் கொடுக்கப்படுகின்றது.  ஏறக்குறைய மக்கள் தொகையில் 95 சதவிகிதத்தினர் இந்த செய்திகளை பெற்றுவருகின்றனர்.  இயேசுவின் இரண்டாம் வருகைக்குமுன் அவருடைய அதிசீக்கிர வருகையைக்குறித்து உலகத்திலுள்ள ஒவ்வொரு நபரும் எச்சரிக்கப்படுவார்.  இந்த எச்சரிப்பின் செய்தியை புறக்கணிப்பவர் மாத்திரமே இரட்சிப்பை இழந்துபோவார்.

ஒ.  ஆவிமார்க்கத்திற்குத் திரும்புதல்.

“பிற்காலங்களிலே… சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள்” – 1 தீமோ. 4:1; “அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்” – வெளி. 16:14.

தேசத்தலைவர்கள் உட்பட  அநேகர் உளவியல் நிபுணரிடமிருந்தும், பிசாசுகளோடு தொடர்பு கொள்பவர்களிடமிருந்தும், ஆவிமார்க்கத்திடமிருந்தும் ஆலோசனைகளைத் தேடுகின்றனர்.  ஆத்துமா அழியாதது என்னும் பொய்யான போதனையோடு  ஆவிமார்க்கம் சபைகளையும் ஊடுருவியிருக்கிறது.  ஆனால் மரித்தவர்கள் மரித்தவர்களே என்று வேதாகமம் போதிக்கிறது.

ஓ.  முதலாளிக்கும் தொழிலாளிக்கும் பிரச்சனை.

“இதோ, உங்கள் வயல்களை அறுத்த வேலைக்கார்ருடைய கூலி உங்களால் அநியாயமாய்ப் பிடிக்கப்பட்டுக் குக்குரலிடுகிறது; அறுத்தவர்களுடைய கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளில்பட்டது.” “நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து,…. கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே” – யாக்கோபு 5:4,8.

முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையே கடைசி நாட்களில் பிரச்சனை ஏற்படும்.  அதன் நிறைவேறுதலை செய்தித்தாள்களில் பாருங்கள்.

  1. ஆண்டவருடைய இரண்டாம் வருகை எவ்வளவு சமீபத்திலிருக்கிறது?

“அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்த காலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்.  அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்.  இவைகௌல்லாம் சம்பவிக்கு முன்னே இந்தச் சந்ததி ஒழிந்து போகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” – மத்தேயு 24:32-34.

பதில்:  வேதாகமம் இந்தக் காரியத்தில் மிகவும் குறிப்பாகவும் தெளிவாகவும் இருக்கிறது.  ஏறக்குறைய அனைத்து அடையாளங்களும் நிறைவேறிவிட்டன.  கிறிஸ்துவின் வருகைக்கான மிகச்சரியான நேரத்தையும் நாளையும் நம்மால் அறியமுடியாது. (மத்தேயு 24:36).  ஆனால் இயேசுவின் இரண்டாம் வருகையை நேரடியாகக் காண்கிற மக்கள் நாம்தான் என்கிறதைக் குறித்து நாம் நம்பிக்கையோடிருக்கலாம்.  காரியங்களை வெகு விரைவாக முடிப்பதாக தேவன் வாக்குக்கொடுத்திருக்கிறார் (ரோமர் 9: 28).  கிறிஸ்து வெகுசீக்கிரத்தில் தமது பிள்ளைகளுக்காக இந்த உலகத்திற்கு வரவிருக்கிறார். நீங்கள் ஆயத்தமா?
  1. சாத்தான் பொய்யான அடையாளங்களாலும் அற்புதங்களாலும் இலட்சக்கணக்கானோரை ஏமாற்றி, கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்து அநேக பொய்களைச் சொல்லிவருகிறான். நான் வஞ்சிக்கப்படமாட்டேன் என்று எவ்விதம் நிச்சயமாயிருக்கலாம்?

“அவைகள் அற்புதங்களைச்செய்கிற பிசாசுகளின் ஆவிகள்” – வெளி. 16:14; “கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்” – மத்தேயு 24:24; “வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்க வேண்டும்;  இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை” – ஏசாயா 8:20.

பதில்:  கிறிஸ்து ஏற்கனவே வந்துவிட்டார் என்றோ அல்லது வேதாகமத்தில் சொல்லப்படாத விதத்தில் வருவார் என்றோ கூறி அநேகரை நம்பவைக்க (கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்த) அநேக பொய்ப் போதனைகளை சாத்தான் கண்டுபிடித்திருக்கிறான்.  சாத்தானுடைய தந்திரத்தைக் குறித்து: “ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்” (மத்தேயு 24:4) என்று கிறிஸ்து எச்சரித்திருக்கிறார்.  சாத்தானுடைய திட்டங்களையும் பொய்களையும் வெளிக்காட்டி, நாம் எச்சரிப்படைவதற்கேதுவாக: “இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்” (வசனம். 25) என்று நினைவுபடுத்துகிறார்.  அவர் வனாந்தரத்திலோ அல்லது அறைவீட்டிலோ காணப்படமாட்டார் என்றார்.  கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக்குறித்து வேதாகமம் போதிக்கிறதை நாம் கற்றுக்கொள்வோமானால் வஞ்சிக்கப்படமாட்டோம்.  அதைக்குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது என்கிற அமில பரிசோதனையே நீங்கள் செய்யவேண்டிய ஒன்று.  இரண்டாம் வருகையைக்குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது என்று அறிந்திருக்கிற மக்கள் சாத்தானால் வஞ்சிக்கப்படமுடியாது, மற்ற அனைவரும் வஞ்சிக்கப்படுவார்கள்.

  1. இயேசு இரண்டாம் முறை வரும்போது நான் ஆயத்தமாக இருப்பேன் என்று எப்படி நிச்சயமாக இருக்கலாம்?

“என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை” – யோவான் 6:37; “அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்” – யோவான் 1:12; “என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்” – எபிரெயர் 8:10; “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு  ஸ்தோத்திரம்” – 1 கொரிந்தியர் 15:57.

பதில்:  என்னுடைய இருதயத்திற்குள் வந்து என்னுடைய வாழ்க்கையை மாற்றுவதற்காக: “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து” (வெளி 3:20) என்று இயேசு கூறுகிறார்.  பரிசுத்த ஆவியானவர் மூலமாகவும் என் மனச்சாட்சியின் வழியாகவும் இயேசு கதவைத் தட்டி அனுமதி கேட்கிறார்.  நான் என் வாழ்க்கையை அவரிடம் முழுமையாக திருப்பும்போது, என் கடந்தகாலப் பாவங்கள் அனைத்தையும் அவர் துடைத்துப்போட்டு (ரோமர் 3:25), பரிசுத்த வாழ்க்கை வாழ எனக்கு வல்லமை தருவார் (யோவான் 1:12).  என் வாழ்க்கை இயேசுவினால் மாற்றப்படும்போது, பரிசுத்த தேவன்முன் நான் பயமின்றி நிற்பதற்கேதுவாக அவர் தமது நீதியுள்ள குணத்தை என்மேல் இலவச ஈவாக எழுதுகிறார். அப்போது அவருடைய சித்தத்தின்படி செய்வது எனக்கு இன்பமாகிறது.  அதனுடைய உண்மை மிக எளிமையாக இருப்பதினால் அநேகர் சந்தேகப்படுகிறார்கள்.  ஆனால் இது உண்மை.  என்னுடைய பங்கெல்லாம் – என் வாழ்க்கையை கிறிஸ்துவிற்கு ஒப்புக்கொடுத்து என்னில் வசிக்கும்படி அவரை அனுமதிப்பதுதான்!  அவருடைய பங்கு –  எனக்குள் வல்லமையான அற்புதங்களை நடப்பித்து, என்னை அவருடைய இரண்டாம் வருகைக்கு ஆயத்தப்படுத்துவது!  அது ஒரு இலவச ஈவு!  அதை ஏற்றுக்கொள்வதே என் பங்கு!

  1. என்ன ஒரு மாபெரும் ஆபத்தைக்குறித்து இயேசு எச்சரித்தார்?

“நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்” – மத்தேயு 24:44; “உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சிக்கையாயிருங்கள்” – லூக்கா 21:34; “நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்” – மத்தேயு 24:37.

பதில்:  நோவாவின் காலத்தில் வெள்ளம் பூமியின்மேல் புரண்டதைப் போல இயேசுவின் வருகை என்மேல் புரண்டு வரும்படி, உலகக் கவலைகளில் மூழ்குவதில், அல்லது பாவ இன்பங்களில் மயங்குவதில் மாபெரும் ஆபத்து இருக்கிறது.  ஆயத்தமின்றி இரட்சிப்பை இழந்து அதிர்ச்சியடைவோம்.  இது இலட்சக்கணக்கானோரின் அனுபவமாயிருக்கும்.  உங்களுக்கு? இயேசு விரைவில் – வெகு விரைவில் – நம்முடைய காலத்திலேயே வரவிருக்கிறார்.  நீங்கள் ஆத்தமா?

  1. இயேசு திரும்ப வரும்போது ஆயத்தமாயிருக்க நீங்கள் தீர்மானிக்கிரீர்களா?

உங்கள் பதில்: ____________________________________________________________________________________________________________

சிந்தனைக்  கேள்விகள்


 1. மாபெரும் உபத்திரவம் இனிமேல்தானே வரவேண்டும்?

பதில்:  இயேசு தமது பிள்ளைகளை விடுவிக்கும்முன்பாக பயங்கரமான மகா பெரிய உபத்திரவம் பூமியை மூடும் என்பது உண்மைதான்.  தானியேல் இதை:  “யாதொரு ஜாதியாரும் தோன்றினதுமுதல் அக்காலமட்டும் உண்டயிராத ஆபத்துகாலம் வரும்” (தானியேல் 12:1) என்று விவரிக்கிறார்.  மத்தேயு 24:21-ன் உபத்திரவம்.  இருண்ட காலங்களில் தங்கள் விசுவாசத்திற்காக கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான தேவனுடைய பிள்ளைகளின் உபத்திரவத்தைக் குறிப்பிடுகிறது.

  1. கர்த்தர் “இரவில் திருடனைப்போல” வரப்போவதால் அதைக்குறித்து எவ்விதம் நாம் அறிமுடியும்?

பதில்:  இதற்கான பதில் 1 தெசலோனிக்கேயர் 5:2-4-ல் இருக்கிறது.  “இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள்.  சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.  சகோதரரே, அந்த நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக்கொள்ளத்தக்கதாக, நீங்கள் அந்தகாரத்திலிருக்கிறவர்களல்லவே”.  கர்த்தருடைய நாள் ஆயத்தமாக இல்லாதவர்களுக்குத்தான் திருடன் வருகிறவிதமாக வருகிறது.  “சகோதரருக்கு” அல்ல என்கிறதை கவனியுங்கள்.

  1. கிறிஸ்து எப்போது தமது இராஜ்யத்தை இந்த பூமியில் ஸ்தாபிப்பார்?

பதில்:  வெளிப்படுத்தல் 20ல் கூறப்பட்டுள்ள ஆயிரம் வருடங்களுக்குப்பின்பு இயேசு தமது இராஜ்யத்தை இந்த பூமியில் ஸ்தாபிப்பார்.  இந்த ஆயிர வருடகாலம், தம்மோடு பிழைக்கவும் ஆட்சி செய்யவும் இயேசு நீதிமான்களை இந்த பூமியிலிருந்து எடுத்துச் செல்லும் இரண்டாம் வருகையில் துவங்குகிறது.  ஆயிர வருடத்தின் முடிவில், “புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரம்” (வெயிப்படுத்தல் 21:2) சகல பரிசுத்தவான்களோடுங்கூட (சகரியா 14:1,4,5) பரலோகத்திலிருந்து பூமிக்கு இறங்கிவருகிறது.  அப்போது இதுவரையிலும் அனைத்து யுகத்திலும் மரித்திருந்த துன்மார்க்கர் உயிரடைகிறார்கள் (வெளிப்படுத்தல் 20:5).  அவர்கள் பரிசுத்த பட்டணத்தை பிடிக்கும்படி அதை வளைந்துகொள்ளுகிறார்கள் (வெளிப்படுத்தல் 20:9).  அப்போது அவர்களை பட்சிக்கும்படியாக தேவனிடமிருந்து வானத்திலிருந்து அக்கினி இறங்கி வருகிறது.  இந்த அக்கினி பூமியை சுத்திகரித்து பாவத்தையும் பாவிகளையும் குறித்த அனைத்துத் தடயங்களையும் எரித்துப்போட்டு ( 2 பேதுரு 3:10), சாம்பலை மாத்திரமே விட்டுவைக்கிறது (மல்கியா 4:3).  அக்கினி அவிந்துபோகிறது (ஏசாயா 47:14).  பின்னர் தேவன் புதிய பூமியை சிருஷ்டித்து (2 பேதுரு 3:13; ஏசாயா 65:17; வெளிப்படுத்தல் 21:1), அதை நீதிமான்களுக்குக் கொடுக்கிறார்.  “அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்;… தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்”… வெளிப்படுத்தல் 21:3.  தேவனுடைய பரிபூரண சாயலுக்கு மீண்டும்  கொண்டுவரப்பட்ட பூரணமான, பரிசுத்தமான, மகிழ்ச்சியான மக்கள், தேவன் முன்னதாகவே திட்டம்பண்ணியிருந்ததைப்போல பாவமில்லாத, கறையில்லாத உலகத்தில் வசித்திருப்பார்கள்.  மிகவும் மதியற்ற நபர்களே இதை இழக்க தெரிந்துகொள்ளுவார்கள். (மேலும் அழகிய புதிய இராஜ்யத்தை குறித்து வேதபாடம் 4 ஐ படிக்கவும். மேலும் 1000 வருஷம் குறித்து வேதபாடம் 12 ஐ படிக்கவும்.)

  1. கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்த அதிக பிரசங்கங்களையும் போதனைகளையும் ஏன் நாம் இன்று கேட்பதில்லை?

பதில்:  காரணம் பிசாசுதான்.  இரண்டாம் வருகை கிறிஸ்தவர்களுடைய “ஆனந்த பாக்கியம்” (தீத்து 2:13) என்றும், சரியாகப் புரிந்துகொள்ளப்படும்போது, கிறிஸ்துவின் வருகையை துரிதப்படுத்தும்படி இந்த நற்செய்தியை மற்றவர்களுக்குச் சொல்லத்தக்கதாக, அது ஆண்கள் மற்றும் பெண்களுடைய வாழ்க்கையை தனிப்பட்ட, ஜாக்கிரதையான, சுறுசுறுப்பான நிலைக்கு மாற்றும் என்றும் அவன் நன்கு அறிவான்.  இது சாத்தானுக்கு ஆத்திரத்தை கொடுக்கிறது.  எனவே, தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதன் பலனை மறுதலிக்கிறவர்களைத் (2 தீமோத்தேயு 3:5) தூண்டி, “அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின்தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே” (2 பேதுரு 3:3,4) என்று கூறி பரியாசம்பண்ண நடத்துகிறான்.  இதை மறுத்து, அலட்சியம் பண்ணி, கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை (விரைவில் நடக்கவிருக்கும் நிஜமான சம்பவத்தை) அற்பமாக எண்ணுகிறவர்கள், இவ்விதம் மேற்குறிப்பிட்ட வேதாகம தீர்க்கதரிசனத்தை குறிப்பாக நிறைவேற்றி, பிசாசிற்கு மாபெரும் சேவை செய்கிறார்கள்.

  1. ஆனால், “ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான்” என்று லூக்கா 17:36-ல் சொன்னபோது இயேசு இரகசிய வருகையைக் குறித்து கூறவில்லையா?

பதில்:  இல்லை.  இந்த சம்பவம் இரகசியமானது என்பதற்கு மிகக் குறைவான அடையாளம்கூட இல்லை. இயேசு நோவாவின் காலத்து வெள்ளத்தையும் சோதோமின் அழிவையும் விவரிக்கிறார்.  (லூக்கா 17:26-37-ஜ பாருங்கள்).  எவ்விதம் நோவாவையும் லோத்துவையும் தப்புவித்து, தேவன் துன்மார்க்கரை அழித்தார் என்பதை அங்கு கூறுகிறார்.  இன்னும், ஜலப்பிரளயமும் அக்கினியும் “எல்லாரையும் அழித்துப்போட்டது” (வசனம் 27,29) என்று குறிப்பாகக் கூறுகிறார்.  ஒவ்வொரு சம்பவத்திலும் சிலர் பாதுகாப்பிற்காக எடுத்துக்கொள்ளப்பட்டனர்; மற்ற அனைவரும் அழிக்கப்பட்டனர் என்பது தெளிவாக இருக்கிறது.  மேலும், “மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்” (வசனம் 30) என்று சேர்த்துக் கூறினார்.  இதை விளக்க, “வயலிலிருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான்” (வசனம் 36) என்று இயேசு தொடர்ந்தார்.  இதில் இரகசியம் என்பதற்கு எதுவுமே இல்லை.  “கண்கள் யாவும் அவரைக் காணும்” – வெளிப்படுத்தல் 1:7.  அவருடைய இரண்டாம் வருகையில், கிறிஸ்து அனைவர் முன்பும், வெளிப்படையாக, நீதிமான்களை மேகங்கள்மேல் எடுத்துக்கொண்டு (1 தெசலோனிக்கேயர் 4:16,17) துன்மார்க்கரைக் கொல்லுவார் (ஏசாயா 11:4; 2 தெசலோனிக்கேயர் 2:8) எனவேதான் துன்மார்க்கரின் சரீரங்களைக்குறித்தும், அவைகளைச் சூழ்ந்திருக்கிற கழுகுகளைக்குறித்தும் லூக்கா 17:37 பேசுகிறது. (வெளிப்படுத்தல் 19:17.18-ஜயும் பார்க்கவும்).  கிறிஸ்துவின் வருகையில் விட்டுச் செல்லப்படுகிற துன்மார்க்கர் மரித்தவர்களாக விடப்பட்டிருப்பார்கள். (இரகசிய வருகயை குறித்து மேலும் படிக்க இதைப்பற்றிய புத்தகத்தை பெற எங்களை அனுகவும்.)

கேள்விகள்


 

  1. அவருடைய இரண்டாம் வருகையில்: (1)

(  ) கிறிஸ்து தனியாக வந்து பூமியின் குறிப்பிட்ட நகரங்களைச் சந்திப்பார்.

(  ) கிறிஸ்து வனாந்தரத்தில் தோன்றுவார்.

(  ) கிறிஸ்து மேகங்கள்மேலேயே இருந்து நீதிமான்களைத் தம்மிடம் அழைப்பார்.

  1. இயேசு இந்த பூமிக்குத் திரும்பும் போது: (1)

(  ) நீதிமான்கள் மாத்திரம் அவரைக் காண்பார்கள்.

(  ) கண்கள் யாவும் அவரைக் காணும்.

(  ) தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்படும்வரை மக்கள் அதை அறியார்கள்.

  1. கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் நீதிமான்களுக்கு என்ன சம்பவிக்கும்? (2)

(  ) மரித்த நீதிமான்கள் எழும்பி, அழியாமை தரித்து, மேகங்கள்மேல் பரலோகிற்கு எடுத்துக்கொள்ளப்படுவர்.

(  ) உயிரோடிருக்கும் நீதிமான்கள் அழியாமை தரித்து, மேகங்கள்மேல் பரலோகிற்கு எடுத்துக்கொள்ளப்படுவர்.

(  ) நீதிமான்கள் இங்கேயே தங்கியிருந்து துன்மார்க்கரை மனமாற்றுவார்கள்.

(  ) நீதிமான்கள் இரகசியமாக பறித்துக்கொண்டுபோகப்படுவார்கள்.

  1. வேதாகம அடையாளங்களின் அடிப்படையில் கிஸ்துவின் வருகை: (1)

(  ) மிகவும் அதிக சீக்கிரத்தில் நடக்கும்

(  ) இப்போதிருந்து சில நூற்றாண்டுகளுக்குப்பின்பு சம்பவிக்கும்.

(  ) ஏற்கனவே சம்பவித்து விட்டது.

  1. இயேசு வரும்போது உயிரோடிருக்கும் துன்மார்க்கர்: (1)

(  ) நித்தியமாக  எரியப்போகிற நரகத்தில் போடப்படுவர்.

(  ) அவருடைய இரண்டாம் வருகையில் கொல்லப்படுவர்.

(  ) மற்றொரு சந்தர்ப்பம் பெறுவர்.

  1. கீழே கொடுக்கப்பட்டவைகளில் உண்மைகளைத் தெரிந்தெடுங்கள்: (4)

(  ) அவர் இரகசியமாக வருவார்.

(  ) இரண்டாம் வருகை மனமாறுதலின் அனுபவம்.            (  ) அவர் மேகங்கள்மேல் வருவார்.

(  ) நாம் மரிக்கும் நேரத்தில் கிறிஸ்து நமக்காக வருகிறார்.

(  ) துன்மார்க்கர் அவரை காணமாட்டார்கள்.

(  ) அனைத்து தூதரும் அவரோடு இருப்பார்கள்.

(  ) அவர் இந்த பூமியை தொடப்போவதில்லை.

(  ) அவருடைய வருகையின் நேரத்தையும் நாளையும் நாம் அறிந்துகொள்ளக்கூடும்.

(  ) இலட்சக்கணக்கானோர் ஆச்சரியப்பட்டு இரட்சிப்பை இழந்துபோவார்கள்.

  1. இயேசுவின் இரண்டாம் வருகையில்: (1)

(  ) முழு உலகமும் ஆயத்தத்தோடு காத்திருக்கும்.

(  ) அழிவை ஏற்படுத்துகிற மிகப்பெரிய பூமியதிர்ச்சிகள் சம்பவிக்கும்.

(  ) துன்மார்க்கர் மனந்திரம்புவார்கள்.

  1. பூமியின் கடைசி நாட்களைக்குறித்த அடையாளங்கள்: (7)

(  ) உலகநிலை மேன்மையானதாக – இன்னும் மேன்மையானதாக மாறும்.

(  ) முதலாளிக்கும் தொழிலாளிக்குமிடையே போராட்டம் இருக்கும்.

(  ) மிகக்குறைவான பூமியதிர்ச்சிகளும் வெள்ளங்களும் ஏற்படும்.

(  ) வேதகம சத்தியத்திலிருந்து விலகிச் செல்லுவார்கள்.

(  ) இன்பத்திற்கான பைத்தியம் அதிகரிக்கும்.

(  ) நன் நடத்தை தவறுகளின் சீரழிவு.

(  ) குற்றம் எண்ணிக்கை குறையும்.

(  ) மாபெரும் பஞ்சங்கள் ஏற்படும்.

(  ) அறிவு பெருகிப்போம்.

(  ) அமைதியின்மையும் போராட்டங்களும் வெடிக்கும்.

  1. கிறிஸ்துவின் வருகையைக் குறித்த வானத்தின் அடையாளங்கள் எவை? (2)

(  ) ஹேலிஸ் வால் நட்சத்திரம்.

(  ) 1780-ம் வருடத்தின் இருண்ட நாள்.

(  ) நவம்பர் 1833-ல் ஏற்பட்ட நட்சத்திர விழுகை.

(  ) சந்திரன் பூமியின்மேல் வந்து விழும்.

  1. இயேசு வெகவிரைவாக பூமிக்குத் திரும்புவார் என்று நாம் எவ்விதம் அறிவோம்? (1)

(  ) வேதாகமம் கடைசி காலத்தைக் குறித்த அடையாளங்களையும், பூரண விளக்கத்தையும் கொடுப்பதால்.

(  ) இயேசு விரைவில் வருவார் என்று அநேகர் நம்புவதால்.

(  ) சில ஜோசியர்கள் அதை முன்சொல்லியிருப்பதால்.

  1. கிறிஸ்து வரும் விதத்தைக்குறித்தும் நேரத்தைக்குறித்தும் அநேகர் ஏமாற்றப்படுவார்கள். காரணம்: (1)

(  ) அனைவரும் இரட்சிக்கப்படவேண்டும் என்று தேவன் விரும்பவில்லை.

(  ) அவர்கள் போதுமான காணிக்கை  கொடுப்பதில்லை.

(  ) சத்தியத்தை காண அவர்கள் தங்கள் வேதாகமங்களை ஆராய்வதில்லை,  12.       கிறிஸ்துவின் வருகைக்கு நான் எவ்விதம் ஆயத்தமடைய முடியும்? (1)

(  ) இயேசு எனக்குள் வசிக்கும்போது.

(  ) நான் அனுதினமும் செய்தித்தாளை வாசிக்கும்போது.

(  ) என் போதகரின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படியும்போது.

  1. இயேசு திரும்ப வரும்போது ஆயத்தமாயிருக்க நான் தீர்மானித்திருக்கிறேன்.

(  ) ஆம்.

(  ) இல்லை.