உண்மைச் சபைக்கான தேடல்
CONTENTS
| தேடல் |
|
ஸ்திரீ சபையை அடையாளப்படுத்துகிறது |
|
சபையின் உபத்திரவம் |
|
உண்மைச் சபையின் மூன்று அடையாளங்கள் |
|
நான்காம் அடையாளம் காட்டும் பண்பு |
| பெரும்பான்மை சபைகள் வேதாகமப் பரிட்சையில் தோல்வியுறுகின்றன |
|
தீர்க்கதரிசன ஆவி |
|
சபையிலிருந்து தீர்க்கதரிசிகள் மறைந்தது ஏன்? |
|
எந்தச் சபையாவது நான்கு சோதனைகளைச் சந்திக்குமா? |

அத்தியாயம் - 1
தேடல்
இன்றைய உலகில் உண்மைச் சபை என்று ஒன்று உள்ளதா? அப்படி இருந்தால் எப்படி அதை அடையாளம் காண இயலும்?
நவீன கால உண்மை தேடுவோர் எதிர்கொள்ளும் சமயம் சார்ந்த அனைத்துக் கேள்விகளிலும் இது நிச்சயமாகவே மிக எதிர்ப்பார்ப்புக்கும் மிகுந்த பதில் காண விழையும் கேள்வியாக உள்ளது. ஒவ்வொரு தலைமையகத்தினின்றும் தம்மிடம் அதற்கான பதில் உள்ளதாக முரண்பட்ட குரல்கள் அறிவிக்கின்றன. சபை அமைப்புகளும் பிரிவுகளும் நம்பிக்கைக் குழுக்களும் தொடர்பு அற்ற வேத வசனங்களின் உணர்ச்சிகரமான வியாக்கியானங்களை அடிப்படையாகக் கொண்ட, கேட்க சகிக்காத உரிமை கோரல்களை விடுக்கின்றன.
இன்றைய சராசரி கிறிஸ்தவன், ஏதாவது “உண்மைச்சபை” உண்மையில் இருக்கக்கூடுமா என்பதைப் பலர் தள்ளிவிடக்கூடிய இத்தகைய மிகைப்படுத்தப்பட்ட பெருமைகளை முற்றிலும் புறந்தள்ளியுள்ளான். மற்றவர்கள் எந்தவொரு சபையையும் மற்றதைவிட “உண்மையானது” எனச்சோதித்து தரப்படுத்தப்படக்கூடிய வகையைப்பற்றி கேள்வி எழுப்புகின்றனர்.
எந்த சபையும் தன் உறுப்பினர்கள் பாவமற்றவர்கள் என்பதற்காக உயர்ந்த சபை என்று நிருபிக்கப்பட முடியாது என்று அறிவதும் மிக முக்கியமானதாகும். மக்கள் யாவரும் சமம், அனைவரும் மனித இயல்பின் அதே பலவீனங்களுக்கு உட்பட்டவர்களே. எனினும் இந்த பலவீனங்களை மேற்கொள்ள ஒவ்வொரு கிறிஸ்தவனும் தேவனுடைய அதே பலத்த வல்லமைக்குள் அணுகி வந்து நிற்கின்றனர் என்பதும் உண்மையே. ஆகையால் இன்றுள்ள எந்த ஒரு சபையும் பலப்பல நிலைகளில் தனிநபர் பரிசுத்தமாக்கப்படுதல் உடைய தனி மனிதர்களால் உருவானதாக கண்டிப்பாக இருத்தல் வேண்டும். கோதுமையும் பதர்களும் இன்னமும் ஒன்று கலந்துதான் இருக்கும், எந்தச் சபையும் முழுமையாக புரண மனிதர்களால் ஆனதாக இராது.
ஆனால் கேள்வி இன்னமும் இருக்கிறது: உண்மையின் வேதாகமத் தர அளவீடுகளுக்கு நெருக்கமாக வருகிற சபையை இனங்காணத்தக்க வழி ஏதேனும் உள்ளதா? ஓர் அமைப்பின் மாறுபட்ட பெயர் சரியானதை உணர்த்தும் எனச் சிலர் எண்ணுகின்றனர். வெளிப்படையாகப் பார்க்கையில் இது ஒன்றும் சரியான சோதனை அல்ல் ஏனெனில் ஒரு பெயரைத் தெரிந்து கொள்வது அந்தச் சபையின் ஆவிக்குரிய இயல்பைப் பற்றி கிட்டத்தட்ட ஒன்றுமே புலப்படுத்திவிடுவதில்லை. அப்படிப்பட்ட மேலோட்டமான உரிமைகோருதல்கள் உண்மையைத் தேடும் அறிவாளிகளை ஊக்கம் குன்றவே செய்துவிடும்.
தேவன் இன்றைய உலகில் ஓர் சிறப்புச் சபையை உடையவராய் இருந்தால் அவர் அதைத் தமது பரிசுத்த வசனத்திலே தெளிவாக யாவருக்கும் வெளிப்படுத்திடுவார். அத்தகவல் மனித நியாய உணர்வுக்கு எட்டும் வகையில் சொற்களில் கோர்த்து வைக்கப்பட்டு, தெளிவற்ற நடைமுறைகள் அல்லது நியமங்களுக்கு மேலாக உரைக்கப்பட்டிருக்கும்.
நீங்கள் எதைப்பற்றி படிக்கப்போகிறீர்களோ அது உங்கள் வாழ்வைப் புரட்டிப் போடலாம் என்பதை நான் நன்கு அறிந்துள்ளபோதிலும், அந்த உரிமை கோருதல்கள் பற்றி நான் தயக்கம் செலுத்தப்போவதில்லை. பின்வரும் விஷயம் பற்றி மேலோட்டமாக அறியவோ, இலேசாகப் படிக்கவோ வேண்டாம். நீங்கள் அதை ஜெபசிந்தையுடனும் திறந்த மனதுடனும் படியுங்கள் என்றே நான் கேட்கிறேன். பின்னர் அதை வேத வசனங்களின் அடிப்படையிலும், உங்கள் சொந்த ஆவிக்குரிய உணர்த்துதல்கள் படியேயும் நிதானியுங்கள். அது உண்மையென்றால், பரிசுத்த ஆவியானவர் உங்களை அதுப்பற்றிய இனிய அறிந்துணருதலுக்குள் வழிநடத்துவார். நீங்கள் தேவனுடைய வார்த்தையில் எப்போதும் கொண்டிருக்கும் மிகச்சிலிர்ப்பூட்டும் சாதனைக்குள் செல்லும் இந்த அனுபவத்தைக் கண்டடைவீர்கள் என்பதாகவே என் எண்ணம் உள்ளது.
உண்மையைப்பற்றிய நமது கேள்வி வெளிப்படுத்தல் பன்னிரண்டாம் அதிகாரத்தின் மீது மையங்கொண்டுள்ளது. குறைவான நேரமும் இடமும் ஓர் விரிவான ஆய்வை அனுமதிப்பதில்லை, ஆனால் சரியான நிறைவேறுதல் மற்றும் எளிமை ஆகிய இரு அடிப்படைகளின் மீது முன்னுரிமை கொடுக்கப்படும். நாம் உண்மைச் சபையின் ஈர்ப்புமிக்க வரலாற்றைப் பின்பற்றிச் செல்கையில் அதன் வியக்க வைக்கும் உச்சக்கட்டத்தை எட்ட பன்னிரண்டு நூற்றான்டுகளுக்கு மேற்ப்பட்ட காலத்தை சரிப்பார்க்க வேண்டியவர்களாய் இருக்கிறோம்;.தீர்க்கதரிசனத்தின் வரலாற்றுப் பகுதிக்கான இன்னும் அதிக உறுதிப்படுத்தும் சான்று எனது “மிருகம், வலுசர்ப்பம், ஸ்திரீ” (வுhந டீநயளவஇ வாந னுசயபழn யனெ வாந றுழஅயn) என்ற நூலில் தரப்பட்டுள்ளது.
அத்தியாயம் - 2
ஸ்திரீ
சபையை அடையாளப்படுத்துகிறது
வெளிப்படுத்தல் 12 அடிப்படையில் ஓர் அழகிய, சூரியனை அணிந்த ஒரு ஸ்திரீயை பற்றியதும், அவளுடைய சந்ததியாரைப் பற்றியதுமான ஓர் விவரிப்பு ஆகும். “அன்றியும் ஒருபெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது: ஒரு ஸ்திரீ சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் சிரசின் N;மல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன.” (வெளிப்படுத்தல் 12:1)
இங்கே நாம் வேதாகமத்தின் நன்கு அறியப்பட்ட அடையாளங்களில் ஒன்றுடன் அறிமுகப்படுத்தப்படுகிறோம். பழைய மற்றும் புதிய ஏற்பாடுகள் இரண்டிலும், தேவன் தம் மக்களை ஒரு ஸ்திரீக்கு குறிப்பிடுகிறார். மணவாளனாகிய அவர் சபையுடன் திருமணம் புரிந்துள்ளார். பவுல் கொரிந்தியருக்கு இவ்வாறு எழுதினார்: “நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால்.......” (2 கொரிந்தியர் 11:2)
வேதாகமம் முழுவதிலும் நாம் இந்த அடையாளப்படுத்துதலைப் பின்பற்ற இயலும். தேவன் பழைய ஏற்பாட்டில் கூறினார்: “செல்வமாய் வளர்ந்த ரூபவதியான சீயோன் குமாரத்தி…” (எரேமியா 6:2). மீண்டும், “…சீயோனை நோக்கி: நீ என் ஜனமென்று சொல்வதற்காக…” (ஏசாயா 51:16). சபையானது சீயோன் என்று அழைக்கப்படுகிறது, மேலும் தேவன் அதை ஓர் அழகிய பெண்ணாக ஒப்பிடுகிறார். பழைய ஏற்பாட்டில், தெரிந்துக்கொள்ளப்பட்ட ஜனமாகிய இஸ்ரவேல் தேவனை மணந்துக்கொண்டுள்ளதாக அநேகந்தரம் சித்திரிக்கப்பட்டுள்ளது.
புதிய ஏற்பாட்டில், தேவனுடைய மெய்யான இஸ்ரவேல் இனி ஒரு ஜனமாய் இராது, மாறாக கிறிஸ்துவைத் தங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்ட யு+தரும் புறஜாதியாரும் அடங்கிய ஒரு சபையாக இருக்கும். ஆகவே வெளிப்படுத்தல் 12 - ல் உள்ள ஸ்திரீயை கிறிஸ்துவின் காலத்து சபையின் படக்கதையை நமக்கு ஒளிவீசச் செய்கிறது. சூரிய ஒளியை அணிந்திருத்தல், மகிமை நிறைந்த, கிருபையின் புதிய உடன்படிக்கையை அடையாளப்படுத்துகிறது, மேலும் அந்தப் பன்னிரு நட்சத்திரங்கள் பன்னிரு அப்போஸ்தலர்களைக் குறிப்பிடுகிறது. அவளது பாதங்களின் கீழ் உள்ள சந்திரன், மெய்யான தேவ ஆட்டுக்குட்டியின் முன்னிலையில் ஒளி இழக்கும் பழைய உடன்படிக்கையின் மகிமையைக் குறிப்பிடுகிறது.
இப்பொழுது தான் சிலிர்ப்புட்டும் பகுதி ஆரம்பிக்கிறது! நாம் நமது ஆண்டவராகிய இயேசுவினுடைய மெய்யான சபையின் திறவுண்ட எதிர்காலத்தைப் பின் சென்று காணப்போகிறோம். அடுத்துவரும் வசனங்கள் காலங்கள் நெடுகிலும் சத்தியத்தின் போக்கு எப்படி இருந்தது என்று மிக விரிவாகக் கோடிட்டுக் காட்டும். இன்று அந்த ஸ்திரீயை எங்கே கண்டுபிடிக்க முடியும் என நாம் அறிய விரும்புகிறோம்! இன்றைய நாளில் அந்த உண்மைச் சபை எங்கே உள்ளது எனச் சரியாக அதன் காட்சிகளை அடியொற்றுகையில், தீர்க்கதரிசனத்தின் ஒரு அடியையும் தவறவிடக் கூடாது!
நாம் கண்டறியும் முதல் காரியம் அந்த ஸ்திரீ ஒரு பிள்ளையைப் பெற்றெடுக்கப்போகிறவளாய் இருந்ததை. “அவள் கர்ப்பவதியாயிருந்து, பிரசவவேதனையடைந்து, பிள்ளைபெறும்படி வருத்தப்பட்டு அலறினாள். அப்பொழுது வேறொரு அடையாளம் வானத்திலே காணப்பட்டது: ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும், தன் தலைகளின்மேல் ஏழு முடிகளையுமுடைய சிவப்பான பெரிய வலுசர்ப்பமிருந்தது….பிரசவ வேதனைப்படுகிற அந்த ஸ்திரீ பிள்ளை பெற்றவுடனே, அவளுடைய பிள்ளையைப் பட்சித்துப்போடும்படிக்கு அந்த வலுசர்ப்பம் அவளுக்கு முன்பாக நின்றது. சகல ஜாதிகளையும் இரும்புக்கோலால் ஆளுகைசெய்யும் ஆண்பிள்ளையை அவள் பெற்றாள்: அவளுடைய பிள்ளை தேவனிடத்திற்கும் அவருடைய சிங்காசனத்தினிடத்திற்கும் எடுத்துக்கொள்ளப்பட்டது.” (வெளிப்படுத்தல் 12:2-5)
சகல ஜாதிகளையும் ஆளுகை செய்யவிருந்த அந்த ஆண் பிள்ளை யார்? பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது யார்? இந்த விவரிப்பை நிறைவு செய்யக்கூடியவர் ஒருவர் மட்டும் தான் - அவர் இயேசு கிறிஸ்து. கிறிஸ்துவை அவரது பிறப்பின்போதே கொல்ல முயன்ற அந்த வலுசர்ப்பம் யாரைக் குறிப்பிடுகிறது? அது ரோமன் அரசுப் பிரதிநிதியாகிய ஏரோது; அவன், இரண்டு வயதிற்குட்பட்ட எல்லாக் குழந்தைகளையும் வெட்டிப்போடச் சொல்லி கட்டளையிட்டான். சாதாரணமாக வலுசர்ப்பம் சாத்தானுக்கு அடையாளமாகப் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் இவ்விஷயத்தில், பிசாசானவன் இயேசுவைக் கொலை செய்ய ரோமன் வல்லமையுடன் மிக நெருங்கிச் சேர்ந்து கிரியை செய்து வந்தான், ஆனால் வலுசர்ப்பம் ரோமையும் அடையாளப்படுத்துகிறது.
ஏரோதுவின் கொடூரமான கட்டளையிலிருந்து இயேசு எவ்வாறு தப்பினார்? யோசேப்பும் மரியாளும் ஒரு கனவிலே இந்த அபாயத்தைக் குறித்து எச்சரிக்கப்பட்டனர் எனவே குழந்தையுடன் எகிப்துக்குத் தப்பியோடினார். பின்னர், அந்தக் கொடுங்கோலனின் இறப்பிற்குப் பிறகு, அவர்கள் திரும்பி வந்து நாசரேத்து ஊரிலே குடியேறினர்.
பிசாசானவன் இயேசுவைக் கொல்லும் தனது முதல் சதியில் தவறியிருந்தாலும், அவன் தன் நோக்கத்தைக் கைவிட்டுவிடவில்லை. அவன் மீண்டும் மீண்டும் இயேசுவின் உயிரைப் பறிக்க வகைதேடி, இறுதியில் அவன் அவரை ஒரு பரியாச விசாரணைக்குட்படுத்தி, அங்கு சித்திரவதை செய்யப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டார். ஆனால் தேவ குமாரனைக் கல்லறையால் அடக்கிக்கொள்ள முடியவில்லை, மூன்றாம் நாளில் அவர் கல்லறையை விட்டு வெளிப்பட்டார். பின்னர் அவர் பரலோகத்திலுள்ள தம் பிதாவிடம் ஏறிப் போனார்.
அத்தியாயம் - 3
சபையின்
உபத்திரவம்
இப்போது இயேசுவுடன் நேரடி தொடர்பு இல்லாத நிலையில் வலுசர்ப்பம் (ரோம்) தனது கோபத்தை சபையாகிய கிறிஸ்துவின் பின்னடியார்களுக்கு எதிராகத் திருப்பியது: “வலுசர்ப்பமானது தான் பூமியிலே தள்ளப்பட்டதை அறிந்து, அந்த ஆண்பிள்ளையைப் பெற்ற ஸ்திரீயைத் துன்பப்படுத்தினது.” (வெளி 12:13)
இவ்வார்த்தைகள் அப்போஸ்தலர்கள் கால சபைக்கு எதிராக வெடித்த வன்முறை பயங்கரத்தின் ஒரு சிறிய குறிப்பைதான் கொடுக்கின்றன. நடைமுறையில் ஆரம்ப கால சீஷர்கள், சபைத்தலைவர்கள் அனைவருமே தங்கள் விசுவாசத்திற்காக இரத்த சாட்சிகளானார்கள். கொடூரமான அஞ்ஞான பேரரசர்கள் விளையாட்டு மைதானங்களையும் களியாட்டு அரங்கங்களையும் உண்மை சுவிசேஷத்தை பின்பற்றியோருக்கு மரண அரங்கங்களாக மாற்றினர்.
விரைவிலேயே அஞ்ஞான ரோம் போப்பு ரோமாக மாறியது, உபத்திரவங்களோ இன்னும் கடுமை பலாத்காரத்துடன் தொடர்ந்தன. போப்பு மார்க்கத்திற்கு எதிரான யாவையும் வேரறுக்க எண்ணி கொடும் சித்திரைவதைகளால் இலட்சக்கணக்கானோர் மரித்தனர். இருண்டக்காலங்களின் போது 5 கோடிக்கு மேற்பட்டோர் தங்கள் பிராட்டஸ்டண்ட் விசுவாசத்தை விட்டுக்கொடுக்காமல் தங்கள் உயிரை விட்டனர் என்று வரலாற்று ஆசிரியர்கள் மதிப்பிடுகின்றனர்.
எனினும் நாம் அந்த சோகக் கதையை நமது தீர்க்கதரிசன அடிக்கோடுகளின் படி பின்பற்றுவோம். வெளிப்படுத்தல் 12:14 - ல் உபத்திரவ நெருக்கடிகள் உச்சக்கட்டத்தை அடைகையில் உண்மைச் சபையானது என்ன செய்தது என நமக்கு கூறுகிறது: “ஸ்திரீயானவள் அந்தப் பாம்பின் முகத்திற்கு விலகி, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமுமாகப் போஷிக்கப்படத்தக்கதாய் வனாந்தரத்திலுள்ள தன் இடத்திற்குப் பறந்து போகும்படி பெருங்கழுகின் இரண்டு சிறகுகள் அவளுக்குக் கொடுக்கப்பட்டது.”
மதசீர்திருத்தவாதிகளான பிராட்டஸ்டண்ட் விசுவாச அகதிகள், அழிவுக்குத் தப்பிப் பிழைக்க இயேசுவால் வெளிப்படுத்தப்பட்ட உண்மைக்கோட்பாட்டைக்கையிலேந்தியப்படி ஆல்பையின் மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் ஓடி ஒளிந்தனர். கொடிய ஒடுக்குமுறைகள் நிலவிய அந்த நூற்றாண்டுகளில் தங்கள் விசுவாசத்தை கைவிட மறுத்த வால்டன்சியர்களும் ஹியூகனோத்துகளும் அல்பீஜியன்களும் காட்டிய வீரதீரங்களைப்பற்றி இன்னொரு அப்போஸ்தலர் நடபடிகள் புஸ்தகத்தை எழுதலாம். தேவன் அவர்களுக்காக போரிட்டார், சில நேரங்களில் சிறை பிடிக்க வந்த ரோமன் படைகள் மர்மமான பனிச்சரிவுகள், பாறைச்சரிவுகளால் துண்டிக்கப்பட்டன. வேறு சமயங்களில் மலையின் ஓடைகள், சத்தியத்திற்காக தங்கள் உயிர்களைக்கொடுத்து தங்கள் அர்ப்பணிப்பை – பக்தியை – முத்திரையிட்ட விசுவாச தியாகிகளின் இரத்தத்தால் சிவந்தன. அந்நிலையில் உயிர்ப்பிழைக்க ஓடி ஒளிந்த சிறுபான்மை கிறிஸ்தவர்களை முற்றிலும் அழித்தொழிக்க செய்த பயனற்ற முயற்சிகளைப் பற்றிய அடையாளங்களின் படியான சித்திரத்தை வெளிப்படுத்தல் தீர்க்கதரிசனம் கொடுக்கிறது: “அப்பொழுது அந்த ஸ்திரீயை வெள்ளங்கொண்டுபோகும்படிக்குப் பாம்பானது தன் வாயிலிருந்து ஒரு நதிபோன்ற வெள்ளத்தை அவளுக்குப் பின்னாக ஊற்றிவிட்டது.” (வெளி 12:15).
மெய்ச்சபை எவ்வளவு காலம் வனாந்தரத்திலே மறைந்திருக்க வேண்டியதாயிருந்தது? “ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமுமாக” என்று தீர்க்கதரிசனம் உரைக்கிறது. எவ்வளவு மர்மம் இது! இந்தக்காலம் தொடர்பான விவரிப்பு வினோதத்தின் உட்பொருள் என்ன? அது எப்போது முடிவடைகிறது? இதன் விடை வசனம் 6-ல் காணப்படுகிறது: “ஸ்திரீயானவள் வனாந்தரத்திற்கு ஓடிப்போனாள்: அங்கே ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் அவளைப் போஷிப்பதற்காகத் தேவனால் ஆயத்தமாக்கப்பட்ட இடம் அவளுக்கு உண்டாயிருந்தது.”
இப்பொழுது இப்பாடம் தெளிவடையத் தொடங்குகிறது. ஸ்திரீயானவள் வனாந்தரத்திலே 1,260 நாட்கள் இருந்தாள் என்று ஒரு வசனம் கூறுகிறது; இன்னொரு வசனம், அவள் “ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமுமாக” இருந்தாள் என்கிறது. இந்த இரு காலக்கட்டங்களும் சமம்.
இதன் அர்த்தம், ஒரு “காலம்” என்பது ஓH ஆண்டு என்பது தீர்க்கதரிசன அடையாளம்,”காலங்கள்” என்பது இரண்டு ஆண்டுகள்;; “அரைக்காலம்” என்பது அரை ஆண்டு ஆகும். ஒன்றுடன் இரண்டையும், ஒரு அரையையும் நாம் சேர்க்கும் போது, மூன்றரை ஆண்டுகளை நாம் பெறுகிறோம். அது வேதாகமக் கணக்கீட்டில் மாதம் 30 நாட்கள் என்று கணக்கீட்டால், மிகச்சரியாக 1,260 நாட்களுக்குச் சமம்.
இங்கே கணக்கில கொள்ள வேண்டிய இன்னொரு தீர்க்கதரிசன விளக்க அடிப்படையும் உள்ளது. அடையாளப்புர்வமான வேதாகம தீர்க்கத்தரிசனத்தில், ஒருநாள் என்பது எப்போதுமே ஓர் ஆண்டைக்குறித்து நிற்பதாகும். இதற்குரிய திறவுகோலை எசேக்கியேல் 4:6 - ல் காண்பீர்கள்: “ஒவ்வொரு வருஷத்துக்கு பதிலாக ஒவ்வொரு நாளை உனக்குக் கட்டளையிட்டேன். வேறோர் இடத்தில் இது இவ்வார்த்தைகளில் கூறப்படுகிறது: “ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வருஷமாக…” (எண்ணாகமம் 14:34).
இது அடையாள புர்வமான தீர்க்கதரிசனத்துக்கு மட்டும் தான் பொருந்தும், வேத வசனத்தின் மற்ற பகுதிகளுக்குள் சென்று படிக்கலாகாது. ஒரு தெளிவான தீர்க்கதரிசன உட்பொருள் அமைப்பில் மட்டும் தான் ஒரு நாள் என்பது ஓர் ஆண்டுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது ஸ்திரீயை அவளது வனாந்தர மறைவிட வாசத்தை முழுமையாக எழுத்தின்படியான 1,260 ஆண்டுக்காலத்தில் கொண்டு நிறுத்துகிறது.
இந்நிலையில் நமது முடிவுரையானது, அந்த 1,260 ஆண்டுகளின் முடிவு வரை மெய்ச்சபை உலகில் தோற்றமளிக்காது என்பதாக இருக்க வேண்டும். அப்;படிப்பட்ட விஷயம் தேவனுடைய உண்மை மக்களுக்கு ஏற்பட்டதா என்ன? போப்பு வல்லமை எவ்வளவு காலம் தன் சமய – அரசியல் அதிகாரத்தைக்கொண்டு மெய் கோட்பாடுகளை தொடர்ந்து மிதித்துப்போட்டன?
இங்கே வரலாற்றின் திருப்பு - ஈர்ப்பு – முனை ஒன்று உள்ளது கி.பி. 538-ல் பேரரசன் ஜஸ்டீனியனின் ஆணை ஒன்று நடைமுறைக்கு வந்தது. ரோம் சபைக்கு முழுமையான ஆவிக்குரிய அதிகாரம் அளித்தது. இந்த சமயக்கொடுங்கோன்மை படிப்படியாக அரசியல் அதிகாரங்களுக்குள் நழுவிச்சென்றது; எதுவரை என்றால், மன்னர்கள் ஆட்சிச்செய்ய தொடங்கும் முன்பு போப்புவின் அனுமதியை நாடுமாறு உந்தித்தள்ளப்படும் வரை இந்த வல்லமை 1798 - ம் ஆண்டில் பிரெஞ்சு புரட்சி ஜரோப்பாவை உலுக்கியெடுத்ததுவரை தரித்திருந்தது. ஒடுக்கப்பட்ட பாமர மக்கள் சொகுசாக வாழ்ந்த குருமார்களுக்கு எதிராக செய்த கலகத்தினால் போப்பு 1798 - ல் சிறைபிடிக்கப்பட்டார். போப்பின் சொத்து பறிமுதல் செய்யப்பட்டது, பிரெஞ்சு டைரக்டர்கள் அரசு ரோமுக்கு இனி பிஷப் யாரும் இருக்கமாட்டார்கள் என ஆணை பிறப்பித்தது. போப்பு மார்க்கம் நிறுவப்பட்ட கி.பி. 538 - க்குப் பிறகு சரியாக 1,260 ஆண்டுகளுக்குப்பின் அதன் ஒடுக்குமுறை ஆட்சி முடிவடைந்தது.
அத்தியாயம் - 4
உண்மைச் சபையின்
மூன்று அடையாளங்கள்
இது நமக்கு ஓர் மிக முக்கியமான தெளிவைத் தருகிறது: 1798 – ம் ஆண்டுக்குப் பின்பு வரையில் உண்மை சபையானது உலகத்திற்கு காணப்பட முடியவில்லை. அது அந்த 1,260 ஆண்டுகளின் முடிவு வரையில் மறைந்திருக்க வேண்டியதிருந்தது, மேலும் அந்த “வனாந்தர” காலகட்டம் 1798 – ல் முடிவடைந்தது. நமக்கு முன்பாக இப்போது மெய்ச் சபையை இனங்காண்பதற்கான மிக மலைப்பூட்டும் அடையாள முத்திரைகளில் ஒன்று உள்ளதை அறிகிறோம். அது ஏதோ ஒரு உணர்ச்சிவசத்தையோ அல்லது ஒரேயொரு ஒற்றை வேத வசனத்திற்குரிய ஏதோ ஒரு நீர்த்துப்போன வியாக்கியானத்தையோ அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. அது பற்பல வரலாற்று சரிபார்க்கப்படக்கூடிய குறிப்பிட்ட காலகட்டத்தைப் பற்றிய தீர்க்கதரிசன வெளிப்படுத்துதலில் வேரூன்றியுள்ளது. ஸ்திரீ (சபை) போப்பு மார்க்கத்தின் தடைசெய்யும் வல்லமைகள் எடுத்துக் கொள்ளப்படாத வரையில் தன் தோற்றத்தை வெளிக்காட்ட முடியவில்லை. தீர்க்கதரிசனத்தில் உரைக்கப்பட்ட அந்த நிகழ்வு 1798 - ல் இடம்பெற்றது, மேலும் இரட்டு உடுத்தியிருந்த சத்தியம் இப்போது மறைவிடத்திலிருந்து வெளிப்படத் தொடங்கியது, விரைவில் ஸ்திரீயின் மகிமை மிக்க மீதியான கூட்டமாக தோன்றவிருக்கிறது.
இப்பொழுது, 1798 – ம் ஆண்டுக்குப் பின்னர் சிலகாலத்தில் உலகின் முன் தோன்றவிருக்கும் ஸ்திரீயைப் பற்றிய உண்மை வர்ணனையை அறியுமாறு நாம் கொண்டுவரப்படுகிறோம்: “அப்பொழுது வலுசர்ப்பமானது ஸ்திரீயின்மேல் கோபங்கொண்டு, தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக் குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம் பண்ணப்போயிற்று” (வெளி 12:17).
இந்த வசனம் வேதாகமம் முழுவதிலும் காணப்படக்கூடிய மிக முக்கியமானவற்றில் ஒன்றாக உள்ளது. காலங்கள் நெடுகிலும் பாதுகாக்கப்பட்டு வந்த ஆதி அப்போஸ்தல சபையின் கடைசிகால மீதியான பகுதியைப்பற்றிய மிகச் சுருக்கமான விவரிப்பு வேறு எங்கும் கிடையாது. இங்கேதான் இன்றைய உண்மைச் சபையின் சரியான விளக்கம் ஒன்று உள்ளது. இதன் முழுமையான அர்த்தத்தை வடித்தெடுக்க ஒவ்வொரு வார்த்தையையும் நாம் சீர்தூக்கிப் பார்க்கப்போகிறோம். உண்மைச் சபையானது வேதாகமத்தில் கண்டுபிடிக்கப்படக் கூடுமானால், அது இந்த வசனம்தான் அதை வெளிப்படுத்தக்கூடியது ஆகும்.
“அப்பொழுது வலுசர்ப்பமானது….” யார் இந்த வலுசர்ப்பம்? இதுபற்றி சந்தேகமே இருக்க முடியாது. வெளிப்படுத்தல் 12:9 – ல் வலுசர்ப்பமானது “உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட(து)”.
“கோபங்கொண்டு….” இதன் பொருள் என்ன? “கோபம் (றுசயவா)” என்பது “யுபெசல” என்பதன் பழைய ஆங்கிலச் சொல். அதாவது, சாத்தான் கோபமாய் இருந்தான் என்பதாகும். யாருடன் கோபமாய் இருந்தான்? “ஸ்திரீயின்மேல் கோபங்கொண்டு…” ஸ்திரீ யார்? நாம் முன்பே கண்டுபிடித்தபடி அது இயேசுவின் மாபெரும் மெய்ப் போதனைகளை எடுத்துரைக்கும் உண்மையான அப்போஸ்தல வழிவந்த சபை.
“அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம் பண்ணப் போயிற்று…..” இங்கே இந்தப் பாடத்தில் ஒரு புதிய வார்த்தை புகுத்தப்படுகிறது. சாத்தான் மெய்ச் சபையின் மீதியானவருக்கு எதிராகப் போரிடப்போகிறான். மீதியானது (சுநஅயெவெ) என்றால் என்ன? அது ஒரு துணியின் கடைசியான நுனிப்பகுதி ஆகும். அது துணியின் முதல் நுனியைப் போன்றே வருவது, ஆனால் இது மிகச் சரியாக முடிவில் வருவது, அது எப்போதுமே ஒரு சிறு துண்டாகவே இருக்கும்.
இது ஸ்திரீயின் மீதியானவர்களைப்பற்றி நமக்குக் கூறுவது என்ன? அது காலத்தின் முடிவில் வரும் மெய்ச் சபையின் கடைசிப் பகுதி, அது ஆரம்ப கால அப்போஸ்தலர்களின் சபையானது கொண்டிருந்த அதே கோட்பாடுகளைத் தாங்கியதாக இருக்கும். எனினும் நாம் மேலே படிப்போம்.
“தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும்….” இங்கே குறிப்பிடப்போவது என்ன கற்பனைகள்? இது கற்பலகைகளின் மீது தேவனுடைய விரலால் எழுதப்பட்ட மாபெரும் நீதிச் சட்டத்தைக் குறிப்பிடுகிறது. பத்துக் கட்டளைகள் தேவனுடைய குணத்தைப் பிரதிபலிப்பவை, அவை அவரது படைப்பினங்கள் யாவுக்கும் உரிய அவரது சித்தத்தை புலப்படுத்துகின்றன, மேலும் எல்லா நீதிகளுக்கும் உண்மைத் தொழுகைக்கும் அடிப்படையாக அமைவன.
இங்கே நாம் மெய்ச் சபையைஇனங்காட்டும் இரண்டாம் அடையாளத்தை எதிர்கொள்கிறோம். அது 1798 – ம் ஆண்டுக்குச் சற்று பின்னர் எழ வேண்டியது மட்டுமின்றி, தேவனுடைய வார்த்தையின் அதிகாரத்தின்படியும், அது தேவனுடைய பத்துக்கற்பனைகள் அனைத்தையும் கைக்கொள்ளவும் வேண்டும்.
எனினும் நாம் இப்பொழுது அற்புத வசனத்தின் ஆய்வை முடிப்போம்: “இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய…” இங்கே உண்மையான மீதியானவர்களைப்பற்றிய இன்னொரு பண்பு காணப்படுகிறது. இந்தக் கடைசிகால சபை 1798 – க்குப் பிறகு எழும்புவதும், பத்துக் கற்பனைகள் அனைத்தையும் கைக்கொள்வதும் மட்டுமின்றி அது இயேசுவின் சாட்சியை உடையதாகவும் இருக்கும். ஆனால், இயேசுவைக் குறித்த சாட்சி என்பது என்ன? இது ஒர் வழக்கமற்ற சொற்றொடர், இதன் பொருளை அறிய நமக்கு மனித ஞானத்தைவிட அதிகமான ஞானம் தேவை.
வேதாகமம் நமக்காக இந்த வெளிப்பாடை எப்படி விசேஷமாக விளக்குகின்றது எனக் காணுங்கள். இந்த வசனமானது நமக்காக முற்றான சத்தியத்தின் உட்பொருளை உண்மையாகவே கொண்டிருந்தால், தேவனுடைய வார்த்தையானது அதன் ஒவ்வொரு பகுதியையும் தெளிவுபடுத்தும். இந்த விளக்கம் யோவானுக்குத் தெளிவாகும்படிக்கு பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட ஒரு தூதனால் கொடுக்கப்படுகிறது. “உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்: தேவனைத் தொழுதுகொள்....... இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான்.” (வெளி 19:10)
இங்கே அது உள்ளது! இப்பொழுது நாம் சந்தேகத்தின் நிழலாட்டம் ஏதுமின்றி இயேசுவைக் குறித்த சாட்சியானது தீர்க்கதரிசன ஆவியாயிருக்கிறது என்று அறிகிறோம். இது கடைசிகால மெய்ச்சபையின் மூன்றாவது மாபெரும் அடையாள அறிகுறியாக உள்ளது!
நான் உங்களிடம் சிலவற்றைக் கேட்கிறேன்: வேத வசனத்தின் மிகவும் தேடப்பட்ட இரகசியம் பற்றி இந்த எளிய வேதாகம கருத்துகள் தெளிவாக்கியதில் உங்களுக்குள் உயிர்ப்பின் ஆவி கிளர்ந்தெழுகின்றதா? நாம் நமது காலத்தில் தேவனுடைய விசேஷித்த மக்களையும் அவர்களது விசேஷ செய்தியையும் இனங்கண்டறிய மிகவும் நெருங்கி நெருங்கி வருகிறோம். மேலும் நாம் இந்த இனங்காணுதலை செய்யுமாறு வேதாகமத்தை அனுமதித்து இதைச் செய்கிறோம். இந்த மூன்று விளக்கப் பண்புகளில் எது ஒன்றையும் நாம் ஜோடிக்கவில்லை. எவர் ஒருவரும் தமது விளக்கத்தை ஏற்குமாறு இயேசுகிறிஸ்துவின் கடைசிகால சபைக்கு நேர்மையாக சவால் விடவும் இயலாது. அந்த மீதியான சபை இந்த மூன்று வேதாகம அடையாளங்களையும் உடையதாக இருக்கவேண்டும்:
- 1798 – க்குப் பிறகு எழும்புதல்
- பத்துக்கற்பனைகள் யாவையும் கைக்கொள்ளுதல்
- தீர்க்கதரிசன ஆவியை உடையதாய் இருத்தல்
சிலர் இந்த மூன்றாம் அடையாளம் குறித்து ஏற்கனவே குழம்பிப்போயுள்ளனர் என்பதை நான் அறிவேன். “தீர்க்கதரிசன ஆவி”என்பது “இயேசுவைக் குறித்த சாட்சி”யைப் போல் புரியாததாகத்தான் உள்ளது. ஆனால் என்னோடு பொறுங்கள், வெகு விரைவில் நாம் அதன் விளக்கத்தைப் பெறுவோம்.
அத்தியாயம் - 5
நான்காம் அடையாளம்
காட்டும் பண்பு
நமது பட்டியலில் ஒரு முக்கியமான நான்காம் அடையாள முத்திரையை இப்பொழுது நான் சேர்க்க விரும்புகிறேன். இந்தச் சபையானது கடைசி சபையாகவும் வரலாற்று உண்மையின் முடிவு கட்;டமாகவும் இருக்க போகிறது என்பதை நாம் கண்டறிந்துள்ளோம். அது இயேசு திரும்ப வரும் முன்னர் தேவனுடைய இறுதிச்செய்தியை அறிவிக்கக் கூடியதாய் இருக்கும். உண்மையில், கடைசிக்காலத்தில் தேவன் ஏதாவது விஷேச ஆலோசனையோ எச்சரிக்கையோ உலகிற்கு கொடுக்கவிருந்தால், அவர் நிச்சயமாக அத்தூதை தமது கடைசிக் கால மீதியான சபையின் மூலமாகத்தான் கொடுப்பார். நாமெல்லாரும் இந்த முடிவின் நியாயத்தைக் காணக்கூடும் என்றே நான் நினைக்கிறேன்.
உண்மையாகவே தேவன் அப்படிப்பட்டதோர் தூதை உடையவராய் இருக்கிறாரா? அது வேதாகமத்தில் தெளிவாக இனங்காட்டப்பட்டிருக்கிறதா? மானுட வரலாற்றின் முடிவுக்கு முன்னர் குறிப்பிட்டதோர் சத்தியம் உடனடியாகப் பிரசங்கிக்கப்படுவது தொடங்கும் என்று இயேசு சுட்டிக்காட்டியுள்ளார். அவரது வார்த்தைகளை கவனியுங்கள்: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.” (மத்தேயு 24:14).
கிறுஸ்துவின் வருகையின் கடைசி அடையாளம் “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம்” உலகமெங்கும் பிரசங்கிக்கப்படுவதாகவே இருக்கும். அதன் பின்னர் முடிவு வரும். இப்பொது என்னுடன் நெருங்கி வாருங்கள். வெளிப்படுத்தின விசேஷகனாகிய யோவான் உண்மையாகவே கிறிஸ்துவின் வார்த்தைகளின் நிறைவேறுதலை தரிசனத்தில் கண்டான். அவன் எழுதியது: “பின்பு, வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்: அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து, மிகுந்த சத்தமிட்டு:…” (வெளி. 14:6,7).
அடுத்த சில வசனங்கள் வசனங்கள் சுவிசேஷத்தின் கடைசி விசேஷ அறிவிப்பு எதனை உள்ளடக்கியதாய் இருக்கும் என்பதைச் சரியாக விவரிக்கும். பின்னர் உடனடியாக யோவான் கூறியது: “பின்பு நான் பார்த்தபோது, இதோ, வெண்மையான மேகத்தையும், அந்த மேகத்தின் மேல் மனுஷகுமாரனுக் கொப்பானவராயத் தமது சிரசின் மேல் பொற்கிரீடத்தையும் தமது கையிலே கருக்குள்ள அரிவாளையுமுடைய ஒருவர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டேன்...... அப்பொழுது மேகத்தின்மேல் உட்கார்ந்தவர் தமது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டினார், பூமியின் விளைவு அறுப்புண்டது.” (வெளி 14:14-16).
நீங்கள் அதைப் புரிந்து கொண்டீர்களா? இந்தக் குறிப்பிட்ட தூது பூமியிலுள்ள சகல ஜாதிகளுக்கும் கொடுக்கப்படும் போது முடிவு வருகிறது. இதையே தான் இயேசு சொன்னார்: “இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்கும் …பிரசங்கிக்கப்படும், அப்பொது முடிவு வரும்.”
இந்த தூது எதுவாயினும் உங்களுக்கு ஒப்படைக்கிறேன், இதுவரை மனிதக் காதுகள் கேள்விப்பட்ட எதிலும் இது மிக அவசரமும் கட்டாயமுமானதாய் இருக்கக்கூடியது. யோவான் மற்றும் இயேசு இருவருமே இதன் முடிவில் அது கிறிஸ்துவின் மகிமையுள்ள ராஜ்ஜியத்தினுள் கொண்டுபோய் விடும் என்று சாட்சி பகர்கின்றனர்.
அந்த இறுதி எச்சரிப்பு எதைக் கொண்டிருக்கிறது என்பதை நம்மால் அறியமுடியுமா? யோவான் அதை யாரும் சந்தேகிக்க கூடாத விதத்தில் எளிமையாகக் கூறியுள்ளார். “தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்: அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளைவந்தது…என்று கூறினான்” (வெளி. 14:7). தேவனுடைய இந்த கடைசி அழைப்பின் ஒரு பகுதியாக, நியாயத்தீர்ப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டதை அறிவிப்பதாகும் என்பதை அறியுங்கள்: “வந்தது” என்று உள்ளது; “வரும்” என்று இல்லை. பூமியிலுள்ள சகல ஜாதிகளுக்கும் ஆண்டவரின் வருகைக்கு முன்னான நியாயத்தீர்ப்பு தூதானது பிரசங்கிக்கப்படுவதை நாம் பார்க்கவும் கேட்கவும் வேண்டியவர்களாக இருக்கிறோம்.
முதலாம் தூதனுடைய தூதின் அடுத்த பகுதி இது: “வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்கள்.” (வெளி. 14:7). இது கேள்விப்பட்;டது போல் தொனிக்கிறதா? அவ்வாறுதான் இருக்கவேண்டும், ஏனெனில் அது நியாயபிரமாணத்தின் நான்காம் கற்பனையிலிருந்து வார்த்தைக்கு வார்த்தை கிட்டதட்ட அப்படியே எடுத்துரைக்கப்படுகிறது; அதுமுடிவு வரும் முன் உலகம் முழுவதும் அறிவிக்கப்படவேண்டிய “சுவிசேஷத்தின்” ஒரு பகுதியாக ஓய்வுநாள் இருக்கும் என்பதை வலிமையாகச் சுட்டிக்காட்டுகிறது.
நீங்கள் தேவனை சிருஷ்டிகராக எவ்வாறு வழிபடுவீர்கள்? பத்துக் கற்பனைகளின் சரியான இதயப்பகுதிலேயே தேவன் அதற்கான பதிலை எழுதியுள்ளார்: “கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஒய்ந்திருந்தார். ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.”(யாத்திராகமம் 20:11)
உண்மையான தொழுகையானது தேவனுடைய சிருஷ்டிப்பு வல்லமையையும் அதிகாரத்தையும் ஏற்றுக்கொள்வதிலிருந்து கிளைத்தெழுகிறது, மேலும் ஓய்வுநாள் என்பது தேவனே எல்லாவற்றையும் படைத்தவர் என்பதை நிலைநாட்டும் அவருக்கே உரிய அடையாளம் ஆகும். வேதாகமம் நெடுகிலும் தொழுகை தமக்கே உரியது என தேவன் மீண்டும் மீண்டும் உரிமைக்கோருகிறார், ஏனெனில் எல்லாவற்றையும் படைத்தவர் அவரே என்பதற்காக…”கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர் நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர்…” (வெளி.4:11).
தேவன் பொய்தெய்வங்களுக்கு தொடர்ந்து சவால் விடுகிறார், ஏனெனில் அவற்றால் சிருஷ்டிக்க இயலாது. “வானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள், பூமியிலும் இந்த வானத்தின்கீழும் இராதபடிக்கு அழிந்து போகும்.... அவரே பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி…” (எரேமியா 10:11,12). “பூமியையும், அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்;தர் சொல்லுகிறதாவது நானே கர்த்தர், வேறொருவர் இல்லை…” (ஏசாயா 45:18).
தேவன் ஒருவரே வணங்கப்படத்தக்க ஒரே கடவுள் என்னும் அவரது முழுமையான அதிகாரத்துக்கு மாபெரும் நினைவு+ட்டு அடையாளமாக ஓய்வுநாளை தேவன் ஏற்படுத்தினார். உலகம் யாரை, எப்பொழுது தொழுதுகொள்ள வேண்டும் என்பதை அறிவதன் மூலம் அதிலிருந்து வழுவாமலிருக்க உண்மை ஓய்வுநாளைச் சுட்டிக்காட்டும் படி ஏழு நாட்கள் உள்ள வாரச் சுழற்சியை சிருஷ்டிகர் நடைமுறைப்படுத்தினார். இவ்வாறாக, முதலாம் தூதனுடைய தூது,”வானத்தையும் பூமியையும் சமுத்திரைத்தையும்… உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்கள்” என்று மனிதருக்கு விடுக்கும் அழைப்பு – உண்மையான ஓய்வுநாள் ஆசரிப்பிற்கான அழைப்பாகவே உள்ளது.
யோவானால் விவரிக்கப்பட்டுள்ள இரண்டாம், முன்றாம் தூதர்களுடைய தூதுகள் பின்வருமாறு சுருக்கி உரைக்கப்பட முடியும்: “பாபிலோன் விழுந்தது!... மிருகத்தை வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவன்…தேவனுடைய கோபாக்கினையாகிய...… மதுவைக்குடித்து…” (வெளி.14:8-10). பலருடைய கருத்துக்கு மாறாக மிருகத்தைப்பற்றிய இந்த தெளிவான, துணிவான தூதின் பிரசங்கிப்பு தேவனுடைய ராஜ்ஜியத்தைப் பற்றிய நித்திய சுவிசேஷத்திற்குள் அடங்கியுள்ளது. மிருகத்தின் முத்திரையைப் பற்றிய எச்சரிப்புகள் கூட சகல ஜாதிகளுக்கும் கோத்திரத்தாரருக்கும் பாஷைக்காரருக்கும் ஜனங்களுக்கும் அறிவிக்கப்படும். அதன் பிறகு முடிவு வரும்!
இப்பொழுது நாம் மற்ற மூன்று பண்புகளின் பட்டியலில் நான்காவது ஒன்றையும் சேர்க்கப்போகிறோம். கடைசிக்கால உண்மையான மீதியான சபை, பூமிக்கோளின் அனைத்துக்குடிகளுக்கும் உரிய இறுதி எச்சரிப்பின் தூதைக் கொண்டுசெல்லவும் தேவனால் நிச்சயமாக பயன்ப்படுத்தப்படுகிறது. அத்தூது இவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்: (அ) நியாயத்தீர்ப்பின் வேளை வந்தது,(ஆ) உண்மையான ஓய்வுநாள் தொழுகை,(இ) ஆவிக்குரிய பாபிலோனின் விழுகை,(ஈ) மிருகத்தின் முத்திரை.
இன்றைய மெய்ச்சபையின் சிறப்பு பண்புகளில் பின்வரும் அற்புத அணிவகுப்பு நிறைவு செய்கிறது.
- 1798 -க்குப் பின்னர் எழும்புதல்
- பத்துக் கற்பனைகள் யாவையும் கைக்கொள்ளுதல்
- தீர்க்கதரிசன ஆவியைப் பெற்றிருத்தல்
- உலகம் முழுவதிலும் மூன்று தூதர்களின் தூதை(வெளிப்படுத்தல் 14) பிரசங்கித்தல்
நாம் இதுவரை கண்டவை பற்றி சிந்தனையுள்ள மனிதர் யாரேனும் கண்டுக்கொள்ளாமல் இருப்பார்களா? உலகில் உள்ள மிகச்சிறப்பு வாய்ந்த ஆவிக்குரிய இரகசியங்களில் ஒன்றைத் திறந்து காட்டும் திறவுகோலை நாம் இப்போது நம் கைகளிலே வைத்துள்ளோம். வெளிப்படுத்தலின் இந்த ஒரு மாபெரும் செய்திகள் அடங்கிய தீர்க்கதரிசன அதிகாரத்தில் அந்த இரகசியங்களை அறிய உதவும் தடயங்களை தேவன் சுருக்கி வைத்துள்ளார். இனங்காட்டும் அடையாள அறிகுறிகளைக் காண்க. இது தேவனுடைய பட்டியல், என்னுடையதல்ல. நான் அவற்றை தேவனுடைய புஸ்தகத்தின் இறையருளால் கூறப்பட்;ட பக்கங்களிலிருந்து வெறுமனே எடுத்துள்ளேன். அவை இன்றைய மெய்ச்சபையைப் பற்றி நமக்குக் கூறுவது என்ன?
யாவிலும் முதலாவதாக, அது 1798 –க்கு முன்பு எழும்பியிருக்க முடியாது. இது உலகின் பெரும்பாலான மிகப்பெரிய பிரபலமான பிராட்டஸ்டண்ட் சபைகளை விளக்கிவிடுகிறது. நடைமுறையாக அவை யாவுமே 1798 -க்கு முன்பு உருவானவை. இரண்டாவதாக, அது பத்துக் கற்பனைகள் யாவையும் கைக்கொள்ளுகிற ஒரு சபையாக இருக்க வேண்டும். முதல் பார்வையில், அது சரியான சபையைக் கண்டுப்பிடிப்பதில் மிக அற்பமான விவரிப்பு அடங்கிய சோதனையாகத் தோன்றும். நிச்சயமாகவே அவை யாவும் தேவனுடைய மாபெரும் நீதிச் சட்டத்திற்குக் கீழப்;படிந்தே நடக்க வேண்டும் என்று போதிப்பவை தான் அல்லவா? உண்மை என்னவென்றால், அந்தச் சில தற்கால சபைகள் பத்துக் கற்பனைகளைக் கைக்கொள்வதாக உரிமை கொண்டாடவே செய்கின்றன. அவற்றில் பெரும்பாலானவர்கள் நான்காம் கற்பனை கேட்டும் ஏழாம் - நாள் ஓய்வுநாளை ஆசரிப்பதில்லை என்று மிகத் தாராளமாக ஒப்புக்கொள்கின்றன. அவர்கள் ஓய்வுநாளுக்கு பதிலாக வாரத்தின் முதல் நாளை ஆசரிக்கின்றன.
அத்தியாயம் - 6
பெரும்பான்மை சபைகள் வேதாகமப்
பரீட்சையில் தோல்வியுறுகின்றன
இது வித்தியாசமாகத் தோன்றவில்லையா? தேவன் தம் சொந்த கரத்தினால் இவ்வாறு எழுதினார்: “ஏழாம் நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே…யாதொரு வேலையும் செய்ய வேண்டாம்” (யாத்திராகமம் 20:10). தேவன் பரிசுத்தப்படுத்திக் கட்டளையிட்ட அந்த நாளைப்பற்றி யாரும், எந்தக் காலத்திலும் குழப்பமடைந்ததில்லை. எல்லாப் பிரசங்கிமார்களும் சபைகளும், வாரத்தின் ஏழாம்நாள் சனிக்கிழமைதான் என்பதை மறுப்பின்றி ஒப்புக்கொள்கின்றனர். எனினும் அவர்களில் பெரும்பாலோர் தேவன் தடை செய்துள்ள ஓய்வுநாளில் அதுபற்றிய உணர்வே இன்றி வேலைகளை செய்து கொண்டு ஒவ்வொரு வாரமும் தேவனுடைய கற்பனையை மீறிக்கொண்டுதான் இருக்கின்றனர்.
ஏழாம் நாள் ஓய்வுநாளை முறிப்பதற்கு ஈடுகட்ட அவர்கள் இன்னொரு நாளை – வாரத்தின் முதல் நாளை – தேவனுடைய கற்பனை இருந்த இடத்திலே ஏற்படுத்திக் கொண்டார்கள்.
தேவனுடைய மாபெரும் நீதிச் சட்டத்தை மனம் அறிந்து மீறி நடப்பதை அவர்கள் எப்படி நியாயப்படுத்துகிறார்கள்? நாம் அதை எப்படிப் பார்த்தாலும், இத்தகைய சூழல் நம்மை மலைக்கச் செய்வதாகவே இருக்கிறது! பல சபைகள் பத்துக் கற்பனைகளை மோசேயின் சடங்காச்சார விதிமுறைகளாக மட்டுமே ஒரு பக்கமாகத் துடைத்து ஒதுக்குகின்றன, பின்னும் அவையெல்லாம் சிலுவையில் ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும் போதிக்கின்றன: மற்ற சபைகள் ஓய்வுநாள் தவிர பத்துக் கற்பனைகள் அனைத்தும் புதிய ஏற்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன என்ற நிலையை எடுக்கின்றன. இரண்டு வகையிலும், நான்காம் கற்பனையானது தேவனுடைய சிருஷ்டிப்பின், இரட்சிப்பின் வல்லமைக்கு விசேஷித்த அடையாளமாக உள்ளது என்பதை தள்ளிவிடப்பட்டு, புனிதமற்றதாக்கப்பட்டுவிட்டது.
இருப்பினும், உண்மைச் சபை கற்பனைகளைக் கைகொள்வதினால் தனித்து நிற்கும் என்பதை நாம் இப்போது தான் கண்டுபிடித்திருக்கிறோம். இதைக் குறித்துக்கொள்ளுங்கள்: வேதாகமத்தின் தெளிவான போதனைகளின்படி, எந்த ஒரு சபையும் ஏழாம் - நாள் ஓய்வுநாளையும் மற்ற ஒன்பது கற்பனைகளையும் கைக்கொண்டாலன்றி ஸ்திரீயின் மீதியான சபை ஆக இருக்க முடியாது. திடீரென்று பார்க்கும்போது, முதல் பரீட்சையில் வென்ற மிகப் பெரும்பான்மையானோர் இரண்டாம் பரீட்சையை நிறைவு செய்யத் தவறுகின்றனர்.
ஆனால் இப்பொழுது தீர்க்கதரிசனத்தின் மூன்றாம் கட்டாய வேண்டுகோளைக் காணப்போகிறோம். கடைசி கால மீதியான சபை தன்னில் வெளிப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசன ஆவியை உடையதாக இருக்கவேண்டும். அதன் பொருள் என்ன? சந்தேகமின்றி இந்தக் குறிப்பிட்ட அடையாளக் கொடியானது நமது பட்டியலிலே மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இது தீர்க்கதரிசனத்தை வெறுமே புரிந்துகொள்வதையும் பிரசங்கிப்பதையும் விட அதிகமானவற்றுடன் தொடர்புடையது ஆகும்.
இறுதியாக, இந்த விசேஷ சபை, பூமியின் மேலுள்ள சகல ஜாதிகளுக்கும் - நியாயத்தீர்ப்பின் வேளை வந்தது, ஏழாம் - நாளே ஓய்வுநாள், பாபிலோன் விழுந்தது, மிருகத்தின் முத்திரைக்கு எதிரான எச்சரிப்பு போன்றவற்றை அறிவிக்கும் மற்றும் அதன் தனித்தன்மையுடைய தூதினால் தனித்து நிற்கும்.
தற்கால சபை அமைப்பு எது ஒன்றும் இந்த இறை போதனையுடன் கூடிய பண்புகளை உடையதாய் அவற்றிற்கு ஏற்ப இருத்தல் வேண்டும் என்று நாம் கூறும் முன்னர், இன்னமும் முழுமையாக விளக்கப்படாத மூன்றாம் எண் அடையாள அம்சத்துக்குத் திரும்புவோம்.
அத்தியாயம் - 7
தீர்க்கதரிசன ஆவி
தேவன் அருளிய ஏவுதலின்படி ஸ்திரீயின் மீதியானவர்கள் “இயேசுவைக் குறித்துச் சாட்சியை” உடையவர்களாய் இருப்பார்கள் என்று யோவான் அறிவித்தார். இந்த சொல்லாட்சி பல பொருள் கொடுப்பது என்பதால் இன்றும் ஏற்புடைய ஒரு தெளிவுபடுத்துதலை யோவான் பின்னர் கொடுத்தார். “இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்;கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது”(வெளி. 19:10). என்று அவர் மிக தெளிவாக கூறினார்.
இது கொஞ்சம் சரியான திசையில் நகர்கிறது, ஆனால் யோவான் “தீர்க்கதரிசனத்தின் ஆவி” என்று கூறுகையில் என்ன பொருளில் கூறினார் என்று நாம் இப்பொழுது கண்டு பிடிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். அது எப்படிப்பட்டதாய் இருந்தாலும், தேவனுடன் இணைந்து உயர்வு பெறுகிறது, ஏனெனில், இந்தக்கடைசி நாட்களில் அவர் தமது உண்மைச் சபையை அங்கீகரிக்க கூடிய வழிகளில் ஒன்றாக வரையறுத்துகிறார்.
இந்தக் கருத்தின் முழு உள்ளடக்கத்தையும் நாம் ஆராய்கையில், இந்தப் படம் தெளிவாகப் புலப்படத் தொடங்குகிறது. தூதன் யோவானுக்கு வெளிப்பட்டார். யோவான் அவரைக் கண்டு வியந்து போய் தரையிலே விழுந்தான். வெளிப்படுத்தின விசேஷகன் இவ்வாறு சொன்னார்: “அப்பொழுது அவனை வணங்கும் படி அவனுடைய பாதத்தில் விழுந்;தேன், அவன் என்னை நோக்கி இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக் குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்;க தரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான்.” (வெளி. 19:10).
இந்த வசனத்தில், இயேசுவைப்பற்றிய சாட்சியை அல்லது தீர்க்கதரிசன ஆவியை உடையவர்கள் என்று விவரிக்கப்படுபவர்கள் யார்? யோவானின் “சகோதரர்” மட்டுமே அதை உடைவர்கள் என்று இனங்காட்டப்படுகின்றனர். இப்போது, யோவானின் சகோதரர் யாரென்று மேற்கொண்டு சில தகவலை நாம் தேட வேண்டும். வேதவசனம் நம்மைக் கைவிட்டுவிடாது. வெளிப்படுத்தல் 22:8,9 -ல் யோவான் தூதனுடனான நிகழ்வை திரும்பக் கூறுவதுடன், சற்றே அதிக விவரத்தையும் தருகிறார். “யோவானாகிய நானே இவைகளை கண்டும் கேட்டும் இருந்தேன். நான் கேட்டுக் கண்டபோது, இவைகளை எனக்கு காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன். அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யாதப்படிக்குப் பார்; உன்னோடும் உன் சகோதரரோடும் தீர்க்கதரிசிகளோடும்…கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுது கொள் என்றான்.” யோவானின் சகோதரர்கள் தீர்க்கதரிசிகள், மேலும் அவர்கள் மட்டுமே தீர்க்கதரிசன ஆவியை உடையவர்கள் எனச் சொல்லப்படுபவர்கள்.
திடிரென இந்த மொத்தப் புதிரும் உரியப்படி இடம்பெறுகிறது. தீர்க்கதரிசன ஆவியை உடையவர்கள்மட்டுமே தீர்க்கதரிசிகளாவர். தீர்க்கதரிசனத்தை அறிவதும் பிரசங்கிப்பதும் மட்டுமே “தீர்க்கதரிசன ஆவி” என்றால்,அப்போது அநேக தற்கால போதகர்களும் சுவிசேஷ ஊழியர்களும் அதற்குத் தகுதி உடையவர்களாக இருப்பார்கள். ஆனால் வேதாகமம் இதை, உண்மையிலேயே தீர்க்கதரிசனம் உரைக்கும் திறன் என்று மிக மிகத் தெளிவு படுத்துகின்றது. வேறுவிதத்தில் சொன்னால், அது தீர்க்கதரிசன வரமாக இருக்கிறது. தீர்க்கதரிசிகள் மட்டுமே அதைப் பெற்றிருந்தனர்.
இவ்வண்ணமே அப்போஸ்தலர் பவுலால் ஆதரிக்கப் பெறுகிறது. “நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளாய் எல்லா உபதேசத்திலும் எல்லா அறிவிலும், சம்பூரணமுள்ளவர்களாக்கப்பட்டிருக்கிறபடியால், அவர் மூலமாய் உங்களுக்கு அளிக்கப்பட்ட தேவ கிருபைக்காக (தீர்க்கதரிசன ஆவி) நான் உங்களைக் குறித்து எப்பொழுதும் என் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன். அப்படியே நீங்கள் யாதொரு வரத்திலும் குற்றமில்லாதவர்களாய் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படுவதற்குக் காத்திருக்கிறீர்கள்.” (1 கொரிந் 1:5-7)
இங்கே இயேசுவைக் குறித்த சாட்சி, தீர்க்கதரிசன “ஆவி” என்பதற்கு பதிலாக ஒரு “வரமாக” அழைக்கப்படுகிறது. மேலும் நமது இரட்சகர் மீண்டும் வருகையில் இவ்வரம் நடைமுறையில் செயல்படும் என்பது மிக வலிமையாக உணர்த்தப்படுகிறது.
பவுலிடமிருந்து வரும் இந்த அருட்போதனையுடன்கூடிய சிந்தனையினால் நாம் மீண்டும் பழக்கமான களத்திற்குள் திரும்புகிறோம். “தீர்க்கதரிசன வரம்” என்ற சொல்வழக்கு குறித்து நமக்கு ஒன்றும் சிக்கல் இல்லை. புதிய ஏற்பாட்டு நிருபங்களில், தீர்க்கதரிசன ஆவி உட்பட எல்லா ஆவிக்குரிய வரங்களைப்பற்றிய குறிப்புகளாலும் நிறைந்துள்ளன. அந்த வரங்கள் எவ்வாறு எப்போது அருளப்பட்டன என்று பவுல் எபேசுவில் உள்ள சபைக்குக் கூறியுள்ளார்: “ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார்” (எபேசியர் 4:8).
இதுப்பற்றி ஒரு சிறு வர்ணனை தேவைபடுகிறது. இயேசு பரலோகத்திற்குத் திரும்பிச் சென்றபோது, பூமியிலுள்ள தம் மக்களுக்கு சில விசேஷித்த “வரங்களை” அல்லது திறன்களை விட்டுச் சென்றார் என்பது ஓர் நன்கு அறியப்பட்ட உண்மையாகும். உண்மையில் அவை, “அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்”(எபேசியர் 4:13) எனக் குறிக்கப்படுகின்றன.
என்ன காரணத்திற்காக இயேசு இக்குறிப்பிட்ட ஆவிக்குரிய வரங்களை குறிப்பிட்ட சிலருக்கு அருளிச் செய்தார்? “பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும் பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்…” (எபேசியர் 4:12). விசுவாசிகளை நிலைநிறுத்தவும் சபையை ஸ்திரப்படுத்தவும் அவர் அப்படி செய்தார். இவ்வரங்கள் சபையாரின் பக்திவிருத்தியை நாடுகையில், கிறிஸ்துவின் சரீரத்தின் தலைவர்கள் முதிர்ச்சி அடையவும் அவர்கள் பூரணத்துவம் பெறவும், விசுவாசிகளை பெலப்படுத்துவதற்கும் தரப்பட்டன.
அடுத்த வசனத்தில் இந்த வரங்கள் சரியாக எதுவரைக்கும் சபைக்குத் தேவைப்படும் என்று சொல்கிறது. “மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரணபுருஷராகும் வரைக்கும்” (எபேசியர் 4:11).
ஒரு மொழிக்கு ஏதாவது பொருள் இருக்குமேயானால், இந்தச் சொற்கள் ஒரு கருத்தை மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. கிறிஸ்து தமது சபையின் மீது வைக்கும் எல்லா வரங்களும் காலத்தின் முடிவு வரைக்கும் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கும். அவை கிறிஸ்துவின் பூரணத்துவம் நிறைவடையும் பொருட்டு சபையை முழுமை அடையச் செய்வதற்கு தேவைப்படும்.
இப்போது தைரியமாக அடுத்த வெளிப்படையான கேள்விக்குப் போவோமா? இன்று இந்த வரங்கள் எங்கே உள்ளன? அவை முடிவு காலம் வரை பரிசுத்தமாக்கும் பணியை செய்யுமாறு நமது ஆண்டவரின் நோக்கம் என்றால், அவை யாவும் நம்மைச் சூழ்ந்துள்ள சபைகளில் நடந்து வருவதாகக் காணப்படவேண்டும் அல்லவா?
அப்படி நடக்கிறதா என்று விசாரிப்போம். இன்றுள்ள பெரும்பாலான சபைகளில் ஆசிரியர்கள் உள்ளதை நாம் காண்கிறோமா? இதற்குரிய பதில், ஆம்! மேய்ப்பர்கள், சுவிசேஷகர்கள் பற்றி என்ன? நடைமுறையில் எல்லா சபைப் பிரிவுகளும் அவர்களைக் கொண்டுள்ளன. அப்போஸ்தலர்களைப் பற்றி நாம் என்ன சொல்ல முடியும்? இந்தச் சொல்லின் பொருள், “மிஷனரிகள்” (“அனுப்பப்படுபவர்” என்னும் பொருள் தரும் கிரேக்கச் சொல்லிளிருந்து வருவது) என்பதாகும். மீண்டும், இன்றைய நவீன கால சபைகளில் பெரும்பாலானவை இந்தக் குறிப்பிட்ட வரத்திற்குத் தகுதியுடையவை என்று நம்மால் கூற முடியும்.
இதுவரை எல்லாம் நலமே. ஆனாலும் இன்னும் ஒரு கேள்வி நம்மிடம் உண்டு - தீர்க்கதரிசிகளைப் பற்றி என்ன? பெரும்பாலான சமயத் தலைமையகங்களில் இந்தக் கேள்விக்கு உடனடி பதில் கிடையாது. நடைமுறையில் எந்தச் சபையும் தன் ஊழியத்திலே இப்படிப்பட்ட விஷயம் என்றேனும் இருந்ததாக உரிமை கொண்டாடுவதில்லை.
ஆனால் ஏன்? மற்ற எல்லா வரங்களும் இன்றியமையாதவை எனில், தீர்க்கதரிசிகளும் ஏன் கட்டாயத் தேவையில்லை? அது ஆதிச் சபையில் கட்டாயம் தேவை எனப்பட்டுள்ளதே. உண்மையில் அப்போஸ்தலர் நடபடிகள் புஸ்தகத்தின்படி இந்த ஆவிக்குரிய வரங்கள் அனைத்தும் இருந்ததற்கு ஆதாரம் உண்டு. “அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையிலே பர்னபாவும்...சிமியோனும்.... தீர்க்கதரிசிகளாயும் போதகர்களாயும் இருந்தார்கள்” (அப் 13:1). போதகர்கள், தீர்க்கதரிசிகள் ஆகிய இரண்டு வரங்கள் அந்தியோகியாவிலுள்ள சபையில் இருந்ததைக் குறித்த ஆதாரம் இங்கே நமக்கு உண்டு. பிறகு அப்போஸ்தலர் 21:9 - ல், “தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற கன்னியாஸ்திரிகளாகிய நாலு குமாரத்திகள் அவனுக்கு இருந்தார்கள்” என்று நாம் படிக்கிறோம். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இந்த நான்கு பெண்கள் ஆவியினால் தீர்க்கதரிசிகளாக நியமிக்கப்பட்டிருந்ததைக் காணலாம். அவர்கள் தீர்க்கதரிசன ஆவியைப் பெற்றிருந்தார்கள்.
அத்தியாயம் - 8
சபையிலிருந்து
தீர்க்கதரிசிகள் மறைந்தது ஏன்?
அப்போஸ்தலர்கள் காலத்திலும் அதற்கு அடுத்து வந்த நாட்களிலும் எல்லா வரங்களும் சம அளவில் செயல்பட்டு வந்தன என்பது வெளிப்படையானது. ஆனால் கிறிஸ்தவ கால வரையறையில் இருநூறு அல்லது முந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தீர்க்கதரிசன வரம் பார்வையிலிருந்து மறைந்ததாகத் தோன்றியது ஏன்? நாம் காலங்கள் நெடுகிலும் மற்ற வரங்கள் பற்றிய ஒரேமாதிரியான பதிவைப் பெறவில்லை. இன்றைய சபைகளில் ஆசிரியர்கள், போதகர்களுடன் தீர்க்கதரிசிகளையும் ஏன் நாம் காணக்கூடவில்லை?
இன்றைய நிலையில் பல இலட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் இக்கேள்வியைத் தவிர்ப்பது போல் நம்மால் இருக்க முடியவில்லை. தேவ வார்த்தை இவ்விஷயத்தின் முடிச்சை அவிழ்த்து, இதன் போக்கைத் தடங்கலின்றி கொண்டு செல்கிறது. பெரும்பாலான சபைகள் தம் நடுவே இந்த வரம் இல்லாமையை அலட்சியம் செய்ய முயல்வது ஏன் என்று காண்பது வெகு எளிது, குறிப்பாக அதன் இல்லாமைக்கான காரணத்தை நாம் கண்டறியும்போது.
தேவ மக்களிடையேயிருந்து தீர்க்கதரிசன ஆவி அகற்றப்பட்டிருந்தது அப்போஸ்தலர்கள் காலத்துக்கு அடுத்து வந்த காலத்தில் முதல் தடவையாக நடந்தது அல்ல. உண்மை யாதெனில், தேவன் தம் மக்களிடம் எப்போதும் நடந்து கொள்வது போலவே அன்றைய சபையிடமும் நடந்துகொண்டார். பழைய ஏற்பாடு முழுவதிலும் தேவன் அவர்களை இரு தெய்வீக வழிமுறைகளில் கற்பித்து வழிநடத்தினார் - அவை நியாயப்பிரமாணம் மற்றும் தீர்க்கதரிசிகள் ஆவர். எரேமியா தீர்க்கதரிசியின் மூலம் தேவன் இஸ்ரவேலரிடம் பேசியது: “.....நான் உங்களிடத்துக்கு ஏற்கனவே அனுப்பிக்கொண்டிருந்தும், நீங்கள் கேளாமற்போன என் ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நீங்கள் கேட்கும்படிக்கும், நான் உங்கள் முன்வைத்த என் நியாயப்பிரமாணத்தின்படி நீங்கள் நடக்கும்படிக்கும், நீங்கள் என் சொல்லைக் கேளாமற்போனால், நான் இந்த ஆலயத்தைச் சீலோவாவைப் போலாக்கி, இந்த நகரத்தைப் பூமியிலுள்ள எல்லா ஜாதிகளுக்கு முன்பாகவும் சாபமாக்கிப் போடுவேன் என்று கர்த்;தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்” (எரேமியா 26:4-6).
நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகளும்! இவை இரண்டும் இணைந்தே செல்கின்றன. அவை வேத வசனங்களை மட்டும் குறிப்பிடுவதில்லை, மாறாக அவை தெய்வீக வழிநடத்துதலின் இரு வழிமுறைகளையும்கூட குறிப்பிடுகின்றன. “என் பிரமாணங்களைக் கைக்கொள்ளுங்கள் அத்துடன் என் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடுங்கள்” என்பதுதான் தேவன் கேட்பது ஆகும். அவர்கள் இந்த இரண்டு தெய்வீக வழிமுறைகளில் ஒன்றைத் நிராகரித்து விட்டார்களானால், தேவன் மற்றதையும் அகற்றிவிடுவார், ஏனெனில் அவர்கள் அவரது தலைமைத்துவத்தை உண்மையில் நிராகரிக்கின்றனர். பற்பல சமயங்களில் இஸ்ரவேல் புத்திரர் தேவனுடைய பிரமாணத்தை விட்டு வேறுபுறம் திரும்பினர், அதன் பலன் தீர்க்கதரிசனக்குரலும் அடங்கிவிட்டதைக் காண்பதாகவே இருந்தது.
எரேமியா எழுதினார், “...வேதமுமில்லை, அவள் தீர்க்கதரிசிகளுக்குக் கர்த்தரால் தரிசனம் கிடைக்கிறதுமில்லை” (புலம்பல் 2:9). எசேக்கியல் அதை இவ்வாறு குறிப்பிட்டார்: “...அப்பொழுது தீர்க்கதரிசியினிடத்திலே தரிசனத்தைத் தேடுவார்கள், ஆனாலும் ஆசாரியனிடத்திலே வேதமும் மூப்பரிடத்திலே ஆலோசனையும் இராமல் ஒழிந்துபோகும்” (எசேக்கியல் 7:26). ஞானியும் அதே கோட்பாட்டை எடுத்து வைத்துள்ளார்: “தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்: வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்” (நீதிமொழிகள் 29:18).
தேவனுடைய பிரமாணத்திற்கு வெளிப்படையான கீழ்ப்படியாமை நிகழும் காலங்களில், கடிந்துகொள்ளவும் மீண்டும் திரும்பி வரும்படி அழைக்கவுமே தேவன் தீர்க்கதரிசிகளை பயன்படுத்தினார், ஆனால் ஆலோசனை வழங்கவோ வழிநடத்தவோ அல்ல. அவர்கள் பிரமாணத்தை விட்டுத் திரும்பியபோது, தாங்கள் தெய்வீக வழிகாட்டுதலைப் பெறக்கூடிய வாசலாயிருந்த இன்னொரு வழியையும் மறுதலித்து விட்டதை அவர்கள் புரிந்துகொண்டனர். சவுல் தனது விசுவாச துரோகத்தில், “...தேவனும் என்னைக் கைவிட்டார். அவர் தீர்க்கதரிசிகளினாலாவது, சொப்பனங்களினாலாவது எனக்கு மறு உத்தரவு அருளுகிறதில்லை....” (1 சாமுவேல் 28:15) என்று கதறினான்.
மக்கள் தேவனுடைய ஆலோசனையைக் கேட்க வந்தபோது இதுகுறித்த ஒரு பரிபூரண எடுத்துக்காட்டை நாம் எசேக்கியல் 20:3 - ல் காண்கிறோம். “மனுபுத்திரனே, நீ இஸ்ரவேல் மூப்பரோடே பேசி, அவர்களை நோக்கி கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், நீங்கள் என்னிடத்தில் விசாரிக்க வந்தீர்களோ? நீங்கள் என்னிடத்தில் விசாரிக்க இடங்கொடேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.” இந்த விஷயத்தில் அவர் ஏன் அவர்களுக்கு பதில் அளிப்பதில்லை? வசனங்கள் 11-13 பதிலளித்துள்ளன: “என் கட்டளைகளை அவர்களுக்குக் கொடுத்து, என் நியாயங்களை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன், அவைகளின்படி செய்கிற மனுஷன் அவைகளால் பிழைப்பான். நான்தங்களைப் பரிசுத்தம் பண்ணுகிற கர்த்தர் என்று அவர்கள் அறியும்படிக்கு, எனக்கும் அவர்களுக்கும் அடையாளமாய் இருப்பதற்கான என் ஓய்வு நாட்களையும் அவர்களுக்குக் கட்டளையிட்டேன். ஆனாலும்இஸ்ரவேல் வம்சத்தார் வனாந்தரத்தில் எனக்கு விரோதமாய் இரண்டகம் பண்ணினார்கள், என் கட்டளைகளின்படியே மனுஷன் செய்தால் அவைகளால் பிழைப்பான், அவர்களோ அவைகளில் நடவாமல், என் நியாயங்களை வெறுத்து, என் ஓய்வுநாட்களின் பரிசுத்தத்தை மிகவும் குலைத்துப்போட்டார்கள், ஆதலால் அவர்களை நிர்மூலமாக்கும்படி வனாந்தரத்திலே என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன்.”
தேவன் அவர்களுக்கு தெய்வீக வழிகாட்டுதலைத் தராததற்கு காரணம், அவர்கள் அவரது பிரமாணத்தை மறுதலித்து, அவரது ஓய்வுநாளை முறித்ததுதான் என்று மிக உறுதியாக நம்மால் காண முடியும். தேவனுடைய வெறுப்பை விசேஷமாகத் தூண்டியது நான்காம் கற்பனையின் மீறுதலேயாகும்.
இப்பொழுது எதிர்கொள்ள ஆயத்தமாகும் கேள்வி, புதிய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளைப் பற்றியது, மற்றும் அவர்கள் ஏன் இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகளில் மறைந்துபோனார்கள்? சபையிலிருந்து தீர்க்கதரிசன வரம் மறைந்த அதே காலத்தில் தேவனுடைய பிரமாணத்திற்கு நேர்ந்தது என்ன? அந்த ஆரம்ப காலத்தில் ஓய்வுநாளானது சூரியனுக்குரிய அஞ்ஞான நாளுக்கென ஒதுக்கப்பட்டுவிட்டது என அக்கால வரலாறு காட்டுகின்றது. புறஜாதியாரின் சூரிய வழிபாடுடன் இழிவான சமரசம் ஆனதால் உண்மை ஏழாம்நாள் ஓய்வுநாளை வெளிப்படையாகத் நிராகரிக்க வழிநடத்தியது. மேலும் இது நடந்தபோது, தேவன் முற்காலத்தில் தம் மக்கள் தம் பரிசுத்த பிரமாணத்தை விட்டு வேறுபுறம் திரும்பியபோதெல்லாம் என்ன செய்தாரோ அப்படியே செய்தார்;. அவர் தீர்க்கதரிசன ஆவியின் வழிகாட்டுதலை திரும்ப எடுத்துக்கொண்டார். தீர்க்கதரிசிகள் சபையிலிருந்து மறைந்துபோனார்கள்.
இது ஒரு திகைப்பூட்டும், சவால்விடும் கேள்வியை நாம் நேருக்குநேர் எதிர்கொள்ளவேண்டிய நிலையைக் கொண்டுவந்துள்ளது. சபையானது நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்தி மீண்டும் ஓய்வுநாளை ஆசரிக்கத் தொடங்குமானால் தேவனும் தீர்க்கதரிசன வரத்தை சபைக்கு திரும்பக் கொடுப்பார் என்று நம்ப ஏதேனும் காரணம் உண்டா? இது நம்மை நேரே வெளிப்படுத்தல் 12 - ன் உயிரோட்டமான தீர்க்கதரிசனத்திற்கும், உண்மையான மீதியான சபை (மக்கள்) குறித்த தேவனுடைய விவரிப்பிற்கும் இட்டுச்செல்கிறது. இப்பொழுது, முதல் முறையாக, பதினேழாம் வசனத்தின் முழு முக்கியத்துவத்தையும் நம்மால் காணமுடியும்: “அப்பொழுது வலுசர்ப்பமானது ஸ்திரீயின்மேல் கோபங்கொண்டு, தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக் குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய அவளுடைய சந்ததியானமற்றவர்களுடனே யுத்தம் பண்ணப்போயிற்று.”
நீங்கள் இதைப் பார்க்கிறீர்களா? நீண்ட காலமாக கைவிடப்பட்டிருந்த பிரமாணம் மீண்டும் தனக்குரிய இடத்திற்கு வந்துவிடுகிறது - சபையிலே. மேலும் அதே விதமாக பிரமாணத்துடன் இயேசுவைக் குறித்த சாட்சியும் இருக்கிறது, அதுவே தீர்க்கதரிசன ஆவியாகும். இதைப்பற்றிச் சிந்தியுங்கள்! பிரமாணமும் தீர்க்கதரிசிகளும் மீண்டும் தேவனுடைய உண்மையான அப்போஸ்தல சபையின் கடைசி மீதியான துண்டில் ஒன்றிணைகின்றன! எல்லா வரங்களும், விசுவாச துரோக நாட்களுக்கு முன்னர் நடந்தபடியே மீண்டும் செயல்படுகின்றன.
ஒரு மீதியான துண்டு, அது ஆதியில் இருந்ததுபோலவே முடிவிலும் இருக்கும், மற்றும் அது ஒரு சிறிய துண்டுதான். இந்த அருமையான தீர்க்கதரிசனம், அப்போஸ்தலர்களின் விசுவாசம் இறுதிக்காலத்தில் நிலைநிறுத்தப்படும் என்பதை வெளிப்படுத்துகின்றது. அதே ஓய்வுநாள் நிலைநாட்டப்படும். அதே ஆவிக்குரிய வரங்கள் நடப்பிக்கப்படும், மேலும் மாபெரும் அப்போஸ்தலக் கோட்பாடுகள் யாவும் போப்பு மார்க்க 1,260 ஆண்டு சீர்குலைவின் விளைவுகளிலிருந்து விடுவிக்கப்படும்.
மீதியான சபை எனப்படும் ஒரு சபை 1798 - ம் ஆண்டுக்குச் சற்று பின்னர் காட்சியளிக்க வேண்டும். அது இயேசுவானவர் சிருஷ்டிப்பின் வாரத்தில் மனிதனுக்காக உண்டாக்கிய, அவர் பூமியில் இருந்தபோது ஆசரித்த அதே ஓய்வுநாளை ஆசரிப்பதனால், பற்பல தலைமுறைகளின் அஸ்திபாரத்தை ஸ்தாபித்து நிலைநாட்டும் சபையாக இருக்கும். இந்தச் சபையானது மெய்யான தீர்க்கதரிசன வரத்தை வெளிப்படுத்துவதாகவும் இருக்கும். அந்த மீதியான சபையானது வழக்கத்திற்கு மாறாக ஆவிக்குரிய ஆசீர்வாதத்தையும் வல்லமையையும் அருளப்பெற்று, வெளிப்படுத்தல் 14 - ன் விசேஷித்த கடைசி எச்சரிப்பின் தூதை உலகிலுள்ள எல்லா நாடுகளுக்கும் கொண்டுசெல்லும். நாம் ஏற்கெனவேகண்டதுபோல, இந்த மூன்று தூதர்களின் மகிமை நிறைந்த சுவிசேஷம் இன்று நடந்துவரும் நியாயத்தீர்ப்பு, ஓய்வுநாள், பாபிலோனின் விழுகை, மிருகத்தைப்பற்றிய தூது போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கிறது.
இந்தச் சபையானது யோவானின் இந்த வர்த்தைகளால் மீண்டும் இனங்காட்டப்படுகிறது: “தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும்” (வெளி 14:12). இந்தக் கற்பனைகளைக் கைக்கொள்ளும் பரிசுத்தவான்கள் இயேசுவில் திடநம்பிக்கை வைப்பதனால் மட்டுமே தாம் செய்வதை செய்ய அதிகார வல்லமை பெற்றுவிட்டார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். அவர்களைக் காண்பீர்களானால், அவர்கள் தமது சுயநீதியைக் குறித்தோ அல்லது தம்மை இரட்சிக்க தம் சொந்தக் கிரியைகளைச் சார்ந்துள்ளதாகவோ பெருமை பாராட்டமாட்டார்கள். எல்லா மக்களையும் விட அதிகமாய், தாம் தொழுது கொள்ளும் இரட்சகருடன் ஓர் அன்பான தனிப்பட்ட நல்லுறவை வைத்திருப்பார்கள். அவர்களது கீழ்ப்படிதல், கிறிஸ்துவுக்குரிய நீதியும், அவரால் பகிர்ந்தளிக்கப்பட்ட நீதியின் புண்ணியங்களையே முற்றிலும் அடிப்படையாகக் கொண்டிருக்கும். அவர்கள் கற்பனைகளைக் கைக்கொள்ளுவார்கள், ஏனெனில் அவர்கள் கிருபையினால் இரட்சிக்கப்பட்டிருக்கிறார்கள், ஆனால் தேவனிடம் எந்தச் சலுகையையும் பெறுவதற்காக அல்ல.
வேதாகமத்தில் போடப்பட்டுள்ள இவ்வியப்பூட்டும் நிபந்தனைகளை இன்றுள்ள எந்த ஒரு சபையாவது நிறைவு செய்யக்கூடியதா என அறியும் அதீத ஆவல் கொண்ட ஒரு நிலைக்கு நீங்கள் இந்நேரம் வந்துவிட்டிருக்ககூடும். பல சபைகள் மெய்ச்சபை என உரிமை பாராட்டுகின்றன, ஆனால் அவற்றின் உரிமைகள் எதுவும் தேவனுடைய வசனத்தின் நிபந்தனைகளை அடிப்படையாக கொண்டவையல்ல. வெளிப்படுத்தல் புஸ்தகத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள நான்கு விசேஷித்த அடையாள அறிகுறிகளுக்குப் பொருந்தி வருபவை எவையோ அவை மட்டுமே உற்றுநோக்கத் தகுதியுடையவையாக இருக்கிறது. இப்போது ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம்... இன்றைய உலகில் இந்த வேதாகம பரீட்சைகள் எல்லாவற்றையும் நிறைவு செய்கின்ற ஒரே ஒரு சபையைத்தான் நம்மால் காணமுடியும். அச்சபை தன்னில் தவறற்ற உறுப்பினர்களை உடைய பூரண சபையாக இருக்கும் என நம்மால் எதிர்பார்க்க இயலுமா? இதற்கு மாறாக, மற்ற மனிதர்களைப் போலவே அதே தவறுகளுக்கு ஆளாகக்கூடிய சராசரி ஆண்கள், பெண்களை உடையதாக அது இருக்கும் என்பது உறுதி. அது “மீதியான” என்ற பண்பை நிறைவு செய்யக்கூடிய ஒரு சிறிய சபையாகத்தான் இருக்க கூடும். சத்திய வழி குறுகலானது என்றும், “அதைக் கண்டுப்பிடிக்கிறவர்கள் சிலர்”(மத்தேயு 7:14) என்றும் இயேசு கூறினார். மீண்டும் அவர் “நோவாவின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்”. (லூக்கா 17:26) என்று அறிவித்தார். பெரிய எண்ணிக்கை, பெரும்பான்மையினர் என்று நம்பிக்கை கொண்டு எவரும் வஞ்சிக்கப்படக்கூடாது. பெரு வெள்ளக் காலத்தில் பேழைக்குள் சேர்த்துக் கொள்ளப்பட்ட எட்டு ஆத்துமாக்களுக்கு ஒப்பாகவே இரட்சிக்கப்பட்டவர்கள் இருப்பார்கள். சத்தியம் ஒரு போதும் மக்களைக் கவர்ந்து பிரபலமாக இருந்ததில்லை, மேலும் களியாட்டுகளும் பொருளாசையும் மிக்க இறுதிக்காலத்தில் அது இன்னும் குறைவாகவே பிரபலமுடையதாய் இருக்கும். மிகப்பெரிய, பிரபலமான - உலக வாழ்வில் மூழ்கித்திளைத்துக்கொண்டிருக்கும் சபைகளிடையே இந்த மீதியான சபை காணப்பட இயலாது. இயேசு சொன்னார், “ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னை தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்” (மத்தேயு 16:24).
பவுலின் ஆலோசனை என்னவென்றால் “நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துப் போய் அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (2 கொரிந்தியர் 6:17). தீத்துவுக்கு அவர் எழுதினார்: “ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவ கிருபையானது பிரசன்னமாகி, நாம் அவபக்தியையும், லௌகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவ பக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம் பண்ணி... (ஆண்டவரது) சொந்த ஜனங்களாகவும் நற்கிரியைகளைச் செய்ய பக்தி வைராக்கிய முள்ளவர்களாகவும் (இருக்கச்செய்கிறது)...” (தீத்து 2:11-14).
இவையும் இவற்றுடன் தொடர்புடைய மற்ற பல வசனங்களும், இயேசும் அவரது பின்னடியார்களும் அவர்களது நாட்களில் உயர்வாக மதிக்கப்பெற்றிருந்த அதே விதத்தில் கடைசி நாட்களிலுள்ள மெய்ச்சபையும் உலகத்தால் பார்க்கப்படும் என்று சுட்டிக்காட்டுவதாக தோன்றுகிறது. மீதியான சபை மாபெரும் ஆதிச்சபையின் ஒரு நீட்டிப்பாக இருக்கிறது என்பதால், அது பெரும்பான்மையோரால் அவமதிக்கப்பட்டு வித்தியாசமானதாக எண்ணப்படும்;; இறுதியில், ஆதிச் சபைபோலவே மரணத்திற்குப் பாத்திரமானதாகவும் இருக்கும். வெளிப்படுத்தல் புஸ்தகம் முடிவுகால “மிருகம்” என்னும் வல்லமையானது, ஒவ்வொரு தனிநபர் மீதும் ஒரு முத்திரையைப் போடும் ஒரு கொடிய திட்டத்தை வெளிப்படுத்திக்காட்டுகிறது; மேலும் அம்முத்திரையைப் பெறாதவர் மரணத்தண்டனையைப் பெறுவார்கள். இந்நிலையில் இந்த மிருகத்தின் முத்திரையை பெறாதவர்கள் யாராக இருக்கும் என சந்தேகம் எழலாம்... அவர்கள், “தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்கள்” (வெளி. 14:12) ஆவர். அதாவது, மீதியான சபை.
மீண்டும், ஒரு விஷயத்துக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் - அதாவது, மீதியான சபையைச் சேர்ந்தவர்கள் அனைவரும் கண்டிப்பாக இரட்சிக்கப்படுவார்கள் என்று கூறமுடியாது... மற்ற எல்லாச் சபைகளையும் போலவே அதுவும் இயேசு கிறிஸ்துவுடன் இரட்சிப்பின் உறவில் தொடர்ந்து நீடிக்க வேண்டிய சாதாரண மக்களைக் கொண்டுள்ளது. எல்லாச் சபைப் பிரிவுகளிலும் மக்கள் குழுக்களிலும் இரட்சிக்கப்பட்ட மற்றும் இரட்சிக்கப்படாத மக்கள் இருப்பார்;கள் என்பது சந்தேகத்திற்கிடமின்றி உண்மையானதாகும். ஒவ்வொரு நபரும் தனக்கு வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தின் அடிப்படையிலும், தான் அறிந்ததற்கு எப்படி கீழ்படிகிறார் என்பதன்படியும் வைத்தே நியாயந்தீர்க்கப்படுவார்கள். மீதியான சபையின் உறுப்பினர்கள் பெரிய வெளிச்சத்தை உடையவர்களாக இருப்பார்கள், அதன்படியே நியாயந்தீர்க்கப்படுவார்கள். அநேகர் சோதனையில் தோல்வியடைவார்கள், ஏனெனில் அவர்கள் சத்தியத்தைப் பற்றிய அவர்களது அறிவைச் சார்ந்து உள்ளனர். கிறிஸ்துவானவரின் நீதியின் புண்ணியங்களைச் சார்ந்திருப்பதில்லை. அநேகர் “மீதியான” சபையில் இருந்த போதிலும் இழந்துப்போவார்கள் என்பது நடக்ககூடியதே என்பதன் காரணம் இதுதான் ஆகும். மற்றவர்கள் அவ்வளவு பெரிய வெளிச்சத்தை பெறாத போதும், தங்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட வெளிச்சத்திலெல்லாம் நடந்து கிறிஸ்துவை அறிந்தவர்களாக ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்.
எனினும், இந்தக் கணிப்புகளைச் செய்த பின்னும், ஸ்திரீயின் “மீதியான”(சபை) என்று பெயர் தரித்த, ஒரு விசேஷித்த தூதை உடைய விசேஷித்த சபையை உடையவராய் தேவன் இருக்கிறார் என்பதையும் நாம் உற்று நோக்க வேண்டும். அது இறுதிக்காலத்துக்குச் சற்று முன்னர் தோன்றும், அப்போஸ்தலர் சபை பற்றிக் கொண்டிருந்த அதே கோட்பாடுகளை உடையதாக இருக்கும், பத்துக் கற்பனைகள் அனைத்தையும் (ஓய்வுநாள் உட்பட) கைக்கொண்டுவரும், தீர்க்கதரிசன வரம் உடையதாக இருக்கும், மேலும் முழு உலகிற்கும் வெளிப்படுத்தல் 14 - ஐ பிரசங்கித்துவரும்.
அத்தியாயம் - 9
எந்தச் சபையாவது
நான்கு சோதனைகளைச்
சந்திக்குமா?
இந்த வேத வசனங்கள் கேட்பவை அனைத்தையும் நிறைவு செய்யக்கூடிய ஒரு சபை இந்த உலகத்தில் இப்பொழுது உள்ளதா? இதுபற்றி புரியாத புதிராக நிற்க தேவன் நம்மை விட்டுவிடுவதில்லை. அனைவரும் எதை எதிர் பார்க்கலாம் என அறியுமாறு, வேதாகமத்திலே தனித்துவமான, தெளிவான, எளிய அடையாள அறிகுறிகளை அவர் குறிப்பிட்டுள்ளார். நூற்றுக்கணக்கான குழப்பும் சபைப் பெயர்கள் மற்றும் அமைப்புகளுடன் வித்தியாசப்படுத்திக்காட்டும் அந்த நான்கு மாபெரும் அடையாளங்களை ஒப்பிட்டு காண்பது கடினமா? அப்படி ஒன்றும் இல்லை.
இந்தச் சபைகளில் 1798 - க்குப் பிறகு எழும்பியவை எத்தனை? ஒரு சிறு எண்ணிக்கை உடையவையே. மேலும் இந்தச் சிறிய எண்ணிக்கையிலானவற்றில் ஓய்வுநாள் உட்பட, பத்துக் கற்பனைகளையும் கைக்கொள்பவை எத்தனை? வெகு சிலவே. அவற்றை விரல் விட்டு எண்ணிவிட முடியும். இந்தச் சிலவற்றிலும் தீர்க்கதரிசன ஆவியை உடையவை எத்தனை? இறுதியாக, பூமியின் எல்லா நாடுகளிலும், எல்லா மொழிகளிலும் வெளிப்படுத்தல் 14 - ன் முத்தூதின் தூதை அறிவிப்பவை எத்தனை?
இப்படியெல்லாம் சல்லடை போட்டு சலித்து எடுத்து பிரித்து, கழித்துப் பார்த்தால் ஒரே ஒரு சபைதான் தேறும் - நம்பினால் நம்புங்கள் இல்லாவிட்டால் விடுங்கள். இந்த கேள்விக்கிடமான இடத்தில் உங்களை தோங்கி நிற்கும்படி விட்டுவிடுவது நேர்மையானதல்ல. தேவன் நடக்கவே இயலாத ஒன்றை விவரித்துவிட்டாரா அல்லது இதுவரை வராத எதாவது புதிய ஒட்டுசபை வருமா என்றெல்லாம் புரியாமல் நிற்கும்படி விடுவது சரியல்ல...இன்றுள்ள எல்லாக் கிறிஸ்தவ சபை அமைப்புகளிலும் மீதியான சபையின் வேதாகமப் பண்பைச் சந்தித்து முழுமையாக நிறைவு செய்யும் அமைப்பு ஒன்றே ஒன்றுதான் உள்ளது.
இது வரலாற்று உண்மைகளின் மீதான அடிப்படையில் நமது முடிவாக இருக்கவேண்டுமே தவிர, ஏதோ குறிப்பிட்ட சபைக்காக நாம் பிடிவாதமாக இருக்கக்கூடாது. தேவனால் அருளப்பட்ட வெளிப்படுத்தல் 12 - ன் பதிவு இன்றுள்ள எந்த ஒரு சபைக்கும் உணர்வுபூர்வமான சார்பு உடையதல்ல. மிக ஆர்வமற்ற, அலட்சியமான நபர்கூட தீர்க்கதரிசனப் படத்தை முழுவதும் ஆராய்ந்த பிறகு இதே முடிவுக்குத்தான் வருவான். இதிலே பெருமையாகச் சொல்லிகொள்ள ஒன்றும் இல்லை. இந்த இரகசியம் எந்த ஒரு மனிதனாலும் அல்ல, மாறாக தேவனுடைய வார்த்தையினால் வெளிப்படுத்தப்பட்டது ஆகும்.
நாம் அந்தச் சபையைக் குறிப்பிடுகையில் கொஞ்சம் நடுக்கத்தோடுதான் குறிப்பிடவேண்டும். நமக்கு முன்னே மறுக்க முடியாத சான்றுகள் இருந்தபோதிலும், நம்மை ஏதாவது ஒரு பக்கம் சாயும்படி நம்மை மாற்றக் காத்திருக்கும் சிலர் (சபைகள்) எப்போதுமே இருக்கும். மற்றவர்(சபை)கள் இந்த மகிமைமிக்க சத்தியத்தைத் தங்களுடையதாகத் திருடிக்கொள்ள தனிப்பட்ட வன்கண்ணுடன் இருக்க அனுமதிக்கும்.
மெய்யான மீதியான சபையைப்பற்றிய தீர்க்கதரிசன விவரிப்பை நிறைவுசெய்யும் ஒரே சபை செவன்த் - டே அட்வென்டிஸ்ட் சபை ஆகும். 1844 - ம் ஆண்டு வாக்கில் எழும்பியுள்ள இந்த விதிவசமான இயக்கம், இருண்ட காலங்களில் இழக்கப்பட்டு அல்லது தடுக்கப்பட்டு இருந்த சத்தியத்தை திரும்பவும் நிலைநிறுத்துவதற்கான முன்னுரைக்கப்பட்ட திட்டத்தை தொடங்கியது. கிறிஸ்துவுக்கும் ஆரம்பகால சபைக்கும் உரிய மூலக் கோட்பாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக தமது முந்தைய ஜொலிப்பிலும் அழகிலும் மீண்டும் விளங்கத் தொடங்கின. நியாயப்பிரமாணம் மற்றும் ஓய்வுநாளின் அதிகாரம் மறு ஸ்தாபனம் செய்யப்படுகையில், தேவன் தாம் செய்வதாக வாக்குறைத்ததை அப்படியே செய்தார்: அவர் மீதியான சபைக்கு அழகிய தீர்க்கதரிசன ஆவியைத் திரும்பவும் கொடுத்தார். அந்த வரம் திருமதி எலன் ஜி. ஒயிட் அவர்களின் வாழ்க்கை மற்றும் போதனைகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்டது. ஆரம்ப (இலக்கணப்) பள்ளிப் படிப்பை மட்டுமே பெற்றிருந்த இந்த இளம் பெண்மணி அறுபது ஆண்டு காலத்துக்கும் மேல் நீடித்த விசேஷித்த வெளிப்பாடுகளைப் பெற்றார். அவரது இறையருள் பெற்ற பேனாவிலிருந்து எழுபதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் மழையாகப் பொழிந்தன, அவற்றில் பல மிகப் பெரிய, மதச்சார்பற்ற விமரிசகர்களாலும் அவ்வற்றின் வடிவிலும் உள்ளடக்கத்திலும் இணையற்றவை என ஏற்கப்பட்டுப் புகழப்பட்டவை ஆகும்.
தீர்க்கதரிசன ஆவியானது இந்தப் புதிய இயக்கத்திற்கு உத்வேகம் தர ஓர் ஆற்றல்மிக்க வழிமுறையில் செயலாற்றிய போதிலும், அது பரிசுத்த வேத வசனங்களின் உயர் அதிகாரத்திற்குட்பட்ட ஒரு “சிறிய ஒளி” யாகவே செயல்பட்டது. “ஆவிகளைச் சோதித்து அறியுங்கள்” என்னும் வேத விதிக்கு ஏற்ப, ஒவ்வொரு வெளிப்பாடும் தேவனுடைய வார்த்தையால் சோதித்து அறியப்பட வேண்டும். “வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்க வேண்டும்: இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை” (ஏசாயா 8:20). அவருடைய எழுத்துகள் ஒவ்வொரு நிலையிலும் வேதாகமத்தை உறுதிப்படுத்தவில்லை என்றால், அவை போலியானவை என்று தள்ளப்பட்டிருக்கும், ஆனால் அவை வேதவசனங்களுடன் கச்சிதமான இசைவுடன் பேசின. எந்த வகையிலும் அவை வேதவசனத்தின் புனித கட்டளைத் தொகுப்பில் ஒரு பகுதியாகக் கருதப்படவில்லை. அவை ஒரே ஆவியால் உந்தப்பட்டு எழுதப்பட்டவை என்றாலும், அவை பரிசுத்த எழுத்துகளில் சேர்க்கவோ அல்லது எடுத்து விடவோ இல்லை மாறாக ஓர் பூதக்கண்னாடியைப்போல், வசனத்தின் அழகையும் சததியத்தையும் வெளிக்கொண்டு வருபவையாக உள்ளன.
இவை எல்லாவற்றையும்விட மாபெரும் வியப்பு என்னவென்றால், வளர்ந்து வரும் மீதியான சபை தேவனுடைய அருட்பாதுகாப்பில் வெளிப்படுத்தல் 14 - இன் அதே கோட்பாடுகளின் மீது அமைந்துள்ளது என்பதே. அது கடைசித் தூது என ஒரு காலத்தில் இயேசுவாலும் யோவானாலும் சிறப்பித்துக் கூறப்பட்ட அதே கோட்பாடுகள் ஆகும்...அது தனது பயனத்தின் மையத்தில் வந்துவிட்டது என்பதே அம்மாபெரும் வியப்பு. எனினும் இன்னொரு அற்புதமும் உள்ளது! 1860 - களில் சில நூறு அங்கத்தினர்களை மட்டுமே கொண்டிருந்த அந்த இளம் (குழந்தைச்) சபை எப்படி தனது பிரபலமற்ற தூதுடன் சென்று, உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டிலும் சுவிசேஷ ஊழியம் செய்ய இயலும்? இருந்தாலும் நடந்ததென்னவோ அதுதான்! செவன்த் - டே அட்வென்டிஸ்ட்களின் ஊழியம் ஏறத்தாழ உலகின் 100 சதவீத மக்களும் அடங்கிய நாடுகளில் நிறுவப்பட்டுள்ளது. மேலும் நியாயத்தீர்ப்பு, ஓய்வுநாள், மிருகத்தைப்பற்றிய தூது உட்பட வெளிப்படுத்தல் 14 - ன் இந்த தனித்தன்மையான ஒவ்வொரு கோட்பாடும் அந்த நாடுகளிலே சாட்சியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த இனங்காணுதலின் முதல் விஷயத்தில் பல சபைகள் தகுதி பெறுகின்றன. ஒருசில சபைகள் இரண்டாம் அம்சத்திற்கும் பொருந்தி வருகின்றன. ஆனால் எல்லா நான்கு அம்சங்களையும் கனகச்சிதமாக உறுதிப்படுத்துவது ஒரே ஒரு சபைதான் என்பது ஒரு தனி உண்மை ஆகும். மனித அறிவுக்குப் பொருந்தி வருகிற ஓர் எளிமையான, நியாயத்திற்கு ஏற்ற விதத்தில் நம்மை சகல சத்தியத்துக்குள்ளும் வழிநடத்த கொடுத்துள்ள தம்முடைய வாக்குறுதியை தேவன் நிறைவேற்றியுள்ளார். அடுத்த நகர்வு நம்முடையதாகவே இருக்கவேண்டும். இப்போது நாம் வழிநடத்தப்பட்டுள்ள முடிவுகளைக் குறித்து நாம் என்ன செய்யப்போகிறோம்?
இத்தகைய சத்தியத்தைக் குறித்து ஒரு முடிவு எடுப்பதை எவர் ஒருவரும் தவிர்க்க இயலாது. நாம் அதை ஏற்கலாம் அல்லது தள்ளிவிடலாம். நாம் கீழ்ப்படிவதையோ அல்லது கீழ்ப்படியாமையையோ தெரிந்து கொள்ளலாம். ஆனால் ஒரு விஷயம் உறுதி - நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் நீங்கள் மறுபடியும் ஒருபோதும் முன்பு மாதிரி (பழைய ஆளாக) இருக்கப்போவதில்லை. மனச்சாட்சியின் உறுத்துதல் எப்போதும் - நாம் அதை அலட்சியப்படுத்தினாலும் அல்லது அதற்குத் தடை போட்டாலும், அது எப்போதும் நம்முடன் இருக்க ஓர் வழி வைத்துக்கொண்டுள்ளது. நீங்கள் உண்மைச் சபையைப்பற்றி அறிந்த விஷயங்களை உங்களால் ஒருபோதும் மறக்க இயலாது. நீங்கள் இப்பொழுது முழு வேதாகமத்திலும் தேடி அறிய மிக விரும்;பும் இரகசியத்தை அறிந்து வைத்துள்ளீர்கள்.
இது உங்களை அறிவுபூர்வமாக உணர்த்தியுள்ளதை முன்னிட்டு மட்டும் நீங்கள் ஒரு முடிவு செய்ய வேண்டும் என நான் உங்களைத் தூண்டவில்லை. எவர் ஒருவரும் இயேசுவுடனான ஆவிக்குரிய நல்லுறவிற்குள் இழுக்கப்பட்டாலன்றி, கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்குள் வந்து சேரவேண்டாம்.
உண்மையான மீதியான சபையைப்பற்றிய அதியற்புத தீர்க்கதரிசனத்தின் பின்னணியில், தேவ ஆட்டுக்குட்டியானவர் உங்கள் இடத்தில் சிலுவையிலே மரிப்பதை நீங்கள் காணவேண்டுமென்று நான் விரும்புகிறேன். அவர் பாவத்தின் பொருட்டு அவர் அங்கே தொங்குகின்றார் - யாரோ ஒருவர் அவருக்குக் கீழ்ப்படியாமற்போகும் அளவிற்கு அவரை நேசிக்காததினால் அப்படித் தொங்குகிறார்... “நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்” (யோவான் 14:15).
நாம் முழங்கால்படியிட்டு, நமது பாவத்திற்காக உள்ளம் நொறுங்குண்டவர்களாய் அவரை நமது கர்த்தராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொண்டாலன்றி நாம் அவருக்குக் கீழ்ப்படிய இயலாது. அவர் மீதான அன்பு அவரது வார்த்தையை நிறைவேற்றுவதற்கான நோக்கத்தையும் அதற்கான வல்லமையையும் வழங்குகின்றது. நீங்கள் ஏற்கனவே அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அதை உங்கள் முதல் முடிவாக எடுங்கள். பின்னர் அந்த அன்பின் நல்லுறவின் பலத்தினால், உண்மை மீதியான சபையின் உறுப்பினராக அவரது சேவையில் சென்று அவரைப் பின்செல்லுங்கள்.

